வேட்டைக்காரனுக்கு இந்தப்படம் போட்டியா…? காணொளியுடன்…

"அண்ணாச்சி இந்த சுற்றுலாவை படமா எடுக்கலாமென்று இருக்கிறேன்"
என்று சொன்ன போது அண்ணாச்சி சிரிச்ச சிரிப்பை மறக்கவே முடியாது…அப்படி ஒரு சிரிப்பு…


“ஏண்டே அந்த சினிமாக்காரனுங்க தான் இப்படி எதாவது சொல்லிக்கிட்டு இருங்கானுங்கன்ன உனக்கு என்னங்கடே வந்தது…” என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்தாரு

அன்றைக்கு என் வாழ்க்கையிலே சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன்…
1)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி என்னைக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும்…( இன்னா செய்தாரை ஒருத்தர் பாணியில்)
2)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சியைப் பார்த்து ஊரே சிரிக்கனும்
3)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி ஊரைப்பார்த்து சிரிக்கனும்..

அதற்குப் பின்னால் “வெற்றி நிச்சயம்” என்ற பாடல் பிண்ணனியில் ஓட ஒரே பாடலில் ஒரு படத்தை முடித்து அண்ணாச்சி கிட்டேயே போட்டு காட்டினேன்…படத்தை பார்த்துட்டு கண் கலங்கிட்டாரு…
“ராஸா நீ கோடம்பாக்கத்துலே இருந்து எங்களை கொல்ல வேண்டியவண்டா...இவ்வளவு சீரிசா படத்தை எடுத்திருக்கேயடா"

என்றதும் தூக்கி வாரிப்போட்டது…அண்ணாச்சி என்னையே வச்சி காமெடி கீமடி பண்ணலேயேன்னு இது காமெடி படம் அண்ணாச்சி என்றேன் இருந்தாலும் அழுறதை நிறுத்தலே…

அதன் பின் அண்ணாச்சி என் அன்பு அண்ணன், அமீரகப் பதிவுலத் தந்தை , கட்ட(ட)த்துரை ( ஆர்க்கிடெக்ட்டுக்கு தாங்க நம்ம பசங்க அன்பா இப்படி ஒரு பேரை வச்சிருக்கானுங்க) எனக்கு கொடுத்த ஊக்கத்தை மறக்கவே இயலாது…



அதன் பின் ட்ரைலர் பண்ணாலாமென்று அவர் தான் ஊக்கமும் கொடுத்தார்…அந்த ஊக்கத்தின் பலன் தான் இந்த ட்ரைலர் பதிவு…
இதனால் விஜய் ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது கண்டிப்பாக வேட்டைக்காரனுக்கு போட்டி அல்ல…

இந்தப்பட ஒளிப்பதிவில் என்னுடன் இணைந்து செயல் பட்ட நண்பன் முகவை முகில், ஊமையன் ஹக்கிம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் பதிவர்ச் சுற்றுலாவிற்கு வர இயலா விட்டாலும் இந்த ட்ரைலர் வெளியீட்டிற்கு போஸ்டர் வடிவமைத்து தந்த "பிரபல சினிமா போஸ்ட்டர் வடிவமைப்பாளர் சிம்ம பாரதிக்கு" என் அன்பு கலந்த நன்றி

இந்த வெளியீட்டிலும், சுற்றுலாவிலும் எந்த வித குறிக்கீடும் இல்லாமல் செயல் பட்டதற்கு (கலந்து கொள்ளாததற்கு) பி.ப.குசும்பனுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி… …

என்ன தான் அண்ணாச்சியை திட்டினாலும் "நல்லா இருங்கடே"ன்னு எல்லா உதவியும் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு மிகு அண்ணாச்சிக்கு
நன்றி! நன்றி! நன்றி!

ட்ரைலரை இப்பப் பாருங்க… படம் டிசம்பர் 18….சார்ஜாவைத்தொடர்ந்து உலகெங்கும்...
மேலும் விபரங்களுக்கு….
http://asifmeeran.blogspot.com/2009/12/blog-post.html

25 comments:

குசும்பன் said...

சித்தப்பு நல்லா இருங்க சித்தப்பு! அவ்வளோ தான் சொல்லுவேன்!

அது ஒரு கனாக் காலம் said...

;-) :-)

கலையரசன் said...

ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!

கலையரசன் said...

ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!

கிளியனூர் இஸ்மத் said...

தளபதியாரே.....உங்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்டிருப்பதாக ஒற்றையன் தகவல் கொண்டு வந்திருக்கான்...

நான் கூறிவிட்டேன். இவர் கோடம்பாக்கம் வந்தால் அது கொலைபாக்கமாக மாறிவிடும் என்று.....

சென்ஷி said...

ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!

Prathap Kumar S. said...

ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பாடியோட போட்டுடீங்களே...
அவரோட பாருங்க சிக்ஸ்பேக் பாடி பார்த்துட்டு கோடம்பாக்கத்துல நடக்கப்போகுற பின்விளைவுகள் பத்தி யோசிச்சீங்களா???

Prathap Kumar S. said...

ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பாடியோட போட்டுடீங்களே...
அவரோட பாருங்க சிக்ஸ்பேக் பாடி பார்த்துட்டு கோடம்பாக்கத்துல நடக்கப்போகுற பின்விளைவுகள் பத்தி யோசிச்சீங்களா???

அப்துல்மாலிக் said...

டிரெயிலெரெல்லாம் போட்டு எம்மாம்பெரிய எதிர்ப்பார்ப்பு.. முடியலே..!!!!

மெய்யாலுமே வித்தியாசமான முயற்சி

பெசொவி said...

அண்ணாச்சி......என்னாச்சி?
கீழை ராசா மாப்பூ...............வைக்கப் போறியா ஆப்பூ ......?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.................அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே.....

Jazeela said...

சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோகித்து இதனை வடிவமைத்தார் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.

Anonymous said...

இயேசு அழைக்கிறார் குரூப்பை கிண்டலடிப்பது போல இருக்கே...

கீழை ராஸா said...

// குசும்பன் said...
சித்தப்பு நல்லா இருங்க சித்தப்பு! அவ்வளோ தான் சொல்லுவேன்!//

என்ன இருந்தாலும் நீங்க படத்தில் இல்லாதது ஒரு குறை தான்...அந்த கம்பீரத் தோற்றம் படத்தில் மிஸ் தான் போங்க...

//அது ஒரு கனாக் காலம் said...
;-) :-)//
:-(

கீழை ராஸா said...

//கலையரசன் said...
ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!//

மைண்ட்லே வச்சுக்கிறேன் கலையரசன்...கண்டிப்பா படத்துலே உங்களுக்கு ந்ல்ல ரோல் இருக்கு...

//சென்ஷி said...
ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!///

ஏய் என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலேயே..?

கீழை ராஸா said...

//கிளியனூர் இஸ்மத் said...
தளபதியாரே.....உங்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்டிருப்பதாக ஒற்றையன் தகவல் கொண்டு வந்திருக்கான்...

நான் கூறிவிட்டேன். இவர் கோடம்பாக்கம் வந்தால் அது கொலைபாக்கமாக மாறிவிடும் என்று.....//

ஏன் இந்த கொலை வெறி இஸ்மத் பாய்..விடுங்க விடுங்க

//நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பாடியோட போட்டுடீங்களே...
அவரோட பாருங்க சிக்ஸ்பேக் பாடி பார்த்துட்டு கோடம்பாக்கத்துல நடக்கப்போகுற பின்விளைவுகள் பத்தி யோசிச்சீங்களா???//

உங்க 8 பேக் பத்தி சொல்லலேயே...

கீழை ராஸா said...

//அபுஅஃப்ஸர் said...
டிரெயிலெரெல்லாம் போட்டு எம்மாம்பெரிய எதிர்ப்பார்ப்பு.. முடியலே..!!!!

மெய்யாலுமே வித்தியாசமான முயற்சி//

அப்சர் இந்தத் தடவை மிஸ் பண்ணாமே கண்டிப்பா வந்துடுங்க...சரியா?

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே.....//

எப்பத் தான் நீங்க பேர் சொல்லப் போறீங்க...

கீழை ராஸா said...

//ஜெஸிலா said...
சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோகித்து இதனை வடிவமைத்தார் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.//

PHOTOSHOP தான் அக்கா...

//Anonymous said...
இயேசு அழைக்கிறார் குரூப்பை கிண்டலடிப்பது போல இருக்கே...//

கண்டிப்பா இல்லேன்னு படத்தைப் பார்த்தா தெரிஞ்சியிருப்பீங்க...

