துபாயா,அபிதாபியா,சார்ஜாவா..? அமீரக பதிவர்களின் இஃப்தார் ஓர் அலசல்...

இப்தார் முடிந்து மூன்று நாட்களாகியும் பதிவு வெளிவரவில்லை என்பதனால் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி பதிவு "கந்தசாமி" படம் போல் கும்மப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் தான் ஆரம்பிக்கிறேன்.
இப்தார் ஆரம்பிச்சதிலிருந்து முடிந்த வரை நண்பர்கள் பக்கம் பக்கமாகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்...இதிலே நாம என்னத்தை சொல்லபோறோம் என்று தோன்றினாலும், நண்பர்களின் சந்திப்பில் அவர்கள் அன்பில் திக்குமுக்காடி மகிழ்ந்த, நெகிழ்ந்த தருணங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் இந்நிகழ்வை ஒரு திரைக்கதை போல் சொன்னால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இந்தப்பதிவு...( ஏன் இந்த கொலைவெறி..? என்று கும்ம ரெடியாவது தெரிகிறது...எதா இருந்தாலும் படிச்சிட்டு கும்முங்க...கந்தசாமி படம் போல போஸ்டர் பார்த்துட்டு கும்முன வேலையெல்லாம் இங்கே வேணா ஆமா)

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, 2009 ஆம் வருடம்...
நேரம் மாலை :- 5-00
கூகுளில் உலகை வலம் வந்த கேமரா...துபாய்க்குள் புகுந்து சார்ஜாவின் சாலைகளை உயர்த்திலிருந்து கடந்து அண்ணாச்சி வசிப்பிடத்தை சூம் செய்கிறது...அது மிகுந்த வாகன நெரிசல் நிறைந்த ஒரு பகுதி...அடுக்கிவைத்த பெட்டிகளைப் போன்ற அப்பார்ட்மெண்ட்கள்...பல பக்கங்களிலிருந்து புறப்பட்ட வாகனங்கள் அண்ணாச்சி வீட்டை நோக்கி சீறிப்பாய்கின்றன...


நேரம் மாலை :- 5-01
இடம் :- அண்ணாச்சி வீடு
நபர்கள் : அண்ணாச்சி, குசும்பன், சென்ஷி

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?
அண்ணாச்சி:- வேணாம்...வேணாம், அழுதுடுவேன்....

சென்ஷி: அட குசும்பன் அப்படி என்ன கேட்டு விட்டானென்று இப்படி பீல் கொடுக்குறீங்க..? பிரியாணி எப்ப வரும்னு கேட்டா பதில் சொல்ல வேண்டியது தானே...?

அண்ணாச்சி: சென்ஷி உனக்கு தெரியாது...நான் இப்தாருன்னு மெயில் போட்ட அன்னைக்கே வந்து வீட்டில் டேரா அடிச்சிக்கிட்டு...இதே கேள்வியை ரெண்டு நாளா மூச்சு திணற திணற கேட்டு சாவடிக்கிறான்...

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?

சென்ஷி: ஆத்தாடி...அவனா நீ..?நேரம் மாலை :- 5-05

இடம் :- கீழை ராஸாவின் கார்
நபர்கள் : கீழை ராஸா, கிளியனூர் இஸ்மத், சிம்ம பாரதி, கவிஞர் நாசர்
கீழை ராஸா: என்ன இஸ்மத் பாய் உங்களை மூணு மணிக்கு கிளம்பச்சொன்னேன். இப்படி லேட்டா வந்தா எப்படி..?

இஸ்மத் பாய்: ஏன் ராஸா சொல்ல மாட்டே...பேமுலியை ஊருக்கு அனுப்பி விட்டு நாளொரு விழா எடுத்துக்கிட்டு இருக்கே...நானு காலையிலே 11 மணியிலிருந்து இப்தார் வர பெர்மிசன் கேட்டு மல்லுக்கட்டிட்டேன் ..ம்ம்ஹூம் அசையலையே...இப்பதான் கையிலே கால்லே விழுந்து உத்தரவு வாங்கிக்கிட்டு வர்றேன்...நீ பேசுவே ராஸா பேசுவே...


