மௌனம் தரிக்காத முத்த தருணம்...( கவிதை தெரிந்த இளசுகளுக்கு மட்டும் )

மு(மொ)த்தத்தில் மௌனமில்லா ஒர் இடம் …


உன் விழி என் விழி
ஊடுருவும் வேளை…
உன் விரல் என் விரல்
வருடும் மாலை…
விண்ணொளி உன்
கண்ணொளி கண்டு
ஒளிந்திடும் வேளை-நம்
உதடுகள் ஒட்டிக்கொள்ளும்
உன்னத மாலை…
மௌனம்…






உள்ளத்துள் ஆயிரம்
வார்த்தைகள் துடிக்க…
உள்ளுக்குள் வேதியல்
மாற்றங்கள் வெடிக்க…
எண்ணத்தில் உன் பிம்பம்
எட்டிப்பிடிக்க…
கட்டிப் பிடிக்க…வந்து விடும்
மௌனம்…





அடியே
மௌனப் பெண்ணே..!
வெட்கமில்லாதவளே…
தம்பதிகள் தனித்திருக்க…
உனக்கென்ன வேலையிங்கு…
போய்விடு மௌனப்பெண்ணே…
போய்விடு…
என்னவளின் மெலோடியஸ் குரல்
கேட்க வேண்டும்…
விழிமூடும் அந்த
முத்தத்தருணத்தில்…

ஒகேனக்கல் ஒருமைப்பாடு...கண்ணீர் தேசத்தின் தண்ணீர் சோகம்…

பயிர் வாழத்தான்
தண்ணீர் தர வில்லை
உயிர் வாழவுமா..?
-தமிழக முதல்வர்
இந்தியா என் தாய் நாடு
இந்தியர் அனைவரும்
நம் உடன் பிறந்தவர்கள்
-நாம்
எங்கிருக்கிறோம் நாம்..?
எங்கிருக்கிறது நம் நாடு..?
எங்கிருக்கிறது ஒருமைப்பாடு..?
உள்ளம் கொதிக்கிறது…

புகுந்த வீட்டிற்குப்
புறப்படும் பெண்ணை
பிறந்த வீட்டில்
சிறை வைக்கும் கொடுமை…
புருஷன் வீட்டில்
புகுந்த பெண்ணை
புத்தியில்லாமல்
தடுக்கும் கடுமை…
வேறெங்கு காண
இயலும் இந்த மடமை..?

வறண்டது நம் மண் மட்டுமல்ல…
அவர்கள் மனங்களும் தான்…



வலது கை கொடுத்ததை
இடது கை அறியாதது
உயர் தர்மம்…
இது தருமமல்ல…
தானாய் வருவது ( இதற்கும்)
வருவதற்கு கணக்கு
வந்ததற்கும் கணக்கு
என்றால் ஏன் வராது
மனப் பிணக்கு…?

மத்திய அரசை
மதிப்பதில்லை
சுப்ரீம் கோர்ட்டா
ச்சூ..ச்சூ…
நடுவர் மன்றம்
நடைமுறையில் இல்லை
ஒரே நாடு
அது நம்ம கூப்பாடு…

எங்கே அந்த ஒற்றுமை..?
எங்கே அந்த சகோதரத்துவம்..?
எங்கே அந்த ஒருமைப்பாடு..?
எல்லாம் பெயரளவில்…

திட்டங்கள் தீட்டிய
வண்ணமுள்ளன…
உண்ணாவிரதங்கள்
விருந்தோடு முடிந்தன…
பேச்சு வார்த்தை
மூச்சுள்ள வரை…
எஞ்சியிருப்பது..?
தாகத்தோடு பயிர்களும்…
சோகத்தோடு நம் உயிர்களும்…



தலைவர்களே..
மத்தியத் தேர்தல்..
மாநிலத்தேர்தல்
என்று மட்டும் எங்களைப்
பார்க்காதீர்கள்…
நாங்கள் மனிதர்கள்
உணர்வு உள்ள மனிதர்கள்…
வேண்டாம்…இந்த மரண விளையாட்டு
நதிகளை இணைக்கும் முன்
மனம் தனை இணைக்க வாருங்கள்..
இருக்கும் வரை
மகானாக இல்லாவிட்டாலும்
மனிதராக வாழுங்கள்....

குசும்பனுக்கு TBCD யின் திருமணப்பரிசு…காவல் துறையின் கிடுக்கிப் பிடியில் TBCD …கொண்டாடும் குசும்பன்…அரிய படங்களுடன்

சமீபத்தில் மலேசியா வருங்கால தொழிலதிபரும், மொக்கைப்பதிவருமான TBCD, குசும்பனுக்கு கொடுத்த 1000000000$ திருமணப்பரிசால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டதை நீங்கள் அறிவீர்கள்...


அதன் பின் நடந்த சோதனையில், அவர் மொக்கைப் பதிவெழுத துண்டுக்காகித மாகவே இது போன்ற டாலர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார் என்ற பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது...

விசாரித்த வருமானத்துறையிடம் "என்ன பத்தி நானே சொன்னா நல்லா இருக்குமா, அதுனால வேண்டாம்" என்று தன் வழக்கமான பாணியில் கூற, அதிகாரிகள் அவர் மேல் கொலைவெறியில் உள்ளார்கள் என்பது வேறு விசயம்...
விசயம் அறிந்த குசும்பன் அதைக்கொண்டாட சொந்த பணத்தில் (!!!)(திருமணத்திற்கு சேர்த்து வைத்தது) "டெசர்ட் சபாரி" சென்று கொண்டாடி வருகிறார்...( இதைப்பார்த்து திருமணத்தில் எதுவும் கோளாறு ஏற்பட்டால் டிபிசிடி தான் பொருப்பு )




இந்த வரலாற்று சிறப்பு மிக்க (!!!) பதிவை எழுத உதவிய அறிய பதிவுகள்:-

குசும்பனின் திருமணமும் & குசும்பன் என்னிடம் கேட்ட மொய்யும்

பெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்!!!

இந்த படைப்பை (???) குசும்பனுக்கு திருமணப்பரிசாக வழங்குகிறோம்...( டிபிசிடி க்கு ஆப்பு வைப்பதைத்தவிர குசும்பனுக்கு பெரிய பரிசு என்ன வாக இருக்க முடியும்..?)

TBCD க்கு ஆப்பு வைக்க விரும்புபவர்கள் வரிசையில் வந்து பின்னூட்டம் இடவும்...

அன்புடன்

TBCD யால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்ற சங்கம்

முட்டுச்சந்து

பகுதி-2- அண்ணாச்சி,தமிழச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம்

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், ஆபாச வார்த்தைகள் குறித்து, தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கத்தின் இரண்டாம் பாகம் இது...

முதல் பாகம் காண : http://sarukesi.blogspot.com/2008/03/1.html







அடுத்து குசும்பன் பேச வருகிறார்…

விசு: கண்ணா, நீ எதப்பத்தி பேசப்போறே…?

(கூட்டத்தில்) டிபிசிடி,( வசந்தம் ரவியிடம்): ரவி, இவரு அண்ணாச்சியை கண்ணானு கூப்பிட்டாரு, அண்ணாச்சியோட உண்மையான பேரா இருக்குமோன்னு நினைச்சிகிட்டேன், இப்ப குசும்பனையும் அதே பேரச்சொல்லி கூப்பிடுறாரே…குசுபனுக்கும் அண்ணாச்சிக்கும் ஒரே பேரா…?

வசந்தம் ரவி : புரியல்ல தயவு செய்து விளக்கவுன்னு பேர வச்சிக்கிட்டு நீ பண்ற அலம்பல் தாங்கலேப்ப... நீ தெரிஞ்சி கேக்கிறியா ..? தெரியாமே கேக்குறியான்னே தெரியலையப்பா…

குசும்பன்: (விசுவிடம்) பதிவரில் நான் எப்போதும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறவன்…சம உரிமை பற்றி பல பதிவுகள் எழுதியிருக்கேன்..( கூட்டம் பேந்த பேந்தவென்று முழிக்கிறது…)

விசு: அதுலே ஒண்ணே அவுத்து விட முடியுமா கண்ணா…

குசும்பன்:போன மாசம் கூட “ பெல்லி டான்சருடன் ஒரு டான்ஸ்” என்று ஒரு பதிவு எழுதி சம உரிமைக்கு குரல் கொடுத்தேனே…?

அபிஅப்பா: அவனா நீ…?, நான் என்னவோ உன்னை நல்லவன்னு நம்பிலடா ஏமாந்துட்டேன்…

டி.ஆர்: தம்பி குசும்பா… என்கிட்டேயே குசும்பா…இல்லாத பெல்லிக்கு ஒரு டான்ஸ்… என்கிட்டே விடாதே உடான்ஸ்… டண்டணக்க, டணக்குடக்கா..

விசு: கண்ணா குசும்பா…அதைப்பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா..?

