அமீரக தமிழ்ப்பதிவர் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான தடாலடி விதிமுறைகள்...

"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் கூவ(புகழ) முடியும்.. அண்ணாச்சி)மாநாட்டு வருவோருக்கான சில விதிமுறைகள் வகுத்தால் எப்படி இருக்கும் என்று என்ற ரோசனையின் பலன் தான் இந்த "கைடு" பதிவு.

  • மாநாட்டிற்கு ஆயுதம் கொண்டுவருவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.முக்கியமாக பெல்ட் அணிந்து வருவதை தவிர்க்கவும்.மாலை,சால்வை பொன்ற "மிதவாத ஆயுதங்கள்" தகுந்த பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.பழைய மாடல் செல்போன்கள் ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் புதிய மாடல் செல்போன்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


  • மாநாட்டில் உணவு வழங்கப்படும் என்று நம்பி கொலைப்பட்டினியுடன் வந்து மயக்கம் போட்டு மாநாட்டில் பேசுபவர்கள் மீது பழியைப்போடாமல் எப்போதும் போல சாப்பிட்டு விட்டே வரவும்.


  • ஒரு வலைப்பூவிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் மாநாட்டுத்திடலுக்கு லாரிகளில் வருவதை தவிர்க்கவும்.


  • பதிவர்கள் தங்கள் ப்ளாக் சம்மந்தப்பட்ட பேனர்கள், மற்றும் கொடிகள் கொண்ட விளம்பர பலகைகளை மாநாட்டுத்திடலுக்கு வெளியே வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


  • மாநாட்டில் அவர் வாழ்க, இவர் ஒழிக கோஷங்கள் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.


  • பதிவர்கள் பேசிமுடித்ததும் மீதஃபர்ஸ்ட், அருமை,கலக்கிட்டீங்க, ரிப்பீட்டு,மீ..டு, அவ்வ்வ்வ்வ் போன்ற ஒற்றை வார்த்தை கமெண்ட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.


  • மாஸ்க் அணிந்து வருபவர்கள் அனானிகளாக கணக்கில் எடுக்கப்படுவார்கள்.


  • தாயகம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டிற்கு வரும் அமீரகம் சாரா பதிவர்கள்...தங்கள் சொந்த செலவில் வந்து, தங்கி உண்டு, ஊர் செல்ல வேண்டுமாய் அறிவுத்தப்படுவதுடன்...தாங்கள் ஊரிலிருந்து கிளம்பும் போதே அந்தெந்த பகுதிகளில் பேர் பெற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து மாநாட்டில் விநியோகித்து அமீரக பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அமீரகம் சாரா பதிவர்களை கவுரவிக்கும் விதமாய் "இலவசமாக" ஒரு லிட்டர் மசாஃபி வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என்பதால் வெளிநாட்டுப்பதிவர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விதிமுறைத் தொகுப்பு:
அமீரக அனானிகள் முன்னேற்ற சங்கம்

25 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
பதிவர்கள் பேசிமுடித்ததும் மீதஃபர்ஸ்ட், அருமை,கலக்கிட்டீங்க, ரிப்பீட்டு,மீ..டு, அவ்வ்வ்வ்வ் போன்ற ஒற்றை வார்த்தை கமெண்ட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை//

ஹாஹா.... பார்ப்போம்.. இன்னிக்கு யார் யார் இப்படி சொல்றாங்கன்னு...

சென்ஷி said...

:))))


கலக்கல்!

// * ஒரு வலைப்பூவிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் மாநாட்டுத்திடலுக்கு லாரிகளில் வருவதை தவிர்க்கவும்.


* பதிவர்கள் தங்கள் ப்ளாக் சம்மந்தப்பட்ட பேனர்கள், மற்றும் கொடிகள் கொண்ட விளம்பர பலகைகளை மாநாட்டுத்திடலுக்கு வெளியே வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். //


ROTFL

அண்ணாச்சி புகைப்படம் அருமை!

ALIF AHAMED said...

ஷு போட்டு வரலாமா..?

கீழை ராஸா said...

//ச.செந்தில்வேலன் said...
ஹாஹா.... பார்ப்போம்.. இன்னிக்கு யார் யார் இப்படி சொல்றாங்கன்னு...//

ஒரு முடிவோடதான் வருகிறீங்க போல..

கீழை ராஸா said...

// சென்ஷி said...
:))))

ROTFL

உங்க மூலமா ஒரு புதுவார்த்தை அறிமுகமானது...நன்றிங்க...

//அண்ணாச்சி புகைப்படம் அருமை!//
இப்படி உசுப்பேத்தி உசுப்ப்பேத்தி தானே ரணகள மாக்கிட்டீங்க...

