அரசியலில் பதிவர்கள்…உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லாவிற்கு சீட்டு உறுதி…அண்ணாச்சி தலைமையில் ரகசியக்கூட்டம்...

என் இனிய வலைப்பூவாசிகளே…

இது தேர்தல் நேரம் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது, மூன்றாவது அணி,நாலாவது அணி என்று தொகுதிகளைவிட கூட்டணிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகிறது. எல்லாத்துறையினரும் அரசியலில் போட்டிபோட்டு அரசியலில் குதிக்கும் போது பதிவர்களாகிய நாமும் அதில் குதித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் பலன் தான் இந்த பதிவு…நம் பதிவர்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ இந்த பதிவுக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் நண்பன் கீழைராஸா….தமிழ்மண அலுவலகம் அன்று திருவிழா போல் காணப்பட்டது… எல்லாப் பதிவர்களும் ஒன்று கூடினால் சொல்லவா வேண்டும் …அது பதிவர்கள் அரசியலில் குதிப்பதற்கான ரகசியக்கூட்டம் (!!!) என்றாலும் ரகசியமாக எல்லோரும் தன் பங்கிற்கு பதிவு போட்டு விட்டு வந்ததால் அது ஒரு பொதுக்கூட்டம் போல் காட்சியளித்தது…எல்லா நாட்டிலிருந்தும் பதிவர்கள் வந்து குழுமியதால் கட்டுப்படுத்துவது சற்று கடினமாகவே இருந்தது…கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்க அண்ணாச்சி தலைமையேற்க அவர் சகாக்கள் சீட்டை தக்க வைத்துக் கொண்டனர்.
அண்ணாச்சி: என்னங்கடே அண்ணாச்சி எல்லோரும் வந்தாச்சாடே…

நட்புடன் ஜமால்: அண்ணாச்சி Me the first

அண்ணாச்சி: ஆரம்பிச்சியாடே உன் வேலையை….

அனானி: அண்ணாச்சி Me the first

ஏழெட்டு பேர் சேர்ந்து : Me the first

குசும்பன்: ஆகா கிளப்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க…பதிவுலே தான் இப்படின்ன இங்கேயுமா…

அண்ணாச்சி: நிறுத்துங்கடே யாராவது “Me the first” இருந்துட்டு போங்கடே என்னை பேச விடுங்கடே

( கூட்டத்தில் சலசலப்பு ஓய்கிறது )

அண்ணாச்சி வடிவேலு பாணியில் கண்ணை மூடிக்கொண்டு…தனக்கு தானே” அப்பா எங்கே மதிக்காமே போயிடுவாங்களோன்னு பயந்துட்டேன்…என்ன இருந்தாலும் பதிவர் உலகத்துலே உனக்குன்னு ஒரு மரியாதை இருக்குடே…”காலரை தூக்கி விட்டபடி பெருமூச்சி விடுகிறார்…

அபி அப்பா: அண்ணாச்சி “ அது “ தானே நினைச்சீங்க….

குசும்பன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணாச்சி: மனதுக்குள் ( பாவி மக்கா மேலேயும் கீழேயும் பாக்குதுங்க எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…ஹூம்ம்

டிபிசிடி: அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!

அண்ணாச்சி: சரி சரி விசயத்திற்கு வாங்கடே…நாம கூடியிருக்கிறது எதுக்குன்னா…அரசியல் என்கிற சாக்கடையை சுத்தம் பண்ணும் விதமாக நாம அரசியலே குதிக்க போறோம்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.அது விசயமா ஒவ்வருவராக வந்து உங்களை நீங்களே அறிமுகப்படுத்தி, நீங்க அரசியலுக்கு எப்படி சரிப்பட்டு வருவீங்கன்னு சுருக்கமா பேசுங்கடே…

நட்புடன் ஜமால்: Me the first

அபி அப்பா: வேணாம்…வேணாம்…அழுதுடுவேன்…

சென்ஸி: இந்தப் பிரச்சனையே வேணாம்னு தான் பதிவர்கள் பெயரை சீட்டுலே எழுதி வச்சிருக்கோம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம்….

