ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், ஆபாச வார்த்தைகள் குறித்து, தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கத்தின் இரண்டாம் பாகம் இது...
முதல் பாகம் காண : http://sarukesi.blogspot.com/2008/03/1.html
அடுத்து குசும்பன் பேச வருகிறார்…
விசு: கண்ணா, நீ எதப்பத்தி பேசப்போறே…?
(கூட்டத்தில்) டிபிசிடி,( வசந்தம் ரவியிடம்): ரவி, இவரு அண்ணாச்சியை கண்ணானு கூப்பிட்டாரு, அண்ணாச்சியோட உண்மையான பேரா இருக்குமோன்னு நினைச்சிகிட்டேன், இப்ப குசும்பனையும் அதே பேரச்சொல்லி கூப்பிடுறாரே…குசுபனுக்கும் அண்ணாச்சிக்கும் ஒரே பேரா…?
வசந்தம் ரவி : புரியல்ல தயவு செய்து விளக்கவுன்னு பேர வச்சிக்கிட்டு நீ பண்ற அலம்பல் தாங்கலேப்ப... நீ தெரிஞ்சி கேக்கிறியா ..? தெரியாமே கேக்குறியான்னே தெரியலையப்பா…
குசும்பன்: (விசுவிடம்) பதிவரில் நான் எப்போதும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறவன்…சம உரிமை பற்றி பல பதிவுகள் எழுதியிருக்கேன்..( கூட்டம் பேந்த பேந்தவென்று முழிக்கிறது…)
விசு: அதுலே ஒண்ணே அவுத்து விட முடியுமா கண்ணா…
குசும்பன்:போன மாசம் கூட “ பெல்லி டான்சருடன் ஒரு டான்ஸ்” என்று ஒரு பதிவு எழுதி சம உரிமைக்கு குரல் கொடுத்தேனே…?
அபிஅப்பா: அவனா நீ…?, நான் என்னவோ உன்னை நல்லவன்னு நம்பிலடா ஏமாந்துட்டேன்…
டி.ஆர்: தம்பி குசும்பா… என்கிட்டேயே குசும்பா…இல்லாத பெல்லிக்கு ஒரு டான்ஸ்… என்கிட்டே விடாதே உடான்ஸ்… டண்டணக்க, டணக்குடக்கா..
விசு: கண்ணா குசும்பா…அதைப்பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா..?
குசும்பன்: சொல்றேன் சார், சொல்றேன் அந்த சம உரிமைக்கதையை விளக்கமா சொல்றேன்…
கூட்டமே இலவசமாய் கொடுக்கப்பட்ட ஆறடி டவலுடன் கண்ணீர் துடைக்க தயாராகிறது…எங்கும் மயான அமைதி…
வசந்தம் ரவி : முதல் இடத்தை நோக்கி குசும்பன் முன்னேற்றம்… தமிழச்சியும், அண்ணாச்சியும் பின்னேற்றம்…குசும்பன் கதை கேட்க மக்கள் ஆர்வம்…
அனானி: ஆரம்பிச்சிட்டாரய்யா சன் டிவி செய்தியை…
டிபிசிடி: வசந்தம் ரவி செய்வதை திருந்த செய்…எத்தனை புள்ளிகள் என்று நீர் குறிப்பிடவில்லை…
கோவிகண்ணன்: பதிவெழுதி பேர் வாங்குறவங்க இருக்காங்க…அதைபதிஞ்சி வச்சி பேர் வாங்குறவங்க இருக்காங்க…அதிலும் குற்றம் பேர் கண்டுபிடிச்சி பேர் வாங்கறவங்களும் இருக்காங்க…
விசு : கண்ணா இந்த நேரடி வர்ணணையை கொஞ்சம் நிறுத்துறேலா…இங்கே அதுக்குன்னே ரெண்டு டிவி வச்சிருக்கோம்…குசும்பு கண்ணா நீ சொல்லுப்பா..
