"பிரபலப்பதிவர்" கீழை ராஸா என்ன சூப்பர் ஸ்டாரா?

என்ன கர்வம், என்ன திமிர், என்ன அழிச்சாட்டியம் இப்படி நினைத்த படி தான் இந்த பக்கத்திற்கு வந்திருப்பீங்க... ஒரு பிரபலம் என்றால் ஆயிரம் கல்லடிகள் படத்தான் செய்யும்...
ஜனாதிபதி கையால் விருதை வாங்கிய சேதி கேட்டு வீடு தேடி வந்த மீடியாவை அலட்சியமாகப்பார்த்து, விருது எனக்கு ஒன்றும் புதிதில்லை நான் கல்லூரியில் படிக்கும் போதே என்னோட படைப்புக்காக சாகித்திய அகடமி விருது பெற்றவன் என்ற படி ஜனாதிபதி அவார்டை கையில் வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய பேட்டியை இப்பவே லீக் பண்ணுறோமோ என்ற வருத்தம் இதை எழுத முற்படும் போது மனதில் தோன்றி மறைகிறது.

இருந்தாலும் நண்பர் "நட்புடன் ஜமால்" சில வாரங்களுக்கு முன் அழைத்த தொடர்பதிவிற்காக இந்த பிரபலப்பதிவரின் பேட்டி உங்கள் பார்வைக்கு...1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முகம்மது ராஜாக்கான் - என் பெயர்
"ராஸா" அன்பானவர்கள் அழைக்கும் பெயர்....

கீழக்கரை - என் ஊர்

"கீழை மாநகரம்" ஊருக்குச் செல்லப்பெயர்...

இரண்டும் இணைந்தது தான் "கீழை ராஸா" ( எல்லோரும் பலமா கைதட்டுங்க...இது தான் ஹீரோ (ஜீரோன்னு படிச்சிடாதீங்கப்பூ) அறிமுக காட்சி...)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
"அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பதே கடினம்" என்ற கொள்கை உடையவன் நான்...

சில இதயக்கீரல்களின் போது...


"அடியே பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்லவதாய் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே..." என்ற அந்த கிராமத்து ராஸாவின் வரிகளுக்கிணங்க, பிரியமானவளின் தோள் சாய்ந்து அழத்தோன்றும் இருந்தாலும் எனக்கு கடின வேலைகள் செய்யப்பிடிக்கும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என்னைப்போலவே என் எழுத்துக்களும் குண்டு குண்டாய் அழகாய் (அதிர்ச்சி ஆகிடாதீங்க எழுத்துக்கள் மட்டும்) இருப்பதாய் எல்லோரும் சொல்வார்கள்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

வாரம் முழுவதும் இயந்திரமாகவே மதிய உணவும் அமைவதால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை மதிய உணவே மனம் நிறைந்த மதிய உணவு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம் எதிரே இருப்பவர் எப்படியோ அப்படியே என் எதிர் விசையும் இருக்கும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நல்லவேளை குளிக்கப் பிடிக்குமா என்று கேட்கவில்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்... அது தான் உண்மை பேசும்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது...மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் தன்மை...
பிடிக்காதது...அவ்வப்போது என்னுள் ஏற்படும் சோம்பல்....எப்போதாவது வரும் கோபம்...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தன்னை விட என்னை விரும்பும் " ராட்ஷச" அன்பு

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தாய்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெளிர் வர்ணம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணிணியை கண் இமைக்காமல்....காதில் ஏசியின் ஓசை...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

14.பிடித்த மணம் ?

எல்லா "மண"ங்களையும் ஒருங்கே இணைத்து
எங்கள் இரு"மன"த்தை ஒன்றிணைத்த என் திருமணம்...

ரோஜாவின் மணம்...

