தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - பகுதி-1

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், ஆபாச வார்த்தைகள் குறித்து, தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம்...

விசு : முதன் முறையா டி.ஆர் கூட இணைந்து மக்கள் அரங்கமும், அரட்டை அரங்கமும் இணைந்த, தமிழ் மக்கள் அரட்டை அரங்கத்தை பல நாட்டு பதிவர்கள் கூடும் தமிழ் மணத்தில் நடத்துவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிடா கண்ணா…

இன்னிக்கு மேட்டர் என்னவென்றால் பதிவர் வட்டத்தில் ஆணாதிக்கம் தான் அதிகம் என்று சில பேரும், பெண் ஆதிக்கம் தான் அதிகம் என்று சில பேரும்,ஆபாச வார்த்தை ஆபத்தானது என்று சிலரும்…ஆபாச வார்த்தை ஆரோக்கியமானதுன்னு சிலரும் பேச போறாங்க…மற்றதை டி.ஆர் சொல்வார்…

டி.ஆர்: சொல்றதுக்கு என்ன இருக்கு அது தான் எல்லாத்தையும் பேசிட்டீங்களே..நேரே மேட்டருக்கு போகலாம்…( என்றபடி ஒரு எட்டடி நீள டவலை எடுத்து தயாராக வைத்துக் கொள்கிறார்…கண்ணீரை துடைக்க…)

தமிழச்சி முதலில் பேச எழுந்திருக்க, கூட்டத்தில் சலசலப்பு…

தமிழச்சி: பெண்ணாதிக்கத்தால் பதிவர் வட்டத்தில் ஏற்படும் தொல்லையையும், ஆபாச வார்த்தைகளால் ஏற்படும் அவலங்களையும் பற்றி நான் பேச வந்திருக்கேன்…

டமார்’ என்ற சத்தத்துடன் அபி அப்பா நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சாய…

குசும்பன்: “ சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி உடுத்திடலாம் , நெஞ்சம் கிழிஞ்சிடுச்சே எங்கே முறையிடலாம்”

அனானி: ஆண்கள் உரிமை காக்க வந்த தங்கத்தமிழச்சி வாழ்க…! பெண்ணாதிக்கத்தை தோலுரித்து காட்ட வந்த தோழர் தமிழச்சி வாழ்க வாழ்க…

தமிழச்சி: டேய் “ ….ரான்” இன்னும் பேசவே ஆரம்பிக்கலே அதுக்குள்ளே ஆணுக்கு குரல் கொடுக்க வந்தேன், அரவாணிக்கு குரல் கொடுக்க வந்தேன்னுட்டு… இன்னொரு தடவை எழுந்தே செவுலு பிஞ்சிக்கும் உக்காருடே…

விசு: அவன் இவன் என்றா ஏக வசனங்கள் வேண்டாமே…

தமிழச்சி: ( மனதுக்குள்: வந்துட்டான்யா திருவிளையாடல் பார்ட்டி) விசு சார் உங்க கிட்டே தெளிவா சொல்லிக்கறேன் நீங்க எழுதித்தந்த கதை வசனத்தை எல்லாம் என்னாலே பேச முடியாது… எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் பேசுவேன்…இஷ்டம்னா சொல்லுங்க பேசறேன்…இல்லேன்னா கிளம்பறேன்…

மேடையில் உள்ள பதிவர்கள் : ஆமா தமிழச்சி சொல்ற படி நாங்க ரிகல்சல் பார்த்ததெல்லாம் பேச மாட்டோம்…எங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பேசுவோம்…

விசு : கண்ணா மேடையிலே வந்து கழுத்தருக்கிறீங்களேடா ( மனதுக்குள்: இந்த பொண்ணு ஜெசிலா பதிவு போடும் போதே நாம கொஞ்சம் உஷரா இருந்திருக்கனும்…)

டி.அர்: வீராசாமிக்கே கெடுவா…வந்தேன் இருக்குது படுவா…

விசு: யோவ் நீ கொஞ்சம் சும்ம இருய்யா…நீ பேசு பொண்ணு…

தமிழச்சி: என்ன பொண்ணா, நான் பொம்பளைக்கு பொம்பளை, ஆம்பளைக்கு ஆம்பளை…

விசு: நீ எதுவேண்ணுனாலும் இருந்திட்டு போ கண்ணா..இப்ப பேசு

தமிழச்சி: உங்க பேர் என்ன..?

விசு: விசு…

தமிழச்சி: உங்களை நான் “கொசு”ன்னு கூப்பிடவா…?

விசு: எனக்குன்னு ஒரு பேர் இருக்கும் போது நீ ஏம்மா என் பேரைச்சொல்லிக்கூப்பிடக்கூடாது…?

தமிழச்சி: இதை.இதை தாயா நானும் சொல்றேன்..” …னி” ங்கறது ஒரு உறுப்போட பெயர்… அதை பேர் சொல்லிக்கூப்பிடறது தப்பா..?