குசும்பன்: சொல்றேன் சார், சொல்றேன் அந்த சம உரிமைக்கதையை விளக்கமா சொல்றேன்…

கூட்டமே இலவசமாய் கொடுக்கப்பட்ட ஆறடி டவலுடன் கண்ணீர் துடைக்க தயாராகிறது…எங்கும் மயான அமைதி…

வசந்தம் ரவி : முதல் இடத்தை நோக்கி குசும்பன் முன்னேற்றம்… தமிழச்சியும், அண்ணாச்சியும் பின்னேற்றம்…குசும்பன் கதை கேட்க மக்கள் ஆர்வம்…

அனானி: ஆரம்பிச்சிட்டாரய்யா சன் டிவி செய்தியை…

டிபிசிடி: வசந்தம் ரவி செய்வதை திருந்த செய்…எத்தனை புள்ளிகள் என்று நீர் குறிப்பிடவில்லை…

கோவிகண்ணன்: பதிவெழுதி பேர் வாங்குறவங்க இருக்காங்க…அதைபதிஞ்சி வச்சி பேர் வாங்குறவங்க இருக்காங்க…அதிலும் குற்றம் பேர் கண்டுபிடிச்சி பேர் வாங்கறவங்களும் இருக்காங்க…

விசு : கண்ணா இந்த நேரடி வர்ணணையை கொஞ்சம் நிறுத்துறேலா…இங்கே அதுக்குன்னே ரெண்டு டிவி வச்சிருக்கோம்…குசும்பு கண்ணா நீ சொல்லுப்பா..

குசும்பு: ஆபீஸ்லே ஓசி டிக்கெட்டை வாங்கிக்கிட்டு “டெசர்ட் சபாரி” கிளம்பினேன். சின்னப்புள்ளேயிலே திருவிழாவுலே “மரணக்கிணறு”ன்னு
ஒரு சர்க்கஸ் பார்த்திருக்கேன்…அதுக்கும் இதுக்கும் ஒரே வித்தியாசம் தான் …அதுலே அவன் மட்டும் மரணக்கிணத்துலே சுத்துவான்…இதிலே நம்மையும் சேர்த்து வைச்சி மணல் கிணத்திலேயும் சுத்துறான். சுத்துறான், சுத்துறான், சுத்திக்கிட்டே இருக்கான்…மயக்கம் வர்ற வரை சுத்துறான் …வாந்தி வர்ற வரை சுத்தறான்…கண்ணீர் வருகிற வரை சுத்துறான், கதறல் வருகிற வரை சுத்துறான்…

(விசுவும், டி.ஆரும் விசும்பி விசும்பி அழ ஆரம்பிக்கிறாங்க…பதிவர்கள் காதைத் துடைத்துக்கொள்கிறார்கள்..)

குசும்பன்: (கண்கலங்கிய படி ) என்ன அபி அப்பா என்னாலேயே நம்ப முடியலை…அந்த அளவிற்கா டச்சிங்காவா நான் கதை சொல்றேன்….அவ்வ்வ்வ்வ்வ்…

அபி அப்பா: அடங்கொய்யாலே…இது அழுகை இல்லே…உன் மொக்கை தாங்காமே காதிலே வர்ற ரத்தம்…

குசும்பன்: ஆஹா… மொக்கை கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சோ…டிபிசிடி யே அழறாருன்னா பெரிய மொக்கையாத்தான் இருக்கும் போல, இப்படியே கொஞ்சம் கழண்டுக்க வேண்டியது தான்…அவ்வ்வ்வ்வ்வ்

அடுத்து அபி அப்பா பேச எழுந்திருக்கிறார்.

அனானி: பதிவர் வட்ட சூப்பர் ஸ்டார் வாழ்க…அல்டிமேட் ஸ்டார் அபி அப்பா வாழ்க வாழ்க…

அபி அப்பா: (கண்கலங்கி) அவ்வ்வ்வ்வ்வ்

குசும்பன்: என்னாச்சி அபி அப்பா..?

அபி அப்பா: என் ரசிகன்(!!!) ஒருவன் என்னமா பீல் பண்ணி கூவறான் பாரு…

குசும்பன்: என்ன அபி அப்பா தெரியாத மாதிரி கேட்கிறீங்க..நீங்க தானே நேற்று பணம் கொடுத்து கூவுறதுக்கு அரேஞ் பண்ணச் சொன்னீங்க, கொய்யாலு கொடுத்த காசை விட அதிகமா கூவுறாம்பா…

அபி அப்பா: அடங்கொய்யாலே…காசா முக்கியம் கூவல் தாய்யா முக்கியம்..

விசு: கண்ணா

டிபிசிடி, வசந்தம் ரவியிடம்: இவரு பேரும் கண்ணாவா?

வசந்தம் ரவி : அம்மாடியோவ்( என்று ஓட்டம் எடுக்கிறார்…)

டிபிசிடி: புரியல்ல தயவு செய்து யாராவது விளக்கங்களேன்…?

டி.ஆர்: அபி அப்பாங்கற உன் பேரைப் பார்த்தவுடன் நான் என்னவோ ஐம்பது வயசிருக்குன்னு நினைச்சேன்…

அபி அப்பா: அதெப்படிங்க

டி.ஆர்: கோலங்கள் அபிக்கு அப்பான்னா இருக்காதா பின்னே..?

அபி அப்பா: அடங்கொய்யாலே, இது பெரிய மொக்கையா இருக்கும் போல…

டி.ஆர்: அபி அப்பா… நீ போடாத கணக்கு தப்பா…டண்டணக்கா…

அபி அப்பா: அடங்கொய்யாலே, இது பெரிய மொக்கையா இருக்கும் போல…

அபி அப்பா: டிஆர் சார் கொஞ்சம் அந்த பிண்ணனி மியூசிக்கை நிறுத்துங்களேன் நானே மொக்கையை ஆரம்பிச்சிடுறேன்…

விசு: நீ சொல்லுடா கண்ணா…

அபி அப்பா:ஐயா ஆணாதிக்கதை பத்தி பேசலாம்னா அண்ணாச்சி முறைக்கிறாக..பெண்ணாதிக்கத்தைப் பத்தி பேசனுன்னா “எனக்கு கராத்தே” தெரியாது

விசு: அப்ப நீ எதைப்பத்திக்கண்ணா பேசப்போறே…?

அபி அப்பா: நான் என்னத்தை பேச..? பேசாமெ போய்கிட்டு இருந்தவனை நமிதா வந்திருக்காங்கன்னு சொல்லி என்னை கூட்டி வந்து, உங்ககிட்டே மாட்டி விட்டது..இதோ இந்த குசும்பன் தான்…தகுதிச்சுற்றுலே பேர் என்னன்னு கேட்டீங்க, அபி அப்பான்னு சொன்னதற்கு இந்த பேருக்கு பின்னாடி “அபி”பற்றி ஒரு செண்டிமெண்ட் கதை இருக்குமுன்னு நீங்களே முடிவு பண்னிட்டீங்க…எல்லார்கிட்டேயும் பேரைத்தவிர எதாவது பேச விட்டீங்களான்னா அதுவும் இல்லே…

டிபிசிடி: குத்துங்க அபி அப்பா…குத்துங்க, வார்த்தையாலே குத்துங்க அபி அப்பா…குத்துங்க.. இந்த அரங்கம் நடத்துறவங்களே மோசம்…மோசம்
குத்துங்க அபி அப்பா… குத்துங்க

குசும்பன்: இவரு செலக்ட் ஆகாத கடுப்பை எப்படி காட்டுறாரு பாருங்க…அவ்வ்வ்வ்வ்

விசு: (அபி அப்பாவிடம்) கண்ணா நீ சூப்பரா பேசுனே, சூடு பறக்க பேசினே, செமத்தியா பேசுனே, செண்டிமெண்ட்டா பேசுனே,ஆனாலும் இந்த வாரம் உன்னை கட்டம் கட்டி பாடல் போட முடியாது கண்ணா..

அனானி: ஏன்? ஏன்?

விசு: ஏன்னா எனக்கும் “கராத்தே தெரியாது”

சொன்ன வேகத்தில் விசு மறைய…தமிழச்சியை கட்டம் கட்டி “ தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலும் பாயுதே…” என்று பாட ஆரம்பிக்க, பதிவர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள்.

இப்போது முற்றும், தேவைப்பட்டால் தொடரும்...

பனிமூட்டம்...பயங்கரம்...அபுதாபி, துபாய் சாலையில் கொடூர விபத்து...

விபத்துக்கெல்லாம் ஒரு பதிவா...இந்த பகுதிக்குள் நுழையும் போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும்...நண்பனொருவன் "அபுதாபி, துபாய் ரோட்லே ஆக்ஸிடெண்டாமே..." என்ற போது எனக்கும் அப்படித்தான் நினைக்கத்தோண்றியது...பின்பு விபத்தின் வீரீயம் கண்ட போது... மனம் பதைபதைத்தது...எப்படி எப்படி இது சாத்தியம் என்ற கேள்விக்கணைகளில் நான் இன்னும் சுய நினைவிற்கு வர இயலவில்லை...

ஆம்...விபத்தானது ஒன்று, இரண்டு வண்டிகளல்ல...200 வண்டிகள்...அதில் 25 வண்டிகள் எரிந்து நாசமாகி விட்டன...கல்ஃப் நியூஸ் தகவலின் பலி 6 பேர் மரணம் 10 பேர் படுகாயம்...இது எல்லாம் பனிமூட்டத்தினால்...

இயற்கையை நாம் குறை சொல்ல முடியாது...இப்படியொரு பனிமூட்டத்திலும்
நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்று விட வேண்டுமென்ற நம் எண்ணமே இத்தனை கொடூரத்திற்கு காரணம்...

சற்று கவனம் செலுத்தி ஒரு ஓரமாக நிறுத்திருந்தால், அலுவலகத்திற்கு தாமதமாகியிருக்கலாம், விமான நேரத்தைத் தவற விடலாம், குறித்த நேரத்தில் ஒரு இடத்திற்கு சேர இயலாமல் போகலாம்...ஆனால் எல்லாவற்றையும் விட உயிர் உயர்வானது இல்லையா...?













ஆதாரம்:


தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - பகுதி-1

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், ஆபாச வார்த்தைகள் குறித்து, தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம்...





