உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லா தேர்தல் சீட்டு விவகாரம்…பிரபலப்பதிவர் அபிஅப்பா ஆதங்கம்…நிஜமாவே நல்லவன் கோவிக்கண்ணன் தொடர்பு அம்பலம்…

நான் சமீபத்தில் எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியலில் பதிவர்கள்…உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லாவிற்கு சீட்டு உறுதி…அண்ணாச்சி தலைமையில் ரகசியக்கூட்டம்... என்ற பதிவிற்கு அண்ணன் அபி அப்பா எழுதிய //அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம். ஆனா சொல்லீட்டென் எனக்கு மாயவரம் சீட்டுக்கொடுக்கலைன்னாஇன் பிளாக் முன்னாடி டீ குடிப்பேன்:-))) // என்ற ஒரு பின்னூட்டத்தின் தாக்கமே இந்த பதிவிற்கு காரணம்.

நான் பதிவர் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்து ஒரு வருடத்திற்கு மேலானாலும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த வருடம் முழுதும் எழுத இயலா நிலை...இப்போதும் திரும்ப ஆரம்பித்தவுடன் துபாய் பற்றிய இரண்டு சீரீயஸ் பதிவுகள்...ரொம்ப சீரியஸா போனா “ஆக்ஸன் பதிவராகி” விடுவோம் என்பதால் இடையே இப்படி ஒர் நகைச்சுவை பதிவுவாக மேற்கண்ட பதிவை எழுதினாலும்… நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் அரட்டை அரங்கத்தையும் அன்றைய முக்கிய பதிவர்களையும் கோர்த்து அன்று நான் எழுதிய (டவுசர் கிழித்த) ஒரு பதிவு அன்றே நல்ல பாராட்டை வாங்கித்தந்தது…

இந்த விசயம் தெரியாமல் அபிஅப்பா என்னிடம் டவுசர் கிழித்த சம்பவத்தை கேட்க எனக்கு மருதமலை படத்தில் வடிவேலுவிடம் “நான் உங்களை அடிசிருக்கேன் ஏட்டையா” என்ற ஜோக் ஞாபகம் வர இனி அபி அப்பாவிற்கும் எனக்கும் நடந்த உரையாடலை நீங்களே கேளுங்க…

நன்றி:அபி அப்பா

பதிவை படித்து விட்டு அபி அப்பா..

அபி அப்பா: அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம்.யாரு ராஸா நீ

நான் : என்ன அபி அப்பா என்னத்தெரியலையா… நான் உங்களை காமெடி பண்ணி பதிவு போட்டிருக்கேனே…

அபி அப்பா: (ஆச்சரியத்துடன்) காமெடிப் பதிவு போட்டிருக்கியா ….எப்பமா…?

நான் : நல்லாத்திங்க் பண்ணிப்பாருங்க ஞாபகத்திற்கு வரும்…

அபி அப்பா: அந்த மூணு பதிவர்கள் சேர்ந்துக்கிட்டு “Me the first” Me the second” “Me the third “ன்னு கலாய்ப்பாங்களே அந்த குருப்பா…

நான் : இல்லேங்க…

அபி அப்பா: ஆ அந்த அஞ்சி பதிவர்கள் சேர்ந்துக்கிட்டு ஒரு நாள் புல்லா பின்னூட்டம் போட்டே கொன்னாங்களே அந்த குருப்பா

நான் : இல்லேங்க…

அபி அப்பா: அதுவும் இல்லையா…ஹூம் ஒண்ணு ரெண்டு பேரு நம்மலைப்பத்தி பதிவு போட்டா ஞாபகம் இருக்கும்….நம்மைச் சுத்தி தான் பதிவர் வட்டமே கும்மி அடிக்குதே…(ஞாபகம் வந்தவராய்) டேய் அன்னிக்கி அண்ணாச்சி, தமிழச்சி, குசும்பனோட என்னையும் கும்மி எடுத்தியே அவனா நீ…

நான் : ஆமா அபிஅப்பா…கரிக்கிட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே…

அபி அப்பா: அதை எப்படிப்பா மறக்க முடியும் ஆன ஒண்ணுப்பா அன்னிக்கி நீ அடிச்சா காமெடிக்கு அப்பறம் எவன் எழுதினாலும் தாங்கக்கூடிய ஒரு சக்தி வந்துடுச்சியா இந்த உடம்புலே…

நான் : அதை எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு பதிவர் வட்டத்திலே இருக்கிறதே ஒரு பெரிய சாதனை தான் அபி அப்பா…

அபி அப்பா: அதனாலே தானடா பதிவர் வட்டமே "என்னை ரொம்ப நல்லவன்னு" சொல்றீங்க… ஆமா நீ எப்படி ராஸா இருக்கே…?