மழைநேர மண்ணின் மணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ஒருவரை அழைக்கப்போவதில்லை... துபாய் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பிரபல பதிவர்களையும் அழைக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
"நட்புடன் ஜமால்" அவர் பெயரே ஒரு பதிவுதான்..."நட்புடன்" என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டிராமல் அனைத்து புதுபதிவர் பதிவுகளிலும் சென்று அதை படித்து கமெண்ட் போட்டு பின்னூட்டங்கள் மூலமே அனைவர் மனங்களிலும் பதிந்தவர் அவர்...

17. பிடித்த விளையாட்டு?

அன்று - கிட்டி கம்பு(கிட்டி புல்)
இன்று - கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

முன்னாடி இருப்பதை பார்ப்பதற்கு
கண்ணாடி அணியாவிட்டாலும்
பின்னாடி பிரச்சனைகள் வராமல் இருக்க
அவ்வப்போது கண்ணாடி அணிவதுண்டு...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எதார்த்தப்படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க...
21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தம் வீசிய, வீசும் எல்லாப்பருவமும்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் பழைய டைரிகளை...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றம் ஒன்றே மாறாதது...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தென்றலின் வயலின்.... அருகில் வந்து அடிக்கப்படும் ஹாரன் ஒலி..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதல் முதல் பள்ளி சென்ற போது அந்த ஆரம்பப்பள்ளி எனக்குத் தெரிந்த தூரத்திற்கு இன்று நான் பயணித்திருக்கும், அமீரகம், ஏமன், ஓமன், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் கூட தெரிவதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஒரு சூப்பர் ஸ்டாரைப்பார்த்து கேட்கும் கேள்வியா இது...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நான் எட்டாவது படித்த போது நிகழ்ந்த என் தாயின் மரணம்..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது தூங்கும் போது ஏனய்யா தட்டி எழுப்புறீங்க...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோவா...சிங்கை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாக...எப்போதும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

எனக்கு பொய் சொல்ல பிடிக்காது...( இதுவே ஒரு பெரிய பொய் தானேன்னு கமெண்ட் போட்டுடாதீங்க)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...

தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து,
அமீரக தமிழ் பதிவர்களே, மாநாட்டுக்கு வந்த பிரபலங்களே, மற்றும் அமீரக தமிழ் பதிவர்கள் குழும உறுப்பினர்களே....
வாருங்கள் பிரபலங்களே வந்து குமுறுங்கள்...

46 comments:

பகலவன் பிரமீளா said...

:)

பகலவன் பிரமீளா said...

//"அடியே பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்லவதாய் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே..." என்ற அந்த கிராமத்து ராஸாவின் வரிகளுக்கிணங்க, பிரியமானவளின் தோள் சாய்ந்து அழத்தோன்றும் இருந்தாலும் எனக்கு கடின வேலைகள் செய்யப்பிடிக்கும்.//

ம்! அடக்கிவைத்தல் அப்போதைக்கு நல்லதென்று தோன்றினாலும் அழுது தீர்த்திருக்கலாமோவென்று பிரிதொரு பொழுதில் கவலை கொள்ளச் செய்யும்!

சிரிப்பு வந்தால் சிரித்துவிட வேண்டும்! அழுகை வந்தால் அழுதுவிடல் அவசியம்!

சுயத்தை இழந்த வேஷங்களால் நாம் சாதிக்கப் போவது என்ன?

குடுகுடுப்பை said...

கீழக்கரை மண் வாசம் அடிச்சா கருவாடு வாசந்தானே வரும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

//கீழக்கரை - என் ஊர்//

கீழக்கரை எங்க இருக்கு. நாகப்பட்டணம் பக்கத்திலயா??

நட்புடன் ஜமால் said...

அழுகை பற்றி சொல்லியது அருமை.

[[22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் பழைய டைரிகளை...]]

இரசனையான பதில் ...


[[அந்த ஆரம்பப்பள்ளி எனக்குத் தெரிந்த தூர]]
இதுவும் ...


[[முட்கள் நிறைந்த பூஞ்சோலை...]]

