பெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா...?

இஸ்லாமிய சமுதாயத்தில் "பெண் வயசுக்கு வருதல்" எனும் இயற்கை நிகழ்வை காரணம் காட்டி சமூகத்தில் நசுக்கப்படும், பெண்கல்வி, பெண் முன்னேற்றம், போன்ற செயல்களைச் சாடும் சிறுகதை இது.

கதை எங்கள் ஊர் வட்டார மொழியில் கதை பின்னப்பட்டுள்ளதால் அதற்கான அருஞ்சொற்பொருளை கதையின் அடியில் கொடுத்துள்ளேன்.


(சிறுகதை எழுத்தாளர் நண்பர் திருச்சி சையதுவால் தொகுக்கப் படவிருக்கும் இஸ்லாமிய சிறுகதை தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட சிறுகதை இது. )
பெரிய மனுசி
“ஆயிஷா இனி ஸ்கூலுக்கு வராதாம்” சக நண்பனின் வார்த்தைகள் என்னுள் சாட்டையடியாகப் பதிந்தன.

“ ஏண்டா” பதற்றம் என்னுள்

“அது பெரிய மனுசி ஆயிடுச்சாம்”

'அது எப்படி நானும் அவளும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப்படிக்கிறோம், நான் பெரிய மனுசனாகலை அது மட்டும் எப்படி,,,?' விடை தெரியாத கேள்விகள் என்னுள் முட்டி மோத அன்று இரவு என்றும் இல்லாத அளவு ஆயிசாவின் நினைவு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது..


ஆயிசா என் முதல் பள்ளித்தோழி…பள்ளி செல்லும் வழியில் என்னுடன் பயணப்படுபவள்…என்னை விட உயரம், தெத்துப்பல் சிரிப்பு, நல்ல அறிவாளி முதல் மதிப்பெண்ணைத் தட்டிச்செல்ல எங்களுக்குள் ஒவ்வொரு பரீட்சைக்கும் போட்டா போட்டி இருந்தாலும்,,,நட்பில் எங்கள் நெருக்கம் கண்டு பள்ளியே வியந்து நிற்கும்…


அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது…அவன் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று மனசு ஏங்கியது. நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என்பதாலும்,அன்று மாட்டு வண்டிப்பயணம் கூட வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாலும் என் பள்ளிப்பயணம் முழுவதும் நடை பயணமே…எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது முடுக்கை* கடக்கும் போது கடலில் கலக்கவரும் நதி போல் எனக்காக காத்திருப்பாள்.இன்று அந்த இடத்தில் வெறுமை…முடுக்கின் வழியே அவள் வீட்டை எட்டிபார்த்தேன்.ஆயிசாவின் லாத்தா* நின்றிருநதார்கள்.அவரிடமே கேட்டுவிடுவது என்று அருகில் சென்றேன்.

“ரியாஸ், என்ன ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா…”

“ஆமாம் லாத்தா அது தான் ஆயிசாவை கூட்டி போகலாம்னு வந்தேன்…என்றேன் தயங்கியபடி…

என் சத்தத்தைக் கேட்டு ஆயிசாவின் உம்மாவும் வெளியே வந்தார்…
நான் சலாத்தி* வழியே ஆயிசா தெரிகிறாளா என்று ஊடுருவி பார்க்க முயன்றேன்…அவள் தென்பட வில்லை…

“இனி ஆயிசா ஸ்கூலுக்கு வராது வாப்பா..” ஆயிசாவின் உம்மா.

“ஏன்” இனம் புரியாத ஏக்கத்துடன் நான்.

“அவ பெரிய மனுசி ஆயிட்டா..” ஆயிசா உம்மா முற்றுப்புள்ளி வைத்தார்கள்
ஏமாற்றத்துடன் பள்ளி நோக்கி நடந்தேன்..‘அவ பெரிய மனுசி ஆயிட்டாளாம் ஸ்கூலுக்கு வரமாட்டாளாம் இது எப்படி பதிலாகும்…போன வாரம் வகுப்பில் லீலா டீச்சர் , பெரிய ஆளா வரனும்னா நல்லா படிக்கணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆயிசா நல்லா படிச்சதுனாலே பெரிய மனுசி ஆயிட்டாளா..?’ வகுப்பில் அவள் ஞாபகம் இருமடங்கானது.