நான் : எங்கே அபி அப்பா நான் அப்படியே தான் இருக்கேன்.. ஆனா அன்னிக்கு உங்களைப்பத்தி காமெடி பதிவு போட்ட கோவிகண்ணன், நிஜமாவே நல்லவன், எல்லாம் பெரிய பதிவர் ஆயிட்டாங்க…

அபி அப்பா: நான் சென்ஸ்…எப்படிடா பெரிய பதிவர் ஆனாங்க எப்படி ஆனாங்க…எல்லாரும் என்னைப்பத்தி எழுதுனதுக்கு அப்புறம் தான் ஆனாங்க… அந்த கோவிக்கண்ணன் கதையை சொல்றேன் கேளு…அவர் ஒரு நாளைக்கு பத்து பதிவு எழுதுவார் ஆனா அப்ப எல்லாம் பெரிய பதிவர் ஆகலே…ஒரு நாளு நம்ம பதிவு பக்கம் வந்தாரு ஒரு பின்னூட்டம் தாப்ப எழுத சொன்னேன்…என்ன மூடிலே இருந்தாரோ என்னை கிழிகிழின்னு கிழிச்சி ஒரு பதிவு போட்டுடாரு…நான் அப்படியே சாக் ஆயிட்டேன்…அன்னையிலே இருந்து தான் கோவியாரு கோவியாருன்னு? ஒரே நாளுலே பேமஸ் ஆயிட்டாரு, அந்த நிஜமாவே நல்லவன் ஒரு நாளைக்கு இருபது பின்னூட்டம் போடுவாரு எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டா என்னனு தாய்யா கேட்டேன்…”அபி அப்பாவாலே பதிவர் வட்டத்திலிருந்து பிரிகிறேன்” பொலிச்சுன்னு ஒரு பதிவை போட்டுட்டாரு…அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரை பெரிதாக்கி இன்னிக்கி அவரு நிஜமாவே நல்லவரு ஆயிட்டாரு…
ஆனா ரெண்டு பேரும் மரியாதை தெரிஞ்சவங்கடா… அந்த கோவிக்கண்ணன் நான் என்ன மொக்கை பதிவெழுதினாலும் ஒரு பின்னூட்டம் விடாமா போக மாட்டாரு…அந்த நிஜமாவே நல்லவன் ஒரு படி மேலே ஒரு பதிவுக்கு பத்து பின்னூட்டம் விடாமே போக மாட்டாரு…இது தெரியாமா என்கிட்டேயே வந்து பெரிய பதிவராயிட்டாரு, பெரிய பதிவராயிட்டாருன்னு பீச்சிக்கிட்டு இருக்கே…சரி அத விடு உன் பதிவெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு…

நான்: (நொந்த படி)என்ன அபி அப்பா என்ன தான் மூச்சி திணற திணற எழுதினாலும் ஒரு நாளைக்கு நாளு பேரு வந்து எட்டி பார்க்கிறாங்க…மாசத்திற்கு ஒரு பின்னோட்டம்…கம்ப்யூட்டர் தெரிஞ்சாவது நட்புடன் ஜமால் மாதிரி எதாவது கிளாஸ் எடுக்கலாம்…நாமா படிச்ச படிப்புக்கு டீ கடையிலே கிலாஸ் எடுக்கத்தான் லாயக்கு…அதனாலே நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்…நானும் ஒரு நாளைக்கு நுறு ,முன்னூறு ஹிட் வாங்கி…பெரிய பதிவராகனுன்னு

