பதிவர்கள் நடித்த குறும்(பு) படம் (காணொளியுடன்) 99% நகைச்சுவை கேரண்டி

"அண்ணாச்சி படத்தை எப்ப வெளியிடலாம்..?"

"டிசம்பர் 18"
அதிர்ந்து போனேன்...என்ன டிசம்பர் 18 ஆ...அவதார், வேட்டைக்காரன் படவெளியீடு என்று உலகத் திரைவுலகமே அதிர்ந்து கொண்டிருந்த
டிசம்பர் 18 இந்தக் குறும்(பு) படம் ரிலீஸா...? இவர் தெரிந்து சொல்கிறாரா...? இல்லை நம்மை நிராகதியாக்க திட்டம் போடுகிறாரா...?இருந்தாலும் துணிந்து ஏற்பாடுகளில் இறங்கினோம்...ஒருவாரம் நண்பர்கள் முகவை முகில், ஊமையன் ஹக்கிம், சிம்ம பாரதி மற்றும் ரியாஸ் பாய் ( கிறுக்கல்கள் ஜெஸீலா கணவர்) போன்றோரின் அயரா உழைப்பில் சத்திரம் திரையரங்கம் ஏ/சி தயார் செய்யப்பட்டது....


(போஸ்டர் வடிவமைப்பாளருக்கு ஆணிகள் சற்று அதிகமானதால் கடைசி நொடியில் இந்த போஸ்ட்டரை நானே வடிவமைக்க வேண்டியாதாயிற்று...என்ன எதோ பரவாயில்லையா?)
பதிவர்களுக்கு வழக்கம் போலக் குழுமத்தில் அண்ணாச்சி அழைப்பு விட எதிர்பாராத அளவிற்கு அமோக வரவேற்பு...( பதிவில் அழைப்பு விட திரையரங்கு அளவு இடம் தரவில்லை) பதிவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து 30 பேர் முன்பதிவு செய்ய ஹவுஸ் புல் பலகை மாற்றப் பட்டது.என்றாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம்...அண்ணாச்சி இது சரி வருமா..? என்றேன்.
"கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காமே வேலையைப் பாருன்னு" சொல்லிட்டாரு...
2009 டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை...

12 மணிக்கே எல்லோரும் வந்து குழுமினர்...ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு நாங்க சொல்லிக்கிட்டு திரிந்தாலும் உண்மையில் வருகை தந்த பதிவர்கள் அதை நிருபித்தார்கள்...
இந்த முறை இஸ்மத் பாய் பிரியாணி சட்டியை ரியாஸ்பாய் கைப்பற்ற முயல பெரும் போராட்டத்திற்கு பின் இஸ்மத்பாயே பிரியாணிச் சட்டியை கைப்பற்றினார்.


(இந்த முறை சரி அடுத்த முறை நான் தான் ஆமா, என்று அமந்திருப்பவர் ரியாஸ் பாய், பிரியாணியுடன் வெற்றிகளிப்பில் அமர்ந்திருப்பவர் இஸ்மத் பாய்)
சரியாக 2:30 மணிக்கு படம் ஆரம்பிக்கப்பட்டது...பதிவர்களின் ஆரவாரத்துடன் 30 நிமிடங்கள் ஓடியது...எல்லோர் முகத்திலும் சந்தோசம். இதைத்தானே எதிர் பார்த்தது...படம் முடிந்ததும் பாராட்ட ஒன்று கூடிய பதிவர்கள் என்னைத் திக்குமுக்காட செய்ய ஒரு வழியாக எஸ்கேப்...( எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்! )

அடுத்து சில நிமிடங்களில் இதில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கையைச் சார்ந்த காவியப் புலவர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் உரையாற்றிய அவர் தன் உரையில்,
“எத்தனையோ வேறுபாடுகளை நீங்கள் கொண்டிருந்தாலும் நீங்கள் இங்கு வந்து தமிழால் இணைந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.இது போன்ற நிகழ்வுகளின் பதிவு எதிர்காலத்தில் எண்ணிப்பார்க்க இனிமையானது.இந்நிகழ்வில் நானும் ஒரு இளைஞனாக உங்களுடன் பங்கேற்றதில் என் வயதில் பாதி குறைந்தது போல் உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு தந்தமைக்கு உங்களுக்கு நன்றி” என்ற போது பதிவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.