கீழை ராஸா: (மனதுக்குள்) நல்ல வேளை இஸ்மத் பாய்க்கு நாம கதை தெரியலை... இந்த இப்தார் வர, ரெண்டு நாளா போன்லே பெர்மிசன் கேட்டு போராடுற விசயம்இவருக்கு எங்கே தெரியப் போகுது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பீல் பண்ணுவதை உற்றுப்பார்த்த வாஹித்,

வாஹித்: என்ன ராஸா...அது தானே...
ராஸா : அதே தான்.... why blood...?

வாஹித் : Same Blood....( அவ்வ்வ்வ்)

(மீண்டும் பலவகையான வாகனங்கள் பல பக்கங்களிலிருந்து ஒரே திசையை நோக்கி வருவதை பலகோணங்களில், பலவித ஹாரன் ஒலி சத்தத்துடன் காட்டப்படுகிறது...நேரம் மாலை :- 5-20
இடம் :- சார்ஜா அண்ணாச்சி வீட்டு முன்பு...

கீழைராஸாவின் கார் அண்ணாச்சி வீட்டு அருகாமையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு வந்தடைகிறது...பிண்ணனி இசையுடன் சத்தமில்லாமல் போனில் பேசிக்கொள்ள...

வண்டியிலிருந்து பிரியாணி, நோன்புக்கஞ்சி, சமோசா, மற்றும் இதரப்பொருட்கள் அண்ணாச்சி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது...


கஞ்சி கலயத்தை குசும்பனும், சிம்ம பாரதியும் கஷ்டப்பட்டு தூக்கி செல்ல ...
பிரியாணிச் சட்டியை நான் ஆதவனும், கீழை ராஸாவும் நகற்றிச்செல்ல ..
இதர பொருட்களை , சென்ஷி, அண்ணாச்சி, கோபி, இஸ்மத் பாய், ராஜா காமால் ஆகியோர் எடுத்துச் செல்ல அவர்கள் வருசையாகச் செல்வதை டாப் ஆங்கிலில் காட்டப்பட்டு பிண்ணனி இசையில்...

( சுப்பிரமணியபுரம் "மதுரை குலுங்க குலுங்க ...இந்த மண்ணு மணக்கிற மல்லிகைப்பூ மனசை" என்ற மெட்டில் கீழ்கண்ட பாடல் ஒலிக்கிறது...

"சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...
துபாய் மணக்க மணக்க ஒரு இப்தாரு வைக்கப் போறோம்...

துபாய் மண்ணு மணக்கிற நோன்புக்கஞ்சி
சார்ஜா வீதி எடுத்துச் சொல்லும்
இங்கு வந்து குவிகின்ற பதிவர் வட்டம்
நல் பேரை எடுத்துச் செல்லும்..."

லிப்டில் ஏறி வலது பக்கம் திரும்பி கேமரா முன்னோக்கிச்செல்ல... அண்ணாச்சி வீடு அமர்க்களமாய் வரவேற்கிறது....


நேரம் மாலை :- 5-30
இடம்: அண்ணாச்சி வீடு

அதன் பின் செந்தில்வேலன், கார்த்திக்கேயன் வருகை...
பழங்களுடன் சகோதரி ஜெஸீலா குடும்பத்துடன் வருகை...
ஆசாத் அண்ணன், சுபைர், மற்றும் தினேஷ் வருகை....இப்படி எல்லோரும் குழுமி... அந்த ஹால் ஒரு கல்யாண வீடு போல் கலை கட்டுகிறது...அண்ணாச்சி மலர்ந்த முகத்துடன் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார்...