வாழ்வு பற்றி அழகா சொல்லியிருக்கீங்க


மொத்தத்தில் பதில்களில் ஒரு கவித்தன்மை தெரியுது ...

சென்ஷி said...

//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...//

அருமை!

சென்ஷி said...

//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...//

அருமை!

கீழை ராஸா said...

//பகலவன் பிரமீளா said...
:)//

???

கீழை ராஸா said...

//பகலவன் பிரமீளா said...
//"அடியே பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்லவதாய் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே..." என்ற அந்த கிராமத்து ராஸாவின் வரிகளுக்கிணங்க, பிரியமானவளின் தோள் சாய்ந்து அழத்தோன்றும் இருந்தாலும் எனக்கு கடின வேலைகள் செய்யப்பிடிக்கும்.//

ம்! அடக்கிவைத்தல் அப்போதைக்கு நல்லதென்று தோன்றினாலும் அழுது தீர்த்திருக்கலாமோவென்று பிரிதொரு பொழுதில் கவலை கொள்ளச் செய்யும்!

சிரிப்பு வந்தால் சிரித்துவிட வேண்டும்! அழுகை வந்தால் அழுதுவிடல் அவசியம்!

சுயத்தை இழந்த வேஷங்களால் நாம் சாதிக்கப் போவது என்ன?//

கோபம் வந்தால் அதை அடக்கதானே எல்லோரும் நினைக்கிறோம்...?

சரி சரி அடுத்த முறை நாயகன் கமல் பாணியில் ஆஆஆஆ என்று அழுது விடறேன் ஓகேயா..

கீழை ராஸா said...

சின்ன அம்மிணி said...
//கீழக்கரை - என் ஊர்//

கீழக்கரை எங்க இருக்கு. நாகப்பட்டணம் பக்கத்திலயா??

இல்லேங்க இராமநாதபுர மாவட்டம்

இங்கே வந்து பாருங்க...

http://sarukesi.blogspot.com/2009/02/blog-post.html

நாகா said...

காமெடியாவும், நல்லாவும் இருக்கு சார்.

//பிடித்தது...மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் தன்மை..//

இந்த ஒரு வரிக்காகவே உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு

கிளியனூர் இஸ்மத் said...

ராஸா...உங்க தன்னம்பிக்கை ....ரொம்ப பிடிச்சிருக்கு...!

வால்பையன் said...

அய்யோ!
பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலையே!

கீழை ராஸா said...

//குடுகுடுப்பை said...
கீழக்கரை மண் வாசம் அடிச்சா கருவாடு வாசந்தானே வரும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

கருவாடை கூட நாற்றம் என்று சொல்லாமல் வாடை என்று சொல்லிய உங்க டீலிங்க் ரொம்ப புடிச்சிருக்கு...

கலையரசன் said...

அய்யயோ.. இது இன்னுமா முடியல?

நாகேந்திரன் said...

நல்லாயிருக்கியளா
கீழ ராசா
ரொம்ப நல்லாரிந்துச்சுப்பு உங்க பிளாக்கு
நானும் கீழக்கரதான் வூடு செக்கடிக்கிட்ட
இப்ப சவுதில இருக்கேன்
தொடந்து எழுதுங்க
நம்ம ஊரு சீலா மீனு,லொதல் ராவியத் கடை அல்வா,
அகமது கட போண்டா,சீப்பு பணியாரம் ஓட்டுமாவு
அஞ்சாம் பாலம் பளுவா வூரணி இப்படி
நம்ம மண்ணு மணம் மணக்கற மாதிரி
ஒரு பதிவ போடுங்க ராசா
அன்புடன்
நாகேந்திரன்

geethappriyan said...

வணக்கம் கீழை ராசா நலம் தானே?
இந்த சிறியேன் உங்களுக்கு
பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.

உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
என்பதை தெரிவிக்கவும்.

அது ஒரு கனாக் காலம் said...

