பொங்கலோ...பொங்கல்கடித்துத் தின்ன கரும்பில்லை
இனிப்புத் தின்ன எறும்பில்லை
மஞ்சள் பூச வழியில்லை
மாமன் மகளும் இங்கில்லை...

"சன்"னுக்குப் பொங்கல் அன்று
"சன்" டிவி தான் பொங்கல் இன்று
முகம் பார்த்த வாழ்த்துக்கள் அன்று
முகப்புத்தக வாழ்த்துக்களே இன்று..

இளமைக்கால பொங்கல் நினைவுகள்
இதயமெங்கும் வருடிட...
இனியத் தமிழ் நண்பர்களுக்கு என்
இதயப்பூர்வ பொங்கல் வாழ்த்துக்கள்...
-கீழைராஸா பாலையிலிருந்து....

Related Posts with Thumbnails