விசு : முதன் முறையா டி.ஆர் கூட இணைந்து மக்கள் அரங்கமும், அரட்டை அரங்கமும் இணைந்த, தமிழ் மக்கள் அரட்டை அரங்கத்தை பல நாட்டு பதிவர்கள் கூடும் தமிழ் மணத்தில் நடத்துவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிடா கண்ணா…

இன்னிக்கு மேட்டர் என்னவென்றால் பதிவர் வட்டத்தில் ஆணாதிக்கம் தான் அதிகம் என்று சில பேரும், பெண் ஆதிக்கம் தான் அதிகம் என்று சில பேரும்,ஆபாச வார்த்தை ஆபத்தானது என்று சிலரும்…ஆபாச வார்த்தை ஆரோக்கியமானதுன்னு சிலரும் பேச போறாங்க…மற்றதை டி.ஆர் சொல்வார்…

டி.ஆர்: சொல்றதுக்கு என்ன இருக்கு அது தான் எல்லாத்தையும் பேசிட்டீங்களே..நேரே மேட்டருக்கு போகலாம்…( என்றபடி ஒரு எட்டடி நீள டவலை எடுத்து தயாராக வைத்துக் கொள்கிறார்…கண்ணீரை துடைக்க…)

தமிழச்சி முதலில் பேச எழுந்திருக்க, கூட்டத்தில் சலசலப்பு…

தமிழச்சி: பெண்ணாதிக்கத்தால் பதிவர் வட்டத்தில் ஏற்படும் தொல்லையையும், ஆபாச வார்த்தைகளால் ஏற்படும் அவலங்களையும் பற்றி நான் பேச வந்திருக்கேன்…

டமார்’ என்ற சத்தத்துடன் அபி அப்பா நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சாய…

குசும்பன்: “ சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி உடுத்திடலாம் , நெஞ்சம் கிழிஞ்சிடுச்சே எங்கே முறையிடலாம்”

அனானி: ஆண்கள் உரிமை காக்க வந்த தங்கத்தமிழச்சி வாழ்க…! பெண்ணாதிக்கத்தை தோலுரித்து காட்ட வந்த தோழர் தமிழச்சி வாழ்க வாழ்க…

தமிழச்சி: டேய் “ ….ரான்” இன்னும் பேசவே ஆரம்பிக்கலே அதுக்குள்ளே ஆணுக்கு குரல் கொடுக்க வந்தேன், அரவாணிக்கு குரல் கொடுக்க வந்தேன்னுட்டு… இன்னொரு தடவை எழுந்தே செவுலு பிஞ்சிக்கும் உக்காருடே…

விசு: அவன் இவன் என்றா ஏக வசனங்கள் வேண்டாமே…

தமிழச்சி: ( மனதுக்குள்: வந்துட்டான்யா திருவிளையாடல் பார்ட்டி) விசு சார் உங்க கிட்டே தெளிவா சொல்லிக்கறேன் நீங்க எழுதித்தந்த கதை வசனத்தை எல்லாம் என்னாலே பேச முடியாது… எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் பேசுவேன்…இஷ்டம்னா சொல்லுங்க பேசறேன்…இல்லேன்னா கிளம்பறேன்…

மேடையில் உள்ள பதிவர்கள் : ஆமா தமிழச்சி சொல்ற படி நாங்க ரிகல்சல் பார்த்ததெல்லாம் பேச மாட்டோம்…எங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பேசுவோம்…

விசு : கண்ணா மேடையிலே வந்து கழுத்தருக்கிறீங்களேடா ( மனதுக்குள்: இந்த பொண்ணு ஜெசிலா பதிவு போடும் போதே நாம கொஞ்சம் உஷரா இருந்திருக்கனும்…)

டி.அர்: வீராசாமிக்கே கெடுவா…வந்தேன் இருக்குது படுவா…

விசு: யோவ் நீ கொஞ்சம் சும்ம இருய்யா…நீ பேசு பொண்ணு…

தமிழச்சி: என்ன பொண்ணா, நான் பொம்பளைக்கு பொம்பளை, ஆம்பளைக்கு ஆம்பளை…

விசு: நீ எதுவேண்ணுனாலும் இருந்திட்டு போ கண்ணா..இப்ப பேசு

தமிழச்சி: உங்க பேர் என்ன..?

விசு: விசு…

தமிழச்சி: உங்களை நான் “கொசு”ன்னு கூப்பிடவா…?

விசு: எனக்குன்னு ஒரு பேர் இருக்கும் போது நீ ஏம்மா என் பேரைச்சொல்லிக்கூப்பிடக்கூடாது…?

தமிழச்சி: இதை.இதை தாயா நானும் சொல்றேன்..” …னி” ங்கறது ஒரு உறுப்போட பெயர்… அதை பேர் சொல்லிக்கூப்பிடறது தப்பா..?

விசு: தப்பே இல்லைமா…

குசும்பன்: (குறுக்கிட்டு) சார்…

விசு: என்னப்பா..?

குசும்பன்: “அதை” ஒரு தடவை ஒரு பதிவில் உபயோகிச்சா தப்பில்லைன்னு வச்சுக்குங்க…ஆன அதையே ஒரு பதிவில் ஏழு முறை உபயோகிச்சா..?

விசு: கொஞ்சம் தப்பு மாதிரித்தான் தெரியுது….

குசும்பன்: அதுவே படம் போட்டு விவரிச்சா…

விசு: தப்பு தான்…

தமிழச்சி: எதுயா தப்பு…எது தப்பு “---“ ங்கற வார்த்தை உங்களுக்குத் தப்பா போச்சா இந்த ஆண்களே இப்படித்தான் மாற்றவே முடியாது…நீங்களும் அந்த லிஸ்ட் தானே…ஆணாதிக்கம் இந்த அவையிலும் நிறைஞ்சிருக்கு…ஆணாதிக்கம் நாசமத்துப் போகட்டும்…

டி.ஆர்: தமிழ் பொண்ணுக்கு கூடாது இவ்வளவு கோபம், சென்னையிலே இருக்குது கூவம், நீ கோபப்பட்ட நாங்களெல்லாம் பாவம்… ஏ டண்டணக்கா, ஏ டணக்குணக்கா…

அடுத்து அண்ணாச்சி பேச வருகிறார்…

அனானி: அண்ணாச்சி மைக்கை புடிச்சிட்டார் இனி எத்தனை தலை உருளப்போகுதுன்னு தெரியலை…

அண்ணாச்சி: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே இங்கே வந்து நிறுத்திட்டிங்கடே…

விசு: கண்ணா, நீ ஊருக்கே அண்ணாச்சியா இருக்கலாம், ஆனா எனக்கு தம்பி தான், சொல்லுப்பா நீ என்ன பேச வந்திருக்கே..

அண்ணாச்சி: விசு அண்ணாச்சி, நான் உங்களை கேள்வி யெல்லாம் கேட்க மாட்டேன்…நேர விஷயத்துக்கு வாரேன்…நானும் நாலு வருஷமா பதிவு எழுதறேன்…( திகில் படம் பார்க்கிற மாதிரி எங்கும் அமைதி ) ஆனா ஆபாசமா ஒரு வார்த்தை எழுதுனது கிடையாது…!

விசுவும் டி.ஆரும் எட்டடி டவலை எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார்கள்…

அண்ணச்சி ( கடுப்பாகி) : நான் என்ன துக்க கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்…? எதுக்கு இப்ப அழுறீங்கடே, நான் எழுதுறதுக்கா.. இல்லே ஆபாசமா எழுதாதற்கா..?

விசு: கண்ணா, உங் கதை கண்ணுலே நீரை வரவழைக்குதப்பா..
(விசும்புகிறார்)

அண்ணாச்சி: என்னது கதையா..?

( குசும்பனும் அபி அப்பாவும் சிரிப்பை அடக்க இயலாததனால் இலவசமா கொடுத்த ஆறடி டவலால் முகத்தை மூடிகொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்…)

விசு: இங்கே பாரு கண்ணா உங்கதையைகேட்டு எப்படி குலுங்கி குலுங்கி அழறாங்கன்னு…

அனானி: டேய் அண்ணாச்சி ஆரம்பிக்கும் போதே இப்படி அழறாங்கன்னா, முடிக்கும் போது தாங்குவாங்கறே…

அபி அப்பா : இன்னும்மா இந்த "பதிவர் வட்டம்" உங்களை நம்புது…?

அண்ணாச்சி: இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்க கொலை விழும்..

அனானி: அண்ணாச்சி ஏனிந்த கொலைவெறி…

அண்ணாச்சி: போதுங்கடே இனியாவது நிறுத்தி தொலைங்கடே…

தமிழச்சி: போற போக்கை பார்த்தா அண்ணாச்சியையும் ஆபாச வார்த்தையை சொல்ல வச்சிடுவாங்க போலே…எது எப்படியோ
“அண்ணாச்சியும் ஆபாச வார்த்தைகளும்” என்று நமக்கு அடுத்த தலைப்பு கிடைச்சிடுச்சி…

விசு (அண்ணாச்சியிடம்): கண்ணா உன் சோகக்கதையைக் கேட்டு மனசு கனத்துப் போச்சிப்பா, அடுத்த ரவுண்டுலே நீ பேசலாம்…

அண்ணாச்சி: “ யோவ் நான் இன்னும் பேசவே இல்லைங்கடே..”

கடுப்புடன் அமரப்போக கட்டம் கட்டி “ தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலும் பாயுதே…” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது…

கலக்கல் தொடரும்...


( அடுத்து குசும்பன், அபிஅப்பா, வசந்தம் ரவி, டிபிசிடி அசத்தும் இதன் தொடர்ச்சி வெகு விரைவில்…)

இறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்...உலக விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோள்...