கிச்சனை பெண்களுக்கு விட்டுக்கொடுக்காமல் இஸ்மத் பாயும், சிம்ம பாரதியும் ஆக்ரமித்திருந்தனர்..மற்ற நண்பர்கள் பம்பரமாய் சுழன்று ஹாலில் பதார்த்தங்களைப் பரப்புகின்றனர்...
ஒரு சில நிமிடங்களில் அந்த ஹால் பந்தி போல் மாற எல்லோரும் அவர்வர் இடத்தைப்பிடித்து அமர்கின்றனர்...
படகு பதிவர் குடும்பத்துடன் வருகை...
ஃபாஸ்ட் பௌலர் குடுமத்துடன் வருகை..
நண்பன் ஷாஜி, மற்றும் அண்ணன் லியோ வருகை
அப்போது சுல்தான் பாயும் வருகை தர அண்ணாச்சியும் சுல்தான் பாயும் உணவு தரச்சோதனையில் இறங்குகின்றனர்..நேரம் மாலை :- 6-20
சுல்தான் பாய்: ஆசிப் உணவு வகைகள் சற்று அதிகமா இருக்குதோன்னு தோணுது...

அண்ணாச்சி: சுல்தான் பாய் நம்ம பசங்களை குறைச்சி எடை போட்டுடாதீங்க...அங்கே பாருங்க கலையரசன் முன்னாலே எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிற தட்டை...மொத்தமா ஆறு பேரு சாப்பிட வேண்டியதை அவன் ஒருத்தனே கைப்பற்றி இருக்கான்...குசும்பனைப் பாருங்க 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் விசில் கொடுக்க காத்திருப்பது போல காத்திருக்கான்...எனக்கு பயமெல்லாம் எங்கே இதுவெல்லாம் அவங்க பசிக்கு ஈடு கொடுக்காமே போயிடுமோ என்கிறது தான்...
சுல்தான் பாயின் கருணைப்பார்வை....
கலையரசனின் கழுகுப்பார்வை....
சுல்தான் பாய்: (மனதுக்குள்) நாம தான் தப்பா கணிச்சிட்டோமோ..??


நேரம் மாலை :- 6-25
ரகுவரன் போல் ஒருவர் வருகிறார்..."அட நம்ம பினாத்தல் சுரேஸ்"...என்று சென்ஷி ஓடிவந்து மரியாதை செய்கிறார்....மூத்த பதிவர்கள் அவரைச்சூழ 'பெரிய பழம் தின்று கொட்டை போட்ட பதிவர் போல' என்று மற்றவர்கள் ஆர்வத்துடன் பார்க்க, அவர் தான் "கவிமடதளபதி" என்பதை அறிந்து புதுப்பதிவர்கள் டரியலாகிறார்கள்....நேரம் மாலை :- 6-30
அண்ணாச்சி டிவி ஐப் போடுகிறார்..சன் டிவி ஓடப்போகிறதென்று குசும்பன் ஆவலுடன் டிவி முன் அமர, துபாய் சேனலுக்கு டியூன் பண்ணுகிறார் அண்ணாச்சி... அதில் ஏதோ ஒரு சேனலில் பாங்கு சொல்ல, குசும்பனும், கலையரசனும் பாங்கு சொல்லியாச்சி, சொல்லியாச்சு என்றபடி குசும்பன் சமோசாவை வாய்க்குள் அழுத்த, கலையரசன் தர்பூசணியை திணிக்க...ஏனையோர் இது சரியான பாங்கு இல்லை என்று அமைதிகாக்க இருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை...
நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...( எங்கே தான் இந்த நடிப்பு கலையை கற்றியோ என்று குசும்பன்...சுபைரை பார்க்க, சுபைர் இன்னும் குழந்தை போல் முகத்தை வைத்த படி தயாராகிறார்...

நேரம் மாலை :- 6-36

எங்கும் சலசலச் சத்தங்கள், அண்ணாச்சியின் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தில் கூட்டம் கப்சிப்...

நேரம் மாலை :- 6-40

எல்லோரும் அவரவருக்கு விருப்பமான உணவை கையில் எடுத்துக் கொள்கின்றனர்...

நேரம் மாலை :- 6-42

டி.வியில் இப்தார் நேரத்தை உணர்த்த பீரங்கி சத்தம் டமார் என்று ஒலிக்க...
ஸ்டார்ட்.... ( 10 நிமிடங்கள் சென்ஸார்)( திரைப்பட வரலாற்றில், திரைக்கதையில் சென்ஸாருக்கு இடம் ஒதுக்கியவன் நானாகத்தான் இருப்பேன்)

நேரம் மாலை :- 6-52
வடையுடன் வரவேண்டிய சுந்தர்...பழவகையுடன் வருகிறார்..