உங்கூர்ல தான் நாகராஜன் சந்து இருக்கா ?????.. இல்ல நிறய , போண்டா, மீனு, மாவுன்னு, பணியாரம் ...பெரிய லிஸ்டா இருக்கு, அதான் கேட்டேன் , கோச்சுக்காதீங்க !!!!!!!

சோனகன் said...

இனிய கீழை ராஸா, மிக அழகாக அமைக்கப்பட்ட கேள்விகள், எதார்த்தமான பதில்கள்,தங்களை போன்ற பதிவர்களிடமிருந்து மிக உன்னத மண்ணின் மாட்சிகளையும், மன நெகிழ் அனுபவங்களையும் கீழைக்கரை சமுதாயம் எதிர்பார்கிறது.

சோனகன் said...

இனிய கீழை ராஸா, மிக அழகாக அமைக்கப்பட்ட கேள்விகள், எதார்த்தமான பதில்கள்,தங்களை போன்ற பதிவர்களிடமிருந்து மிக உன்னத மண்ணின் மாட்சிகளையும், மன நெகிழ் அனுபவங்களையும் கீழைக்கரை சமுதாயம் எதிர்பார்கிறது.

கீழை ராஸா said...

//நட்புடன் ஜமால் said... //

வாங்க வம்புடன் ஜமால்...

கீழை ராஸா said...

//சென்ஷி said...
//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...//

அருமை!//

குசும்பன் சொன்னதைப்போல் கட் பண்ணி ஒற்றை வரி கமெண்ட் சொல்லிட்டீங்க...

ஹேமா said...

நான் கொஞ்சநாள் இல்லாம போனதும் மறந்திட்டீங்க பாத்தீங்களா கீழை ராசா.சரி பரவாயில்ல.
சுகம்தானே நீங்க.

வாழ்க்கையைப் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...//

அருமை!//

குசும்பன் சொன்னதைப்போல் கட் பண்ணி ஒற்றை வரி கமெண்ட் சொல்லிட்டீங்க...\\

ஆகா!!!!
என்ன சொல்றதுன்னு தெரியல தல..ஏதாச்சும் சொன்னாலும் நீங்க அதுக்கு ஒரு உள்குத்து வரும் போல இருக்கு...இதுக்கு தான் பதிவர் சந்திப்பு போகவே கூடாது ;)))

ஆபிரகாம் said...

25 நச்...
பி.ப ஆகியதற்கு வாழ்த்துக்கள்!

கீழை ராஸா said...

//நாகா said...
காமெடியாவும், நல்லாவும் இருக்கு சார்.

//பிடித்தது...மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் தன்மை..//

இந்த ஒரு வரிக்காகவே உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு//

என்னைப் பிடித்த பதிவர்கள் பதிவுக்கு உங்கள் பெயரையும் சேர்த்தாகி விட்டது

அப்துல்மாலிக் said...

ராஸா கலக்கிட்டேல்

சொல்லப்பட்ட விதம் அருமை

கீழை ராஸா said...

//கிளியனூர் இஸ்மத் said...
ராஸா...உங்க தன்னம்பிக்கை ....ரொம்ப பிடிச்சிருக்கு...!//

எதைச்சொல்றீங்க..?

கீழை ராஸா said...

//வால்பையன் said...

அய்யோ!
பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலையே!//

வாங்க பிரபலபதிவர் வால் பையரே

கீழை ராஸா said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
வணக்கம் கீழை ராசா நலம் தானே?
இந்த சிறியேன் உங்களுக்கு
பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.

உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
என்பதை தெரிவிக்கவும்.//

எதில் எதோ பலமான உள் குத்து இருக்கும் போல...?

Anonymous said...

//உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா? //
ஓபனா சொல்ல வேண்டியது தானே மொக்க போடுறதுன்னு

கீழை ராஸா said...