மிதிவண்டி ( அது தாங்க சைக்கிள்…) நம்மில் பல பேர் வாழ்க்கையை திருப்பிப் பார்த்தால்… ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று கிராமத்து தெருக்களில் நம்மை பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் சென்று, கால் கையில் ஆராத ரணமாகவும் , நெஞ்சத்தில் நீங்கா நினைவாகவும் நம்முடன் வரும் பாலர் பருவத்து வாகனம்…

வண்டியில் ஏறி ஓரம்போ ஓரம்போ எனக் கூக்குரலிட்டு ஆளில்லா இடங்களிலும் மணியடித்து, வயதான கிழங்களை இடித்து, கடலை மிட்டாய் கடித்தபடி கைவிட்டு சைக்கிள் ஓட்டி,பிகர்களை கரக்ட் பண்ணும் விதமாய்
தெருக்களில் வலம் வந்த நாட்களை அசை போடும் இந்த வேளை… இதயத்துள் ஏதோ எழுத்துக்கூட்டி பார்க்க இயலா சுகம்…

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் எல்லாத் தெருக்களிலும் வாடகை மிதிவண்டி நிறுவனங்கள் இருக்கும்… சைக்கிள் கம்பெனி என்று நாங்கள்
அழைப்போம்…எந்த விடுமுறை என்றாலும் எங்களின் சேமிப்பு அனைத்தும் அந்த நிறுவனங்களுக்கே அர்ப்பணம்… கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி என்ற கணக்கு போதனைகள், அந்த பள்ளிபருவத்தில் சைக்கிள் மூலமே ஆரம்பித்தது எனலாம்…

வயதுகள், வளர்ச்சிகள் ஏற ஏற புரோமோஷன் கிடைப்பது போல கால் வண்டியிலிருந்து அரைவண்டி மாறும் போது நமது வட்டாரங்களில் நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குமே அப்பப்பா அந்த அந்த புகழ்ச்சியே தனிதான் போங்க…

சைக்கிளில் பக்கத்து கிராமங்களுக்குச் செல்ல புழுதி புடைச் சூழ கிளம்புவோம்…பசுமை நிறைந்த அந்த தோட்டத்து வீதியில் இளம் தென்றல் முகம் மோதுமே அதற்கு எந்த ஏசிக்காற்றும் இணையாகாது…இதற்கிடையில் சைக்கிள் போட்டியும் நடக்கும், எத்தனை வேகமாக சென்றாலும் பிகர்கள் குறுக்கிட்டால் வண்டி ஆட்டோமெடிக்காக ஸ்லோவாகி விடும் … எட்டு போடுவது, பதினாறு போடுவது என்ற வித்தைகளெல்லாம் அப்பொது தான் அரங்கேறும்…

‘களுக்’கென்று சிரித்துச் செல்லும் அந்த கிராமத்துச் சிட்டுக்களைஅவ்வப்போது டபுள்ஸ் ஏற்றி இதயத்துள் பாரதிராஜா பாணியில் ஓடவிட்டு ரிவைண்ட் பண்ணி பார்ப்பதின் சுகமே அலாதி தான்…

இளையராஜா, ரகுமானுக்கே அறியாத நுணுக்கமான ட்யூன்களை சைக்கிள் பெல்லினால் விரல் நுணியில் வித்தை காட்டி “ ட்ரிங் ட்ரிங் “ என்று சமிஞ்கைகள் பரிமாறிய கணங்கள்…வாழ்வின் மெலோடியஸ் தினங்கள்…

அந்த வயதில் சொந்த சைக்கிள் என்பது எங்களுக்குஒருலட்சியக்கனவு. அதை அடைய ஒவ்வொருவர் தகுதிக்கேற்ப இலக்குநிர்ணயிக்கப்படும்...பெரும்பாலும் அது அடைய முடியாத இலக்குவாகவே இருக்கும், சில பேருக்கு நீ பாஸ் ஆயிட்டா உனக்கு சைக்கிள் வாங்கிதருகிறேன் என்பார்கள்… அவன் தேர்வு பெற மாட்டான் என்பதில் அவன் பெற்றோர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை…(அந்த நம்பிக்கை வீணாகவில்லை என்பது வேறு விசயம்…)ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தால், தமிழ் நாட்டிலேயே முதல் மாணவனாக வந்தால்…இப்படி எட்ட முடியா இலக்குகள் ஏராளம் அப்போது சொந்தசைக்கிள்வைத்திருப்பவன் பணக்காரன், பைக் வைத்திருப்பவன் பெரும் பணக்காரன் என்பதே அன்றைய எங்கள் பகுதியின் பொருளாதார புள்ளி விபரம்…

‘எரி பொருள் சேமியுங்கள்’ இந்த விளம்பரத்திற்கு நாங்களும் எங்களை அறியாமல் அந்தப்பருவத்தில் பங்காற்றி இருக்கிறோம் என்பதே பெருமையான விசயம் தான்…

இன்று காலம் மாறிவிட்டது… காட்சி மாறி விட்டது… வாழ்க்கை மாறி விட்டது,வசதி கூடி விட்டது…எங்கும் பிரமாண்டம் , எதிலும் பிரமாதம், இயந்திர வாழ்க்கை , ஓய்வில்லா ஓட்டம் …பென்ஸ் , BMW என்று நான்கு சக்கர வண்டி மோகம் மிதிவண்டியின் மார்க்கட்டை நிலைகுலைய செய்து விட்டது…இருந்தாலும் மறக்க இயலவில்லை…

இன்றும் பெரும்புள்ளிகள் அனைவரிடமும் சைக்கிள் உண்டு…சைக்கிளிங் என்ற பெயர் மாற்றத்துடன்…மிதிக்க மிதிக்க மிரண்டு ஓடும் மிதிவண்டி இல்லை இது…நம் உடல் நோக ஓட்டினாலும் ஒரு இன்ஞ் நகரா வண்டி இது.

என் இதயத்துள் ஒரு பேராசை, ஜிம்மிலும், கிளப்பபிலும் சைக்கிளிங் பண்ணும் வேளைஎன் இதயம்தொட்டுச்செல்லும்இந்தஆசை,எத்தனையோகண்டுபிடிப்பை கண்ட விஞ்ஞானிகளுக்கு இது சாத்தியமாகலாம்… அன்று “காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்றான் பாரதி…இன்று உலகின் சக்தியான விஞ்ஞானிகளிடம் என் வேண்டுகோள் ஒன்று தான்,அது ஒருபுறம் உணர்வுப்பூர்வமானது, மறுபுறம் விஞ்ஞானப்பூர்வமானது, ஆம் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ சம்மந்தபட்டது…

கிளப்பில் சைக்கிளிங் செய்தபடி கண்மூட வேண்டும், காட்சிகள் கிராமமாக மாற வேண்டும், பசுமையும்,பறவையும் பார்க்க வேண்டும்… குயிலிசை குரலையும் கேட்க வேண்டும்…கூடி வரும் மான் கூட்டமது கண்டு,மனம் களிப்பில் மது உண்டு…மனமது இறக்கை கட்டி பறக்க வேண்டும்…இறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும் …! ’

தமிழ் நாட்டு தமிழச்சியும் …தமிழ்மண தமிழச்சியும் …ஓர் அலசல்…


தமிழ் நாட்டு தமிழச்சி...

“----“ என்ற வார்த்தை கேட்டால்
நாணி கோனிடுவார், உடல்
கூனி குறுகிடுவார்…சொன்னவரை
எகிறிடுவார்…பார்வையால் எரித்திடுவார்…

தமிழ்மண தமிழச்சி...

“----“ என்ற வார்த்தைதனை – தம்
பாணி என்றிடுவார் – தினம்
போனி செய்திடுவார் – தமிழ்மணம்
நாணி கோண வைப்பார் – ஏதும் கேட்டால்
எகிறிடுவார்…எழுத்தால் எரித்திடுவார்…

தமிழ் நாட்டு தமிழச்சி...
நித்தம் ஒரு கோயில்
நிதமும் ஒரு விரதம்
சத்தமிட்டு பேசக்கூட
யுத்தமென்று அஞ்சுபவர்…
தமிழ்மண தமிழச்சி...
நித்தம் ஒரு இடுக்கை - அவர்
நிதமும் தருவார் தன் படைப்பை-அவர்
சத்தம் தனை கேட்டால் கூட சபையில்
யுத்தமென்று அஞ்சுவோர் பலர்…
தமிழ் நாட்டு தமிழச்சி...
தீர விசாரித்தாலே வெளி சொல்ல
தயங்கிடுவாள்…
தீயதென்று கண்டுவிட்டால்
பூவைக்கூட புறக்கணிப்பார்...
தமிழ்மண தமிழச்சி...
தீர்க்கமாக இடுக்கை இடுவார்
விளக்கம் கேட்டால்
விளங்காதிருப்பார்…
தீயது என்றறிந்தாலும் – இவர்
தீக்குள் விரல் விடுவார்…
தமிழ் நாட்டு தமிழச்சி
அடக்கம் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்
ஆண்கள் சபையென்றால்
அமைதி காப்பார்
தலை குனிதல் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்- அது தமிழச்சி
தரணி புகழ வழிவகுக்குமென்பார்…

தமிழ்மண தமிழச்சி...
(மற்றவரை) அடக்கும் குணம் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்
ஆண்கள் சபை
அமைதி காக்க வைப்பார்
தமிழன் தலை குனிய கூடாதென்றால்
தமிழச்சி எப்படி தலை குனிவாரென்பார்- அதுவே தமிழச்சி
தரணி புகழ வழிவகுக்குமென்பார்…

மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர்கள் பெயர் தாங்கிய அதர்மங்கள்...முரண்பாட்டு முரசொலிகள்...