மற்றவை நேரில்...

கீழை ராஸா said...

///மின்னுது மின்னல் said...
ஷு போட்டு வரலாமா..?//

இந்த மாநாட்டிற்கு "புஷ்" எல்லாம் வர மாட்டாருங்க...

கரவைக்குரல் said...

வணக்கம் சாருகேசி

அப்படி இப்படி எல்லாம் நிபந்தனை போடுறீங்க
எங்க எந்த இடத்தில என்று சொல்ல மாட்டீங்களா?
நாங்களும் அமீரகம் தான்

தகவலுக்கு நன்றி

http://karavaikkural.blogspot.com/2009/07/blog-post_09.html

இராகவன் நைஜிரியா said...

அமீரகப் பதிவர் மாநாட்டிற்கு வாழ்த்துகள்.

சரியான படி வகுப்பட்ட விதிமுறைகள்.

விதி முறைகளை பேடண்ட் பண்ணிடங்க

ALIF AHAMED said...

இங்க இருக்கு படிக்க பாஸ்


http://kusumbuonly.blogspot.com/2009/07/blog-post_16.html

ஊர்சுற்றி said...

ஹிஹிஹி... முடியல. :)))

seik mohamed said...

முடியல! முடியல!! முடியல!!!

seik mohamed said...

முடியல! முடியல!! முடியல!!!

நட்புடன் ஜமால் said...

பதிவர்கள் பேசிமுடித்ததும் மீதஃபர்ஸ்ட், அருமை,கலக்கிட்டீங்க, ரிப்பீட்டு,மீ..டு, அவ்வ்வ்வ்வ் போன்ற ஒற்றை வார்த்தை கமெண்ட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை]]

இதெல்லாம் அங்க மட்டும் அனுமதி இல்லியா!

[படம் ஜோர் ...]

கீழை ராஸா said...

//அப்படி இப்படி எல்லாம் நிபந்தனை போடுறீங்க
எங்க எந்த இடத்தில என்று சொல்ல மாட்டீங்களா?
நாங்களும் அமீரகம் தான்//

பதிவுலேயே லிங்க் இருக்கு பாஸ் மின்னுது அண்ணனும் லிங்க் கொடுத்திருக்கார்...மாநாடு கராமா பார்க்லே தான் வந்து சேருங்க...

அத்திரி said...

kalakkal

கீழை ராஸா said...

//இராகவன் நைஜிரியா said...
அமீரகப் பதிவர் மாநாட்டிற்கு வாழ்த்துகள்.

சரியான படி வகுப்பட்ட விதிமுறைகள்.

விதி முறைகளை பேடண்ட் பண்ணிடங்க//

நன்றிங்க..

கீழை ராஸா said...

//ஊர்சுற்றி said...
ஹிஹிஹி... முடியல. :)))//

சும்ம ஊர்சுத்துனா மட்டும் போதாது மாநாட்டுக்கு வந்து சேரணும் ஒகே..

கீழை ராஸா said...

//பார்சா குமார‌ன் said...
முடியல! முடியல!! முடியல!!!//

எக்கோ நல்லா இருக்குப்பா...

கீழை ராஸா said...

//நட்புடன் ஜமால் said...
இதெல்லாம் அங்க மட்டும் அனுமதி இல்லியா!//

ரொம்ப வருத்தமா...?

கீழை ராஸா said...

//அத்திரி said...
kalakkal//

வருக வருக

கோவி.கண்ணன் said...

//"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் கூவ(புகழ) முடியும்.. //

கலக்கிட்டிங்க, மற்ற விதிமுறைகளும் அட்டகாசம் !

Santhosh said...

ஹ்ஹஹ.. சூப்பர்.. ரசித்து சிரித்தேன் :)

கீழை ராஸா said...

//கோவி.கண்ணன் said...
//"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் கூவ(புகழ) முடியும்.. //

கலக்கிட்டிங்க, மற்ற விதிமுறைகளும் அட்டகாசம் !//

நன்றி நண்பரே...

கீழை ராஸா said...

//சந்தோஷ் = Santhosh said...
ஹ்ஹஹ.. சூப்பர்.. ரசித்து சிரித்தேன் :)//

ஊரே சிரிச்சிடுச்சி போங்க...

Anonymous said...

What i don't realize is in fact how you are no
longer really a lot more neatly-liked than you may be now.
You are so intelligent. You know thus considerably relating to this subject, produced me in my view
believe it from so many numerous angles. Its like men and women don't seem to be
fascinated unless it's one thing to accomplish with Girl gaga!
Your personal stuffs excellent. All the time maintain it up!


Stop by my weblog: get your ex back (en.wikipedia.org)

Related Posts with Thumbnails