(குலுக்கல் முறையில் முதலில் உண்மைத்தமிழன் பெயர் வருகிறது )உண்மைத்தமிழன்: என் இனிய வலைத்தமிழ் மக்களே…

கோவிக்கண்ணன்: வந்துட்டார்யா வலைத்தமிழ் பாரதி ராஜா…

உண்மைத்தமிழன்: என் இனிய வலைத்தமிழ் மக்களே…” பிறந்து வளர்ந்ததிலிருந்து சொல்லிக் கொள்ளும் படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை” என்று என் வலைப்பூ முகப்பில் எழுதி வைத்திருப்பதால், இவன் எந்த சாதனையும் புரியாதவன் என்று தப்புக்கணக்கு போட்டு விடக்க்கூடாது…” உண்மைத்தமிழன்” என்ற ஒன்று போதாதா ? நான் அரசியலுக்கு சரியான ஆள் என்பதற்கு…அரசியல் பற்றி நான் எழுதிய கொலைவெறி பதிவுகளைக் கண்டு தமிழ் நாடே டரியல் ஆகிக்கிடப்பது உங்களுக்கு தெரியாதா…?

அனானி: நீங்க எழுதினாலே நாங்க டரியல் ஆவது சகஜம் தானே…

உண்மைத்தமிழன்: பதிவர் வட்டத்தை , பதிவர் சதுரமாக்கியது என் சாதனை இல்லையா…

குசும்பன்: நாங்களெல்லாம் பதிவர் முக்கோணம், பதிவர் ஐங்கோணம், பதிவர் எங்கோணம்னு போயிக்கிட்டு இருக்கோம்…இவரு என்ன கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காரு…

உண்மைத்தமிழன்: அரசியல் பற்றி எனக்குத்தெரியாத விசயமா…1969…ல்

டிபிசிடி: அம்மாடியோவ் ஆரம்பிச்சிட்டாருய்யா…அண்ணாச்சி ஒரு சீட் கன்பார்ம்னு இவரை உட்கார வையுங்க இல்லை இந்த மீட்டிங் முடியுற வரை இந்த புள்ளி விபரம் மட்டும் தான் தொடரும்….

அண்ணாச்சி: சரி சரி உமக்கு சீட் கன்பார்ம் அண்ணாச்சி…

உண்மைத்தமிழன்: அண்ணாச்சி இப்படித்தான் 1972 ல்...( என்று ஆரம்பிக்க ஏழெட்டு பதிவர்கள் கைத்தாங்களாக அவரைத் தூக்கி வந்து சீட்டில் அமரச்செய்கின்றனர்…

அடுத்த குலுக்கலில் எம்.எம்.அப்துல்லா

அவர் பேச ஆரம்பிக்கும் முன்பே பின்னூட்டத்துடன் சிலர்…

நசரேயன் : அப்துல்லா என்ன பேசப்போறார்ன்னு தெரியலை ஆன Me the first…மீதி அவர் பேசி முடிந்ததும்…

குசும்பன்: எத்தனை அண்ணாச்சி வந்தாலும் உங்களை திருத்த முடியாதப்பா….

எம்.எம். அப்துல்லா: ஒண்ணுமில்லைச் சும்மன்னு தான் கூட்டிக்கிட்டு வந்தாங்க இங்கே வந்தா அரசியல்ன்னு சொல்றாங்க…என்னை பேச விட்டதே பெருசு.. இதிலே என்னைப்பத்தி நானே பேசனுமா… என்ன கொடுமைசார் இது…இருந்தாலும் இரயிலோடு விளையாடின்னு என் பால்ய அனுபவங்களை படியுங்கள்…

( அது பாலியல் அனுபவங்கள்னு காதில் விழ பதிவர்கள் தாங்கள் கொண்டு வந்த மடிக்கணிப்பொறியை தட்டி அந்தப் பதிவை தேட ஆரம்பிக்கின்றனர்…ஒரே நிமிடத்தில் ஆயிரக்கணக்கான ஹிட்)

எம்.எம். அப்துல்லா: நான் தெருவிளக்கில் படித்து , கவர்னருக்கே கை கொடுத்தவன்… என்று ஆரம்பிக்க…

