மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர்கள் பெயர் தாங்கிய அதர்மங்கள்...முரண்பாட்டு முரசொலிகள்...


என்ன முரண்பாடிது..?
“அண்ணா சாலை”
தலைவர் பெயர் தாங்கிய
தார் சாலை !

கடமை போதித்தவர் சாலையில்
கண்ட படி அதர்மங்கள்
ஓரம் ஒதுக்கி
பர்ஸ் சுரண்டும் போலீஸ்

ஒதுங்கிப்போனால்
ஒதுக்கிப்போகும் பெண்கள்..
ஓயாமல் திரையரங்கில் நாட்டின்
வருங்கால கண்கள்…
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கற்றுத்தந்தவர் பெயர் தாங்கி
கலாச்சார சீர்கேடு…
ஏனிந்த முரண்பாடு…?

என்ன முரண்பாடிது..?
“பெரியார் சிலை”
உருவங்கள் வேண்டாமென்றார்..!
வழிபாடு கூடாதென்றார்…!
அவருக்கே சிலை வைத்து
மாலையுடன் வழிபாடு!
பகுத்தறிவு வார்த்தைகளை
பகுத்தறிய இயலாக் கூட்டம்
ஏனிந்த முரண்பாடு…?

என்ன முரண்பாடிது..?
“எம்.ஜி.ஆர் சமாதி”
ஏழை இல்லாதிருக்க
எல்லாம் செய்து
பாலர் பணி ஒழித்திட
பாடுபட்டவர் சமாதி-இன்று
சுண்டல் தொழிற்சாலையாய்…
வறுமை சாவின்
தூக்கு மேடையாய்…
ஏனிந்த முரண்பாடு…?


என்ன முரண்பாடிது..?
“காந்தி பீச்”
கஞ்சா விற்பவனின்
கடை முகவரி
அரசியல் ரவுடிகளின்
அரிவாள் பதுக்குமிடம்
அகிம்சை அன்பு
போதித்தவர் பெயர்தாங்கி
அனைத்தும் அராஜகங்கள்
ஏனிந்த முரண்பாடு…?

6 comments:

Anonymous said...

Nice topic...poem and photoes

மாப்பிள்ளை said...

நெத்தி அடி, தலிவா...அரசியலுக்கு போகப் போறீங்களா

கீழை ராஸா said...

//Nice topic...poem and photoes//

பாராட்டுவதற்கு உங்கள் பெயரை இடுவதில் தப்பில்லையே..?

இக்பால் said...

நல்ல கவிதைகள்

கீழை ராஸா said...

//நெத்தி அடி, தலிவா...அரசியலுக்கு போகப் போறீங்களா//
மாப்புளே சார், நாலு தலைவர்கள் பெயரைச் சொன்னால் அரசியலா...?

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி இக்பால்

Related Posts with Thumbnails