அபி அப்பா: ஆகனும்டா ஆகனும்

நான்: அதுனாலே நானு உங்களைப் பத்தி எழுதி பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.ஏன்னா நீங்க ரொம்ப ராசிக்காரார் ஆயிட்டே…

அபி அப்பா : இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது… ஹய்யோ ஹய்யோ…

( இது போன்ற பதிவுகள் வெளியாக அபி அப்பா போன்றோரின் தாராள மனப்பான்மைக்கு முதல் நன்றியினைக்கூறி தொடர்ந்து ஆதரித்து வருவோர் அளிக்கும் ஆதரவே இன்னும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் என்பதால் உங்கள் தொடர் ஆதரவை பின்னூட்டங்கள் மூலமும், வாக்களிப்பின் மூலமும் தாராளமாக தரும்படி கோரிக்கை வைத்து… விரைவில் மீண்டும் கலக்கலுடன்…கீழைராஸா)


அண்ணாச்சி, தமிழச்சி, அபி அப்பா, குசும்பனை கும்மிய முந்தய பதிவு….

44 comments:

கீழை ராஸா said...

கடந்த ஒருவாரமாக எதாவது ஒரு பதிவுலேயாவது Me the First போட்டுவிடலாம் என்று முயற்சிக்கிறேன் ஆனா முடிய வில்லை..அதனால நானே எனக்கு போட்டுக்கறேன்.Me the First

நட்புடன் ஜமால் said...

செல்லாது

செல்லாது

நட்புடன் ஜமால் said...

\\ஆனா அன்னிக்கு உங்களைப்பத்தி காமெடி பதிவு போட்ட கோவிகண்ணன், நிஜமாவே நல்லவன், எல்லாம் பெரிய பதிவர் ஆயிட்டாங்க…\\

அட இப்படி ஒரு மேட்டர்கீதா!

சரி சரி நாம யார ...

இருங்க யோசிக்கிறேன்(டேய் உனக்கு அதெல்லாம் தெரியுமா - யாருப்பா அது ...)

ஹேமா said...

அரசியல் ஊழல் தெரிஞ்ச நல்ல ஒரு அரசியல்வாதி நீங்கதான் ராஸா.

நட்புடன் ஜமால் said...

\\கம்ப்யூட்டர் தெரிஞ்சாவது நட்புடன் ஜமால் மாதிரி எதாவது கிளாஸ் எடுக்கலாம்\\

அண்ணே கம்ப்யூட்டர் தெரியாமலே இப்படி டரியள் பன்றீக ...

அது எப்படி அண்ணே தட்டச்சுறீங்க, ஒரு குத்து மதிப்பாவா ...

சாருக்கே-C-யா

கீழை ராஸா said...

//நட்புடன் ஜமால் said...
செல்லாது

செல்லாது
//
இந்த ஒரு ஓட்டும் செல்லாதா..?

கீழை ராஸா said...

//நட்புடன் ஜமால் said...
செல்லாது

செல்லாது
//
இந்த ஒரு ஓட்டும் செல்லாதா..?

என்ன கொடுமை சார் இது...

கீழை ராஸா said...

ஹேமா said...

அரசியல் ஊழல் தெரிஞ்ச நல்ல ஒரு அரசியல்வாதி நீங்கதான் ராஸா.

வாங்க ஹேமா இதுலே எதாவது உள்குத்து இருக்கா?

எம்.எம்.அப்துல்லா said...

கீழை ராஸா said...
கடந்த ஒருவாரமாக எதாவது ஒரு பதிவுலேயாவது Me the First போட்டுவிடலாம் என்று முயற்சிக்கிறேன் ஆனா முடிய வில்லை..அதனால நானே எனக்கு போட்டுக்கறேன்.Me the First

//

என்னாதிது???சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு. ஹையோ...ஹையோ.. :))

எம்.எம்.அப்துல்லா said...

அபிஅப்பாவ வம்புழுத்துதான் நானும் ரவுடி ஆனேன். அதுக்கு லிங்க் குடுக்கலாம்னு பார்த்தா பழைய வலைப்பூ ஹேக் ஆயிருச்சு. ஆள் வச்சு அவரே அதை செஞ்சாலும் செஞ்சுருப்பாரு.