மறு பேச்சே இல்லாமல் சீட் கன்பார்ம்…

அண்ணாச்சி: குசும்பு அது என்னங்கடே எல்லோரும் பேச பேச யாரோ ஒருத்தர் வந்து ஸ்மைல் பண்ணிட்டு மட்டும் போய்கிட்டு இருக்காரே யார் அது…

குசும்பு: அது வேற யாரு நம்ம மங்களூரு சிவா தான்…

அண்ணாச்சி: இங்கேயுமாங்கடே…

அடுத்த குலுக்கலில் நட்புடன் ஜமால்

நட்புடன் ஜமால்: என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது… இருந்தாலும் சொல்றேன்… ஒரு மறு மொழி கிடைக்காதானு எல்லோரும் ஏங்கிகிட்டு இருக்கப்போ எனக்கு ஒவ்வொருத்தங்களும் அஞ்சி ஆறு மறுமொழி விடுவாங்க…நான் ஒரு ஓட்டு வாங்குனா ஐஞ்சி ஓட்டு வாங்கின மாதிரி…

டிபிசிடி: அதுக்க்கெல்லாம் மச்சம் வேணுமய்யா…

நட்புடன் ஜமால்: அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாமே நெட்டுலே ஓட்டளிக்கிற ஒரு கூகில் சாப்ட்வேர் பத்தி உங்களுக்கு விளக்கலாம்னு இருக்கேன்…

அண்ணாச்சி: ஜமால் இங்கேயும் கற்போம் வாருங்களாடே… உமக்கு சீட் கன்பார்ம்டே…

ஹேமா: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...தமிழ் மணத்திலே தான் சூடான இடுக்கையில் எனக்கு இடம் தரலை இங்கேயாவது சீட்டு தரலாம்ல…

அண்ணாச்சி : இது என்னங்கடே…

குசும்பன்: அண்ணாச்சி அரசியல்னு வந்தாச்சி…இப்ப லேடீஸ் செண்டிமெண்ட் ரொம்ப முக்கியம்…புதுகை தென்றல், பாசமலர், அன்புடன் அருணா, ஹேமான்னு நாளஞ்சி பொண்ணுங்களுக்கு சீட்டை கன்பார்ம் பண்ணுங்க… அப்ப தான் நம்ம சீட் தப்பும்…

அபிஅப்பா: அப்ப, அபி யோட அப்பாங்கறதினாலே எனக்கும் சீட் கன்பார்ம் இல்லையா அண்ணாச்சி…

குசும்பன்: அண்ணாச்சி இவரு டேஞ்சரஸ் ஃபெல்லோ இவரை கேர்புல்லாத்தான் ஹேண்டில் பண்ணனும்….

அனானி: அண்ணாச்சி தீர்ப்பை மாத்தி சொல்லு…

அண்ணாச்சி : நான் எங்கடே தீர்ப்பு சொன்னேன் …பதிவுலே தான் படிக்காமே பின்னூட்டம் போடுவே இங்கேயுமாடே…

தம்பி: அண்ணாச்சி நிலைமை மோசமா போயிடும் போல கூட்டத்தை ஒரு மணி நேரம் தள்ளி வையுங்க…

அண்ணாச்சி : அண்ணாச்சி எல்லோரும் களைப்பா இருப்பீங்க …போய் ஒரு பதிவு போட்டுட்டு வாங்க…மேலே பேசலாம்….

கீழைராஸா : என்னங்க… முதல் பகுதியை இப்படியே முடிச்சிக்கறேன்…அரசியலுக்கு உங்களை இழுத்துட்டேன் என்று ஆள்வைத்து அடிப்பது, ஆட்டோ வைத்து தூக்குவது இப்படி கொலை வெறியோடு செயல்படாமே காமெடியா மட்டும் எடுத்துக்கொண்டு உங்களின் பின்னூட்டங்களை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்…என் பேரு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்…கண்டிப்பா நீங்க எல்லோரும் இடம்பெறுவீங்க ஆன உங்களின் ஆதரவின் அளவைப்பொருத்து அடுத்த ஆணியை புடுங்க முயற்சி செய்யப்படும்.