நேற்றுவரை என் கூடவே இருந்தவள் இன்று அவள் வீடு செல்லும் போது கூட நம்மைப்பார்க்க வரலையே…குழப்பம் தொடர்ந்தது…

இரவு சாப்பிடும் போது உம்மாவிடம் கேட்டேன்…
“ உம்மா நான் பெரிய மனுசனாயிட்டா என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டியா…? “

“நீ நல்லா படிச்சா தாண்டா பெரிய மனுசனாவே” டீச்சர் சொன்ன அதே வார்த்தை..”

“அப்ப ஏன் ஆயிசா பெரிய மனுசியாயிட்டான்னு ஸ்கூலுக்கு விட மாட்டேன்றாங்க”

“அவ பொம்பளப்புள்ளடா”

“அது என்ன பொம்பளபுள்ளைக்கு ஒண்ணு ஆம்பளை புள்ளைக்கு ஒண்ணு…”

“கெப்பர்தனமா* பேசாமே போய் தூங்குடா..” அம்மா குரலில் சற்று கடுமை.

அன்று விடை தெரியாத வினாக்களுடன் உறங்கிப்போனேன்.

வருடங்கள் உருண்டோடின…நான் படித்து டாக்டராகி எங்கள் ஊரிலேயே கிளினிக் ஆரம்பித்ததென்று என் வாழ்வில் பல அத்தியாயங்களுக்குப் பின் ஆயிசாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று அஸர்* தொழுகையை முடித்து விட்டு வீடு வந்த போது வரண்டாவில் ஒரு பொண்ணுடன் உம்மா பேசிக்கொண்டிருந்தார்கள், அவள் கையில் எட்டு வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுமி காய்ச்சலில் நடுங்கிய படி…நான் பெரும்பாலும் வீட்டில் வைத்து நோயாளிகளைப் பார்ப்பதில்லை..யார் இவர்கள் என்று எண்ணிய படி வந்த என்னைப்பார்த்த உம்மா…

“ரியாஸ் வாப்பா இது யாரென்று தெரியுதா…பதிலுக்கு காத்திருக்காமல் பதிலையும் சொன்னார், இது நம்ம ஆயிசாடா…அது புள்ளைக்கு ரொம்ப முடியலைன்னு உன்னை பார்க்க வந்திருக்கு…”

“ஆயிசாவா”…எத்தனை வருடங்களாயிற்று…புன்முறுவலுடன் பார்த்தேன்.அவளிடம் முன்பிருந்த உற்சாகமில்லை…அடையாளமும் தெரியவில்லை.இருந்தாலும் அதே தெத்துப்பல் சிரிப்பு…வறுமையின் வாட்டம் அவளைச்சுற்றி தெரிந்தது.
“ எப்படிருக்கே ஆயிசா? “என்ற படி அவ மகளை பரிசோதிக்க ஆரம்பித்தேன்…

“நல்லா இருக்கேன் டாக்டர்” வார்த்தையில் மரியாதை என்னை அன்னியப்படுத்தியது.

“நீ பார்த்துக்கிட்டுயிரு ரியாஸ் வராத புள்ள வீட்டிற்கு வந்திருக்கு, நான் சாயா எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று கூறிய படி பதிலை எதிர்பாராமல் உம்மா உள்ளே சென்றார்.

நான் ஆயிசாவை நோக்கினேன்…

“ரெண்டு நாளா காய்ச்சல், நானும் சளிக்காச்சல் என்று மருந்து கொடுத்துட்டு விட்டுடேன்.. இப்ப ரொம்ப கொதிக்க ஆரம்பிச்சிடுச்சி…ஊரெல்லாம் மலேரியா, டைபாயிடுன்னு வந்து இப்ப சிக்கன் கூனியா,பன்ணி காய்ச்சல் வேறெ பரவுதாம் பயமா இருக்கு டாக்டர்…”

“பயப்பட ஒண்ணும் இல்லே…பார்த்திடலாம்..”

ஆபிஸ் ரூமிற்கு சென்று ஸ்டெதஸ்கோப்பால் சோதித்தபடி கேட்டேன்…

“:ஏன் ஆயிசா உனக்கு என்னை ஞாபகம் இருக்கா..”