சிறப்பு காட்சி முடிந்து வந்த பதிவர்கள் கூறுகையில் இந்த குறும்(பு)படம் கண்டிப்பாக அரைமணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் என்ற அந்த வார்த்தையில் என்னால் படத்தின் வெற்றியை உணரமுடிந்தது.
"உங்கள் திறன் இப்படிப்பட்ட விளையாட்டுப் படங்களுடன் நின்றுவிடாமல் கொஞ்சம் சீரியசாகவும் ஏதாவது இயக்க முயற்சி செய்யலாமே..?" என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது...கண்டிப்பாக உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெகுவிரைவில் அமீரகத்தை கதைக்களமாக வைத்து ஒரு தரமிக்க குறும்படமொன்றை இயக்கலாமென்றிருக்கிறேன்...செய்யலாமா? என்று மற்றவர்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...
வெற்றிப் படங்களைத்தரும் பெரிய இயக்குனர்கள் இயக்கியப் படத்தை கூட மற்றவர்கள் பார்த்து விமர்சித்த பின் தான் நாம் பார்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட உலகில், நான் ஒரு படம் செய்துள்ளேன் என்றதும் தெரிச்ச்சி ஒடாமல், நாங்களும் வருகிறோம் என்று வந்து, பார்த்து, வாழ்த்தி, பாராட்டி, என்னைத் திக்குமுக்காட வைத்த அனைத்து பதிவர்களுக்கும் மிக்க நன்றி....
உலக வரலாற்றில் முதல் முறையாக பதிவர்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை முதல் சிறப்புக் காட்சி கண்டு வரலாற்றில் தடம் பதித்தவர்கள்...
1)புலவர் ஜின்னாஹ் சர்புதீன்2) ஆசிப் மீரான் 3) குசும்பன்4) கீழை ராஸா 5) ஊமையன் ஹக்கிம்6) முகவை முகில் 7) கிளியனூர் இஸ்மத்8) ராஜாகமால் 9) நான் ஆதவன்10) செந்தில் வேலன்11) சந்திரசேகர் 12) சிம்ம பாரதி
13) ஜெஸீலா குடும்பத்தினருடன் 14) லியோ அண்ணன்15) ஆசாத் அண்ணன் 16) அபூ அப்ஸர் குடும்பத்தினருடன்17) சென்ஷி 18) ஜியாவுதீன் 19) சமீர்
20) பினாத்தல் சுரேஷ் அங்கிள் 21) கலையரசன்22) வினோத் கௌதம்
23) அன்புடன் மலிக்கா குடும்பத்தினருடன்24) கார்த்திக்கேயன்
25) ஹுசைனம்மா குடும்பத்தினருடன்.
"எந்தப்படமானாலும் பின்னி பெடலெடுத்து விமர்சனம் என்ற பெயரில் கிழிகிழியென்று கிழிக்கும் பதிவர்களை அழைத்து படத்தையும் போட்டு காட்டி, பதிவுலேயும் போட்டு விமர்சியுங்கள் என்கிறாயே உனக்கு என்னா தில்லு..?"ன்னு அண்ணாச்சி பக்கத்தில் இருந்து கேட்டுக்கிட்டிருக்காரு..
நல்ல படைப்புகளை பாராட்ட தெரிந்த ஒரு குழுவில் இதை சமர்பிக்கிறேன் பாராட்டினால் அது எங்கள் பாலைப்பதிவுக்கூடத்தைச் சாரும் ( கீழைராஸா, ஆசிப் மீரான், சிம்ம பாரதி, முகவை முகில், ஊமையன் ஹக்கிம்) விமர்சித்தால் அது அனைத்தும் என்னைச் சேரும்...இனி எழுத்து உங்கள் கையில்....