36 comments:

பார்சா குமார‌ன் said...

me the firstu

பார்சா குமார‌ன் said...

சூப்பரப்பூ, அடுத்த ஆணியை ஆவலோடு எதிர் பார்க்கும்

அபி அப்பா said...

அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம். ஆனா சொல்லீட்டென் எனக்கு மாயவரம் சீட்டு க்கொடுக்கலைன்னாஇன் பிளாக் முன்னாடி டீ குடிப்பேன்:-)))

பார்சா குமார‌ன் said...

///அனானி: அண்ணாச்சி தீர்ப்பை மாத்தி சொல்லு…

அண்ணாச்சி : நான் எங்கடே தீர்ப்பு சொன்னேன் …பதிவுலே தான் படிக்காமே பின்னூட்டம் போடுவே இங்கேயுமாடே…///

):/

எம்.எம்.அப்துல்லா said...

கீழை அண்ணே, எனக்கு எம்.பி சீட் வாங்கித் தர்றது இருக்கட்டும்.... என் மகளுக்கு ஒரு எல்.கே.ஜி சீட்ட வாங்கிக்குடுங்க...நாயா அலையுறேன்

:)

நட்புடன் ஜமால் said...

நம்மையும் மதித்து ஒரு ஸீட்ட கொடுத்து

ஆஹா! ராசா கீழை ராசா

கண்கள் பனிக்கிறது

நெஞ்சம் இனிக்கிறது

நட்புடன் ஜமால் said...

அட லேபுல பாருங்கப்பூ

அரசியல், தேர்தல் - இதுவே நகைச்சுவை தான்

பதிவர்சதுரம்,பதிவர்வட்டம் - இதென்னா மொக்கையா

நட்புடன் ஜமால் said...

\\என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது… இருந்தாலும் சொல்றேன்… ஒரு மறு மொழி கிடைக்காதானு எல்லோரும் ஏங்கிகிட்டு இருக்கப்போ எனக்கு ஒவ்வொருத்தங்களும் அஞ்சி ஆறு மறுமொழி விடுவாங்க…நான் ஒரு ஓட்டு வாங்குனா ஐஞ்சி ஓட்டு வாங்கின மாதிரி…
\\

அவ்வளவு நல்லவுகளா நீங்க

நல்லாருங்கடே ...

’டொன்’ லீ said...

ஹாஹா...அருமை நண்பரே

அதிலும் ஜமாலை கலாய்த்த விதம் இருக்கே...சூப்பரோ சூப்பர்..

அப்துல்லா பேச முன்பே கருத்து தெரிவித்த நசரேயனின் குசும்பையும் ரசித்தேன்..

இது தொடர்ந்து பல பாகங்களாக எழுதப் படவேண்டும்....:-)))

புதுகைச் சாரல் said...

எனக்கு சீட் கன்பார்ம் இல்லையா???

இராகவன் நைஜிரியா said...

எனது ஆதரவை தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டு போட்டு நிருபித்துவிட்டேன்.

தேர்தல் பற்றிய அடுத்த பதிவை எதிர்பாற்கின்றேன்.

கீழை ராஸா said...

உங்க அமோக ஆதரவில் திக்கு முக்காடி போய் விட்டேன்...இனி வரும் பின்னூட்டங்களில் உங்களுக்கான பதில்கள் வந்து கொண்டே இருக்கிறது

Anonymous said...

எங்க அண்ணாச்சி, கார்ட்டூனில் கூட அழகு தாங்க கிளப்பிட்டீங்க போங்க...

கீழை ராஸா said...

//பார்சா குமார‌ன் said...
me the firstu//

என்னா வில்லத்தனம்....

TBCD said...

காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது :P

டக்ளஸ்....... said...