“எப்படி மறக்கும் டாக்டர்…சின்னப்புள்ளையிலே குண்டா இருப்பீங்க…நாம சேர்ந்து தானே ஸ்கூலுக்கு போவோம்…உங்களுக்கெல்லாம் ஹைஸ்கூலு, காலேஜ்ன்னு எவ்வளவோ நினைச்சி பார்க்க இருக்கும் ஆனா ஆறாவது வரை படிச்ச இந்த மக்கிற்க்கு நினைச்சிப்பார்க்க சந்தோசமான நாட்கள்ன்னா அது தானே…டாக்டர்”

“நான் டாக்டர் இல்ல ஆயிசா உனக்கு எப்பவுமே நான் “குண்டு ரியாஸ்” தான்.”

ஆச்சரியப்பார்வைப்பார்த்தாள்…”பரவாயில்லையே எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே…”

“ஒட்டக ஆயிசா” கூட ஞாபகம் இருக்கு…

சிரித்தாள்...

உன் மாப்பிள்ளை எங்கே இருக்கார்…

சிரிப்பு மறைந்தது…

“உங்களுக்குத்தெரியாதா அவங்க எனக்கு வார்த்தை சொல்லிட்டாக *”

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது.

“ஏன்”

“அவங்க ரொம்ப படிச்சவங்க…அவங்களுக்கு படிக்காத இந்த மக்குக்கூட ஒத்து வரலையாம்” சொல்லும் போதே கண்ணில் நீர் கோர்த்தது…

“ஆமா வாப்பா, இந்தப்புள்ளைக்கு படிக்கிற வயசுலே கட்டிக்கொடுத்துட்டாங்க வந்தவனோ அதிமேதாவி, அது நொட்டை, இது சொத்தைன்னு எடுத்ததுக்கெல்லாம் சண்டை…இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறா…இவ காக்கா* தான் அக்கச்சியாவை* வச்சிகாப்பாத்துறான்”
.உள்ளிருந்து வந்த உம்மா காபி ஆத்திய படி பேசிய வார்த்தைகளில் காபியின் சூடு குறைந்தது… எனக்கு சூடு ஏறியது…

சமுதாயத்தின் மீது கோபம் திரும்பியது…வயசுக்கு வந்துட்டா படிப்பை நிறுத்தும் பழக்க வழக்கம் மீது வெறுப்பு அதிகமாகியது… நல்ல படிக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்வு என் கண் முன்னேயே கரைந்து போனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை…

அன்று இரவு தஹஜ்ஜத்* துவாவில் சமுதாய நலனையும் சேர்த்துக்கொண்டேன்…

இரண்டு நாட்கள் கழித்து ஆயிசா மகளுடன் கிளினிக் வந்தாள்…குழந்தையின் உடல்நிலை நன்கு தேரியிருந்தது.

ஸ்டெதஸ்கோப்பை எடுத்த படி “உங்க பேரென்னா” என்றேன்.

“சபானா”


“வெரிகுட் நாக்கை நீட்டுங்க…ஆ குட்…ரொம்ப நல்ல இம்ரூமெண்ட் இனி ஒரு கவலையும் இல்லை” என்றபடி ஆயிசாவை பார்த்தேன்.

முகத்தில் புன்னகை…

“சபானா எத்தனாவது படிக்கிறீங்க”

“ஃபோர்த்…என்றவள் சிறு இடைவெளிக்குப் பிறகு

“டாக்டர் அங்கிள் நான் பெருசா ஆனதும் உங்களை மாதிரி டாக்டரா ஆவேன்” என்க,

நான் ஆயிசாவைப்பார்த்தேன் தலை குனிவாள் என்று எதிர்பார்த்தேன்…ஆச்சரியம் தலை நிமிர்ந்தாள்…நீண்ட பெருமூச்சு விட்டவள்,அழுத்தமாகச் சொன்னாள்.
“இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆக முடியும்”

அவள் அழுத்த திருத்த உச்சரிப்பில் எனக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்து.

வட்டாரத்தமிழ்
*முடுக்கு – சந்து, தெரு, *லாத்தா – அக்கா, சலாத்தி-திரை, *காக்கா –அண்ணன், *வார்த்தை சொல்லுதல் – விவாகரத்து, *கெப்பர் தனம் –அதிக பிரசங்கித்தனம், *அஸர் – மாலை வேளைத்தொழுகை ,
*தஹஜ்ஜத் – நடுநிசித்தொழுகை, *அக்கச்சியா - சகோதரி

41 comments:

Anonymous said...

கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

நல்ல சிறுகதை. இப்போதெலலம் பெண்களை படிப்பில் இருந்து நிறுத்துவது குறைந்துவிட்டது.

'சட்டிப் பானை தேய்கப் போறத்துக்கு எதுக்குப் படிக்கனும்' என்று சொல்லி என் அம்மாவின் படிப்பை 3 ஆவது படிக்கும் போது நிறுத்தினாராம் எங்க தாத்தா. 60 வயது கடந்தும் என் அம்மா இன்றும் புலம்பு வருகிறார்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல கதை ராஸா. சிறுகதை தொகுப்பில் வரவேண்டிய முக்கிய கதை. வாழ்த்துகள்

கிளியனூர் இஸ்மத் said...

//சமுதாயத்தின் மீது கோபம் திரும்பியது…வயசுக்கு வந்துட்டா படிப்பை நிறுத்தும் பழக்க வழக்கம் மீது வெறுப்பு அதிகமாகியது… நல்ல படிக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்வு என் கண் முன்னேயே கரைந்து போனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை…//

உண்மைதான்...ஆனால் தற்போது சூழல் மாறி வருவதாய்...வயசுக்கு வந்த பெண்பிள்ளைகளே...சொல்றாங்க...அப்படி மாறிச்சுன்னா...கீழைராஜாவோட சேர்ந்து நானும் சந்தோசப்படுவேன்...!

எம்.எம்.அப்துல்லா said...

சமீபத்தில் சகோதரி சுமஜ்லா அவர்கள் மெட்ரிக்கில் 90% மதிப்பெண் எடுத்தும் அவர் தந்தை அவரை மேலும் பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டதாக எழுதி இருந்தார். தற்போது அந்நிலை கிட்டத்தட்ட இல்லை எனலாம்.

:)

மின்னுது மின்னல் said...

நல்ல பதிவு*(பகிர்வு)

எம்.எம்.அப்துல்லா said...

கண்டிப்பாய் இந்த கதை தொகுப்பில் இடம்பெற வேண்டும்.அழகான கதை.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஹேமா said...

அருமை அருமை ரஸா,நிறைய நாளுக்கு அப்புறமா எழுதினாலும் நல்ல பதிவு.மனசைத் தொட்டதாய் இருக்கு கதை.என்னதான் வாழ்வியல் மாற்றங்கள் மாறினாலும் சில மாற்றங்கள் மாறாமலே இருக்கு.
மாற்றவேணும்.மாறவேணும்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

Arthamulla Sirukathai.
- trichy syed

தங்கராசு நாகேந்திரன் said...

நெகிழ்வான கதை ஆனா இந்த விசயத்துல நம்ம ஊரு கீழக்கரை பரவாயில்ல தாசிம் பீவி காலேஜ் வந்ததும் நிறையப் புள்ளைக படிக்கிறாக.மாட்டுவண்டியிலே பள்ளிக்குப் போனது பத்தி எழுதியிருந்திக எனக்கும் என் பள்ளிப்பருவம் ஞாபகம் வந்துடுச்சு.

Nagangudiyan said...

Nalla sirukathai. Ippo vellam intha karanathukaga school nippatravanga romba romba kuraivu.
Pengal munnera kalvi romba avasiyam enbathai
intha sirukathai solluthu.
Keep it up - Good short story.

Rgds/Shafi

ஜெஸிலா said...

கதை அருமை.

உசேன் said...

எங்க தாத்தா அந்த காலத்திலேயே எல்லா பெண்களையும் டிகிரி படிக்க வைத்தார். என் அம்மாவையும் சித்திகளையும் தான் சொல்கிறேன்

துபாய் ராஜா said...

அருமையான கதை.

நல்லதொரு கருத்து.

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் தொகுப்பும்,உரையாடல்களும் நன்று.

படங்களும் நல்ல தேர்வு.

பெண்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதர நிலையிலும் உயரவேண்டும் என்பதை சிறுமியின் டாகடர் கனவு மூலம் வெளிப்படுத்தியிருப்பது அழகு.

வாழ்த்துக்கள்.

நிறைய எழுதுங்கள் ராஸா.

நட்புடன் ஜமால் said...

அருமையான நிகழ்வை நெகிழ்வாய் ...

----------------

இப்பல்லாம் படிச்சாத்தான் பெரிய மனுஷி ஆக முடியும் - நச்

----------------

வட்டார வழக்கு சூப்பர்.

