தமிழ் நாட்டு தமிழச்சியும் …தமிழ்மண தமிழச்சியும் …ஓர் அலசல்…


தமிழ் நாட்டு தமிழச்சி...

“----“ என்ற வார்த்தை கேட்டால்
நாணி கோனிடுவார், உடல்
கூனி குறுகிடுவார்…சொன்னவரை
எகிறிடுவார்…பார்வையால் எரித்திடுவார்…

தமிழ்மண தமிழச்சி...

“----“ என்ற வார்த்தைதனை – தம்
பாணி என்றிடுவார் – தினம்
போனி செய்திடுவார் – தமிழ்மணம்
நாணி கோண வைப்பார் – ஏதும் கேட்டால்
எகிறிடுவார்…எழுத்தால் எரித்திடுவார்…

தமிழ் நாட்டு தமிழச்சி...
நித்தம் ஒரு கோயில்
நிதமும் ஒரு விரதம்
சத்தமிட்டு பேசக்கூட
யுத்தமென்று அஞ்சுபவர்…
தமிழ்மண தமிழச்சி...
நித்தம் ஒரு இடுக்கை - அவர்
நிதமும் தருவார் தன் படைப்பை-அவர்
சத்தம் தனை கேட்டால் கூட சபையில்
யுத்தமென்று அஞ்சுவோர் பலர்…
தமிழ் நாட்டு தமிழச்சி...
தீர விசாரித்தாலே வெளி சொல்ல
தயங்கிடுவாள்…
தீயதென்று கண்டுவிட்டால்
பூவைக்கூட புறக்கணிப்பார்...
தமிழ்மண தமிழச்சி...
தீர்க்கமாக இடுக்கை இடுவார்
விளக்கம் கேட்டால்
விளங்காதிருப்பார்…
தீயது என்றறிந்தாலும் – இவர்
தீக்குள் விரல் விடுவார்…
தமிழ் நாட்டு தமிழச்சி
அடக்கம் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்
ஆண்கள் சபையென்றால்
அமைதி காப்பார்
தலை குனிதல் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்- அது தமிழச்சி
தரணி புகழ வழிவகுக்குமென்பார்…

தமிழ்மண தமிழச்சி...
(மற்றவரை) அடக்கும் குணம் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்
ஆண்கள் சபை
அமைதி காக்க வைப்பார்
தமிழன் தலை குனிய கூடாதென்றால்
தமிழச்சி எப்படி தலை குனிவாரென்பார்- அதுவே தமிழச்சி
தரணி புகழ வழிவகுக்குமென்பார்…

12 comments:

கீழை ராஸா said...

தமிழச்சி இப்ப சொல்லுங்க...
நான் நல்லவனா...? கெட்டவனா...?

Anonymous said...

தமிழச்சி

நீதானே என் கவிதைக்கனவுகள்
நீதானே நான் தேடும் என் இதயம்

செந்தமிழ் பெண்ணே........

all over the world i like to see my tamil girlz...

சலங்கை ஒலியில் மூக்குத்தி அழகி
with love tamil; girlz.....
so beauty in the silky saries அழ‌கிய‌ த‌மிழ் girlz
rocket போல‌ குங்கும‌ப்பொட்டுக்காரி; மாச‌ற்ற‌ த‌மிழ் girlz

would you love me when i have no money
ச‌ம்ம‌த‌மா உனக்கு மூன்று முடிச்சு
சுத்தி வ‌ளைச்சு பேச‌ தெரியாத‌டி.....
Love u Love u like a true காத‌ல‌ன்
Love u Love u like a true காத‌ல‌ன்


எனது கண்ணின் மணியின்; மனம் உள்ளத்தைக்கேள்
உன் பார்வை போதுமே நெஞ்சில் பூப்பூத்திடும்
சொல்லடி உன் பெயர் அதுதான் மந்திரம்
உன்னை வெல்ல இங்கு யாருமில்லை
உன்னைவிடவும் Ozzila அழகியில்லை
சொல்லடி.....
கற்புக்கு பாடம் சொல்லி வீதியில கையில‌
சிலம்போட கண்ணகி சிலை......

சொல்வாள் உத்த‌மி please dont touch me
க‌ல்விக்கு ச‌ர‌சுவ‌தி காக்கும் ச‌க்தி

அந்த‌ ஒருத்தி அவ‌ள் யாரோ..எந்த‌ ஊரில் இருக்காளோ
இந்த‌ ம‌ன‌சை திற‌ந்து வைத்தேன்...என் இதய‌ம் பூரா....
என்னிட‌ம் வ‌ருமோ???????!!!!!!!

all over the world i like to see my tamil girlz...
சலங்கை ஒலியில் மூக்குத்தி அழகி
with love tamil; girlz.....
so beauty in the silky saries அழ‌கிய‌ த‌மிழ் girlz
rocket போல‌ குங்கும‌ப்பொட்டுக்காரி; மாச‌ற்ற‌ த‌மிழ் gir....lllllllllll...z

போங்கடா!!!!!!!!!!
எனக்கு என் தமிழ்மண
தமிழச்சி தான் வேனும்.
தமிழச்சி நான் உண்மையிலேயே உங்களை நேசிக்கின்றேன்.
உங்கள் எழுத்தை சுவாசிக்கின்றேன். காராத்தே மேட்டர் தான்
என் காதலை சொல்ல முடியாமல் தவிக்க வைக்கிறது பெண்ணே!
இது எனக்கு நல்ல சந்தர்ப்பம்
என் காதலை கீரை ராசா மூலம் தெரிவிக்கின்றேன்.

