“பாட்டி நானும் பதிவராயிட்டேன்”
நான் வலைப்பூ ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தை என் எழுத்து வேகத்திற்கு எண்ணெய் ஊற்றி எனர்ஜி தந்த சீதாப்பாட்டிக்கு அமெரிக்காவிற்கு அழைத்து பகிர்ந்து கொண்ட தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன்.
அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று….
நான் எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பது என் நினைவில் இல்லை ஆனால் என் பள்ளி பருவத்தில் நான் எழுதாத எழுத்திற்கு கிடைத்த விமர்சனங்கள்…என்னுள் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகியிருக்கிறது.
அப்போது நான் நடுநிலைப்பள்ளி படித்துக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கிறேன்.அது ஒரு கோ-எஜுகேசன் பள்ளி…அந்த வயதில் ஆண்,பெண் என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாததனால் எனக்கு தோழர்களை விட தோழிகள் அதிகம்.அதிலும் “அவள்” எனக்கு நெருங்கிய தோழி…பள்ளிக்கூட பாதையில் என்னுடன் பயணப்படுபவள், நாள் முழுதும் என் கூடவே இருப்பாள்…அந்த வயதில் என்னென்ன கதை பேசினோம் என்று இன்று என் நினைவுகளிலிருந்து மீட்டெடுக்க இயல வில்லை…என்றாளும் இன்றும் அவளை எண்ணினால் என் நினைவுகளில் எட்டிபார்ப்பது…தெத்துப்பல் தெரிய அவள் சிரிப்பு…புத்தகத்திற்கிடையே அவள் வளர்த்த மயில் இறகு...அவ்வப்போது அவள் கடித்து தந்த கடலை மிட்டாய்…
இடைவேளை நேரங்களில் நாங்கள் சேர்ந்தே விளையாடுவோம்…வழக்கமான விளையாட்டுக்களை விட நாங்களே கண்டுபிடித்த (??) சில விளையாட்டுக்கள் அப்போது எங்களுக்குள் பிரபலம்… அதில் ஒன்று டாக்டர் விளையாட்டு.தீர்ந்து போன விக்ஸ் டப்பாவினால் செய்யப்பட்ட ஸ்டெதஸ்கோப் கொண்டு நோயாளியாய் நடிக்கும் நண்பர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் நான்…
மிட்டாய் மாத்திரைகளை கடையில் வாங்கி புட்டியுனுள் இட்டு நான் எழுதித்தரும் மருந்துச்சீட்டுக்கு மருந்து கொடுக்கும் மருந்து கடை நடத்துபவளாக “ அவள்”.
எங்கள் விளையாட்டு எங்கள் சீனியர்களுக்குப் பிடிக்க வில்லை…அவர்களைச் சொல்லி குற்றமில்லை. மனிதன் வளர வளரத்தான் வக்கிரப்புத்தியும் சேர்ந்து வளர்கிறது.அவர்கள் வளர்ந்தவர்கள்… நான் எழுதிய மருந்துச்சீட்டை அந்தப்பெண்ணிற்கு நான் எழுதிய காதல்(???)கடிதம் என்றார்கள். டேய் இந்த வயசில் லவ் லட்டர் எழுதுறியா? என்றார்கள்…எனக்கு அர்த்தம் புரியவில்லை, அதற்கான வயதும் இல்லை…அதன் பின் அவளுடன் விளையாடக்கூடாது என்று கண்டிக்கப்பட்டதாய் ஞாபகம்…இருந்தாலும் நாங்கள் அந்த பள்ளி படித்த வரை “அவள்” தான் என் நெருங்கிய தோழி…
அதன் பின் வயதுக்கேற்ப ஒரளவு உலக அறிவு வளர… அடிக்கடி காதல் கவிதைகள் எழுதிய பழக்கம் இருக்கிறது.எனக்காக அல்ல என் நண்பர்களுக்காக…
நண்பர்களின் காதலிகளுக்காக நண்பர்கள் நிலையிலிருந்து நான் எழுதிய காதல் கவிதைகள் கிளிக் ஆக …நான் ராசிக்கார கவிஞன் ஆனேன்…உன்னைப்போல வருமா என்று நண்பர்கள் உசுப்பேற்ற …மருந்துக்கு கூட காதல் இல்லாமல் விரட்டி விரட்டி காதல் கடிதம் எழுதினாலும், கல்யாணத்திற்கு முன்பு வரை எனக்காக ஒரு காதல் கடிதம் கூட நான் எழுதியதில்லை… ( நம்புங்க…)
என் எழுத்துக்கள் அனைத்தும் மற்றவர்கள் பெயரிலேயே வெளி வர எழுத்துக்கள் அனைத்தும் முகம் அறியாமலேயே இல்லாமலேயே முகவரி தொலைத்தது.
