துபாய் கோம்போ மீல்-1 (சவர்மா கடிக்க, சுலைமானி குடிக்க)

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்...உங்களில் பல பேர் என்னை மறந்திருக்கலாம். புதியவர்களுக்கு என்னைத் தெரியாது...அமீரகப் பதிவர்களை மட்டும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பதால் அவர்களுக்கு மட்டும் என்னைத் தெரிய வாய்ப்பிருக்கிறது..:-)

நான் ஒரு தொடர் பதிவர் அல்ல...எப்பவெல்லாம் தோணுதோ அப்போது தான் எழுதுவேன்...சில நேரங்களில் அது வருட இடைவெளியைக் கூட ஏற்படுத்தி விடுவதுண்டு...சமீபத்தின் இடைவேளையும் அப்படித்தான், முகப்புத்தகத்தின் இரண்டடி எழுத்துக்களில் கட்டுண்டு, அரட்டையும், கும்மியுமாக ஓடிய நாட்கள்... அமீரக தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளில் நான் சற்று அதிகம் காட்டிய ஆர்வம், இவை எல்லாவற்றையும் விட என் இரண்டாவது மகளின் அன்பு இடையூரல்...ஒரு நிமிடம் சும்ம இருக்க மாட்டாள்...அதை இழுப்பது, இதை உடைப்பது, கம்ப்யூட்டரில் தண்ணீரை அள்ளி ஊற்றுவது, டீவி யை வயரைப் பிடித்து இழுத்து போட்டுவது இப்படி சேட்டைகள் ஏராளம்...

சமீபத்தில் எந்திரன் படத்தைப் பார்த்து விட்டு, என் மகளுக்கு பிடித்த ஒரே காட்சி,சிட்டி ரஜினிக்காந்த் டிவியைப் போட்டு உடைப்பது தான்...! படம் பார்த்து வந்ததிலிருந்து என் மகளுக்கு ஒரே கொண்டாட்டம் " வாப்பா டிவியை போட்டு உடைச்சிட்டாங்க...அவங்க டிவியை உடைச்சிட்டாங்கன்னு" அந்த வாரம் முழுதும் உற்சாகமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்...ஊரில் ஒரு டிவி ஏற்கனவே உடைத்த முன் அனுபவம் இருந்ததால், இங்கே இருக்கிற டிவியை காப்பாற்றுவது பெரிய பாடாகி விட்டது:-)

சமீபத்தில் அமீரகத்தில் ஒரு விழா முடிந்த தருவாயில் அதிகாலையிலேயே பதிவர் குசும்பன் என்னை அழைத்திருந்தார்...என்ன காலையிலேயே ? என்றேன்.

"சித்தப்பூ பேமிலி ஊரிலிருந்து வந்த பின்னும் எப்படி உங்களால் அமைப்புகளுக்காக இப்படி வீடியோ காட்சிகள் செய்ய முடிகிறது ?என்றார்"

அதை நான் செய்ய வில்லை என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணியதும் அவருக்கு பெருத்த சந்தோஷம்...அவருக்கு நான் செய்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை, அவர் கவலை எல்லாம் என் சின்னப்பிள்ளையை வைத்துக் கொண்டு நான் எப்படி செய்தேன் என்பது தான்...
ஒய் ப்ளட் சேம் பிளட் :-)
(அவர் மகன் இனியவனை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு அவருக்குத் தெரியும் அல்லவா..?)

*************
பதிவில் நாம் எழுதியதெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்..? என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு, அதைத் தகற்கும் வகையில் அவ்வப்போது எனக்கு வரும் தனிமடல்கள் என் எழுத்து தீயிற்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

அந்த வகையில் சமீபத்தில் திருச்சி சையது வெளியிடப்போகும் "நட்புக்காக" சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறந்த எழுத்தாளர்களின் கதைகளில், என் கதையான "சிறகு தொலைத்த சிட்டுக் குருவிகள்" இடம் பெறுவதுடன் அதற்கு அணிந்துரை எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் எழில்வேந்தன் அனைத்து கதைகளிலும் இது முடி மணியாகத் திகழ்கிறது என்று பாராட்டியிருப்பது, மற்றும் என் கதைகளில் சிலவற்றைப் படித்த பிரபலங்களில் சிலரான பேராசிரியர் பெரியார் தாசன் அப்துல்லா, கவிச்சித்தர் மு. மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் சரியுத்தீன் ஆகியோர் நீங்கள் கண்டிப்பாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமென்று என்னிடம் உரிமையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டது, போன்ற நிகழ்வுகள் எனக்கு மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவே உள்ளது.