நேரம் மாலை :- 6-55
மக்ரீப் தொழுகை
நேரம் மாலை :- 7-00

அண்ணாச்சி நடுநிலை வகுக்க பதிவர்வட்டம் உருவாகிறது...அண்ணாச்சி மூலம் ஒவ்வருவராய் அறிமுகப்படலம்...( டாப் ஆங்கிலும் க்ளோசப்மாக அறிமுகப்படலம் நிறைவேற, ப்ராது விசாரனை ஆரம்பம்...செந்தில் வேலன் மீது கொண்டு வரப்பட்ட ப்ராதுக்கும் பதிலளிக்கும் விதமாக,
செந்தில்வேலன்: பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட கந்த சாமி படத்தை கும்மியது தவறு..அது மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்கிறது.
பினாத்தல் சுரேஷ்:நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு தானே சொல்ல முடியும்...
செந்தில்வேலன்: அட்லீஸ் அதை உடனே பண்ணாதீங்க அட்லீஸ் ஒருவாரம் விட்டாவது ஆரம்பிங்க...இது போல செய்றதை உடனே நிறுத்தச்சொல்லுங்க...

கீழைராஸா: மூணு நாளா கண்ணு முழிச்சி, ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி இருக்கேன்னு ஆபிசுலே, வீட்டுலே , நண்பர்க கிட்டே எல்லாம் திட்டு வாங்கி..கஷ்டப்பட்டு பதிவெழுதுனா...ஜார்ஜ் புஸ், சதாம் ஹுசைன்னு பல பேர்லே வந்து கும்மிட்டு போறாங்களே அதை நிறுத்தச் சொல்லுங்க ... நாங்க நிறுத்துறோம்....
குசும்பன்: (மனதுக்குள்) ஐயய்யோ நம்ம தலையிலே கையை வைக்கிறாரே...?
( சில நிமிடங்கள் மௌனப்படமாக சண்டை தொடர்கிறது...)
சில ப்ராதுகளுக்குப் பின்...
சகபதிவர் செந்திநாதனுக்கு அமீரக பதிவர்களின் பங்களிப்பு மற்றும் ஒற்றுமை குறித்து அண்ணாச்சி ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்..
அடுத்து...
கவிஞர் நாசரின் ( ராஜா கமால்) "பூத்து மகிழும் பூக்கள்" கவிதைத் தொகுப்பை வெளியிட, அதன்பிரதிகளை, அண்ணாச்சி, நண்பன் ஷாஜி, சுல்தான் பாய், சகோதரி ஜெஸீலா ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்...நேரம் மாலை :- 8-30
பிரியாணி படலம்...சில நொடிகளில் ஹால் தயார் செய்யப்படுகிறது...பிரியாணி சிக்கனுடன் அடுத்த சென்ஸார்...
நேரம் இரவு :- 9-00
அரட்டை தொடர்கிறது...ஒரு சிலர் விடை பெறும் நேரம்...உறவின் உன்னதம் பிரிவில் தான் தெரியும் என்பார்கள்...கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் விடைபெறும் வேளை எல்லோர் முகத்திலும் கவலை...
இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் விடை பெற்று விடுவர்..ஆனால் இந்த சிலமணி நேர திருவிழா எல்லோர் மனதிலும் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகி விடப்போவதென்னவோ மறுக்க முடியாத உண்மை....
-கீழை ராஸா பாலையிலிருந்து....

41 comments:

அகமது சுபைர் said...

//நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...//

எப்படி நோட் பண்ணியிருக்காய்ங்க :-)

கோபிநாத் said...

\\சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...

துபாய் மணக்க மணக்க ஒரு இப்தாரு வைக்கப் போறோம்...


துபாய் மண்ணு மணக்கிற நோன்புக்கஞ்சி
சார்ஜா வீதி எடுத்துச் சொல்லும்
இங்கு வந்து குவிகின்ற பதிவர் வட்டம்
நல் பேரை எடுத்துச் செல்லும்..."\\

தல

அட்டகாசம் பண்ணியிருக்கிங்க...அங்கையும் பதிவிலையும் ;)))

பாட்டு செம hot தல ;))

புகைப்படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.