சென்னையில் சிலவருடம் ஆணி புடுங்கிய காலங்கள்…
சீதாப்பாட்டி ( முத்தமிழ் சீதாம்மா) பழக்கமான தருணம் அது.
அந்த தமிழ் பாட்டியுடன் இலக்கியம் பேசிய தினங்கள்…வாழ்வில் மறக்க இயலா கணங்கள்…
சீதாப்பாட்டிக்கு நான் எழுதிய மடல்கள் தான் என் எழுத்திற்கான பயிற்சிப்பட்டறை…
அதன் பின் துபாய்…
காவிரிமைந்தனின் அறிமுகம்…என்னுள் சிதைந்திருந்த திறன்களை செப்பனிட்ட சிற்பி அவர். அதன் பின் அவரால் அறிமுகப்படுத்திய வானலை வளர்தமிழ், தமிழ்தேர் என்று என் எழுத்தை அங்கீகரிக்க ஒரு கூட்டம்.
அந்த நேரத்தில் தான் பதிவர் உலகம் பற்றி பாட்டி மூலம் அறிந்தேன்…அவரின் தூண்டுதலின் பெயரிலேயே தான் பதிவர் உலகில் புகுந்தேன். முதல் பதிவு எழுதிவிட்டு ஒரு பெருங்கூட்டம் வந்து படிக்கப்போகிறது என்று காத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்…என்னைத்தவிர வேறு யாரும் படித்த மாதிரி தெரியலை…ஒரு கமெண்ட் ஆவது வராதா என்று வந்து பார்த்தா வந்த ஒன்று, இரண்டு பேரும் பெயர் வெளியிட விரும்பாத வாசகர்கள்…
சரி நம்ம பதிவை நமது நட்பு வட்டத்திற்குள் மின் அஞ்சல் மூலம் பரப்புவோம் என்று, முதலில் எங்கள் Architect Group ற்கு அனுப்பி வைத்தேன். வெறும் Auto Cad, Site Work என்று வெறுமையாக கழிப்பவர்களுக்கு நம் எழுத்துக்கள் சற்று மாறுதலாக இருக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் . இரண்டு நாள் கழிச்சி Comment Moderation page பார்த்தால் ஒரு Comment வந்திருந்தது… நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சி யாரோ ஒருத்தன் Comment போட்டிருக்காண்டா என்று ஆர்வத்துடன் Open பண்ணினா…என் ஜூனியர் ஒருத்தன் அனுப்பியிருந்தான் உள்ளே, Line, Circle, Copy, Erase ன்னு அனுப்பியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை… உடனே அவனிடம் போன் பண்ணி கேட்டால் நீங்க தானே Post a Comment ன்னு போட்டிருந்தீங்க… அதனாலே தான் Auto Cad Comment எழுதி அனுப்பினேன்..நீங்க ஒன்று தான் கேட்டீங்க ஆனா நான் நாலு அனுப்பியிருக்கேன் என்று அவன் ஆர்வத்தில் பேசிக்கொண்டே போக, நான் டரியல் ஆகிப்போனேன்.