கீழை ராஸா said...

//சின்ன அம்மிணி said...
கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்//

வந்த வாழ்த்தியதற்கு நன்றி...சின்ன அம்மிணி...

//கோவி.கண்ணன் said...
நல்ல சிறுகதை. இப்போதெலலம் பெண்களை படிப்பில் இருந்து நிறுத்துவது குறைந்துவிட்டது.//

குறைந்து விட்டது என்று கூற இயன்ற நம்மால் அறவே இல்லை என்று கூற முடியவில்லையே அண்ணா...

//☀நான் ஆதவன்☀ said...
நல்ல கதை ராஸா. சிறுகதை தொகுப்பில் வரவேண்டிய முக்கிய கதை. வாழ்த்துகள்.//

நன்றி ஆதவா...உங்களுக்கு பிரியாணி நிச்சயம்.

// கிளியனூர் இஸ்மத் said...
உண்மைதான்...ஆனால் தற்போது சூழல் மாறி வருவதாய்...வயசுக்கு வந்த பெண்பிள்ளைகளே...சொல்றாங்க...அப்படி மாறிச்சுன்னா...கீழைராஜாவோட சேர்ந்து நானும் சந்தோசப்படுவேன்...!//

சீக்கிரமே அந்த நாள் வரவேண்டும் இஸ்மத் பாய்

//மின்னுது மின்னல் said...
நல்ல பதிவு*(பகிர்வு)
//
நன்றி மின்னல்....

// எம்.எம்.அப்துல்லா said...
சமீபத்தில் சகோதரி சுமஜ்லா அவர்கள் மெட்ரிக்கில் 90% மதிப்பெண் எடுத்தும் அவர் தந்தை அவரை மேலும் பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டதாக எழுதி இருந்தார். தற்போது அந்நிலை கிட்டத்தட்ட இல்லை எனலாம்.

:)//

அப்துல்லா அண்ணா நலமா..? இன்னும் கிராமத்து பகுதிகளில் இந்நிலை இருக்கத்தான் செய்கிறது...முன்னர் இருந்தமைக்கு பரவாயில்லை...

//எம்.எம்.அப்துல்லா said...
கண்டிப்பாய் இந்த கதை தொகுப்பில் இடம்பெற வேண்டும்.அழகான கதை.//

நன்றி அண்ணா...அடிக்கடி பதிவர் கூட்டங்களில் பங்கேற்கிறீர்களே..துபாய் பக்கம் எப்ப வரபோறீங்க...

Mãstän said...

கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கு... கண்டிப்பா சீக்கிறமா மாறீடும்.

கதை நல்லாருக்கு.

வாழ்த்துக்கள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை ராசா அண்ணே..
சமூக விழிப்புணர்வுக் கதை அருமை.
இது போல நிறைய கொடுங்கள்
காலம் கண்டிப்பாய் மாறும்
ஓட்டுக்கள் போட்டாச்சு

அபுஅஃப்ஸர் said...

பெண்கல்வி கட்டாயம் என்பது இப்போது கொஞ்சம் தெளிந்துவிட்டது, இருந்தாலும் கிராமத்துப்பக்கம் இன்னும் படிப்பு நிறுத்தப்படுவது குறித்து வருத்தமே

படிப்புதான் பெரியமனுஷி... தெளிவான வார்த்தை

கீழை ராஸா said...

//ஹேமா said...
அருமை அருமை ரஸா,நிறைய நாளுக்கு அப்புறமா எழுதினாலும் நல்ல பதிவு.மனசைத் தொட்டதாய் இருக்கு கதை.என்னதான் வாழ்வியல் மாற்றங்கள் மாறினாலும் சில மாற்றங்கள் மாறாமலே இருக்கு.
மாற்றவேணும்.மாறவேணும்.
வாழ்த்துக்கள்.//
ஹேமா அக்கா, இந்த கதையை உங்களுக்கு எப்படி தெரிவிப்பது என்று இருந்தேன்(உங்க முகவரி என்னிடம் இல்லை) அந்த நொடியே நீங்கள் இந்த பின்னூட்டம் தந்தது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது....