கோபிநாத் said...

அய்யோ...வடை போச்சே ;))

மின்னுது மின்னல் said...

கலக்கல் போஸ்ட் :)

போட்டோஸ் நல்லா இருக்கு

மின்னுது மின்னல் said...

கிச்சனை பெண்களுக்கு விட்டுக்கொடுக்காமல் இஸ்மத் பாயும், சிம்ம பாரதியும் ஆக்ரமித்திருந்தனர்.
///


பழக்கதோசத்தில் கிச்சனுக்கு ஆட்டோமெட்டிக்கா கால் போயிடுதாம்

கலையரசன் said...

கொலவெறி போட்டோவ போட்டு, நசிக்கிபுட்டீங்களே தலைவா!
ம்.. எனக்கும் குசும்பருக்கும், அடி கொஞ்சம் ஓவருதான்...
இருந்தாலும், வலிக்கலியே.. வலிக்கலியே..

வித்தியாசமான பார்வையில் இஃப்தார் பற்றி பதிவு.. அட்டகாசம்!
லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டா எழுதிட்டீங்க!
நீங்க ஏன் திரைப்படம் எடுக்ககூடாது? அருமையா எழுதுறீங்களே...

கலையரசன் said...

//புகைப்படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.//

யோவ் கோபி... என்ன நக்கலா?

கலையரசன் said...

மீ த 7ரை...

நட்புடன் ஜமால் said...

இப்தார் ஆரம்பிச்சதிலிருந்து முடிந்த வரை நண்பர்கள் பக்கம் பக்கமாகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்]]


நீங்க உணவு பட்டையை கிளப்பிக்கொண்டிருந்ததாக நம்பதகுந்த வட்டாரித்திலிருந்து செய்தி வந்ததே

:)

நட்புடன் ஜமால் said...

கூகுளில் உலகை வலம் வந்த கேமரா...]]

எப்படிண்ணே இது

நோன்புலையும் இப்படி சிந்திக்கிறீக

நட்புடன் ஜமால் said...

ஏன் ராஸா சொல்ல மாட்டே...பேமுலியை ஊருக்கு அனுப்பி விட்டு நாளொரு விழா எடுத்துக்கிட்டு இருக்கே]]

யாரு யாரு ...

நட்புடன் ஜமால் said...

இந்த இப்தார் வர, ரெண்டு நாளா போன்லே பெர்மிசன் கேட்டு போராடுற விசயம்இவருக்கு எங்கே தெரியப் போகுது.]]

அவ் அவ் அவ்

இப்படி திங்கவா ...

நட்புடன் ஜமால் said...

வண்டியிலிருந்து பிரியாணி, நோன்புக்கஞ்சி, சமோசா, மற்றும் இதரப்பொருட்கள் அண்ணாச்சி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது...]]


சீரா ...

நட்புடன் ஜமால் said...

சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...]]

நீங்க நடந்தீங்களோ ...

குசும்பன் said...

ரொம்ப அருமையா இருக்கு ராசா, எனக்கு ரொம்ப பிடிச்சதே கலை போட்டோதான், ஆடுரா ராமா ஆடுரா ராமா நினைவுதான் வருகிறது.... கலைக்கு கொல குத்து விழுந்ததில் மிக்க மகிழ்ச்சி:)

சுபைர் என்னாமா ஆக்ட் குடுக்கிறார்பா!

குசும்பன் said...

அப்பாலிக்கா என்னை ஒரு போட்டோவிலாவது அழகா எடுத்துடனும் என்று நீங்க எடுத்த பகீரத முயற்சி தோல்வியில் முடிஞ்சதை பத்தி சொல்லவே இல்ல:))


போட்டோவை எல்லாம் அனுப்புங்க செல்லம்!

SIMMA said...

சூப்பரு......... இன்னொரு இப்தார்.. எப்போ... ஏன்னா அத வீடியோ படமாவே ஓட்டலாம் போல இருக்கே

கிளியனூர் இஸ்மத் said...