சரி இது தான் தோல்வியடைந்து விட்டது…மீண்டும் பதிவர்களுக்கே …மின் அஞ்சலில் அனுப்பினால் என்ன..? என்று எண்ணிய வேலையிலேயே சில மூத்த பதிவர்கள் கனவில் வந்து மிரட்டினார்கள்…ஆகா இவங்க கோபப்பட்டு “மின் அஞ்சலில் தொல்லை தரும் இளம் பதிவர்கள்” என்று மானத்தை வாங்கிப்புட்டா…? வேணாய்யா வேணாம்…தமிழ் மணம், தமிழிஷ் போன்றதிலேயே போதும் என்று ஒரு மனதாக முயல…அதிலும் சூடான இடுக்கையில் இடம் பெற நம் பதிவிற்கு தகுதியில்லையா என்று நம் உள்மனமே நம்மை வம்பிற்கிழுக்க…ரொம்ப மெனக்கெட்டு உக்காந்து யோசிச்சி ஒரு பதிவு போட்டா… அதுவும் இழுத்து ஊத்திக்கும்…
எந்த அடிப்படையில் பதிவுகள் இங்கு அங்கீகரிக்க படுகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் நட்பு வட்டத்தின் அடிப்படையில் தான்…பின்னூட்டங்கள்…ஹிட் எல்லாமே பதிவின் தரத்தைப்பொருத்து மட்டுமே வருகிறதா என்றால்…கண்டிப்பாக இல்லை…இங்கு படிப்பவர்களை விட படைப்பாளிகள் அதிகம்…இதில் யாரையும் குறை சொல்ல இயலாது. இருந்தாலும் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே…ஆம் எதிர்பார்ப்பை குறைத்து எழுதுவதை தொடர்வது மட்டுமே பதிவுலகில் வேரூன்ற ஒரே வழி…
“பாட்டி நானும் பதிவராயிட்டேன்…”
அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று…
34 comments:
//கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே…ஆம் எதிர்பார்ப்பை குறைத்து எழுதுவதை தொடர்வது மட்டுமே பதிவுலகில் வேரூன்ற ஒரே வழி…
//
மிகச் சரியாக சொன்னிங்க, நல்ல கட்டுரைகளை எப்போதாவது எழுதினாலும் பலரும் பேசப்படும் பதிவர்களாக இருக்க முடியும். ஆனால் அப்படி எல்லோராலும் நேரம் ஒதுக்கி தகவல் திரட்டி எழுத முடியாது. அது முடியாவிட்டால் சுவையான தகவல்களை துணுக்குகளை தொடர்ந்து எழுதவேண்டும்.
நன்றி கோவியாரே...
சொல்ல வரிங்க சொல்லல..
அன்பு ராஜா,
உன் பதிவைக் கண்டு நெகிழ்ந்துபோனேன்.
வலைப்பூவிற்குள் உன்னை சங்கமம் ஆகச் சொன்னதற்குத்தான்
எவ்வளவு தயங்கினாய்? இப்பொழுது பார். அனுபவங்கள் கசப்பக இருந்தாலும் அதுவும் ருசிக்கப் பழகி விடுவாய்.
கீழ்ப்பாகம் வீட்டில் தனியாய்க் குடியிருந்தாலும் தனிமையில் இல்லை.
எனக்குத்தான். எத்தனை பேரப்பிள்ளைகள் !. நீ தலை மகன்.
நமக்குள் வயதின் இடைவெளி அதிகம். ஆனால் உணர்வில், பழக்கத்தில்
பல வித்தியாசங்கள். நான் முதியவளாய், நீ சிறியவனாய் சில நேரம்,
நீ முதியவனாய் நான் சிறியவளாய், ஏன் குழந்தைய்யய்ச் சில நேரம்,
அறிவுசார்ந்த நண்பர்களாய் பல நேரம்.
இவைகள் என் கூற்றல்ல. நீ எழுதி அனுப்பபாடாத கடித்தைல் நீ
குறிப்பிட்டிருந்ததுதான். அந்தக் கடிதத்தை என்னிடம் நேரில் கொடுத்தாய்.
பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். அப்பொழுதே சொன்னேன். உன் எழுத்தோட்டம் அருமையாக இருக்கின்றது என்று.
இப்பொழுது பார். இந்தப் பதிவைப் படிக்கவும் சிரித்துக் கொண்டேன்
உன் சிந்தனையை வடிவமைப்பதில் வென்றுவிட்டாய். எழிலுடன்
தோற்றமளிக்கின்றது.
உன் ஆதங்கம் தெரிகின்றது. வலைப்பூக்களின் நிலையையும் உணர்ந்திருக்கின்றாய்.
எழுத்துலகு எப்படி இருக்கின்றது தெரியுமா? உனக்கும் தெரியும். இருந்தாலும் நானும் கூற விரும்புகின்றேஎன்.