:)))

நிஜமா நல்லவன் said...

அடப்பாவி மக்கா...என்னதிது?????

நிஜமா நல்லவன் said...

எனக்கு ஒண்ணுமே புரியலை!

நிஜமா நல்லவன் said...

நான் ப்ளாக் ஆரம்பிச்ச புதிதில் உங்க அரட்டை அரங்க பதிவு படிச்சி சிரிப்பா சிரிச்சி இருக்கேன்...அவரா நீங்க????

நிஜமா நல்லவன் said...

ஆனாலும் பெரிய பெரிய பதிவருங்களை பத்தி எழுதி இருக்கிற இந்த பதிவில் என்னோட பேரு ஏன் வந்துச்சுன்னு தான் காரணம் புரியாம விழிக்கிறேன்...:(

நிஜமா நல்லவன் said...

நீங்க யாரோ...யவரோ....நல்லா இருங்கப்பு...:)

நிஜமா நல்லவன் said...

ஆனாலும் என்னோட விடை பெறுகிறேன் பதிவை யாரும் இன்னும் மறக்கலை போல...என்ன கொடுமை சார் இது???

நிஜமா நல்லவன் said...

/Your comment has been saved and will be visible after blog owner approval./


சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு....இப்படி எல்லாம் இருந்தா நான் இனிமே இந்த பக்கம் வர மாட்டேன் ராஸா...:)

Anonymous said...

TEST

கீழை ராஸா said...

வாங்க அப்துல்லா..

கீழை ராஸா said...

நிஜமாவே நல்லவன் ...கமெண்ட் மழை பொழிகிறதிலே நீங்க நிஜமாத்தான் நல்லவரு போங்க

கீழை ராஸா said...

/Your comment has been saved and will be visible after blog owner approval./


சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு....இப்படி எல்லாம் இருந்தா நான் இனிமே இந்த பக்கம் வர மாட்டேன் ராஸா...:)//


சரிங்க கேட்டை ஓபன் பண்ணியாச்சி வந்து குமுறுங்க

RAJA said...

நல்லாயிருக்கு...தொடர்ந்து எழுதுங்க

கீழை ராஸா said...

//எம்.எம்.அப்துல்லா said...
அபிஅப்பாவ வம்புழுத்துதான் நானும் ரவுடி ஆனேன். அதுக்கு லிங்க் குடுக்கலாம்னு பார்த்தா பழைய வலைப்பூ ஹேக் ஆயிருச்சு. ஆள் வச்சு அவரே அதை செஞ்சாலும் செஞ்சுருப்பாரு.

:)))//

ஆமாங்க...முடிந்தா அனுப்புங்க...

குசும்பன் said...

அபி அப்பாவை பதிவில் கும்மினா பதிவுலகில் பேமஸ் ஆகலாம், நிஜத்தில் கும்மினால் முதல் அமைச்சர் ஆகலாம்!

குசும்பன் said...

அப்பா டா கஜினி முகமது மாதிரி திரும்ப திரும்ப படையெடுத்து பின்னூட்டம் போட்டாச்சு!

கீழை ராஸா said...

//குசும்பன் said...என்னால் கமெண்ட் போட முடியவில்லை!
நேவிகேட் என்று கேட்குது, எஸ் அல்லது நோ எது கொடுத்தாலும் பிளாங் பேஜ் தான் வருது!

ரொம்ப கஷ்டமாக இருக்கு! பின்னூட்டம் போட//

//குசும்பன் said...
அப்பா டா கஜினி முகமது மாதிரி திரும்ப திரும்ப படையெடுத்து பின்னூட்டம் போட்டாச்சு!
//

மிக்க நன்றி நண்பா...

பழமைபேசி said...

எங்க வலைஞர் தளபதி, நசரேயன் சார்பா, நான் மறுமொழியுறேன். இஃகிஃகி!!

நட்புடன் ஜமால் said...

குசும்பு

இரசிக்கும்படியா!

மதிபாலா said...

ஆஹா , ஆஹா , ஆஹா , அம்புட்டு நல்லவராய்யா நீங்க?

மதிபாலா said...