இதில் பார்க்க இயலாதவர்களுக்கு
தொடர்புடைய இடுகைகள்
ஊடகப்பார்வையில்
1)தினமலர் நாளிதழ்
2)அதிகாலை
3)முதுகுளத்துத்தூர்
பதிவுலகப்பார்வையில்
1) கிளியனூர் இஸ்மத்
2) ஹூசைனம்மா
3) குசும்பன்
4)அன்புடன் மலிக்கா

(உங்கள் விமர்சனமும் இதில் இணைக்கப்பட லிங்க் அனுப்பவும்)

39 comments:

கானா பிரபா said...

ஒரு துளிகூட விடாமல் பார்த்து ரசித்தேன். தேர்ந்த எடிட்டிங், பொருத்தமான நகைச்சுவை உள்ளீடுகள், இசை, அலுப்புத்தட்டாத கோர்ப்பாக வெகு சிறப்பாக இருந்தது. உலகப் பதிவர்களின் வயிற்றெரிச்சல் என்று சொன்ன அந்த பிரியாணி பார்ட்டி யாருங்க, பெயர்ப்பட்டியலிலும் அவரைக் காணவில்லையே ;)

உங்கள் அடுத்த முயற்சிக்கு என் மனவுவந்த வாழ்த்துக்கள்

Romeoboy said...

செம கலக்கல் வீடியோ தலைவரே .. சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது ..

கீழை ராஸா said...

//கானா பிரபா said...

உலகப் பதிவர்களின் வயிற்றெரிச்சல் என்று சொன்ன அந்த பிரியாணி பார்ட்டி யாருங்க, பெயர்ப்பட்டியலிலும் அவரைக் காணவில்லையே //

அது நாந்தானுங்கோ...ஒரு வேளை மாறு வேடத்தில் வந்ததனால்(கண்ணாடி அணிந்து) உங்களுக்குத் தெரியாமல் போய் இருக்கலாம்..:-))

கண்ணா.. said...

அண்ணாச்சி அழைக்கிறார்னு டைட்டில் போட்டுட்டு படத்துல ஒரு தடவை கூட அழைக்கலையே.......


அட இந்த பிரியாணிக்கோசரமாது கூப்ட்றக்கலாம்.

moni a.k.a. jessica said...

great work.
thanks

துபாய் ராஜா said...

ஆரம்பமே அட்டகாசம். ஆபிஸ் கெளம்பற அவசரம். சாயந்திரம் வந்து ரிலாக்ஸா பார்த்துட்டு கமெண்டுறேன்.

☀நான் ஆதவன்☀ said...

டைரக்டரே என் பேரு போடுறதுக்கு முன்னால நயன்தாராவை காண்பித்ததின் மர்மம் என்னவோ? :)

மின்னுது மின்னல் said...

கலக்கல் தொகுப்பு !!

Prathap Kumar S. said...

ராஸாண்ணே டாப்பு... பட வெளியீட்டுக்கு என்னால வரமுடிலண்ணே..வேலை இருந்துச்சு...

எடிட்டிங் பிரமாதம்... அதுல நீங்க சொன்ன பிரியாணி சூடா இருப்பதன் ரகசியம்தான் படத்துலயே ஹைலைட். கலக்கல்... பெரிய பட்ஜெட்ல ஒரு படம் சீக்கிரம் பண்ணணும்ணே...

உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போது லைன் கட்டாயிடுச்சு..சிக்னல் இல்ல..

Starjan (ஸ்டார்ஜன்) said...

மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும் உங்களுக்கு !!

அருமையான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி இது !