//அது ஒரு கனாக் காலம் said...
உங்கூர்ல தான் நாகராஜன் சந்து இருக்கா ?????.. இல்ல நிறய , போண்டா, மீனு, மாவுன்னு, பணியாரம் ...பெரிய லிஸ்டா இருக்கு, அதான் கேட்டேன் , கோச்சுக்காதீங்க !!!!!!!//

அது என்ன நாகராஜன் சந்து..?

கீழை ராஸா said...

//சோனகன் said...
இனிய கீழை ராஸா, மிக அழகாக அமைக்கப்பட்ட கேள்விகள், எதார்த்தமான பதில்கள்,தங்களை போன்ற பதிவர்களிடமிருந்து மிக உன்னத மண்ணின் மாட்சிகளையும், மன நெகிழ் அனுபவங்களையும் கீழைக்கரை சமுதாயம் எதிர்பார்கிறது.//

வெறும் மொக்கையோடு இல்லாமல் உருப்படியா எதாவது எழுது என்கிறீர்கள்...கண்டிப்பாக எழுதறேன் காக்கா...

கீழை ராஸா said...

//ஹேமா said...
நான் கொஞ்சநாள் இல்லாம போனதும் மறந்திட்டீங்க பாத்தீங்களா கீழை ராசா.சரி பரவாயில்ல.
சுகம்தானே நீங்க.

வாழ்க்கையைப் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.//

பரிபூரண சுகமக்கா...நான் உங்க ப்ளாக்கை இல்லை என் ப்ளாக்கையே மறந்துட்டேன்.. இப்ப தான் ரீ எண்ட்ரி..இனி அடிக்கடி உப்புமட சந்தியில் சந்திக்கலாம்

அது ஒரு கனாக் காலம் said...

//அது என்ன நாகராஜன் சந்து..?//
please read the story by Muralai Kannan on this...muralikannan.blogspot.com...

கார்த்திக் said...

/* 32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை... */

மொட்டாகி பூவாவது எப்போது

Trichy Syed said...

Keelai Razawin Pathilkalil Arivujeeveithnam irrunthathu!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதில்கள் மிகவும் ரசித்தேன். நியூட்டனின் மூன்றாம் விதி எனக்குப் பிடித்தது :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதில்கள் மிகவும் ரசித்தேன். நியூட்டனின் மூன்றாம் விதி எனக்குப் பிடித்தது :)

கீழை ராஸா said...

//ஆபிரகாம் said...
25 நச்...//


நன்றி ஆபிரஹாம்,


//பி.ப ஆகியதற்கு வாழ்த்துக்கள்!//

ஹாஹாஹா...

Unknown said...

//நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம்//

அப்போ எஸ்.ஜே.சூர்யா போலவா? :P

SUMAZLA/சுமஜ்லா said...

நான் ரசித்த வரிகள்:

//முன்னாடி இருப்பதை பார்ப்பதற்கு
கண்ணாடி அணியாவிட்டாலும்
பின்னாடி பிரச்சனைகள் வராமல் இருக்க
அவ்வப்போது கண்ணாடி அணிவதுண்டு...//

//நல்லவேளை குளிக்கப் பிடிக்குமா என்று கேட்கவில்லை...//

//எல்லா "மண"ங்களையும் ஒருங்கே இணைத்து
எங்கள் இரு"மன"த்தை ஒன்றிணைத்த என் திருமணம்...//

வாழ்த்துக்கள்.

கீழை ராஸா said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம்//

அப்போ எஸ்.ஜே.சூர்யா போலவா? :P//
அவரை ஏனய்யா வம்புக்கு இழுக்குறீக...

கீழை ராஸா said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம்//

அப்போ எஸ்.ஜே.சூர்யா போலவா? :P//
அவரை ஏனய்யா வம்புக்கு இழுக்குறீக...

கீழை ராஸா said...

//SUMAZLA/சுமஜ்லா said...
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

mohamedali jinnah said...

Assalamuallikum.
You have written more and also about but what about your birth place Kilakarai and have given name for you
நான்-கீழை ராஸா.
Please write about Kilakarai with pictures.

Related Posts with Thumbnails