///தங்கராசு நாகேந்திரன் said...
நெகிழ்வான கதை ஆனா இந்த விசயத்துல நம்ம ஊரு கீழக்கரை பரவாயில்ல தாசிம் பீவி காலேஜ் வந்ததும் நிறையப் புள்ளைக படிக்கிறாக.மாட்டுவண்டியிலே பள்ளிக்குப் போனது பத்தி எழுதியிருந்திக எனக்கும் என் பள்ளிப்பருவம் ஞாபகம் வந்துடுச்சு.//

மண்ணின் மைந்தனின் பின்னூட்டம் மன நிறைவைத்தருகிறது...

கீழை ராஸா said...

//Nagangudiyan said...
Nalla sirukathai. Ippo vellam intha karanathukaga school nippatravanga romba romba kuraivu.
Pengal munnera kalvi romba avasiyam enbathai
intha sirukathai solluthu.
Keep it up - Good short story.//

நன்றிங்க...

//ஜெஸிலா said...
கதை அருமை.//

என்னக்கா ஒருவரியிலே முடிச்சிட்டீங்க...

//துபாய் ராஜா said...
அருமையான கதை.

நல்லதொரு கருத்து.

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் தொகுப்பும்,உரையாடல்களும் நன்று.

படங்களும் நல்ல தேர்வு.

பெண்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதர நிலையிலும் உயரவேண்டும் என்பதை சிறுமியின் டாகடர் கனவு மூலம் வெளிப்படுத்தியிருப்பது அழகு.

வாழ்த்துக்கள்.

நிறைய எழுதுங்கள் ராஸா.//

நீங்கள் இன்னொரு நட்புடன் ஜமாலாக உருவாகிவருகிறீர்கள்...எல்லா பதிவர்களையும் ஊக்குவிக்கும் உங்கள் இருவருக்கும் எதாவது விருது தர வேண்டும்...

//நட்புடன் ஜமால் said...
அருமையான நிகழ்வை நெகிழ்வாய் ...

----------------

இப்பல்லாம் படிச்சாத்தான் பெரிய மனுஷி ஆக முடியும் - நச்

----------------

வட்டார வழக்கு சூப்பர்.//

நன்றி நண்பா...

//Mãstän said...
கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கு... கண்டிப்பா சீக்கிறமா மாறீடும்.

கதை நல்லாருக்கு.

வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மஸ்தான்

குடுகுடுப்பை said...

பெரிய படிப்பு படிச்சா , பெரிய வீடு கட்டிக்கொடுக்கனுமோ? நான் சொல்றது உங்களுக்கு மட்டும் புரியும்.:))))

சீதாலட்சுமி said...

கதை என்னை எங்கோ அழைத்துச் சென்றது.
இஸ்லாமியர் வீட்டில் மட்டுமல்ல, அக்காலத்தில் வயசுக்கு வந்துட்டா பள்ளிக்குப் போகக்கூடாது என்பது நாட்டு வழக்கமாய் இருந்தது. பெண்
விடுதலை பாடிய பாரதியின் எட்டயபுரத்திலும் அதே கதைதான். அதாவது
அவன் பிறந்து மாண்டபிறகும். இதே நிலை. நான் எட்டயபுரத்துக்காரி.
அந்த ஊரில் ஊரை எதிர்த்து முதலில் பள்ளிக்குச் சென்றவள். ஊரே பழி பேசியது. என் தந்தை பயப்படவில்லை. என்னைப் பள்ளிக்கு அனுப்பினார். அடுத்தது சுப்புலட்சுமி என்ற பெண் பெரிய மனுஷியானாள். அவளை அவள் பெற்றோர் அனுப்பாத பொழுது அவர்கள் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்து உண்னாவிரதம் இருந்தேன்.
அவளும் பள்ளிக்கு வந்தாள். மறைந்த முன்னால் முதல்வர் திரு.
பக்தவத்சலத்தின் மகள் திருமதி . சரோஜினி வரதப்பன் படிப்பும் பெரிய மனுஷியாகவும் நிறுத்தப்பட்டது. படிக்கும் ஆசை உள்ளே அவர்களுக்கு
நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. வயதானபின் மைசூர் திறந்தவெளி
பல்கலைகழகத்தில் அஞ்சல் வழிக்கல்வி கற்று, அவர்கள் 80 வயதில்
ஆய்வு செய்து முனைவர்பட்டமும் பெற்றார்கள்.
ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பமே கல்வியில் சிறந்து நிற்கும்.
மதம், சாதி, கலாச்சாரம் என்று கூறி பெண்கல்வி பாதிக்கப்படுதல் கூடாது
சிந்திக்கவைக்கும் கதை. பிஞ்சுப் பருவத்தில் நெஞ்சில் முளைத்த பாசம்
அழகாய், நயமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. வட்டாரச்சொற்கள்
கதைக்கு வலுவூட்டுகின்றது. முடிவிலே தாயின் ஏக்கம் வெடிக்கின்றது.
அவள் மகள் படிப்பாள் என்று சொல்லாமல் சொன்ன விதம் கதாசிரியரின்
எழுத்தின் வலிமையைக் காட்டுகின்றது
கீழை ராசா ஓர் உதய சூரியன்
ஆசிரியரின் ஆதங்கத்தில் பெண்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும்.
சீதாம்மா