விசு: தப்பே இல்லைமா…

குசும்பன்: (குறுக்கிட்டு) சார்…

விசு: என்னப்பா..?

குசும்பன்: “அதை” ஒரு தடவை ஒரு பதிவில் உபயோகிச்சா தப்பில்லைன்னு வச்சுக்குங்க…ஆன அதையே ஒரு பதிவில் ஏழு முறை உபயோகிச்சா..?

விசு: கொஞ்சம் தப்பு மாதிரித்தான் தெரியுது….

குசும்பன்: அதுவே படம் போட்டு விவரிச்சா…

விசு: தப்பு தான்…

தமிழச்சி: எதுயா தப்பு…எது தப்பு “---“ ங்கற வார்த்தை உங்களுக்குத் தப்பா போச்சா இந்த ஆண்களே இப்படித்தான் மாற்றவே முடியாது…நீங்களும் அந்த லிஸ்ட் தானே…ஆணாதிக்கம் இந்த அவையிலும் நிறைஞ்சிருக்கு…ஆணாதிக்கம் நாசமத்துப் போகட்டும்…

டி.ஆர்: தமிழ் பொண்ணுக்கு கூடாது இவ்வளவு கோபம், சென்னையிலே இருக்குது கூவம், நீ கோபப்பட்ட நாங்களெல்லாம் பாவம்… ஏ டண்டணக்கா, ஏ டணக்குணக்கா…

அடுத்து அண்ணாச்சி பேச வருகிறார்…

அனானி: அண்ணாச்சி மைக்கை புடிச்சிட்டார் இனி எத்தனை தலை உருளப்போகுதுன்னு தெரியலை…

அண்ணாச்சி: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே இங்கே வந்து நிறுத்திட்டிங்கடே…

விசு: கண்ணா, நீ ஊருக்கே அண்ணாச்சியா இருக்கலாம், ஆனா எனக்கு தம்பி தான், சொல்லுப்பா நீ என்ன பேச வந்திருக்கே..

அண்ணாச்சி: விசு அண்ணாச்சி, நான் உங்களை கேள்வி யெல்லாம் கேட்க மாட்டேன்…நேர விஷயத்துக்கு வாரேன்…நானும் நாலு வருஷமா பதிவு எழுதறேன்…( திகில் படம் பார்க்கிற மாதிரி எங்கும் அமைதி ) ஆனா ஆபாசமா ஒரு வார்த்தை எழுதுனது கிடையாது…!

விசுவும் டி.ஆரும் எட்டடி டவலை எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார்கள்…

அண்ணச்சி ( கடுப்பாகி) : நான் என்ன துக்க கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்…? எதுக்கு இப்ப அழுறீங்கடே, நான் எழுதுறதுக்கா.. இல்லே ஆபாசமா எழுதாதற்கா..?

விசு: கண்ணா, உங் கதை கண்ணுலே நீரை வரவழைக்குதப்பா..
(விசும்புகிறார்)

அண்ணாச்சி: என்னது கதையா..?

( குசும்பனும் அபி அப்பாவும் சிரிப்பை அடக்க இயலாததனால் இலவசமா கொடுத்த ஆறடி டவலால் முகத்தை மூடிகொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்…)

விசு: இங்கே பாரு கண்ணா உங்கதையைகேட்டு எப்படி குலுங்கி குலுங்கி அழறாங்கன்னு…

அனானி: டேய் அண்ணாச்சி ஆரம்பிக்கும் போதே இப்படி அழறாங்கன்னா, முடிக்கும் போது தாங்குவாங்கறே…

அபி அப்பா : இன்னும்மா இந்த "பதிவர் வட்டம்" உங்களை நம்புது…?

அண்ணாச்சி: இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்க கொலை விழும்..

அனானி: அண்ணாச்சி ஏனிந்த கொலைவெறி…

அண்ணாச்சி: போதுங்கடே இனியாவது நிறுத்தி தொலைங்கடே…

தமிழச்சி: போற போக்கை பார்த்தா அண்ணாச்சியையும் ஆபாச வார்த்தையை சொல்ல வச்சிடுவாங்க போலே…எது எப்படியோ
“அண்ணாச்சியும் ஆபாச வார்த்தைகளும்” என்று நமக்கு அடுத்த தலைப்பு கிடைச்சிடுச்சி…

விசு (அண்ணாச்சியிடம்): கண்ணா உன் சோகக்கதையைக் கேட்டு மனசு கனத்துப் போச்சிப்பா, அடுத்த ரவுண்டுலே நீ பேசலாம்…

அண்ணாச்சி: “ யோவ் நான் இன்னும் பேசவே இல்லைங்கடே..”

கடுப்புடன் அமரப்போக கட்டம் கட்டி “ தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலும் பாயுதே…” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது…

கலக்கல் தொடரும்...


( அடுத்து குசும்பன், அபிஅப்பா, வசந்தம் ரவி, டிபிசிடி அசத்தும் இதன் தொடர்ச்சி வெகு விரைவில்…)

23 comments:

TBCD said...

அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன் என்றுச் பின்னுட்டமிடனும் என்று நினைத்துக் கொண்டே கீழே வந்தால்..

///( அடுத்து குசும்பன், அபிஅப்பா, வசந்தம் ரவி, டிபிசிடி அசத்தும் இதன் தொடர்ச்சி வெகு விரைவில்…)
///

அவ்வ்வ்வ்வ்...

சொல்லி கலாய்ப்பது தான் இப்போதைய பானியா...

நல்லாயிருங்க...

delphine said...

கலக்கிட்டீங்க!

Anonymous said...

ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்பருங்க, அடுத்த பாகம் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க.
அனானி
துபாய்

தென்பொதிகை said...

வணக்கம் சாருகேசி. தமிழ் பதிவுலக முக்கிய பிரமுகர்கள் யாவரையும் ஓரிடத்தில் சந்திக்க தாங்கள் செய்திருக்கும் இந்த தமிழ் மக்கள் அரங்கம் அரட்டை கச்சேரி - வலை உலக டி ஆர் பி ரேட்டிங்கில் கண்டிப்பாக முன்னேறும்.

தென்பொதிகை.

தென்பொதிகை said...

வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன் - பாகம் 2 / 3 / 4 க்காக.
தென்பொதிகை.

கருப்பன்/Karuppan said...

ஆபீசில் LCD திரை முன் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த என்னை யாராவது பார்த்திருந்தால் இன்னேரம் கையில் காலில் விலங்கை பூட்டி வேனில் ஏற்றியிருப்பார்கள். நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.

மிதக்கும்வெளி said...

/இதை தாயா நானும் சொல்றேன்/

இது உண்மையிலேயே எழுத்துப்பிழை மட்டுமா?

கீழை ராஸா said...

வாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...

இருந்தாலும் உங்க அளவிற்கு மொக்கை போட முடியலே...

மங்களூர் சிவா said...

அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.

TBCD said...

சந்தோஷப்படாதீங்க.....

மகிழ்ச்சியாக இருங்கள்...

******

யோவ், வாங்கன்னு சொல்லி..

பின்னாடியே தாக்குறிங்களே...

அவ்வ்வ்வ்வ்வ்
//கீழை ராஸா said...

வாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...

இருந்தாலும் உங்க அளவிற்கு மொக்கை போட முடியலே...//

கீழை ராஸா said...

//ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்பருங்க, அடுத்த பாகம் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க.
அனானி
துபாய்//

அனேகமா இது குசும்பன், மற்றும் அபி அப்பாவினால் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்கும்...எவ்வளவு அவசரம்

Veerasundar said...

பதிவு அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.
தொடர் பதிவுகள எதிர்பார்க்கிறேன்!

தஞ்சாவூரான் said...

ரசித்தேன் ... :)

வல்லிசிம்ஹன் said...

சூப்பரோ சூப்பர்;)

கீழை ராஸா said...

நன்றி தென்பொதிகை,கருப்பன்...தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்கள் தெரிவியுங்கள்...

கீழை ராஸா said...

//இது உண்மையிலேயே எழுத்துப்பிழை மட்டுமா?//

உக்காந்து யோசிப்பீங்களோ..?

கீழை ராஸா said...

//அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.//

போட்டோவுலேயும் நல்லா சிரிக்கிறீங்க..சிவா..ஹிஹிஹி

குசும்பன் said...

அப்பாடா எனக்கு மட்டும் என்று இல்லாமல் அபி அப்பா, அண்ணாச்சி என்று அனைவருக்கு சேதாரம் ஆனதால்
மிக்க மகிழ்ச்சி அதை விட மகிழ்ச்சி
வரும் பதிவில் TBCD க்கும் ஆப்பு என்பதால்.

(கொஞ்சம் அதிகமாகவே அவருக்கு வைக்கவும் ஏன் என்றால் எதையும் தாங்கும் உடம்பு அது:)))

கீழை ராஸா said...

வாங்க குசும்பு...உங்க "நல்ல" மனசுக்கு நல்லா இருப்பீங்க...(அண்ணாச்சி சொல்ற "நல்லா இரு".. இல்லை...)

டிபிசிடி மேலே ஏனிந்த கொலைவெறி...?

கீழை ராஸா said...

நன்றி..வீர சுந்தர், வல்லிசிம்ஹன், தஞ்சாவூரான்...வருகைக்கு மிக்க நன்றி

Anonymous said...

நன்று!!

செ. நாகராஜ் said...

படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன், 2 பாகமும் நன்றாக வந்து இருக்கிறது. ஆனாலும் அபிஅப்பாவை freeze பண்ணி பாட்டு போட்டிருக்கலாம், அவர் அனானி விட்டு கூவ எல்லாம் சொல்லியிருந்தார்.

Anonymous said...

நல்லா இருக்குங்க..

Related Posts with Thumbnails