தல பேர காப்பாத்திடுறீங்களே....

அடா...மூனுநாளா....முண்டிக்கிட்டே இருந்தது இதுக்குத்தானா...? இன்னைக்கு நல்லாத் தூங்குவீங்க...சொன்னாமாதிரியே....குசும்பன் கலையரசன் ஜ+பைர் இவங்களை நல்லா கலாய்ச்சிட்டீங்க....கலாய்கப்போறத யாருகிட்டேயும் சொல்லலையே....

மின்னுது மின்னல் said...

ஒரு வேலையும் செய்யாமல் போட்டோ மட்டுமே புடிச்சிகிட்டு இருந்திங்களாமே..
அப்படியா..?

ஹேமா said...

ராஸா,கொஞ்சம் பொறாமையோடயும் சொல்றேன்...கொடுத்து வச்சவங நீங்கள் எல்லாம்.ஒரே கலகலப்பு.சந்தோஷமாயிருக்கு.

ஆயில்யன் said...

பசிக்குது :(சூப்பரா என் ஜாய் பண்ணியிருக்கீங்க ! :)

RAD MADHAV said...

வெள்ள ஜிப்பா போட்டுக்கிட்டு ஒருத்தர் சுத்தி சுத்தி வரராருங்கலே... அவரு யாருங்க....????

RAD MADHAV said...

வெள்ள ஜிப்பா போட்டுக்கிட்டு ஒருத்தர் சுத்தி சுத்தி வரராருங்கலே... அவரு யாருங்க....????

கீழை ராஸா said...

அகமது சுபைர் said...
//நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...//

எப்படி நோட் பண்ணியிருக்காய்ங்க :-)
இன்னும் நோட்பண்ணுனது நிறைய இருக்கு...வேணுமா...?

எம்.எம்.அப்துல்லா said...

கலக்கல் கவர்-அப்

//"சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...

துபாய் மணக்க மணக்க ஒரு இப்தாரு வைக்கப் போறோம்...


துபாய் மண்ணு மணக்கிற நோன்புக்கஞ்சி
சார்ஜா வீதி எடுத்துச் சொல்லும்
இங்கு வந்து குவிகின்ற பதிவர் வட்டம்
நல் பேரை எடுத்துச் செல்லும்..."

//

பாட்டு மீட்டர்குள்ள அப்படியே உக்காருதுண்ணே :)

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
ஒன்னு துபாய்ல வேலை வாங்கி குடுங்க. இல்லன்னா இங்க நம்ம ஜமால் இருக்காருல்லா, அவருகிட்ட சொல்லி இதுமாதிரி விருந்து வைக்க சொல்லுங்க.

ஜெஸிலா said...

கலக்கல் பதிவு. இது பதிவுலக வரலாற்றில் இடம்பெற வேண்டிய பதிவு :-)

துபாய் ராஜா said...

அருமை.அருமை. நகைச்'சுவையான' எழுத்து நடையில் விருந்தின் ருசி.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கலக்கல் பதிவு. நயமாக நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்துள்ளீர்கள்.

கிரி said...

//.கந்தசாமி படம் போல போஸ்டர் பார்த்துட்டு கும்முன வேலையெல்லாம் இங்கே வேணா ஆமா//

:-))))

கரவைக்குரல் said...

ம்ம் நேரக்குறிப்புகளோடு அருமையாக அவ்வபோது நகைச்சுவைகளுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்
அருமை

சென்ஷி said...

ஹய்யோ! தலைவரே.. அசத்தல் பதிவு.

போட்டோவுல கலையை அப்படியே எப்படி ஏத்துறதுன்னு குழம்பிக்கிட்டு இருந்தேன். சான்ஸே இல்லை.

கலை புகழ் உலகம் பூரா பரவ வழி வகை செஞ்சுட்டீங்க..

இன்னும் உங்க சிரிப்பு சத்தம் காதுக்குள்ள கேட்டுக்கிட்டு இருக்குது :)

சென்ஷி said...

//நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...//

சூப்பர்!

கீழை ராஸா said...