மாதேவி said...

நல்ல பதிவு.

“இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆக முடியும்” நிட்சயமாய்.

கீழை ராஸா said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
அருமை ராசா அண்ணே..
சமூக விழிப்புணர்வுக் கதை அருமை.
இது போல நிறைய கொடுங்கள்
காலம் கண்டிப்பாய் மாறும்//

கண்டிப்பாக கார்த்திக்...

//ஓட்டுக்கள் போட்டாச்சு//

அது.....

//அபுஅஃப்ஸர் said...
பெண்கல்வி கட்டாயம் என்பது இப்போது கொஞ்சம் தெளிந்துவிட்டது, இருந்தாலும் கிராமத்துப்பக்கம் இன்னும் படிப்பு நிறுத்தப்படுவது குறித்து வருத்தமே

படிப்புதான் பெரியமனுஷி... தெளிவான வார்த்தை//

நன்றி அப்சர்... எப்ப பதிவர் வட்டத்திற்குள் வரபோறீங்க..?


//குடுகுடுப்பை said...
பெரிய படிப்பு படிச்சா , பெரிய வீடு கட்டிக்கொடுக்கனுமோ? நான் சொல்றது உங்களுக்கு மட்டும் புரியும்.:))))//

காலங்கள் மாறும்...புரியுதா..?

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அருமையான சிறுகதை. ஆளமான கருத்துகள் நிறைந்தது. ஒரு ஆட்டோகிராப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. தொடருங்கள் அன்பரே :)

Anonymous said...

Thendral enkira Kamal

The story is very fine. But I would like to say from the angle of Islam.... that Islam is not against education for women. But Islam does not accept Muslim women working along with Mulim Men or other men. A muslim woman can pursue her education and serve as a teacher for girls or lady doctor or wherever she can serve her folk. But it does not accept them working with men. It will lead to immorality in society and lot of corruption. You may be surprised but the world is rapidly changing. There is a report in Gulf News which states more than 50% of the girls working in IT sector in Bangalore have lost their virginity through illicit relationship with fellow men working with him.

எம்.எம்.அப்துல்லா said...

//நன்றி அண்ணா...அடிக்கடி பதிவர் கூட்டங்களில் பங்கேற்கிறீர்களே..துபாய் பக்கம் எப்ப வரபோறீங்க...

//

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை மாதம் ஒருமுறை வருவேன். இப்ப கல்ஃபில் ஸ்கிராப் விலை உயர்வால் பர்ச்சேஸை சிங்கை பக்கம் மாற்றிவிட்டோம். வருவேன் இன்ஷா அல்லாஹ்.

Rifaj Aslam said...

உங்களுடைய கதை அருமை இந்த மொழி வழக்காறு எனக்கு பரித்சயமனதொன்று

கவித்தோழன் said...

சமுதாயத்தில் பெண்கள்
விழிப்பு முதல் உறக்கம் வரை
ஒதுக்கி நிறுத்தப்பட்டு
அடக்கி வைக்கப்பட்டு
இருளில் அடைக்கப்பட்டு
நான்கு சுவருக்குள்
வாழ்ந்த வாழ்விலிருந்து
விடுபட்டுவிட்டார்கள் என
அறைகூவல் போடும்
மனிதர் அறிவதில்லை
இவ்வளர்ந்து கெட்ட உலகிலும்
உங்கள் கதையை போன்று
ஆயிரமாயிரம் ஆயிஷாக்கள்
வாழ்ந்து மடிவதை......
- உங்கள் அன்புத் தம்பி
கவித்தோழன்

கீழை ராஸா said...

//சீதாலட்சுமி said...