ஆயில்யன் said...

//ஜெஸிலா said...

சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோகித்து இதனை வடிவமைத்தார் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.
//
அதே ஆவலுடன்...!


ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறதை பத்தி ஒரு போஸ்ட் போடச்சொல்லுங்களேன் ரியலி இண்ட்ரஸ்டட் - தெரிஞ்சுக்கணும் !

Hakkim Sait said...

தல எங்கோயோ போயிட்டீங்க, traillerக்கே இவ்வளவு commenta, கண்ணுப்பட போகுதுல

ஆங்.. ஆங்..

Jazeela said...

//ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறதை பத்தி ஒரு போஸ்ட் போடச்சொல்லுங்களேன் ரியலி இண்ட்ரஸ்டட் - தெரிஞ்சுக்கணும் !//ஆயில்யன் சொன்ன மாதிரி ஒரு பதிவு எதுலயாவது வந்துச்சுன்னா தயவு செய்து சுட்டி அனுப்புங்க.

கீழை ராஸா said...

//ஜெஸிலா said...
//ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறதை பத்தி ஒரு போஸ்ட் போடச்சொல்லுங்களேன் ரியலி இண்ட்ரஸ்டட் - தெரிஞ்சுக்கணும் !//ஆயில்யன் சொன்ன மாதிரி ஒரு பதிவு எதுலயாவது வந்துச்சுன்னா தயவு செய்து சுட்டி அனுப்புங்க.//

நீங்களே சொல்லிட்டீங்க, போஸ்ட்டர் பற்றி பதிவென்ன ஒரு பட்டறையே போட்டுடலாமக்கா...ஆனா நீங்க கேட்கிறதைப் பார்த்தா அதுக்கு ஒரு ட்ரைலர் போடச் சொல்லுவீங்க போல...
வெகுவிரைவில் எதிர்பாருங்கள்னு...

அன்புடன் மலிக்கா said...

ஆகா டிரைலரே அசத்தலாக இருக்கே ம்ம்
பயப்புடாம வரலாமா?

துபாய் ராஜா said...

எப்போ போடுவீங்க.. எப்போ போடுவீங்க... 18ம் தேதி படத்தை எப்போ போடுவீங்க.... :))

கலக்கல் கீழைராஸா.. டிரெயிலரே பட்டையை கெளப்புது. படம் ரிலீசானா பல பாகமா வந்து நிச்சயம் பத்தாயிரம் நாள் ஓடும்....

வாழ்த்துக்கள் கலை ரசனைக்கும், கடும் உழைப்பிற்கும்...

அப்படியே அடிச்சு ஆடுங்க...

சீதாலட்சுமி said...

குறும்படம் பார்த்த குதூகலம்

அண்ணாச்சி அழைக்கின்றார்
குறும்படத்தின் சாதனையோ மிகப் பெரிது
கணிணி உலகத்தின் சாதனையா ? அல்லது அது படைத்துவரும்
அன்புலகின் இதய உறவுகளின் சங்க நாதமா?
பதிவர்களின் வெற்றி முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டது
ஒளி, ஒலி, அமைப்பு, இசை, இயக்கம் எல்லாமே நயம். ஒட்டுதலும் உறவாடலும் இழைந்தோடும் ஓர் உணர்ச்சிச் சித்திரம்
பாராட்டி உங்களுடன் நானும் சங்கமம் ஆகின்றேன்
சீதாம்மா

சீதாலட்சுமி said...

குறும்படம் பார்த்த குதூகலம்

அண்ணாச்சி அழைக்கின்றார்
குறும்படத்தின் சாதனையோ மிகப் பெரிது
கணிணி உலகத்தின் சாதனையா ? அல்லது அது படைத்துவரும்
அன்புலகின் இதய உறவுகளின் சங்க நாதமா?
பதிவர்களின் வெற்றி முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டது
ஒளி, ஒலி, அமைப்பு, இசை, இயக்கம் எல்லாமே நயம். ஒட்டுதலும் உறவாடலும் இழைந்தோடும் ஓர் உணர்ச்சிச் சித்திரம்
பாராட்டி உங்களுடன் நானும் சங்கமம் ஆகின்றேன்
சீதாம்மா

Related Posts with Thumbnails