இடம் : அமீரகத்தின் 7 நாடுகளில் ஒன்றான புஜராவின் கடற்கரை நகரம் குர்பகான். ( மலையும் கடலைச்சார்ந்த மணல் பகுதி பகுதியும் குறிஞ்சி+நெய்தல்+பாலை).
நாள் : 06-11-09 வெள்ளிக்கிழமை
நேரம் : அதிகாலை 9 மணியளவில் ( விடுமுறை நாளில் இது அதிகாலை தான்)
அனுமதி: முதல் பதிவு செய்யும் 32 உலகப் பதிவர்கள் மட்டும் ( ஓட்டுநர் இந்த சுற்றுலா முடிந்ததும் பதிவர் ஆகி விடுவார்)
தலைமை : உயர்திரு அண்ணாச்சி அவர்கள்
உணவு: பொட்டலம் தயாராகி வருகிறது
நிகழ்ச்சி நிரல் :
அதிகாலை 9 மணி - பர்துபாய்
9:15 மணி - தேரா
9:45 மணி – சார்ஜா
10:00 மணி
பாட்டுக்குப் பாட்டு
கவுஜைக்கு கவுஜை
பதிவர் 2010 ( பதிவுலகில் சிறந்த பதிவுத் தேடல்)
அண்ணாச்சி நடத்தும் நீயா நானா…?
அண்ணாச்சியின் ஜாக்பாட் கேள்வி பதில் நிகழ்ச்சி
(அண்ணாச்சி கிட்டே யாராவது பிக்பாக்கெட் அடிக்காமல் இருக்கனும்)
அண்ணாச்சியின் அரட்டை அரங்கம்
( அதை யாரும் குறட்டை அரங்கமா மாத்திடக் கூடாது ஆமா)
சென்ஷியின் நானும் பிரபலம் தான் ( பேப்பர் ஒர்க்காம்)
12:30 மணி
ஜும்மா தொழுகை நேரம்
1:30 மணி
ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்
( அண்ணன் புஜ்ராவில் தான் இருக்காரு, அவங்க ஆபிஸ்லே ஒரு டீன்னு பெர்மிசன் வாங்கிருக்காரு…(வடிவேலுவின் பாசக்காரப் பசங்க விட்டுடு சாப்பிட மாட்டீங்களடா காமெடி இவர் மூலம் புஜ்ராவில் நடக்கப் போகுது)
3:00 மணி
10க்கு 10 கிரிக்கெட்டு….
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அசத்தப்போவது யாரு…?
7:00 மணி
மீண்டும் பாட்டுக்கு பாட்டு………….
இரவு சாப்பாடு அவரவர் வீட்டில்…..
அமீரகத் தங்கம், சாத்தான்குளச் சிங்கம் அண்ணாச்சி அழைக்கிறார்….
http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html
வாருங்கள் பதிவர்களே…
பேருந்தில் இடம் பிடியுங்கள்…! வரலாற்றில் தடம் பதியுங்கள்..!
தொடர்புக்கு…
ஆசிப் மீரான் 050 655 02 45
கீழை ராஸா 050 418 42 45
சென்ஷி 050 314 60 41
அமீரகப் பதிவர்ச் சுற்றுலா…அழைக்கிறார் அண்ணாச்சி…
Labels: அண்ணாச்சி, சுற்றுலா, துபாய், பதிவர்வட்டம், பதிவுலகம்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அண்ணாச்சியின் கட் அவுட் வடிவ புகைப்படம் அருமை!
//ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்//
திருப்பதில இதுக்கு முன்னாடி வேல கீல பாத்தீங்களா??? :-)
ஏ எல்லாரும் பாத்துக்குங்க நானும் பதிவர்தான், நானும் கோர்ஃபக்கான் போறேன் கோர்ஃபக்கான் போறேன் கோர்ஃபக்கான் போறேன். (எங்க குடும்பமும் சேர்ந்தா தாங்காது. நல்லா எஞ்சாய் பண்ணுங்க.)
அண்ணே கட்-அவுட் கலக்கல் :)
தல சொன்னாமாதிரியே அண்ணாச்சியா ரோட்டுல நிக்கவச்சிடீங்களே...கீழையா...கொக்கா...?
எப்போதும் பதிவர்கள் கூட்டம் முடிந்துதான் பதிவுபோடுவோம்...இப்போ எல்லாரும் முந்துவதப்பார்த்தா...வரலாறு புவியில் அறிவியல் படைச்சுடுவீங்க போலிருக்கு.....
அண்ணாச்சி கட்அட் அருமை....
அக்கக்க.... அசத்திபுட்டீங்க.. ராஸா.. :)
ஷேக் ஷையத் ரோட்டுல துபாய் ஷேக்குக்கு அடுத்த படியா கட்-அவுட் வச்சிருக்கறது நம்ம அண்ணாச்சிக்குத் தான்!!
கலக்கல் ராஸா
//ஓட்டுநர் இந்த சுற்றுலா முடிந்ததும் பதிவர் ஆகி விடுவார்// ஹஹஹஹஹஹ
அண்ணாச்சி கட் அவுட் கலக்கல்... மதுரைல அழகிரிக்கு வச்சா மாதிரியே இருக்கு...
அமீரக வைரமுத்து அண்ணாச்சி வாழ்க
இந்த வரலாற்று சிறப்புமிக்க டூர் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஷார்ஜாவுலேர்ந்து வாழ்த்துகிறேன்...
//சென்ஷி said...
அண்ணாச்சியின் கட் அவுட் வடிவ புகைப்படம் அருமை!//
கவலைப்படாதீங்க சென்ஷி...உங்களுக்கும் ஒரு கட் அவுட் வச்சிடலாம்
//RAD MADHAV said...
//ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்//
திருப்பதில இதுக்கு முன்னாடி வேல கீல பாத்தீங்களா??? :-)//
திருப்பதியில் "வேலு" பார்க்க முடியாது மாதவ், அதுக்கு பழனி போகனும்
எங்க ராசா அண்ணாச்சி.உங்களை, ராட் மாதவனைக் காணவே கிடைக்கல.சுகம்தானே !
தூள் பண்ணிட்டிங்க தல ;))
நன்றி
ஜியா
மாதவ்
இஸ்மத் பாய்
செந்தில்
பிரதாப்
அபுஅப்சர்
ஹேமா அக்கா
கோபினாத்
/இந்த வரலாற்று சிறப்புமிக்க டூர் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஷார்ஜாவுலேர்ந்து வாழ்த்துகிறேன்.../
நானும்தான் ...!
பதிவர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க இன்ப சுற்றுலாவில் கலந்துக்கிட்டதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது, வாழ்த்துக்கள்
ஊமையன் ஹக்கீம் சேட்
இந்த பதிவர் கூட்டத்தில் சிறு குழந்தை போல உங்கள் கைகளை பிடித்து நடந்து வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி, ஆயிரம் பூக்களுக்கிடையில் இந்த அமீரக புன்னகைப்பூ தொடர்ந்து நம் கைவசம்
- முகவை முகில்
இந்த பதிவர் கூட்டத்தில் சிறு குழந்தை போல உங்கள் கைகளை பிடித்து நடந்து வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி, ஆயிரம் பூக்களுக்கிடையில் இந்த அமீரக புன்னகைப்பூ தொடர்ந்து நம் கைவசம்
- முகவை முகில்
Post a Comment