கீழை ராஸா said...

உம் பெயரைச் சொல்லவே உமக்கு தைரியம் இல்லை...உமக்கு எதற்கு காதல்...அதற்கு ஏன் இவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கவிதை...?

உமையணன் said...

என்ன ராஸா, "பிரபல பதிவர்" ஆகிற ஆசை வந்துருச்சு போல?

தமிழச்சி said...

முதல் கவிதைக்கு அர்த்தம் புரியவில்லை. பின்னூட்டத்தில் இருக்கும் இரண்டாவது கவிதை நல்லாயிருக்கு. யாருங்க அவரு?

கீழை ராஸா said...

//என்ன ராஸா, "பிரபல பதிவர்" ஆகிற ஆசை வந்துருச்சு போல?//

ஆசையே துன்பம் அனைத்திற்கும் காரணம் ஆசையை நீக்கினால் துன்பம் இன்றி வாழலாம்...-புத்தர்

கனவு காணுங்கள்...(ஆசை படுங்கள்)அப்துல்கலாம்

பள்ளி, கல்லூரி வரை புத்தரை பின்பற்றினேன்...
வாழ்க்கை என்று வந்தவுடன் கலாம் தான் கைகொடுக்கிறார்...

"அதற்காக நாலு பேருக்கு தெரியனும்னா எதை வேணும்னாலும் எழுதலாம்" என்பதில்லை என் நோக்கம்.. மற்றவர் மனம் நோகாமல்
ஆபாச வார்த்தைகள் உதிர்க்காமல் உண்மைகளை உள்ள படி சொல்வதில்
தவறில்லை என்று நம்புகிறேன்... நீங்க நம்ம ஊருக்காரவுக தப்புன்னா சொல்லுங்க திருத்திக்கிறேன்...

தமிழச்சி said...

/// கீழை ராஸா said...

நீங்க நம்ம ஊருக்காரவுக தப்புன்னா சொல்லுங்க திருத்திக்கிறேன்...///

Kavithai pouriyavillai.
moudalille artham sholloungal

Anonymous said...

தமிழச்சி புராணம்.

வாழிய வாழிய தமிழச்சி
உன் பார்வையின் பாதி போதுமடி
நீ நடந்தால் காவேரி
நீ சிரித்தால் இடி மழை.

உன்னைப்பார்த்தாலே கண்ணு கட்டுதடி

வாடி என் தங்கச்சி

தமிழச்சி தாசன்

உமையணன் said...

//நீங்க நம்ம ஊருக்காரவுக தப்புன்னா சொல்லுங்க திருத்திக்கிறேன்...//

அய்யய்யே நான் என்னத்தைச் சொல்றது. நீங்க பாட்டுக்கு பிரிச்சு போய்கிட்டே இருங்க. நாங்க படிச்சுக்கிட்டே இருக்கம். :)))))))

கீழை ராஸா said...

//முதல் கவிதைக்கு அர்த்தம் புரியவில்லை//

வாங்க தமிழச்சி...உங்கள் வருகைக்கு நன்றி..இடியுடன் கூடிய மின்னலை எதிர்பார்த்த எனக்கு, மெல்லிய குளிர் காற்றாய் தமிழச்சியின் வருகை திகைப்பளிக்கிறது...இந்த அமைதி புயலுக்கு பின்னா..முன்னா..?

கீழை ராஸா said...

நண்பர்களே,
இந்த பதிவிற்கு சிலர் எழுதிய பின்னூட்டத்தை நான் நிறுத்தியுள்ளதற்கு அதில் உள்ள வரிகள் சம்மந்தப்பட்டோர் மனதை புண்படுத்தி விடுமோ...? என்ற ஐயம் தான் காரணம்...சம்மந்த பட்டோர் தயவு செய்து புரிந்து கொண்டு தொடர்ந்து தங்கள் ஆதரவை என் பதிவுகளுக்கு தருவீர்கள் என நம்புகிறேன்

Anonymous said...

எல்லோர்கிட்டேயும் பாயும் தமிழச்சி உங்களிடம் மட்டும் எப்படி அமைதியாயிட்டார்..?

Related Posts with Thumbnails