மரணம் தேடிப் பறந்த மனிதப்பறவைகள்…


இன்னும் சில நொடியில்-விமானம்
தரையிறங்குமென்றபோது
எவரும் அறியவில்லை
அப்படி ஒரு செய்தி இடியென
தலையிறங்குமென்று..

பத்தாயிரம் மைல்கள்
பதனமாக வந்த பயணம்
பத்து மைல் இருக்கையிலே
பாவியவன்
பாசக்கயிற்றில் சிக்கியதே

தியாகத்தில் இவர்கள்
தீக்குச்சிகள்..என்பதாலோ
தீப்பெட்டியாக விமானம்
தீப்பற்றிக் கொண்டனவோ..?

எரிந்தது நீங்கள் மட்டுமல்ல
ஏக்கங்களும் கனவுகளும்
மரித்தது நீங்கள் மட்டுமல்ல
ஆசைகளும், உணர்வுகளும்…

தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!

உறக்கமில்லா இரவுகளில்
உழைத்திட்ட இம்மக்களென
உறங்கழைத்துச் சென்றானோ?
உலகம் காக்கும்பேரிறைவன்
இரக்கமில்லா இந்நிகழ்வை
இன்னும் பலர் நம்பாமல்,
ஏர் இந்தியா என்றாலே
எப்போதும் தாமதம் தான்
என்றெண்ணிக் காத்திருப்போர்
ஏர்போட்டில் ஏராளம்…

இயற்கையை நம் கையில்
எடுத்திட்ட பெருமிதத்தை
இது போன்ற சம்பவங்கள்
தடுத்திடச் செய்கிறதே..
பறவையின் பறக்கும்குணம்
பார்த்து செய்த விமானம்- இவர்கள்
உலகை விட்டு பறக்கையிலே
உதவிக்கு வரவில்லையே…?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன்
இவர்களும் யானைகள் தான்…
இருக்கும் போது தன் ஆசைகள்
எரித்து குடும்பம் காத்தார்கள்
செத்தபோது தங்களை எரித்து
குடும்பம் காக்கிறார்கள்…

பறந்து சென்று பணம்தேடி-பந்தம்
துறந்து தனம் தேடி
இறந்து சென்றும் இனம் காத்ததால்
இவர்களும் சீதக்காதியன்றோ…?

(சமீபத்தில் பெரியார்தாசன் என்றறியப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் துபாய் வந்திருந்த போது, நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார் ( எனக்கு கவிதை வரவில்லை என்பதை அவர் பாணியில் சொன்னார்) அந்தப் பெரியவரின் வார்த்தைகளை மீறி இதை எழுதிவிட்டேன்...கவிதையின் அளவு கோலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும்...என் உணர்வுகளின் வடிகாலாகவே இதை வடித்துள்ளேன்.)

11 comments:

அப்துல்மாலிக் said...

இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள், அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

கவிதை உருகவைத்தது

சிம்ம‌பார‌தி said...

அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

சித்தூர்.எஸ்.முருகேசன் said...
This comment has been removed by a blog administrator.
Prathap Kumar S. said...

ரொம்ப கஷ்டமாருக்குண்ணே...

Hakkim Sait said...

அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

அது ஒரு கனாக் காலம் said...

Our prayers are with them

Chittoor Murugesan said...

அய்யா ,
இது நான் எழுதிய கமெண்ட் அல்ல. எவனோ வெலை வெட்டி இல்லாத தண்டம் ,முண்டம் எழுதியது. முதலில் அதை இதை இரண்டையும் நீக்கித்தொலையுங்கள்

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டிஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

R.Gopi said...

//தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!//

நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார்,...

***********

தலைவா..... மேலே எழுதியுள்ள வரிகளை அவர் படித்தால், தான் சொன்னதற்காக நிச்சயம் வருந்துவார்..

நல்லா எழுதி இருக்கீங்க “தல”...

அந்த 100 எப்போ வாங்கிக்க போறீங்க?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உணர்வுகளின் வெளிப் பாட்டில், கதைகளை விட கவிதைகளுக்கு
தாக்கம் கொஞ்சம் கூட..இது நன்றாக த் தானே இருக்கிறது..

ashok said...

very touching poetry....

Related Posts with Thumbnails