\\அடுத்த குலுக்கலில் நட்புடன் ஜமால்

நட்புடன் ஜமால்: என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது… இருந்தாலும் சொல்றேன்… ஒரு மறு மொழி கிடைக்காதானு எல்லோரும் ஏங்கிகிட்டு இருக்கப்போ எனக்கு ஒவ்வொருத்தங்களும் அஞ்சி ஆறு மறுமொழி விடுவாங்க…நான் ஒரு ஓட்டு வாங்குனா ஐஞ்சி ஓட்டு வாங்கின மாதிரி…\\


\\கோவிக்கண்ணன்: வந்துட்டார்யா வலைத்தமிழ் பாரதி ராஜா…\\

\\அனானி: நீங்க எழுதினாலே நாங்க டரியல் ஆவது சகஜம் தானே…\\

\\ஹேமா: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...தமிழ் மணத்திலே தான் சூடான இடுக்கையில் எனக்கு இடம் தரலை இங்கேயாவது சீட்டு தரலாம்ல…\\


சூப்பரு...
ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் அடுத்த பகுதியை......

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கீழை ராஸா..

சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.. நிறுத்த முடியல..

பன்ச்சிங் டயலாக்ஸ் உங்களுக்கு நிறைய வருது..

நிறைய எழுதுங்க இது மாதிரி..

ஆனா சம்பந்தப்பட்ட பதிவர்களின் தளங்களில் லின்க் கொடுத்திட்டீங்கன்னா உடனே வந்து படிக்கலாம்.. நானே இப்பத்தான் தற்செயலா வந்தேன்..

மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்..

கீழை ராஸா said...

//அபி அப்பா said...

//அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம். ஆனா சொல்லீட்டென் எனக்கு மாயவரம் சீட்டு க்கொடுக்கலைன்னாஇன் பிளாக் முன்னாடி டீ குடிப்பேன்:-)))//

வாங்க அபி அப்பா...உங்கள் முதல் வருகைக்கு நன்றி...உங்க வரிகளை ரொம்ப ரசித்தேன்...உங்களுக்கான பதிலை அடுத்த பதிவா தரலாம்னு இருக்கேன்...அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க.....

கீழை ராஸா said...

நான் பதிவர் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்து ஒரு வருடத்திற்கு மேலானாலும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த வருடம் முழுதும் எழுத இயலா நிலை...இப்போதும் ஆரம்பித்தவுடன் துபாய் பற்றிய சீரீயஸ் பதிவுகள்...ரொம்ப சீரியஸா போனா ஆக்ஸன் பதிவராகி விடுவோம் என்பதால் இடையே இப்படி ஒர் நகைச்சுவை பதிவு...இதனை சீரியஸா எடுத்துக்கொள்ளாமல் சிரிப்பாக மட்டுமே எடுத்துக்கொண்ட அனைத்து பதிவர் வட்ட, சதுர,முக்கோண,எண்கோண நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி
(நன்றி சொன்னதும் படம் முடிந்தது என்று வராமல் போயிடாதீங்க..நங்களெல்லாம் சூப்பில் ஆரம்பித்து புல் மீல் முடித்து மீண்டும் சூப்பில் ஆரம்பிக்கிறவயங்க...)

ச்சின்னப் பையன் said...

:-))))))))))

கோவி.கண்ணன் said...

ஆகா கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்கே.......
:)

KAVI said...

super ga...innum elutuga

குவாட்டர் கோயிந்தன் said...

சூப்பரப்பு, கலக்குங்க கலக்குங்க சரக்கை.

நையாண்டி நைனா said...

நல்லா எழுதி இருக்கீங்க.....
வாழ்த்துக்கள்.

கீழை ராஸா said...

//எம்.எம்.அப்துல்லா said...
கீழை அண்ணே, எனக்கு எம்.பி சீட் வாங்கித் தர்றது இருக்கட்டும்.... என் மகளுக்கு ஒரு எல்.கே.ஜி சீட்ட வாங்கிக்குடுங்க...நாயா அலையுறேன்//

என்ன அப்துல்லா உங்களுக்கு கல்வி அமைச்சராக வாய்ப்பிருக்குன்னு பதிவர்வட்டத்திலே பேசிக்கிறாங்க..நீங்க என்ன... வென்றால்?

கீழை ராஸா said...