வெள்ளி விழா காண வாழ்த்துக்கள்

பாலா said...

மை காட்..>!!

இப்படி.... தொடர்ந்து 20 நிமிடம் சிரிச்சி.... வருடங்கள் ஆய்டுச்சிங்க தல..!!! எக்ஸலண்ட்!!!

உங்க எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். :) :) :)

கிளியனூர் இஸ்மத் said...

ராஸா....அடுத்தப்படத்துக்கும் நான் தானே ஹீரோ....இப்பவே டேட் வாங்கிக்கோங்க....கதை டிஸ்கஷன் புருஜ் டவர்ல வச்சுக்கலாம்....

geethappriyan said...

அண்ணே,
சத்திரத்தில் சொன்னது தான்.
அருமையாக தொகுத்துள்ளீர்கள்.அடுத்து ஒரு திரைப்படமே எடுக்கவேண்டும்

இராம்/Raam said...

செம.. :)

ஷாகுல் said...

இன்று இரவு பாத்துட்டு விமர்சனம் போட்டுருவோம்.

கலையரசன் said...

கும்தலக்கடி கும்மாவா?? ராஸாகான்னா சும்மாவவவவா?

அதுல மாஸ்டர் பீஸே.. ஆதவன் கத்து "ஊஊஊ...ஆஆஆ..ஏஏ..."தான்..! அடுத்த தடவை எல்லாம் உஷாராயிடுவாங்களேன்னு வருத்தமா இருக்கு!
:-)(

S.A. நவாஸுதீன் said...

முழுபடத்தையும் தரவிறக்கம் செய்யமுடிஞ்சா தேவலை. நாங்க ரூம்ல போயி ஹோம் தியேட்டர்ல பார்க்க சந்தோசமா இருக்கும்.

ஆஃபிஸ்ல சத்தம்போட்டு சிரிக்க முடியாதுல்ல அதான்.

Jazeela said...

Copyright (C) போட்டு விடுங்கள், இல்லாட்டி இதை ரீமேக் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அம்புட்டு நல்லா இருந்தது.

ஹேமா said...

சும்மா இல்ல ராஸா.இதுதான் வாழ்கையின் சந்தோஷம்.
அனுபவிங்க.அருமையா இருக்கு.நல்ல முயற்சி.

புரியாணி பார்த்து பசி வந்திடிச்சு.

குசும்பன் said...

Super, i will write soon...

அது ஒரு கனாக் காலம் said...

நீங்கள் படத்தில் சொன்னது உண்மை தான், வர முடிய வில்லையே என ஏகப்பட்ட வருத்தம் ... இப்ப இதன் ரிலீஸ் வைபவத்துக்கு வர முடியலேயே ... திரும்பவும் வருத்தம் . இன்ஷா அல்லா கூடிய சீக்கிரம் சந்திப்போம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாரும் நல்லா நடிச்சிருக்கீங்க.. மேலும் தொடர்ந்து படங்கள் எடுக்கலாம்ங்கற ஐடியாவை செய்யுங்க.. ஆதவன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அதே காட்சியில்சென்ஷி பேட்டை எடுத்து அடிக்கவரார் அத எல்லாம் பாக்காம முந்தின காட்சியைப் பார்த்து கேள்வி என்ன ? :)

Unknown said...

kilai raza kaka neegala eppadi nampa mudiyalai super ra eruku

வினோத் கெளதம் said...

அருமையான தொகுப்பு..மேலும் இதேப்போல் பல படங்கள் உங்களிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்..

செ.சரவணக்குமார் said...

குறும்படம் மிக அருமை, வாழ்த்துக்கள் நண்பரே.

குப்பன்.யாஹூ said...

hi Joke apart, the film has come very nice.

My salute to thae film effort especially the titel, pAALAIPADHIVUKOODAM ETC

My wishes and thanks to all of you.

அப்துல்மாலிக் said...