என்ன முரண்பாடிது..?
“அண்ணா சாலை”
தலைவர் பெயர் தாங்கிய
தார் சாலை !

கடமை போதித்தவர் சாலையில்
கண்ட படி அதர்மங்கள்
ஓரம் ஒதுக்கி
பர்ஸ் சுரண்டும் போலீஸ்

ஒதுங்கிப்போனால்
ஒதுக்கிப்போகும் பெண்கள்..
ஓயாமல் திரையரங்கில் நாட்டின்
வருங்கால கண்கள்…
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கற்றுத்தந்தவர் பெயர் தாங்கி
கலாச்சார சீர்கேடு…
ஏனிந்த முரண்பாடு…?

என்ன முரண்பாடிது..?
“பெரியார் சிலை”
உருவங்கள் வேண்டாமென்றார்..!
வழிபாடு கூடாதென்றார்…!
அவருக்கே சிலை வைத்து
மாலையுடன் வழிபாடு!
பகுத்தறிவு வார்த்தைகளை
பகுத்தறிய இயலாக் கூட்டம்
ஏனிந்த முரண்பாடு…?

என்ன முரண்பாடிது..?
“எம்.ஜி.ஆர் சமாதி”
ஏழை இல்லாதிருக்க
எல்லாம் செய்து
பாலர் பணி ஒழித்திட
பாடுபட்டவர் சமாதி-இன்று
சுண்டல் தொழிற்சாலையாய்…
வறுமை சாவின்
தூக்கு மேடையாய்…
ஏனிந்த முரண்பாடு…?


என்ன முரண்பாடிது..?
“காந்தி பீச்”
கஞ்சா விற்பவனின்
கடை முகவரி
அரசியல் ரவுடிகளின்
அரிவாள் பதுக்குமிடம்
அகிம்சை அன்பு
போதித்தவர் பெயர்தாங்கி
அனைத்தும் அராஜகங்கள்
ஏனிந்த முரண்பாடு…?

அக்னி அவதாரங்கள்




ஒளியின் மறு உருவே –அண்ட
வெளியின் முதல் உருவே இப்புவியில்
உனக்குத்தான் எத்தனை
அவதாரம்..?

முகம் சிவந்தால் கனல்-புவியை
முத்தமிட்டால் அனல்
கோபம் கொண்டால் தீ- திருக்
கோயில் என்றால் தீபம்
வெகுண்டெழுந்தால் சுவாலை-நீ
விளைந்திருந்தால் அது பாலை…

நீ சாதனையாளர்களை
சலனப்படுத்திய
அக்கினிப்பொறிகள்…
ஏவுகணையாய் எம் அபுல் கலாமை
இமயம் உயரச்செய்த
அக்கினிச் சிறகுகள்…
பார் புகழ எம் பாரதியை
பாட்டெழுதச் செய்த
அக்னிக் குஞ்சுகள்…

நீ எடுப்பார் கைப்பிள்ளை..!
தீவிரவாதிகளின் கலாபக்காதலி
கொள்ளையர்களின் குலவிளக்கு
அநாகரீக அரசியலின் குடிசை மாற்று வாரியம்..
அடுப்பில் உனை அடைத்தால்
அறுசுவை உணவு…
அணுவில் உனை அடைத்தால்
கருகிடும் உலகு..!
நீ எடுப்பார் கைப்பிள்ளை..!

நீ மானிடர்களின் சாபக்கேடு
அன்பாய் எம்மை அணைத்தாலும்
வம்பாய் போய்விடும்
பாசமாய் உனைத்தொட்ட போதும்
மோசமாய் போய்விடும்
நீ மானிடர்களின் சாபக்கேடு

நீ பாசக்காரப் பயல்
அடங்காப்பிடாரி உன்னை
அடக்க இருவரால் மட்டுமே இயலும்
ஒன்று உன் அன்னை மணல் –மற்றொன்று
உன் காதலி தண்ணீர்..!
எத்தனையோ பேரின் கண்ணீருக்கு
அடங்காதவன் உன் காதலி
தண்ணீருக்கு மட்டுமே அடங்குவாய்
அவள் அணைத்தால் மட்டுமே- நீ
அணைவாய்..
நீ பாசக்காரப் பயல்

அக்கினியே
அன்பாய் ஒரு வேண்டுகோள்
ஆக்கம் மட்டும் தொட்டு விடு
அழிக்கும் குணமதை விட்துவிடு
உன் நோக்கம் மட்டும் சரியானால்- இப்புவி
போற்றும் சக்தி நீ தானே..

சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்-2

"சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்" இது ரஹீம் என்ற ஒரு தனிப்பட்ட இளைஞனின் கதை மட்டுமல்ல,கண்ணீரெல்லாம் வியர்வையாகவே இனம் காணப்படும் இந்த அரபுதேசத்தில், தன்னை எரித்து தன் பந்தம் காக்கும் பலத்தியாகச்சுடர்களின் வரலாறு இது…உணர்ச்சிகளை உள் புதைத்து தன் உறவுகளை உயரச்செய்யும் பல உன்னத மனிதர்களின் உண்மை நிலை இது…வாசியுங்கள்..இந்த பாலைவனப்ப்ழுதிக்காற்றை நீங்களும் கொஞ்சம் சுவாசியுங்கள்…

இதற்கு முன்...



இனிமேல்...
ஒருவேளை பொண்ணு பார்த்து வைத்திருப்பார்களோ..? என்ன சொல்வது ஒத்துக்கொள்ளலாமா..? இல்லை பிடிக்காததை போல் நடிக்காலாமா? என்று சிந்தித்த படி “அம்மா” என்றேன்…

ரஹீமு, எப்படியப்பா இருக்கே? அஜீசு தம்பி வந்திருந்தான், நம்ம இன்ஜினியர் வீடு விலைக்கு வருதாம்..! ஊருலேயே நல்லா வாழ்ந்தவரு, அவசரமா பணம் தேவைன்னு விக்கறாராம்.அதை வாங்கினா, நமக்கும் பெருமையா இருக்கும். எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது, அடக்கிக்கொண்டு பொறுமையாக, “ அம்மா நமக்கு இன்னொரு வீடு தேவையா ? என்றேன்.“இல்லே ரஹீம், இந்ந்த வீடு பழசாப் போச்சு, அக்காமார்கள் வந்தா தங்கக் கூட வசதியில்லை, இன்ஜினியர் வீடு ரொம்ப வசதியானது, விலையும் கம்மியா வருதாம், ‘ அப்பா, இன்ஜினியர் தம்பி மாதிரி உன்னையும் பெரிய இன்ஜினியர் ஆக்கனும்னு நினைச்சாரு , அது தான் நடக்கலை, அவர் வீட்டையாவது வாங்கி அப்பா கனவை நினைவாக்குடா ரஹீம்’. அம்மா கலங்க ஆரம்பித்தார், எனக்கு என்ன சொல்வதென்று தெரியலை வழக்கம் போல சரி என்றேன். லைன் கட் ஆனது, என் கனவுகளும் தான்…

என் வீட்டு கோபம் சமூகம் மீது திரும்பியது, சே .. என்ன சமூகம் இது? பெண்களை மட்டும் குமராக சித்தரிக்கும் சமூகம், ஆண்களுக்கு இளமை இல்லையா, ஆசை இல்லையா..? வழக்கம் போல, வேலு மாமாவிடம் புலம்பித்தள்ளினேன், மீண்டும் கடன், என் கனவுகள் தள்ளிப்போனது. இடையே சூப்பர்வைசராக பதவி உயர்வு. ஆண்டுகள் உருண்டோடின…

அம்மா, அழைத்திருந்தார்…தனக்கு வயதாகி விட்டதால் எனக்குத் திருமணம் செய்து பார்க்கணும் என்றாள். அவர் சுயநலப் பேச்சை விட அவர் முடிவு என்னை சந்தோஷப் படுத்தியது…எத்தனை கிண்டல்கள், கேலிகள்! உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது என்ற எக்கலிப்பு..! எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியாய் என் மனைவி வந்தாள். சூழ்நிலை காரணமாக காத்திருந்தாலும், தவமாய் தவமிருந்து கிடைக்கப்பெற்றது போல ஒரு பெண்டாட்டி! அன்பு, அடக்கம், மதிப்பு, மரியாதை ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத குணம்..விடுமுறையின் மதிப்பு தெரிந்ததே இந்த முறை தான்…

பயண நாள் வந்தது. ஆண்கள் அழக்கூடாது தான் ஆனால் என்னால் அடக்க இயலவில்லை!என் மனைவியும் வாடிப்போனால். ஆனால் அழவில்லை , அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பது மிகக்கொடுமையானது, எனக்காக அவள் அதை செய்தாள்.. என்னுள் பெருமிதம் ! எனக்காக, எனக்காக மட்டுமே எதையும் செய்ய, என்னை மட்டும் நினைக்க ஒரு ஜீவன் கிடைத்துவிட்டது. அன்று விமானக் கழிவறையில் அதிக நேரம் செலவிட்டேன், அழுவதற்கு..!