//நட்புடன் ஜமால் said...
அட லேபுல பாருங்கப்பூ

அரசியல், தேர்தல் - இதுவே நகைச்சுவை தான்

பதிவர்சதுரம்,பதிவர்வட்டம் - இதென்னா மொக்கையா//

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

\\’டொன்’ லீ said...

ஹாஹா...அருமை நண்பரே

அதிலும் ஜமாலை கலாய்த்த விதம் இருக்கே...சூப்பரோ சூப்பர்..

\\

நாம பேசி தீர்த்துக்களாம் ...

ஹேமா said...

//ஹேமா: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...தமிழ் மணத்திலே தான் சூடான இடுக்கையில் எனக்கு இடம் தரலை இங்கேயாவது சீட்டு தரலாம்ல…//

அச்சோ....நான் இந்தப் பக்கம் வந்து 4-5 நாளாச்சு.என்ன எல்லாருமா என்னைப் பத்திக் கதைச்சிருக்கீங்க...!நல்லா படிச்சிருட்டு வரேன்.

ஹேமா said...

ஓ...அரசியலா.உங்க கற்பனைக்கு அளவே இல்லையா.இந்த அரசியலாலதானே அவதிப்பட்டுக்கிட்டு அல்லாடிப்போய் இருக்கிறோம்.
அப்புறம் அங்க யார் சீட்டுக் கேப்பாங்க...!

கீழை ராஸா said...

//’டொன்’ லீ said...

ஹாஹா...அருமை நண்பரே//

நன்றி நண்பரே...அடிக்கடி வாங்க

கீழை ராஸா said...

//புதுகைச் சாரல் said...
எனக்கு சீட் கன்பார்ம் இல்லையா???//

மனதில் இடம் உண்டுங்கோ...

கீழை ராஸா said...

// இராகவன் நைஜிரியா said...
எனது ஆதரவை தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டு போட்டு நிருபித்துவிட்டேன்.

தேர்தல் பற்றிய அடுத்த பதிவை எதிர்பாற்கின்றேன்.//

மிக்க நன்றிங்க...

கீழை ராஸா said...

//Anonymous said...
எங்க அண்ணாச்சி, கார்ட்டூனில் கூட அழகு தாங்க கிளப்பிட்டீங்க போங்க...
//

அதுக்கு உங்க பேரை போட்டே சொல்லிருக்கலாமே

ansareeee said...

எனது அருமை தமிழ் நண்பர்களே!
இனி தாங்கள் யாரும், இனி துபாயில் வேலை இல்லையே…என்று இனி தாங்கள் யாரும் கவலைப்படாதீங்க!!!
நன்றி!
ansareeee@gmail.com
ansari312@yahoo.com
0097158406322
009715557132776

Anonymous said...

All Dears,please comming soon
bussiness good new
please wait........
HMT.ANSARI
ansareeee2gmail.com

HMT.ANSARI.DUBAI. said...

முதலில் என்னை பற்றி
படைப்புகள்:புதிய புதிய தொழில்கள் உருவாக்குவது,புதிய,புதிய கதைகள
திரைகதைகள்,சிறு,சிறு சிறுகதைகள் எழுதுவது.சிரிக்க,சிந்திக்க வைப்பது இன்னும்
வசிப்பது.=இப்போதுங்க துபாய்லேங்க.
சாதனைகள்.======ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல,
புனைப்பெயர்.HMT. {HMT.ANSARI. இன்னும்-அ=கு.
விருப்பங்கள்======கனவு....கனவு மேய்பட வேண்டும்
படைப்புகள்.=======சிறு சிறு துளியாய் சிந்த போகிரேன்.
வயது=பல முதிற்ச் சோலைங்க பகுதி கிணறு தாண்டியாச்சு .
நான் ரொம்ப ஸ்மார்ட் =அப்படின்னு சொன்ன நம்பவா போறீங்க
இஷ்டம் : மொக்கை போடுவது , இப்போதைக்கு அவ்ளோதான்
மற்றவை,அடுத்த மொக்கையில் {மொக்கை என்ன? மொக்கை}
தொடரும்.... தொடர்ந்து எழுதும்.HMT.
ansareeee@gmail.com
ansari312@yahoo.com

Related Posts with Thumbnails