குசும்பு: ஆபீஸ்லே ஓசி டிக்கெட்டை வாங்கிக்கிட்டு “டெசர்ட் சபாரி” கிளம்பினேன். சின்னப்புள்ளேயிலே திருவிழாவுலே “மரணக்கிணறு”ன்னு
ஒரு சர்க்கஸ் பார்த்திருக்கேன்…அதுக்கும் இதுக்கும் ஒரே வித்தியாசம் தான் …அதுலே அவன் மட்டும் மரணக்கிணத்துலே சுத்துவான்…இதிலே நம்மையும் சேர்த்து வைச்சி மணல் கிணத்திலேயும் சுத்துறான். சுத்துறான், சுத்துறான், சுத்திக்கிட்டே இருக்கான்…மயக்கம் வர்ற வரை சுத்துறான் …வாந்தி வர்ற வரை சுத்தறான்…கண்ணீர் வருகிற வரை சுத்துறான், கதறல் வருகிற வரை சுத்துறான்…
(விசுவும், டி.ஆரும் விசும்பி விசும்பி அழ ஆரம்பிக்கிறாங்க…பதிவர்கள் காதைத் துடைத்துக்கொள்கிறார்கள்..)
குசும்பன்: (கண்கலங்கிய படி ) என்ன அபி அப்பா என்னாலேயே நம்ப முடியலை…அந்த அளவிற்கா டச்சிங்காவா நான் கதை சொல்றேன்….அவ்வ்வ்வ்வ்வ்…
அபி அப்பா: அடங்கொய்யாலே…இது அழுகை இல்லே…உன் மொக்கை தாங்காமே காதிலே வர்ற ரத்தம்…
குசும்பன்: ஆஹா… மொக்கை கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சோ…டிபிசிடி யே அழறாருன்னா பெரிய மொக்கையாத்தான் இருக்கும் போல, இப்படியே கொஞ்சம் கழண்டுக்க வேண்டியது தான்…அவ்வ்வ்வ்வ்வ்
அடுத்து அபி அப்பா பேச எழுந்திருக்கிறார்.
அனானி: பதிவர் வட்ட சூப்பர் ஸ்டார் வாழ்க…அல்டிமேட் ஸ்டார் அபி அப்பா வாழ்க வாழ்க…
அபி அப்பா: (கண்கலங்கி) அவ்வ்வ்வ்வ்வ்
குசும்பன்: என்னாச்சி அபி அப்பா..?
அபி அப்பா: என் ரசிகன்(!!!) ஒருவன் என்னமா பீல் பண்ணி கூவறான் பாரு…
குசும்பன்: என்ன அபி அப்பா தெரியாத மாதிரி கேட்கிறீங்க..நீங்க தானே நேற்று பணம் கொடுத்து கூவுறதுக்கு அரேஞ் பண்ணச் சொன்னீங்க, கொய்யாலு கொடுத்த காசை விட அதிகமா கூவுறாம்பா…
அபி அப்பா: அடங்கொய்யாலே…காசா முக்கியம் கூவல் தாய்யா முக்கியம்..
விசு: கண்ணா
டிபிசிடி, வசந்தம் ரவியிடம்: இவரு பேரும் கண்ணாவா?
வசந்தம் ரவி : அம்மாடியோவ்( என்று ஓட்டம் எடுக்கிறார்…)
டிபிசிடி: புரியல்ல தயவு செய்து யாராவது விளக்கங்களேன்…?
டி.ஆர்: அபி அப்பாங்கற உன் பேரைப் பார்த்தவுடன் நான் என்னவோ ஐம்பது வயசிருக்குன்னு நினைச்சேன்…
அபி அப்பா: அதெப்படிங்க
டி.ஆர்: கோலங்கள் அபிக்கு அப்பான்னா இருக்காதா பின்னே..?
அபி அப்பா: அடங்கொய்யாலே, இது பெரிய மொக்கையா இருக்கும் போல…
டி.ஆர்: அபி அப்பா… நீ போடாத கணக்கு தப்பா…டண்டணக்கா…

அபி அப்பா: டிஆர் சார் கொஞ்சம் அந்த பிண்ணனி மியூசிக்கை நிறுத்துங்களேன் நானே மொக்கையை ஆரம்பிச்சிடுறேன்…
விசு: நீ சொல்லுடா கண்ணா…
அபி அப்பா:ஐயா ஆணாதிக்கதை பத்தி பேசலாம்னா அண்ணாச்சி முறைக்கிறாக..பெண்ணாதிக்கத்தைப் பத்தி பேசனுன்னா “எனக்கு கராத்தே” தெரியாது
விசு: அப்ப நீ எதைப்பத்திக்கண்ணா பேசப்போறே…?