துபாய் வந்திறங்கினேன்.. நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள், வேலு மாமா அன்பாய் அணைத்துக் கொண்டார், நாள் போக்கில் சரியாகுமென்றார்.மாதம் ஒருமுறை ஊருக்கு பேசும் தொலைபேசி மணிக்கொருமுறையாக மாறியது. என் மனைவி படும் வேதனையை என் அக்காமார்கள் விவரிக்க மனதில் வேதனை இன்னும் அதிக மாகியது. இலக்கியத்தில் பெண்களுக்கு வந்த பசலை நோய் இப்போது எனக்கு வந்தது, முன்பெல்லாம் வருடங்கள் உருண்டோடின இப்போது நாட்களே நகர ஆரம்பித்தன..

இந்த வேதனை இடையே அன்று அலுவலகத்திலிருந்து உற்சாக பானமாய் ஒரு செய்தி. எனக்கு ஃபேமுலி ஸ்டேட்டஸ் வழங்கப்பட்டதாய் ..! காற்றில் பறந்தேன், சந்தோஷ மிகுதியில் சொன்னவரைக் கட்டிக்கொண்டேன், அவர் என் மேலாளர் என்பதை மறந்து…

அறைக்கு வந்தேன் பார்ட்டி கொடுத்தேன் அன்று வேலு மாமாவின் நகைச்சுவையில் பார்ட்டியே களைகட்டியது…

சொந்ததில் உள்ள சில பொறாமை கோஷ்டிகள், "ரஹீமு பொண்டாட்டியை வெளிநாட்டுக்கு எடுக்க போறானாமே.. அங்கே செலவில்லாம் பிச்சுக்கிட்டு போகுமே… "என்று போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் செல்ல, கலவரமான அம்மா அக்கா எல்லோரையும் சமாதானபடுத்தி என்னவளை துபாய்க்கு எடுக்க நாள் குறித்து விட்டேன். விடிந்தவுடன் விசா எடுக்க இமிகிரேசன் போகிறேன். குர்ர்ர்ர்ர்’ என்றபடி சற்றே அதிகமாகிய ஏசி சத்தத்தில் நிகழ்காலம் வந்தேன்… மீண்டும் புரண்டு படுத்தேன்…பக்கத்தில் வேலுமாமா முழித்தபடி என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன ரஹீம், நீ இன்னும் தூங்கலையா…?

புன்னகைத்தேன், “ இல்லை மாமா தூக்கம் வரலை”

“மக வரப்போகுதுல்ல அது தான் மருமகனுக்கு குளிரடிக்குது, தூங்கு ரஹீம் நாளைக்கு வேலைக்கு போகனும்”

இல்லை மாமா, “நாளைக்கு நான் வேளைக்கு போகலே..” என்றேன்

“ஏன் ? என்ன ஆச்சு..?” பதறினார்

“விசா எடுக்கப் போறேன், அப்புறம் வீட்டுக்கு 6 மாசம் அட்வான்ஸ் கேக்குறாங்க, கையிலே இருக்கிற அரியர்ஸ் பணத்தை கொடுக்கப் போறேன், டிக்கட்டுக்கு இனி தான் தேத்தணும்..”

வீட்டு சாமானுக்கு என்ன பண்ணப் போறே? அக்கறையுடன் கேட்டார்

கிரிடிட் கார்டு தான்..” நான்

"பேலன்ஸ் இருக்கா…?"

"ஏதோ இருக்கு மாமா” என்றேன்

"புள்ளை வரும் போது வெறும் கையோடவா இருப்பே ? இந்த மாசம் ஒரு (கிரிடிட் )கார்டை கட்டி குளோஸ் பண்ணிடலாம்ன்னு கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன் அதை எடுத்துக்கோ.."

"வேண்டாம் மாமா , உங்க கிட்டே எத்தனை தடவை தான் வாங்குறது.. அதுவும் அந்த கார்டை முடிக்கனுங்கறது உங்க ரொம்ப கால ஆசையாச்சே..?"

"அட விட்டுத்தள்ளு ரஹீம் இந்த சனியன் வாலை புடிச்சா என்னாகும்னு நமக்குத் தெரியாதா என்ன..?, எனக்கென்ன .. ஒரே மகள், அவ கல்யாணத்தை பண்ணிட்டா பெரிய கடன் முடிஞ்சிடும் இதுவெல்லாம் சும்ம…"

வேலு மாமா பிக்கப் டிரைவராக இருக்கிறார்.. எங்கள் அறையின் மூத்த குடிமகன்.. எப்போதும் கலகலப்பாய் இருப்பவர்,, அவரின் உதவி செய்யும் குணமறிந்து ஏமாற்றிச் சென்றோர் ஏராளம். சிந்தித்த படி உறங்கி போனேன்.

சீக்கிரமே விடிந்துவிட்டது. இமிக்ரேஷன் சென்றேன், சில மணி நேரத்தில் விசா ரெடி. கண்களில் கண்ணீர்.., இல்லை கண்ணீர் வந்தது… இது ஆனந்த கண்ணீர்..! இனி பணத்தை வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டால் வீடும் ரெடி…இரண்டு நாளில் என்னவள் என் அருகில் !போன் செய்ய ஆவல் எழுந்தது.. வீட்டு வேலையையும் முடித்து விட்டு போன் செய்யலாம் என்று அறைக்கு விரைந்தேன்.வாசலில் வேலு மாமாவின் பிக்கப் நின்றது, ஏன் என்ன ஆயிற்று இவருக்கு ஏன் வேலைக்கு போகவில்லை ..? என்று யோசித்த படி உள்ளே நுழைந்தேன்.

வேலு மாமா பதற்றத்துடன் போனில் பேசிக்கொண்டிருந்தார், ஓகே ஓகே , நான் எப்படியாவது அனுப்பறேன்… போனை வைத்து விட்டு என்னிடம் வந்தார்…அவரிடம் என்று மில்லாமல் பதட்டம் காணப்பட்டது,

ரஹீம் என் மகளுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம், ரொம்ப சீரியஸ்ஸாம் ஆபரேசன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாராம், வேலு மாமா கதறி அழத்தொடங்கினார்…சிரித்து, சிரிக்க வைத்தே பார்த்து பழக்கப்பட்ட மாமா அழுதது மனதை பிழிந்தது…கண்ணில் நீரை வரவழைத்தது… உடனே ஆபரேசன் பண்ணச்சொல்ல வேண்டியது தானே மாமா…?
“ ஆபரேஷனுக்கு இரண்டு லட்சம் வேணுமாம் ரஹீம், உடனே அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்…

நான் கொஞ்சமும் யோசிக்க வில்லை. என்னிட மிருந்த பணத்தை அப்படியே அவரிடம் கொடுத்தேன், யோசிக்காதீங்க மாமா, உடனே இந்த பணத்தை அனுப்புங்க, தேவை பட்டா நீங்களும் கிளம்புங்க…மீதி பணத்தை நான் ஏற்பாடு பண்ணி அனுப்பறேன்…”

"ரஹீம் !!?" அவர் உறைந்தார்…வேணாம் ரஹீம் இது உன் சந்தோசத்தின் சாவி… இது வேணாம்டா”

“பரவாயில்லை மாமா, ஐந்து அக்காக்களுக்காக என் வாழ்வை பெரும்பாலும் கழிச்சுட்டேன், இது என் தங்கச்சிக்கு செய்றதா நினைச்சுக்குறேன், கிளம்புங்க மாமா”

வேலு மாமா என் கையை இறுகப் பற்றினார். அந்த அழுத்தத்தில் பாசத்தின் வலிமை தெரிந்தது.அவர் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். நான் ஏசியை போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்தேன்… கையிலிருந்த விசாவை உற்றுப்பார்த்தேன்… கசக்கி வீசினேன்..

டெலிபோன் மணி ஒலித்தது. மறுமுனையில் என்னவள் “ மச்சான் இன்னிக்கு விசா எடுக்க போனீங்களே என்னாச்சி , அஜீசு சாச்சா எப்ப டிக்கெட் போடன்னு கேட்டாங்க, உங்களை சீக்கிரம் பார்க்க போறென்ன்னு கை கால் ஓட வில்லை…நீங்க லட்டெர்லே அனுப்புன முத்தத்தை எல்லாம்கணக்கெழுதி வச்சிருக்கேன், அங்கே வந்ததும் மச்சானுக்கு டபுளா தருவதற்கு” என்றுமில்லாமல் இன்று அவள் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போக,

நான் சிறகொடிந்த பறவையாய் சிலையானேன்.

(முற்றும்)

சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்-1

(தன் குடும்ப வாழ்வை வளப்படுத்த கடல் கடந்து வந்து,இந்த எண்ணெய் தேசத்தில் தங்கள் இளமையைத் தொலைத்து நிற்கும் ஆயிரக்கணக்கான மெழுகுத்திரிகளுக்கு இந்த படைப்பைக் காணிக்கையாக்குகிறேன்)



எனக்கு உறக்கம் வரவில்லை... புரண்டு படுத்தேன்...மீண்டும் புரண்டு படுத்தேன் கடிகாரத்தை இருபதாவது முறை பார்த்தேன், மணி நள்ளிரவு 2.30 நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மெல்லிய குறட்டை சத்தம் விதவிதமாக....இவற்றை மிஞ்சும் ஏ.சி. சத்தம் ஒருபுறமாக....மீண்டும் புரண்டு படுத்தேன். உறக்கம் வரவில்லை.அறையின் இருட்டு கண்களுக்கு பழகிவிட்டிருக்க, சிந்தனையுடன் என் அறையைக் கண்களால் துழாவினேன்.அது 150 சதுர அடி புறாக்கூடு, பத்துபேரின் பங்களா இது ! ஊரில் இவர்களுக்காக பங்களாஉம் பகட்டு வாழ்க்கையும் காத்திருக்க, இங்கே கனவுகளைச் சுமந்து காகிதத்தில் அழுது, ஆசைகளை தபாலில் அனுப்பும் துர்பக்கியசாலிகள் இவர்கள்… நான்…? நீண்ட பெருமூச்சுடன் காரை பெயர்ந்த கூரையை உற்று நோக்கினேன். தூரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி, அதன் சத்ததிற்கேற்ப எனை 18 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்சென்றது.

நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பொக்கிஷம். ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பின் தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே ஆண்மகன். வீட்டின் செல்லப்பிள்ளை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தான் என் பள்ளிப்பருவமும் நகர்ந்தது, அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்ற்றுந்தேன்.வழக்கமாக் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பினேன்.எனக்குத் தெரியாது என் வாழ்வில் அன்று ஒரு சுனாமி நிகழும் என்று..! வீடு சென்றேன், அங்கே அஜீஸ் மாமா வந்திருந்தார். அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“மச்சான், நான் சொல்லுறதை கேளுங்க, உங்களுக்கும் வயசாகிப்போச்சி, ஐந்து பெண்ணுக்கும் கல்யாண வயசு ஆயிருச்சி, இவன் படிச்சி என்ன பண்ணப் போறான்..? நம்ம ஆசிஃப் அண்ணன் துபாயிலே இருக்காரு, ஊருலே பாருங்க அவர் வசதியை, அவர் என்ன ஐஏஸ்ஸா படிச்சாரு..? வெறும் அஞ்சாவது தான் படிச்சிருக்காரு, இப்ப அவரு ஊருக்கு வந்துருக்காரு, அவருக்கு வேலைக்கு சிலபேர் வேணுமாம், நீங்க ஊம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க, நம்ம ரஹீமை துபைக்கு அனுப்புறது என் பொறுப்பு.”

அப்பா யோசிச்சார், எனக்கு ஆத்திரம் வந்தது, துபாய் வாழ்க்கை நமக்கு கிடைக்க மாமா எவ்வளவு மெனக்கெடுறாரு, இவரு ஏன் யோசிக்கிறாரு..? உள்ளுக்குள் பொருமியபடி சமையல் அறையிலிருந்த அம்மாவிடம் அதைக்கொட்டினேன்.

“ டேய் ரஹீமு என்னை என்னடா பண்ணச் சொல்றே ...? அப்பா எது பண்ணினாலும் உன் நல்லதுக்குத்தான் பண்ணுவாரு…”

அப்பா ஆரம்பித்தார், “அஜீசு, நாம தான் படிக்காமப் போயிட்டோம், ரஹீமாவது நம்ம குடும்பத்துலே படிச்சு பெரிய ஆளா வரட்டும். நான் ஐந்து பெண்களைப் பெற்றதுக்கு அவன் என்னடா செய்வான் ? அவன் தலையிலே சுமையை வைக்க நான் விரும்பவில்லை. இந்தப் பேச்சை இத்தோடு விட்டுவிடு, நான் நம்ம இஞ்சினியர் மாதிரி ரஹீமை பெரிய இஞ்சினியருக்கு படிக்க வைக்க போகிறேன்”.

“ மச்சான் உங்க ஆசை வாஸ்த்துவம் தான், ஆனா வயசுக்கு வந்த பொண்ணுங்க ஐந்து இருக்குங்கிறதை மறந்துடாதீங்க..பொண்ணுங்க கல்யாணத்தை பார்ப்பிங்களா…இல்லை அவன் படிப்பை பார்ப்பீங்களா..?

அப்பா விடுவதாய் இல்லை, “அஜீசு படைத்த அரிசியிலேயே யார் யாருக்கு எது என்று எழுதிவைத்த ஆண்டவன், என் பிள்ளைகளுக்கு வழி காட்ட மாட்டானா ? இதோட இந்த பேச்சை விடு” அப்பா குரலில் சற்று கடுமை கலந்திருந்தது, அஜீஸ் மாமா போய் விட்டார்…
எனக்கு ஆத்திரம் அதிகமானது, ஆத்திரத்தில் உறங்கிப்போனேன்…திடீரென்று அம்மாவின் அலறலில் பதறி எழுந்தேன், அக்காமார்களும் ஓடி வந்தார்கள், அம்மா கதறியபடி இருந்தார்… அப்பா கட்டையாக கிடந்தார்,அப்பா, அப்பா என்று நாங்கள் துடித்தோம், அவர் மூச்சு அடங்கி இருந்தது

பாழாய்ப்போன மாரடைப்பு என் அப்பாவை எங்களிடமிருந்து பிரித்தது, நாங்கள் ஒரே நாளில் நிர்கதியானோம், அஜீஸ் மாமா வந்தார், பாஸ்போர்ட், விசா எல்லாம் மூன்று மாதங்களில் தயார், என் அப்பாவின் இஞ்சினியரிங் கனவு , அவருடன் மறைந்தது…

நான் துபாயிக்கு வந்திறங்கினன், என் போன்று ஏராளமானோர் இருந்தார்கள், அது ஒரு லேபர் கேம்ப், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, ஒவ்வொரு பொறுப்பு, பறந்து வந்த பின்புதான் புரிந்தது, நாங்கள் சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகளென்று…

மாமா, சாச்சா என்று இங்கு உறவிகள் அதிகம். இது சந்தோஷத்தில் சங்கமித்த கூட்டமல்ல, சோகத்தில் இணைந்த உறவு! வேலைக்குச்சென்றேன், ரோடு போடும் கம்பெனியில் வேலை. பாலைவன நடுவில் பணி.ஊர் வெயிலில் வெளியே சென்றாலே கறுத்து விடுவாய் எனக்கருணை காட்டும் அம்மா இங்கு பார்த்தால் ? சமையலறைக்குள் நுழைந்தாலே சூடு தாங்க மாட்டாய் போ தம்பி போ தம்பி எனப் பதறும் அக்காமார்கள் இங்கு வெயிலில் வேகும் என்னைப் பார்த்தால் ? அவர்கள் சந்தோஷம் காக்க என் சங்கடம் மறைத்தேன்.

இங்கு செருப்பாய் தேய்தபோதும் சேக் உடையில் புகைப்படம் அனுப்பினேன்,இங்கு கதறி அழுதபோதும் காருடன் நின்று படம் அனுப்பினேன். வேதனை மறைத்தேன் வெந்த புண் மறைத்தேன்..இரவில் நண்பர்களின் சோகக்கதை கேட்ட போது வேதனை மறந்தேன், வெந்த புண் மறந்தேன்…சம்பாதித்த பணத்தை அப்படியே அனுப்பினேன், பணம் போத வில்லை என்று மடல்…என் கஷ்டம் மறைத்தது எனக்கே கஷ்டமாய் போய் விட்டது.அப்பா கொடுத்த ஐநூறு ருபாயில் காலம் தள்ளியவர்கள், நான் அனுப்பும் ஐயாயிரம் ரூபாய் காணாதென்றார்கள், கேட்டால் சம்பாதிக்கிறேன் என்று கேள்வி கேட்கிறாயா? என்று அம்மா அழுவாள்…எதற்காக இந்த கஷ்டம் ..? அவர்களுக்காகத்தானே…? பின்னே அவர்களை அழவைக்கலாமா..? அதன் பின் அவர்கள் கேட்ட அனைத்தையும் அனுப்பினேன். முதல் அக்காவிற்கு வரன் வந்தது…கடன் பட்டு கல்யாணம் நடத்தினேன். வருடங்கள் கடந்தன…



வேலையில் என் திறன் பார்த்து புரொமோஷன் வந்தது. லேபரில் இருந்து ஸ்டாஃப் ஆனேன்.பெருமை என்னைப்பற்றிக்கொண்டது. கிரீடம் சூட்டப்பட்டதாக மகிழ்ந்தேன். அப்போது எனக்குத்தெரியவில்லை எனக்கு உயர்த்த்ப்பட்ட சம்பளத்தை விட என் செலவு இரட்டிப்பு ஆகுமென்று… ஆம், கேம்பிலிருந்து வில்லாவிற்கு மாறினேன்.முன்பு போல ஒரு ஜோடி துணிகளை வைத்து வாரம் முழுவதும் கடத்த இயலவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்ப என்னை அலங்கரித்துக்கொள்ள வேண்டிய சூழல் செண்டு, புது உடைகள், ஷஊ, ஹோட்டல் சாப்பாடு என்று என் வாழ்க்கை முறையில் அதிரடி மாற்றம் என்னைத் தடுமாற வைத்தது. கேம்பில் இருக்கும் போது பெப்ஸி குடிக்கவே நூறு முறை யோசித்த நான் இப்போது பீர் குடிப்பதை பெருமை என்று நினைக்க ஆரம்பித்தேன்.

அடுத்த அக்காவின் திருமணம் … துபாய் வந்து வருடங்கள் பலவாகியதால், ஊர் செல்ல வேண்டிய தருணமும் வந்தது.தெரிந்தவர்கள் எல்லோரிடமும் கடன் … ஊர் சென்றேன், ராஜ மரியாதை… பணம் கரைந்தது, மரியாதையும் கரைந்தது, மீண்டும் பாலை நகரம் நோக்கிப் பயணம். மீண்டும் பத்து வருடம் ஊர் செல்வதை மறந்து உழைத்தேன், உழைத்து, உழைத்து ஒட்டகமானேன். அக்கா அனைவருக்கும் திருமணம் முடிந்தது. சுமைகளை இறக்கி வைத்த பின்னும் கூனல் குறையவில்லை. அடுத்து உனக்குத்தான் திருமணம் என்று நண்பர்கள் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். முதன் முறையாக என்னைபற்றி கனவு காண ஆரம்பித்தேன். அன்று அம்மா டெலிப்போனில் அழைத்திருந்தார். வழக்கமாக நான் தான் அழைப்பேன், அவர் அழைத்திருக்கிறார் என்றால் எதோ முக்கியச்செய்தி தான். என்னவாக இருக்கும்..? ஒருவேளை பொண்ணு பார்த்து வைத்திருப்பார்களோ..? என்ன சொல்வது ஒத்துக்கொள்ளலாமா..? இல்லை பிடிக்காததை போல் நடிக்காலாமா? என்று சிந்தித்த படி “அம்மா” என்றேன்…

பதில் சுகமா..? சோகமா?