மதம், சாதி, கலாச்சாரம் என்று கூறி பெண்கல்வி பாதிக்கப்படுதல் கூடாது
சிந்திக்கவைக்கும் கதை. பிஞ்சுப் பருவத்தில் நெஞ்சில் முளைத்த பாசம்
அழகாய், நயமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. வட்டாரச்சொற்கள்
கதைக்கு வலுவூட்டுகின்றது. முடிவிலே தாயின் ஏக்கம் வெடிக்கின்றது.
அவள் மகள் படிப்பாள் என்று சொல்லாமல் சொன்ன விதம் கதாசிரியரின்
எழுத்தின் வலிமையைக் காட்டுகின்றது
கீழை ராசா ஓர் உதய சூரியன்
ஆசிரியரின் ஆதங்கத்தில் பெண்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும்.
சீதாம்மா//
அருமையான கருத்துக்கள்...என் எழுத்து வேகத்தை எண்ணை விட்டு வளர்த்தவர்களில் உங்கள் பங்கும் அதிகம்..தங்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்தும்...

//மாதேவி said...
நல்ல பதிவு.

“இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆக முடியும்” நிட்சயமாய்.//

வருகைக்கும் கருத்திற்கும் ந்ன்றி மாதேவி...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமையான சிறுகதை. ஆளமான கருத்துகள் நிறைந்தது. ஒரு ஆட்டோகிராப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. தொடருங்கள் அன்பரே :)//

நன்றி செந்தில்...

//Thendral enkira Kamal

The story is very fine.//

வருகைக்கும் கருத்திற்கும் ந்ன்றி கமால்
//எம்.எம்.அப்துல்லா said...
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை மாதம் ஒருமுறை வருவேன். இப்ப கல்ஃபில் ஸ்கிராப் விலை உயர்வால் பர்ச்சேஸை சிங்கை பக்கம் மாற்றிவிட்டோம். வருவேன் இன்ஷா அல்லாஹ்.//

வரும் போது சொல்லுங்கள் பிரியாணியுடன் அண்ணாச்சி தலைமையில் ஒரு பதிவர் மாநாடு ஏற்பாடு செஞ்சிடலாம்....

பார்சா குமார‌ன் said...

இந்த‌ கொடுமையைத் த‌விற்க‌ எங்கள் ஊரில் க‌டந்த‌ இரு ஆண்டுக‌ளாக‌ க‌ல்வி விழிப்புண‌ர்வு
பொதுக்கூட்ட‌மும்,மாண‌வ‌,மாண‌விகளுக்கு ப‌ரிச‌ளிப்பு விழாவும் நடத்தி வ‌ருகிறோம்.ஆண்ட‌வ‌ன் அருளால் வ‌ய‌து வந்த‌ பெண் பிள்ளைக‌ள் ப‌லர் த‌ங்க‌ள் படிப்பைத் தொடர்கின்ற‌னர்.வ‌ய‌து வ‌ந்த‌ பிள்ளைகளின் படிப்பு இனியும் தொட‌ர‌ எல்லாம் வல்ல‌ இறைவ‌னை பிரார்த்திப்போம்.....

ஹேமா said...

ராஸா,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.

வந்தியத்தேவன் said...

இந்தக் கதை இந்தவார இருக்கிறம் இதழில் வெளியாகியிருக்கின்றது.

நிலாமதி said...

இப்படி எத்தனை பெண்களின் கண்ணீர்க் கதை ...நண்பா காலம் மாறிவிட்டது இப்போது இப்படி இல்லைத்தானே ...எத்தனை மூடத்தனம். .

Anonymous said...

இந்தப்பதிவுக்கு உங்களுக்கு ஒரு குட்டி விருது.

http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html

வாங்கிக்கோங்க

கீழை ராஸா said...

நன்றி
வந்திய தேவன்
பார்சா குமாரன்
ஹேமா
நிலாமதி
சின்ன அம்மினி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அருமையான கதை. சிறப்பு வார்த்தைகளுக்கு பொருள் போட்டது மிகவும் அருமை. அவ்வார்த்தைகளுக்கு பொருள் தெரியாவிட்டாலும் கதை புரிகிறது. நல்ல நடை.

வாழ்த்துகள், நண்பரே!

மலர்வனம் said...

Congratulations for your success.

- Musthafa

Oomaiyan said...

அருமை அருமை.. நான் மைண்ட்ல வச்சுக்கிறேன், கலக்குறீங்க ராஸா

Related Posts with Thumbnails