பத்திரிகை உலகில் சுயமாக வலம் வருவது கடினம். உன் படைப்புகளின்
உருவமே மாறிவிடும். ஒருவன் பிரபலமாக வேண்டுமானால், பிரபலமான ஒன்றினை இழித்துப், பழித்து எழுதவேண்டும். உடனே எழும் கணடனக்
குரல்களின் வீச்சிலே நீ உயரே போய்விடுவாய். முரண்பாடுகணின் காலம்
எழுது, நிறைய எழுது. உன் நண்பர்களுக்குத் தெரிவி. அப்படியே உன் ஆற்றலும் வளரும். உன் நண்பர் வட்டத்தையும் தாண்டி நீ சென்று விடுவாய். உன் எழுத்து அவ்வளவு சிறப்பாக இருக்கின்றது. பின்னால் எழுதலாம் என்று ஒத்திப் போடாதே. நான் அப்படி நினைத்துக் காலத்
தை விரயமாக்கிவிட்டென். அதுமட்டுமல்ல, இப்பொழுது நீ உணரும் எழுச்சியின் வீரியமும் குன்றிவிடும்.
எழுதிக் கொண்டே இரு.
உன் அன்பான பாட்டி
வீட்டுக்கு வீடு வாசப்படி
unmaiyai appadiye eluthiteenga pola:-))
//ஆ.ஞானசேகரன் said...
சொல்ல வரிங்க சொல்லல..//
உண்மை தான்...ஆனால் நான் சொல்லியிருக்கிறேன் சற்று ஊடுருவிப்பாருங்கள் உண்மை புரியும்...
Anna, padikravanga athana perum comment panrathu illa...athil nanum oruvan.
athinala yarum unga blogspot padikalanu artham illa.
அங்கீகாரம் எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்....தவறில்லை..தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
//சமூக அக்கரை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்//
அக்கறைன்னு இருக்க வேண்டாமா???ப்ளீஸ் திருத்திடுங்க...
//சமூக அக்கரை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்//
அக்கறைன்னு இருக்க வேண்டாமா???ப்ளீஸ் திருத்திடுங்க...
உங்கள் "அக்கறை"க்கு மிக்க நன்றி
கீழை ராஸா
பதிவுலகம் சவால் நிறைந்தது மட்டுமல்ல சிக்கல்கள் நிறைந்ததும். நிறையப் பின்னுட்டமும் நிறைய பார்வையாளர்களும் வேண்டுமென்றால் நிறைய மொய வைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாப் பதிவுகளிலும் தவறமல் போய் 'மீ த ஃப்ர்ஸ்ட்டோ 'ரிப்பீட்டேயோ போடப் பழக வேண்டும். ஜிடாக்கில் பதிவரக்ளிடம் ஹலோ சொல்லி நட்பை வளர்ப்பது போல பாவனையாவது செய்து கொள்ள வேண்டும். இப்படி நிறைய 'ஹோம் வொர்க்' செய்தால் உங்கள் பதிவுக்கு 'மரியாதை' கிடைக்கலாம். அல்லது தொடர்ந்து நன்றாக எழுதுவதன் மூலமாக பதிவர்களிடம் உண்மையான அங்கீகரம் பெறலாம். இதில் முதலாவது எளிதான சுலபமனா வழியென்றாலும் இரண்டாவதுதான் சிறப்பான வழி!
பாதையைத் தேர்ந்தெடுகக் வேண்டியது உங்கள் பொறுப்பு!
சவால்களை ஜெயிக்க வாழ்த்துகள்!!
"சென்னையில் சிலவருடம் ஆணி புடுங்கிய காலங்கள்"
Raza...i liked these lines...shows that u r maturing as a writer...enjoyed the full post...
அருமையா எழுதுறீங்க
கவிதைகள் இன்னும் எழுதவும்.
//நசரேயன் said...
வீட்டுக்கு வீடு வாசப்படி//
????
//சீதாலட்சுமி said...
எழுது, நிறைய எழுது. உன் நண்பர்களுக்குத் தெரிவி. அப்படியே உன் ஆற்றலும் வளரும். உன் நண்பர் வட்டத்தையும் தாண்டி நீ சென்று விடுவாய். உன் எழுத்து அவ்வளவு சிறப்பாக இருக்கின்றது. பின்னால் எழுதலாம் என்று ஒத்திப் போடாதே. நான் அப்படி நினைத்துக் காலத்
தை விரயமாக்கிவிட்டென். அதுமட்டுமல்ல, இப்பொழுது நீ உணரும் எழுச்சியின் வீரியமும் குன்றிவிடும்.