கோபிநாத் said...
//தல

அட்டகாசம் பண்ணியிருக்கிங்க...அங்கையும் பதிவிலையும் ;)))

பாட்டு செம hot தல ;))

புகைப்படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.//

கோபி உங்களை மைண்ட்லே வச்சிக்கறேன்...அப்புறமா யூஸ் பண்ணறேன்

கீழை ராஸா said...

// கலையரசன் said...
கொலவெறி போட்டோவ போட்டு, நசிக்கிபுட்டீங்களே தலைவா!
ம்.. எனக்கும் குசும்பருக்கும், அடி கொஞ்சம் ஓவருதான்...
இருந்தாலும், வலிக்கலியே.. வலிக்கலியே..//
எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நீங்க "ரொம்ப நல்லவரா"???
( அசத்தல் கமெண்ட் கலை)

கீழை ராஸா said...

ஏம்ப ஜமால்...என் மேலே நடத்துற கொலைவெறி தாக்குதல் நிறுத்திட்டு உருப்படியா சிங்கையில் ஒரு இஃப்தார் வைக்கிற வழியை பாரு...சிங்கை நண்பர்கள் எல்லாம் என்னை வட்டம் கட்டிக்கினு நிக்கிறாக...

கீழை ராஸா said...

//குசும்பன் said...
ரொம்ப அருமையா இருக்கு ராசா, எனக்கு ரொம்ப பிடிச்சதே கலை போட்டோதான், ஆடுரா ராமா ஆடுரா ராமா நினைவுதான் வருகிறது.... கலைக்கு கொல குத்து விழுந்ததில் மிக்க மகிழ்ச்சி:)

சுபைர் என்னாமா ஆக்ட் குடுக்கிறார்பா!//

நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் அடுத்தவனுக்கு ஒரு கண்ணு போச்சேன்னு சந்தோசப்படுற உங்க மனநிலை கடுமையான பாராட்டுதலுக்குரியதே....

கீழை ராஸா said...

//SIMMA said...
சூப்பரு......... இன்னொரு இப்தார்.. எப்போ... ஏன்னா அத வீடியோ படமாவே ஓட்டலாம் போல இருக்கே//

அண்ணாச்சி கிட்டே தான் கேட்கனும்...

//கிளியனூர் இஸ்மத் said...
தல பேர காப்பாத்திடுறீங்களே....//
எல்லாம் உங்க பயிற்சி தான் அண்ணா..

//மின்னுது மின்னல் said...
ஒரு வேலையும் செய்யாமல் போட்டோ மட்டுமே புடிச்சிகிட்டு இருந்திங்களாமே..
அப்படியா..?//

எப்படிதான் லீக் ஆகுதோ?

//ஹேமா said...
ராஸா,கொஞ்சம் பொறாமையோடயும் சொல்றேன்...கொடுத்து வச்சவங நீங்கள் எல்லாம்.ஒரே கலகலப்பு.சந்தோஷமாயிருக்கு.//

கவலைப்படாதீங்க அக்கா துபாய் பக்கம் ஒரு விசிட் வாங்க...அடுத்த விழாவிற்கு ஏற்பாடு பண்ணிடலாம்...

//ஆயில்யன் said...
பசிக்குது :(//

ஜமால் கழுத்தைப் பிடிங்க...

//RAD MADHAV said...
வெள்ள ஜிப்பா போட்டுக்கிட்டு ஒருத்தர் சுத்தி சுத்தி வரராருங்கலே... அவரு யாருங்க....????//

நாட்டமை...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

அற்புதமான பதிவு கீழைராசா பாய்
உங்க மனசு போலவே பதிவும் அற்புதம்.

நல்ல நகைச்சுவை எழுத்து
ஓட்டு போட்டாச்சு.

Anonymous said...

Vuravukalai pirinthu valum dubai thamilarkal noonpu thiruka tamilnadukku pooiyudu vanthamathiri manasukku santhoosama irrunthathu....
With love
Trichy Syed, Dubai.

Anonymous said...

Vuravukalai pirinthu valum dubai thamilarkal noonpu thiruka tamilnadukku pooiyudu vanthamathiri manasukku santhoosama irrunthathu....
With love
Trichy Syed, Dubai.

Related Posts with Thumbnails