ராஸாண்ணே ரொம்பா நல்லாயிருந்தது எதிர்ப்பார்ததைவிட‌

அடுத்து வெண்திரையில் அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள், அப்புறம் வழ்த்து சொன்ன இந்த அன்பனை மறந்துடாதீங்க‌

Anonymous said...

aarumai, idhai parthal birianikaha koodida kootam poola terialai. Ungal natptu thodara en vazhthukal.

ஷங்கி said...

ஆகா பெரியண்ணன் சென்ஷியைக் கலாய்ச்சுப் பதிவு போடணும்னா இந்த வீடியோ உதவும். நல்லாருக்குங்க, வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

எதைன்னு குறிப்பிட்டு சொல்ல எல்லா காட்சிகளுமே அருமை. இனிமை. அட்டகாசம். தூள்.

நல்லா அனுபவிச்சு எடுத்துருக்கீங்க. பின்னணி இசை,பாடல்கள், வசனங்கள், நகைச்சுவை காட்சி இணைப்பு அனைத்திலும் உங்கள் உழைப்பு தெரிகிறது.வாழ்த்துக்கள்.

பாலைப்பதிவுக் கூடம் இன்னும் பல வெற்றி படைப்புகள் படைத்திடவும், உங்களுக்கு நல்லதொரு திரையுலக நுழைவு கிடைத்திடவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.

எல்லோர் மனதிலும் இந்த சந்தோஷம் என்றென்றும் நீடிக்கட்டும்.

நட்புடன் ஜமால் said...

ராஸா கிளப்புறியள் போங்கோ

அண்ணாச்சி அரசியலுக்கு ரெடியாயிட்டாரா ...

ஸாதிகா said...

குறும்(பு)படம் அருமை.நன்றாகவே சிரிக்கவைத்தது.பிரியாணி சூடு ஆறாமல் இருப்பதற்கு தாங்கள் சிரிக்காமல் கூறிய பதில் மேலும் சிரிக்கவைத்தது.வாழ்த்துக்கள் சகோதரரே.(அடுத்த ரிலீஸ் எப்போது?)

சென்ஷி said...

சந்தோசம்.. மகிழ்ச்சி :)

Unknown said...

சூப்பரப்பு....!!

Unknown said...

சூப்பரப்பு....!!

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப சந்தோஷமாக இருந்தது அனைத்து பதிவர்களையும் சந்தித்தது. தாங்களின் திறமை மாஷாஅல்லாஹ், பாராட்டுக்கள்..

ஏதோ நம்மாளானதுன்னு நானும் பதிவு போட்டிருக்கேன்.பாருங்க..

http://niroodai.blogspot.com/2009/12/blog-post_21.html

கீழை ராஸா said...

//Romeoboy said...
செம கலக்கல் வீடியோ தலைவரே .. சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது ../
நன்றி ரோமியோ...

கண்ணா.. said...
//அண்ணாச்சி அழைக்கிறார்னு டைட்டில் போட்டுட்டு படத்துல ஒரு தடவை கூட அழைக்கலையே.......//

அவர் அழைச்சதுனாலே தான் இந்த சுற்றுலாவே....

//moni a.k.a. jessica said...
great work.//
THANKS MONI...YOUR WORKS ARE GOOD....

//துபாய் ராஜா said...
ஆரம்பமே அட்டகாசம். ஆபிஸ் கெளம்பற அவசரம். சாயந்திரம் வந்து ரிலாக்ஸா பார்த்துட்டு கமெண்டுறேன்.//
அண்ணே நீங்க தானே பெட்டிவரலையா வரலையான்னுஎன்னை நச்சரித்தது..? கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க...

Rainbow Studio Qatar said...

அண்ணாச்சி என்னையும் அழைத்திருக்கலாம்னு தோன்றுகிறது.. முயற்ச்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.... கலீல், கரையான்.

பாச மலர் / Paasa Malar said...

கலக்கல்....

Related Posts with Thumbnails