துபாய், வளைகுடா பொருளாதாரச் சலனத்திற்கு காரணம் யார்…? உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பிண்ணனிக் கதை என்ன?

இரண்டு வருடம் முன்பு வளைகுடா பொருளாரச் சலனம் வருமென்று யாராவது கூறியிருந்தால் அவரை பைத்தியக்காரனென்று எள்ளி நகையாடியிருப்பார்கள்…

சென்ற வருடம் துபாயில் ஆள்குறைப்பு நடைபெறும் என்று யாராவது ஆருடம் சொல்லியிருந்தால் அவரை கல்லால் அடித்துக் கொன்றிருப்பார்கள்.ஆனால் இன்று…

அமெரிக்காவில் நடந்த பொருளாதார வீழ்ச்சி வெறியாட்டம் இன்று இங்கு காலடி எடுத்து வைத்து விட்டது என்றே தோன்றுகிறது… இதற்கு யார் காரணம் இந்த கேள்விக்கு என்க்கு ச்மீபத்தில் வந்த ஒரு மின்னஞ்ச்ல் கதை விடையாக அமைந்தது…அந்த மசால இடப்பட்ட மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்கு…


ஒரு வயதான பெரியவர் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்…அவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது…அதனால் அவர் செய்திதாள் எதுவும் படிப்பதில்லை…காது சரியாக கேட்காது என்பதால் வானொலி செய்திகளும் அவருக்கு எட்டாத ஒலி…

இருந்தாலும் உணவத்தொழில் அவருக்கு கைவந்த கலை…விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வியாபாரத்தை பலப்படுத்தி வந்தார்…பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மென்மேலும் வியாபாரம் பெருகியதால் மேலும் பல வேலையாட்களை சேர்த்து உணவகத்தின் இடத்தை விஸ்தரித்து, அந்தப்பகுதியின் சிறந்த உணவகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வந்தார்…

நாளாக நாளாக உணவகத்தில் கூட்டம் அலை மோதியதால் சமீபத்தில் பட்டபடிப்பை முடித்து வேலை தேடிவந்த தன் மகனையும் அதே உணவகத்தொழிலில் ஈடுபடச்செய்தார்…

மகனும் ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டான்…இருந்தாலும் உலகப்பொருளாதார சலனம் பற்றி செய்திகள் படிக்க படிக்க குழம்பியவனாக…அப்பாவிடம் வந்தான்…”அப்பா ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீரா..?
“இல்லை மகனே அது என்ன பொருளாதார நெருக்கடி…?” இது அப்பா.
“உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து மிக மோசமான நிலையில் உள்ளது இங்கும் நிலை மிக மோசமான நிலை நோக்கி போய் கொண்டிருக்கிறது…அந்த மோசமான நிலையை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்” மகன்.

அப்பா யோசிக்க ஆரம்பித்தார்…மகன் பெரிய படிப்பெல்லாம் படித்தவன் உலக விசயங்களை செய்திதாள்,வானொலி, டெலிவிசன் மூலம் கரைத்து குடித்தவன் அவன் சொல்வதை லேசாக (சுலபமாக) எடுத்துக்கொள்ளக்கூடாது…

அடுத்த நாளிலிருந்து அதிரடி மாற்றங்கள்…
விதவிதமான உணவு அறிமுகங்களை நிறுத்தினார்.வித்தியாசம் கருதி அவர் கடை வந்த கூட்டமும் நின்றது…
புதிய திட்டங்களை புறந்தள்ளினார்…புதுமை கருதி வந்த கூட்டம் பூஜ்ஜியம் ஆனது.
ஆழம் தெரியாமல் ஆள்குறைப்பு செய்தார்…
திறமையான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தார்கள்…உணவின் தரம் குறைந்தது…படிபடியாக தொழில் முற்றிலும் தடை பட்டது.

அப்பா மகனிடம் சொன்னார்…

“ மகனே நமக்கு இப்போது தொழில் அறவே இல்லை…நாம் இப்போது பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் சிக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நீ சொன்னது சரியாக போய் விட்டது.உன் யோசனை படி நடந்ததால் நாம் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பினோம்…என்ன வென்றாலும் படிச்சவன் படிச்சவன் தாண்டா..”




இப்ப சொல்லுங்க.. இந்த நிலை யாரால் வந்தது…?




22 comments:

மங்களூர் சிவா said...

என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவந்தான்

:)))))))))))))))

கலக்கீட்டீங்க தலைவரே!!!!

கீழை ராஸா said...

வாங்க மங்களூர் சிவா...நன்றி

தலைவர்ன்னுறீங்களே எதாவது உள்குத்து இருக்குமோ...?

வடுவூர் குமார் said...