அபி அப்பா: நான் என்னத்தை பேச..? பேசாமெ போய்கிட்டு இருந்தவனை நமிதா வந்திருக்காங்கன்னு சொல்லி என்னை கூட்டி வந்து, உங்ககிட்டே மாட்டி விட்டது..இதோ இந்த குசும்பன் தான்…தகுதிச்சுற்றுலே பேர் என்னன்னு கேட்டீங்க, அபி அப்பான்னு சொன்னதற்கு இந்த பேருக்கு பின்னாடி “அபி”பற்றி ஒரு செண்டிமெண்ட் கதை இருக்குமுன்னு நீங்களே முடிவு பண்னிட்டீங்க…எல்லார்கிட்டேயும் பேரைத்தவிர எதாவது பேச விட்டீங்களான்னா அதுவும் இல்லே…
டிபிசிடி: குத்துங்க அபி அப்பா…குத்துங்க, வார்த்தையாலே குத்துங்க அபி அப்பா…குத்துங்க.. இந்த அரங்கம் நடத்துறவங்களே மோசம்…மோசம்
குத்துங்க அபி அப்பா… குத்துங்க
குசும்பன்: இவரு செலக்ட் ஆகாத கடுப்பை எப்படி காட்டுறாரு பாருங்க…அவ்வ்வ்வ்வ்
விசு: (அபி அப்பாவிடம்) கண்ணா நீ சூப்பரா பேசுனே, சூடு பறக்க பேசினே, செமத்தியா பேசுனே, செண்டிமெண்ட்டா பேசுனே,ஆனாலும் இந்த வாரம் உன்னை கட்டம் கட்டி பாடல் போட முடியாது கண்ணா..
அனானி: ஏன்? ஏன்?
விசு: ஏன்னா எனக்கும் “கராத்தே தெரியாது”
சொன்ன வேகத்தில் விசு மறைய…தமிழச்சியை கட்டம் கட்டி “ தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலும் பாயுதே…” என்று பாட ஆரம்பிக்க, பதிவர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள்.
இப்போது முற்றும், தேவைப்பட்டால் தொடரும்...

15 comments:
சும்மா... கலக்கீறிங்க.....
அடங்கொய்யாலே, இது பெரிய மொக்கையா இருக்கும் போல…
//மங்களூர் சிவா said...
அடங்கொய்யாலே, இது பெரிய மொக்கையா இருக்கும் போல…//
கூடிய சீக்கிரமே டிபிசிடி இடத்தை பிடிச்சிடுவேன்றீங்க...வாழ்த்துக்கு நன்றி..ஹி ஹி ஹி
நல்லா இருக்கு... ஆனா நல்லா இல்லை..
முதல் பகுதி அளவுக்கு நல்லா இல்லை!! :-(
நண்பரே ரொம்ப நளைக்கபுரம் வாய் விட்டு சிரித்தேன் நன்றி மயில் அனுப்பிஇருக்கிறேன்
லியோ சுரேஷ்
//கருப்பன்/Karuppan said...
நல்லா இருக்கு... ஆனா நல்லா இல்லை..
முதல் பகுதி அளவுக்கு நல்லா இல்லை!! :-(//
உங்க "டேஸ்ட்" என்னன்னு தெரிஞ்சுரிச்சுல்ல இனி வர்ற பதிவுகளில் கலக்கிடலாம் நண்பா...
//

நிச்சயமாக...
உங்கள் முதல் பாகம் ரெம்ப நல்லா இருந்துச்சா, அதான் கொஞ்சம் எதிர்பார்ப்பு ஓவரா போயிடுச்சு!!
வருகைக்கு நன்றி முரளிக்கண்ணா, லியோ சுரேஸ்...
நல்லா இருக்குங்க...
//விசு: கண்ணா
டிபிசிடி, வசந்தம் ரவியிடம்: இவரு பேரும் கண்ணாவா?
வசந்தம் ரவி : அம்மாடியோவ்( என்று ஓட்டம் எடுக்கிறார்…)
//
itha padichathuku apparam ennala seriesa siripu thanga mudiyalla. nice timings.... keep it up
very good thinking... i enjoy this
நல்ல பதிவு...
அதுவும் குறீப்பா, கதாநாயகன் வசனம் ரொம்ப நல்லா இருக்கு..
கலக்கிட்டீங்க போங்க.முற்றும் போட்ட முடிவ கைவிட்டு தொடருங்கப்பு.
எப்படிங்க... கலக்கிட்டீங்க போங்க...நல்ல காமெடி
//நிஜமா நல்லவன் said...
கலக்கிட்டீங்க போங்க.முற்றும் போட்ட முடிவ கைவிட்டு தொடருங்கப்பு.//
நிஜமாவே சொல்றீங்களா இல்லா எதாவது உள் குத்து இருக்கா...
Post a Comment