ஆனால் அதற்கான ஒரு நேர்த்தியான நேரம் கிடைக்காத வேளையில்,இந்த வெள்ளிக் கிழமை பதிவர் பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் சம்பந்தமாக அவர் உட்பட சில பதிவர்கள் இணைந்து எழுதிவரும் "ஆடுகளம்" வலைப்பூவில் நீங்களும் எழுதுங்களேன்...என்று விளையாட்டாய் கேட்டது வினையாக மாறி விட்டது..:-) மீண்டும் அடித்தாட ஒரு வாய்ப்பு,

நாமலெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போடறவங்க...சும்மிங் பூல் கிடைத்தா விடுவோமா..? ( எது இருக்கிறதோ இல்லையோ நாலு பஞ்ச் டைலாக் முக்கியம்..:-)) மீண்டும் இறங்கியாச்சு...( தேரை இழுத்து தெருவுலே விட்ட நவ்பல் போன்ற நண்பர்களுக்கு நன்றி...!) அடிச்சு ஆடுறதா ? இல்லை அடிவாங்கி ஓடுறதான்னு பார்க்கலாம்..:-)ஆடுகளத்தில்....
******
ஆமா இதற்கு எதற்கு "துபாய் கோம்போ மீல்" என்று எதற்கு பேர் வைத்திருக்கிறாய்...சவர்மா, சுலைமானி என்று எதையும் கண்ணில் காட்ட வில்லையே? என்று கேட்பவர்களுக்கு, கொத்துபரோட்டா, டைரிகுறிப்பு, இந்த வரிசையில் இனி இதுவும் தொடர்ந்து வரும் கண்ணில் கண்ட செய்திகளுடன்....முன்பு எனக்களித்த அதே ஆதரவை மீண்டும் எதிர் நோக்கும்
உங்கள்......
கீழைராஸா பாலையிலிருந்து.....

14 comments:

Prathap Kumar S. said...

ராஸா ராஸான்னு அமீரகத்துல ஒரு மானஸ்தான் இருந்தாரே. யாருக்காச்சும் தெரியுமா? :))

//தனிமடல்கள் என் எழுத்து தீயிற்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும். //

த்தோடா அண்ணே காமெடி பண்றாரு....:))

அகமது சுபைர் said...

//ராஸா ராஸான்னு அமீரகத்துல ஒரு மானஸ்தான் இருந்தாரே. யாருக்காச்சும் தெரியுமா?// - ராஸா ராஸான்னு சொன்னா ரெண்டு பேரு தானே??? ஒருத்தர் எப்படி?? :))

அப்துல்மாலிக் said...

welcome back ராஸாண்ணே

சிம்மபாரதி said...

ஹோய்............... சிங்கம் களம் இறங்கிருச்சு..........

jothi said...

Welcome back

//நாமலெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போடறவங்க...சும்மிங் பூல் கிடைத்தா விடுவோமா..? //


அலையே இல்லாத‌ இட‌த்த‌ல சுனாமிக்கு எங்க‌ போவீங்க‌,,

கீழை ராஸா said...

//த்தோடா அண்ணே காமெடி பண்றாரு....:))//
அண்ணன் இப்ப தான் வந்திருக்கேன் நாஞ்சில், காமடி பண்ண இன்னும் நேரம் இருக்கு...( நம்ம காமடி பத்தித் தெரியும்ல...உனக்கு நீயே வலை விரித்துக் கொள்ளாதே தம்பி..:-)

sultangulam@blogspot.com said...

வா ராசா வா

குசும்பன் said...

சித்தப்பூ பதிவு போட்டதுக்கு பிரியாணி எப்ப?

குசும்பன் said...

ஆமா நான் கால் செஞ்சது சனிக்கிழமை காலை உங்களுக்குதான் ஆபிஸ் உண்டே...அப்புறம் என்ன அதிகாலை, மாலைன்னுக்கிட்டு...

குசும்பன் said...

//முன்பு எனக்களித்த அதே ஆதரவை மீண்டும் எதிர் நோக்கும்
//

ஒழுங்கா சொல்லுங்க ஆதரவு வேண்டுமா? இல்ல முன்பு கொடுத்த ஆதரவு மாதிரின்னா (சைலண்டா வருவதும் தெரியாது போவதும் தெரியாது!)அதுமாதிரி வேண்டுமா?

சென்ஷி said...

வாங்க தளபதி வாங்க :))

கீழை ராஸா said...

@சுபைர்..."உன் இலக்கிய தாகத்திற்கு அளவே இல்லையாப்பா..:-)"

நன்றி ...மாலிக் பாய்...

@சிம்மபாரதி, அமீரக அமைப்புகளில் என்னை இழுத்து விட்டு வேடிக்கைப் பார்த்த வில்லன் நீ தான்...இங்கேயும் உசுப்பேத்தாதப்பா...

கீழை ராஸா said...

jothi said...
//அலையே இல்லாத‌ இட‌த்த‌ல சுனாமிக்கு எங்க‌ போவீங்க‌,,//

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...

*****
நன்றி சுல்தான் பாய்

*******
குசும்பா...என்ன குசும்பா..:-)

******
நன்றி தல..(சென்ஷி) இப்ப எங்கே இருக்கீங்க...?

R.Gopi said...

அடடா...

வாங்க தல... நீங்க எல்லாம் இல்லாம தானே ஆட்டம் களைகட்ட மாட்டேங்குது..

வந்தோமா, 201 அடிச்சு சச்சின மிஞ்சினோமான்னு இல்லாம, பவுண்டரிக்கு அப்பாலிக்காவே இருக்கீங்களே...

எப்படியோ நீண்ட இடைவெளிக்கு பின் சிங்கம் களமிறங்கி விட்டது...

வாழ்த்துக்கள் தல....

Related Posts with Thumbnails