நேற்று கராமா போய்விட்டு பேருந்தில் சிட்டி சென்டர் திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு காட்சி..
ஒரு புத்தம் புதிய ஷாப்பிங் சென்டர் அதன் வாசலில் கட்டுமானத்தொழிலாளர்கள் வரிசையாக (வீட்டுக்கு கூப்பிட்டு போகும் வண்டிக்காக காத்திருக்கிறார்கள்)உட்கார்ந்திருக்கார்கள்,இந்நிலையில் அந்த சென்டர் திறந்தால் அங்கு செல்ல ஆட்கள் இருப்பார்களா? என்ற சந்தேகம் வந்தது.
செய்திதாளில் படித்தது 10 ஃபேமிலியில் 4 வர் இன்னும் 1 வருடத்துக்குள் வேலையிழந்தால் சொந்த ஊருக்கு திரும்பப்போவதாக சொல்லியிருகார்களாம்.

கீழை ராஸா said...

வாங்க குமார் சார்...சென்ற பதிவில் திட்ட மேலாண்மை பற்றி கேட்டிருந்தீர்...அதை architectraza@gmail.com என்ற என் முகவரியில் பகிர்ந்து கொள்ளலாம்...உங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி

Anonymous said...

nalla story,picture ellaam nalla irukku...cond. pannunga valthukkal

எம்.எம்.அப்துல்லா said...

எங்கூர் பாசையில சொல்லவா???

நறுக்குனு இருக்கு :))

கீழை ராஸா said...

நன்றி அப்துல்லா பாய்...

கீழை ராஸா said...

நன்றி சேகர்

Unknown said...

இது எனக்கும் வந்தது. நான் பதியனும் என்று நினைத்திருந்தேன். பொருளாதார மந்தத்தை விளக்கும் அழகான கதை.

துபையைப் பொறுத்தவரை பல இடங்களில் மற்றவர்களை பார்த்தும் வீண் சந்தேகத்திலும் நல்ல பணியாளர்களை இழந்து தொழிலில் தடுமாறி வீழ்ச்சியின் பக்கம் வலிந்து போகிறார்கள். நன்றி சாருகேசி.

ஹேமா said...

வாசித்தேன்.எதற்கும் அறிவைப் பயன்படுத்தி,எதிர்காலத் திட்டமிடலும் வேணும் என்கிறீர்கள்.நல்லதே!

கீழை ராஸா said...

நன்றி சுல்தான் பாய்...உங்கள் பதிவை துரிதமாக தாருங்கள்...படிக்க காத்திருக்கேன்..

ashok said...

Very apt story da...I am reminded of the "monkey" story that went in rounds as forward mail...

கீழை ராஸா said...

நன்றி ஹேமா...

Anonymous said...

Another Super article from Raza Anna. I have never seen a developer taking advantage of the current situation. Since the material and Labour rates are cheap, developers may re-think to take advantage and build in recession. But as the story implies, Bcoz of so called Economic advisors, everone has lost confidence in investing. Keep the good work Keelai Raja
-Ibrahim.

கீழை ராஸா said...

THANKS ASHOK...

அப்துல்மாலிக் said...

அகலக்கால் வைத்தால் இறுதியில் என்னா? வாகும் என்பதை அழகான சிறு கதைமூலம் விளக்கிருக்கிறீர்கள், நல்ல படிப்பினை கிடைக்கிறது தங்கள் பதிவில்

வாழ்த்துக்கள் தோழரே

Unknown said...

//அபுஅஃப்ஸர் said...
அகலக்கால் வைத்தால் இறுதியில் என்னா? வாகும் என்பதை அழகான சிறு கதைமூலம் விளக்கிருக்கிறீர்கள், நல்ல படிப்பினை கிடைக்கிறது தங்கள் பதிவில்

வாழ்த்துக்கள் தோழரே///

நண்பரே தாங்கள் குறிப்பட்டது போல
அகலக்கால் வைப்போர் பற்றிய பதிவில்லை இது...ஒரு சிறப்பாக செயல்படும் நிறுவனத்தைக்கூட இந்த பொருளாதார வீழ்ச்சி புரளியில் உட்படுத்தி தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்..அப்பாவி முதலாளிகள் பற்றியது....

கீழை ராஸா said...

THANKS IBRAHIM,YOU HAVE GIVEN VERY GOOD SUGGESSION TO DEVELOPERS...

butterfly Surya said...

நல்ல பகிர்விற்கு நன்றி.

திடீர் ஆடம்பர நகரமான துபாயின் வீழ்ச்சி எதிர் பார்த்த ஒன்றுதான்.


ஆனால் Not so early...

அபுல் ஹசன் said...

கீழையில் முளை விட்ட ராஸா உமது
மூளையில் துளிர்த்த பதிவுகள் எங்கோ ஒரு
மூலையில் உள்ளோரையும் சிலிர்க்க, சிந்திக்க தூண்டுகிறது....
தொடரட்டும்...உமது தேடல்கள்...

இன்றுதான் உமது பதி(வு)ப்..பூ மணம் நுகர ஓர் அன்பர் கூற,
உம் வலைப்பக்கம் உலா வந்தேன்.....

Ashrafi Hanifa said...

anna nice write up
recession is no where but with in ourselves. am i right?

ரஷீத் said...

அருமையா சொல்லி இருக்கீங்க...

Related Posts with Thumbnails