தொடரும்….

பாலைவனப் புழுதிக்காற்று…


துபாய்…எத்தனையோஇளைஞர்களின் கனவு தேசம்...!, வாழ்வை வளப்படுத்த வேண்டி வறுமையில் வந்தோரை வெறுமை போக்கச்செய்த வியாபார பூமி..!

திரவத்தங்கத்தை திகட்டாது அள்ளித்தந்து சரித்திரப்புகழ் சாம்ராஜ்யங்களை சலசலக்க வைத்து, கற்காலத்தை கண நேரத்தில் பொற்காலமாய் மாற்றிய மாயாஜால பூமி…!

இங்கே வாழும் மக்களின் நிலைப்பாடு என்ன…? நாட்டு வளர்ச்சியில் மைக்ரோன் அளவில் தானும் வளர்ச்சி காணும் மூன்றாம் தர உழைப்பாளியின் உண்மை நிலை என்ன…வரும் நாட்களில் அதைப்பற்றி நிறையஎழுதப்போகிறேன்.


இந்தக்கதையும் அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் பாடு தான். ”சிறகுதொலைத்த சிட்டுக்குருவிகள்” இது ரஹீம் என்ற ஒரு தனிப்பட்ட இளைஞனின் கதை மட்டுமல்ல,கண்ணீரெல்லாம் வியர்வையாகவே இனம் காணப்படும் இத்தேசத்தில்,தன்னை எரித்து தன் பந்தம் காக்கும் பலத்தியாகச்சுடர்களின் வரலாறு இது…உணர்ச்சிகளை உள் புதைத்து தன் உறவுகளை உயரச்செய்யும் பல உன்னத மனிதர்களின் உண்மை நிலை
இது…வாசியுங்கள்...இந்தபாலைவனப்ப்ழுதிக்காற்றை நீங்களும் கொஞ்சம் சுவாசியுங்கள்…

இறக்கை கட்டி பறக்குதடி…


மிதிவண்டி (அது தாங்க சைக்கிள்…) நம்மில் பல பேர் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால்… ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று கிராமத்து தெருக்களில் நம்மை பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் சென்று கால், கையில் ஆராத ரணமாகவும் , நெஞ்சத்தில் நீங்கா நினைவாகவும் நம்முடன் வரும் பாலர் பருவத்து வாகனம்…

வண்டியில் ஏறி ஓரம்போ ஓரம்போ எனக் கூக்குரலிட்டு ஆளில்லா இடங்களிலும் மணியடித்து, வயதான் கிழங்களை இடித்து, கடலை மிட்டாய் கடித்தபடி கைவிட்டு சைக்கிள் ஓட்டி,பிகர்களை கரக்ட் பண்ணும் விதமாய் தெருக்களில் வலம் வந்த நாட்களை அசை போடும் இந்த வேளை… இதயத்துள் ஏதோ எழுத்துக்கூட்டி பார்க்க இயலா சுகம்…

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் எல்லாத் தெருக்களிலும் வாடகை மிதிவண்டி நிறுவனங்கள் இருக்கும்… சைக்கிள் கம்பெனி என்று நாங்கள் அழைப்போம்…எந்த விடுமுறை என்றாலும் எங்களின் சேமிப்பு அனைத்தும் அந்த நிறுவனங்களுக்கே அர்ப்பணம்… கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி என்ற கணக்கு போதனைகள், அந்த பள்ளிபருவத்தில் சைக்கிள் மூலமே ஆரம்பித்தது எனலாம்…

வயதுகள், வளர்ச்சிகள் ஏற ஏற புரோமோஷன் கிடைப்பது போல கால் வண்டியிலிருந்து அரைவண்டி மாறும் போது நமது வட்டாரங்களில் நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குமே அப்பப்பா அந்த அந்த புகழ்ச்சியே தனிதான் போங்க…

சைக்கிளில் பக்கத்து கிராமங்களுக்குச் செல்ல புழுதி புடைச் சூழ கிளம்புவோம்…பசுமை நிறைந்த அந்த தோட்டத்து வீதியில் இளம் தென்றல் முகம் மோதுமே அதற்கு எந்த ஏசிக்காற்றும்இணையாகாது…இதற்கிடையில் சைக்கிள் போட்டியும் நடக்கும், எத்தனை வேகமாக சென்றாலும் பிகர்கள் குறுக்கிட்டால் வண்டி ஆட்டோமெடிக்காக ஸ்லோவாகி விடும்... எட்டு போடுவது,பதினாறு போடுவது என்ற வித்தைகளெல்லாம் அப்பொது தான் அரங்கேறும்…‘களுக்’கென்று சிரித்துச் செல்லும் அந்த கிராமத்துச் சிட்டுக்களை அவ்வப்போது டபுள்ஸ் ஏற்றி இதயத்துள் பாரதிராஜா பாணியில் ஓடவிட்டு ரிவைண்ட் பண்ணி பார்ப்பதின் சுகமே அலாதி தான்…



இளையராஜா, ரகுமானுக்கே அறியாத நுணுக்கமான ட்யூன்களை சைக்கிள் பெல்லினால் விரல் நுணியில் வித்தை காட்டி “ட்ரிங் ட்ரிங்“என்று சமிஞ்கைகள் பரிமாறிய கணங்கள்…வாழ்வின் மெலோடியஸ் தினங்கள்…

அந்த வயதில் சொந்த சைக்கிள் என்பது எங்களுக்கு ஒரு லட்சியக்கனவு அதை அடைய ஒவ்வொருவர் தகுதிக்கேற்ப இலக்கு நிர்ணயிக்கப்படும்… பெரும்பாலும் அது அடைய முடியாத இலக்குவாகவே இருக்கும்,சில பேருக்கு நீ பாஸ் ஆயிட்டா உனக்கு சைக்கிள் வாங்கி தருகிறேன் என்பார்கள்…(அவன் தேர்வு பெற மாட்டான் என்பதில் அவன் பெற்றோர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை…அந்த நம்மிக்கை வீணாகவில்லை என்பது வேறு விசயம்…)ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தால், தமிழ் நாட்டிலேயே முதல் மாணவனாக வந்தா…இப்படி எட்ட முடியா இலக்குகள் ஏராளம் …அப்போது சொந்த சைக்கிள் வைத்திருப்பவன் பணக்காரன்,பைக் வைத்திருப்பவன் பெரும் பணக்காரன் என்பதே அன்றைய எங்கள் பகுதியின் பொருளாதார புள்ளி விபரம்…


‘எரி பொருள் சேமியுங்கள்’ இந்த விளம்பரத்திற்கு நாங்களும் எங்களை அறியாமல்அந்தப்பருவத்தில் பங்காற்றி இருக்கிறோம் என்பதே பெருமையான விசயம் தான்…

இன்று காலம் மாறிவிட்டது…காட்சி மாறி விட்டது…வாழ்க்கை மாறிவிட்டது...வசதி கூடி விட்டது…எங்கும் பிரமாண்டம் ,எதிலும் பிரமாதம்,இயந்திர வாழ்க்கை , ஓய்வில்லா ஓட்டம்...

பென்ஸ்,BMWஎன்று நான்கு சக்கர வண்டி மோகம்,மிதிவண்டியின் மார்க்கட்டை நிலைகுலைய செய்து விட்டது…இருந்தாலும் மறக்க இயலவில்லை…இன்றும் பெரும்புள்ளிகள் அனைவரிடமும் சைக்கிள் உண்டு…ஆனால் சைக்கிளிங் என்ற பெயர் மாற்றத்துடன்…மிதிக்க மிதிக்க மிரண்டு ஓடும் மிதிவண்டி இல்லை இது…நம் உடல் நோக ஓட்டினாலும் ஒரு இன்ஞ் நகரா வண்டி இது.

என் இதயத்துள் ஒரு பேராசை, ஜிம்மிலும், கிளப்பபிலும் சைக்கிளிங் பண்ணும் வேளை என் இதயம் தொட்டுச்செல்லும் இந்த ஆசை,எத்தனையோ கண்டுபிடிப்பை கண்ட விஞ்ஞானிகளுக்கு இது சாத்தியமாகலாம்… அன்று “காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்றான் பாரதி…இன்று உலகின் சக்தியான விஞ்ஞானிகளிடம் என் வேண்டுகோள் ஒன்று தான்,அது ஒருபுறம் உணர்வுப்பூர்வமானது, மறுபுறம் விஞ்ஞானப்பூர்வமானது, ஆம் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ சம்மந்தபட்டது…

‘கிளப்பில் சைக்கிளிங் செய்தபடி கண்மூட வேண்டும், காட்சிகள் கிராமமாக மாற வேண்டும், பசுமையும்… பறவையும் பார்க்க வேண்டும்… குயிலிசை குரலையும் கேட்க வேண்டும்…கூடி வரும் மான் கூட்டமது கண்டு,மனம் களிப்பில் மது உண்டு…மனமது இறக்கை கட்டி பறக்க வேண்டும்…இறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும் …! ’

Related Posts with Thumbnails