ஆமாம் , நிஜமா நல்லவன் மாதிரி பின்னூட்ட மழை பொழிய ஏதாச்சிம் ஸ்பெஷல் படிப்பு படிக்கணுமா.

மதிபாலா said...

ஆமாம் , அப்படியே பின்னூட்ட பி.எஸ்.சி படிச்சாலும் எந்த யுனிவர்சிடில இருந்து டிகிரி கொடுப்பாங்க?

மதிபாலா said...

அப்படியே பின்னூட்ட பி.எஸ்.சி முடிச்சி அப்பாலிக்கா பி.ஹெச்.டி முடிச்சா டாக்டர் பட்டம் எந்தப்பிரிவில கொடுப்பாங்க???

மதிபாலா said...

உங்க பதிவு சூப்பர்னே , நீங்களும் அபி அப்பாவும் சந்திச்ச சீன் மட்டும்தான் நேக்கு புரிஞ்சது. மத்ததெல்லாம் வெளங்கல.

மருதமல வெடிவேலுவையும் , துளுக்காணத்தையும் கண்ணுக்கு மின்னாடி கொண்டு வந்தீட்டீங்க போங்க.....!!!!!

நல்லாயிருங்க சாமி!

கீழை ராஸா said...

மதிபாலா...இன்னிக்கு உங்க கும்மிக்கு நான் தான் கிடைச்சேனா...?

எது எப்படியோ நீங்களெல்லாம் ஒரு விசயத்தை கமிட் பண்ணிட்டா நீங்க சொல்றதை நீங்களே கேட்காத ரகம்னு நினைக்கிறேன்..ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...

gulf-tamilan said...

me the 35??? :)))

கோவி.கண்ணன் said...

:)

நல்லா இருக்கு...இருந்தாலும் அபி அப்பாவை இப்படி சீக்கு கோழியாக்கி படம் புடிச்சு வச்சிருக்கதைப் பார்த்தால் மனசெல்லாம் வலிக்குது...டாஸ்மாக் பக்கம் அழைக்குது
:)))))))))

கீழை ராஸா said...

//கோவி.கண்ணன் said...
நல்லா இருக்கு...இருந்தாலும் அபி அப்பாவை இப்படி சீக்கு கோழியாக்கி படம் புடிச்சு வச்சிருக்கதைப் பார்த்தால் மனசெல்லாம் வலிக்குது...டாஸ்மாக் பக்கம் அழைக்குது
:)))))))))//

கோவியாரே உமது கருத்தை வாபஸ் வாங்குமையா...நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது அபி அப்பா தான்...
உடல் - சிறு வயது அபி அப்பா
தலை - இப்போதுல்ல அபிஅப்பா

நான் பண்ணியது எல்லாம் இரண்டையும் இணைத்தது தான்...

இரண்டு போட்டோவின் உபயமும் அபிஅப்பா தான்...

(கவுண்டமணி பாணியில்)
அது தெரியாமே ரொம்ப கேவலமா பேசி...ஊஊஊஊ...மனசு எனக்கு வலிக்குதய்யா..

கீழை ராஸா said...

நிஜமாவே நல்லவன், மதிபாலா...உங்க கிட்டே இருந்து இன்னும்,இன்னும் எதிர்பார்க்கிறேன்...

கீழை ராஸா said...

gulf-tamilan said...
me the 35??? :)))

ஹய்யோ ஹய்யோ

Anonymous said...

abi appaa paavamga

வால்பையன் said...

நல்ல காமெடி தலைவா!

இதே மாதிரி எழுதி கலக்குங்க!

வால்பையன் said...

கவிதையெல்லாம் எழுதி உஅடம்ப கெடுத்துகாதிங்க!

கீழை ராஸா said...

//வால்பையன் said...
நல்ல காமெடி தலைவா!

இதே மாதிரி எழுதி கலக்குங்க!//

கலக்கிடுவோம்...

கீழை ராஸா said...

//ல்பையன் said...
கவிதையெல்லாம் எழுதி உஅடம்ப கெடுத்துகாதிங்க!//

டரியல் ஆகாதீங்க...இனி குறைச்சிக்கலாம்

Related Posts with Thumbnails