எழுதிக் கொண்டே இரு.//
நன்றி பாட்டி...உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி..
//இயற்கை said...
unmaiyai appadiye eluthiteenga pola:-))// வருகைக்கு நன்றி இயற்கை.
நன்றி அன்புடன் அருணா...
நன்றி அண்ணாச்சி...உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி...
//நண்பர்களின் காதலிகளுக்காக நண்பர்கள் நிலையிலிருந்து நான் எழுதிய காதல் கவிதைகள் கிளிக் ஆக …நான் ராசிக்கார கவிஞன் ஆனேன்…உன்னைப்போல வருமா என்று நண்பர்கள் உசுப்பேற்ற …
இதுவும் கூட நம் எழுத்துக்களுக்கு கிடைக்கும் ஒரு வகை அங்கீகாரம் தான்...
உங்கள் பதிவு படிப்பதற்கு சுவாரசியாமாக இருக்கிறது...எழுத்து நடை அழகு...
//மருந்துக்கு கூட காதல் இல்லாமல் விரட்டி விரட்டி காதல் கடிதம் எழுதினாலும், கல்யாணத்திற்கு முன்பு வரை எனக்காக ஒரு காதல் கடிதம் கூட நான் எழுதியதில்லை… ( நம்புங்க…)//
உண்மைய சொல்றீங்க நம்பிட்டோம்...இடைவெளி அதிகம் விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் கீழை ராஸா...
THANKS ASHOK...
வாழ்துக்கள். ரொம்ப கஷ்டப்பட்டது உங்க வார்த்தைக்ளில் தெரிகிறது..
number 1 பதிவராக வாழ்துக்கள்.
//நட்புடன் ஜமால் said...
அருமையா எழுதுறீங்க
கவிதைகள் இன்னும் எழுதவும்.//
என்ன ஜமால் ரொம்ப நல்ல பிள்ளை ஆயிட்டீங்க...உங்க வழக்கமான பின்னூட்ட பாணி மிஸ் ஆகுதே
என்ன ஜமால் ரொம்ப நல்ல பிள்ளை ஆயிட்டீங்க...உங்க வழக்கமான பின்னூட்ட பாணி மிஸ் ஆகுதே\\
நல்லவனாக விடமாட்டியளே!
(நீங்கள் யார் என்று எனக்கு தெரிந்து விட்டதால் ஒரு மரியாதை தான்)
//புதியவன் said...
இதுவும் கூட நம் எழுத்துக்களுக்கு கிடைக்கும் ஒரு வகை அங்கீகாரம் தான்...
உங்கள் பதிவு படிப்பதற்கு சுவாரசியாமாக இருக்கிறது...எழுத்து நடை அழகு...//
வருகைக்கு நன்றி நண்பரே...
உங்கள் கருத்துக்கும் நன்றிங்க
//Rajeswari said...
வாழ்துக்கள். ரொம்ப கஷ்டப்பட்டது உங்க வார்த்தைக்ளில் தெரிகிறது..
number 1 பதிவராக வாழ்துக்கள்.//
ஐயோ...இதெல்லாம் நம்ம லெவலுக்கு ரொம்ப ஜாஸ்திங்க...
நெம்ப சூப்பரா இருக்குங்கோ தம்பி......!!!
இப்புடித்தான் எம்பட வால்க்கையிலுமும்.......
.
.
.
.
.
.
ஒன்ஸ் அப்பான டைம்........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
லாங்..... லாங் ..... எகோ.........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒண்ணுமே நடகுலீங்கோ ......!! என்ன கொடும பாருங்கோ......!!!!!!
SUPER ANNA
//லவ்டேல் மேடி said...
நெம்ப சூப்பரா இருக்குங்கோ தம்பி......!!!
//
நன்றிங்கண்ணா
//லவ்டேல் மேடி said...
இப்புடித்தான் எம்பட வால்க்கையிலுமும்.......//
நடக்கட்டும்...நடக்கட்டும்
அருமையா எழுதுறீங்க
கவிதைகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Post a Comment