பனிமூட்டம்...பயங்கரம்...அபுதாபி, துபாய் சாலையில் கொடூர விபத்து...

விபத்துக்கெல்லாம் ஒரு பதிவா...இந்த பகுதிக்குள் நுழையும் போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும்...நண்பனொருவன் "அபுதாபி, துபாய் ரோட்லே ஆக்ஸிடெண்டாமே..." என்ற போது எனக்கும் அப்படித்தான் நினைக்கத்தோண்றியது...பின்பு விபத்தின் வீரீயம் கண்ட போது... மனம் பதைபதைத்தது...எப்படி எப்படி இது சாத்தியம் என்ற கேள்விக்கணைகளில் நான் இன்னும் சுய நினைவிற்கு வர இயலவில்லை...

ஆம்...விபத்தானது ஒன்று, இரண்டு வண்டிகளல்ல...200 வண்டிகள்...அதில் 25 வண்டிகள் எரிந்து நாசமாகி விட்டன...கல்ஃப் நியூஸ் தகவலின் பலி 6 பேர் மரணம் 10 பேர் படுகாயம்...இது எல்லாம் பனிமூட்டத்தினால்...

இயற்கையை நாம் குறை சொல்ல முடியாது...இப்படியொரு பனிமூட்டத்திலும்
நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்று விட வேண்டுமென்ற நம் எண்ணமே இத்தனை கொடூரத்திற்கு காரணம்...

சற்று கவனம் செலுத்தி ஒரு ஓரமாக நிறுத்திருந்தால், அலுவலகத்திற்கு தாமதமாகியிருக்கலாம், விமான நேரத்தைத் தவற விடலாம், குறித்த நேரத்தில் ஒரு இடத்திற்கு சேர இயலாமல் போகலாம்...ஆனால் எல்லாவற்றையும் விட உயிர் உயர்வானது இல்லையா...?

ஆதாரம்:


7 comments:

Anonymous said...

கொடுமை சார்...!

வல்லிசிம்ஹன் said...

நானும் துபாய்க்குப் போன் போட்டுக் கேட்டுக் கொண்டேன்.
பனிமூட்டம் இருக்கும் போது இன்னும் நிதானமாக வந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.

பயங்கரமா இருக்கிறது.

நானானி said...

கொடுங்கொடூரம் இது!!!
பொறுமையின்மைக்கு எத்தனை உயிர்கள் பலி...தேவையில்லாமல்.
உலகின் தொண்ணூறு சதவீதம் விபத்துக்கு காரணம் இதுதான்.

துளசி கோபால் said...

அடப்பாவமே....(-:

காவ்யா said...

பார்க்கவே பயங்கரமா இருக்குங்க

abudhabi_tamilan said...

நான் அபு தாபிலே வசிக்கிறேன்.
இதை கேள்வி பட்டதும் என் மனசு விம்பி அழுதுச்சு...
யார் காரணம்டு ஆராய்ச்சி பண்ணாமல் எதனால்ண்டு
யோசனை செய்தாலே மனிதன் திருந்த ஆரம்பித்து விடுவான்

அடுத்த வாரம் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களும்
காரணமானவர்களும் எப்படி வண்டியை ஓட்டப்போகிறார்கள் என்பது
நம்மை படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

இந்த சம்பவத்தின் போது ... எறிகிற வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம்...
என்பது போல்...இத்துயரத்தினிடையே...இங்கேயும்....பாதிக்கப்பட்டவர்களின்
உடைமைகளை எடுத்துக்கொண்டு ஓடிய செய்தி தான்...என்னை நிலை குலைய வைத்தது....

என்னே மனித நேயம்..

கரையான் பாதுஷா....(எ) செய்யது ஜாபர்

Mohamed Pakir Gani said...

இந்த விபத்து நடந்த போது நான் இரவு வேலையில் இருந்தேன் நான் வேலை
பார்க்கும் இடம் பெரிய மருத்துவனை என்பதால் எங்களுக்கும் இந்த
விபத்து பற்றி தகவல் கிடைத்தது ஒரு சில மெசேஜ் என்னுடைய
தொலைபேசிக்கும் வந்தது அதை பார்த்ததும் வியந்து போனாம்.

Related Posts with Thumbnails