
ஆறு மணி மாநாட்டிற்கு மூணு மணியே எழுந்து குளித்து...( லீவு என்பதால் சற்று அசந்து தூங்கிவிட்டேன், தேதி கிழித்ததும் அப்ப தான்)
ஜிப்பா, குர்தா அணிந்து கண்ணாடி பார்த்தேன்,ஒரு ஜோள்னா பை மட்டும் மிஸ்ஸிங்...இது வேளைக்கு ஆகாதென்று சட்டை அணிந்து இன் பண்ணிப்பார்த்தேன் "டை" மட்டும் கட்டினால் ஆபீஸ் போய் விடலாம்...சே இதுவும் ப்ளாப்...கடைசியாக டீசர்ட் அணிந்து நான் பண்ணிய அலம்பல்களைப்பார்த்து கொண்டிருந்த ரூம் மேட்கள் கொலை வெறியோடு பார்த்த படி எங்கே ராஸா கிளம்பிட்டீக என்றார்கள்...

"பதிவர்கள் மாநாடு இருக்குதுலா அதுக்கு தான்" நான்
"அதுக்கு நீங்க எங்கே போறீங்க"
"என்ன இப்படி கேட்கிறே.. நானும் பதிவர்தாண்டா"
"கிழிஞ்சது போ"
"டேய் நம்புடா நானும் பதிவரா ஃபார்ம் ஆயிட்டேண்டா..."
என்று கதறியும் எவனும் நம்ப வில்லை.
ஒரு வழியா கேமராவை தூக்கிகிட்டு வெளியே வந்து "பார்த்துக்கோ, பார்த்துக்கோ நான் பதிவர் மாநாடு போறேன்...இந்த ஏரியாவுலே நானும் ஒரு பதிவர் தான்" என்று உதார்விட அந்த நேரத்தில் அந்த பக்கம் சென்ற பக்கத்து குரோசரி மம்மது குட்டி, என்ன பதிவரோ...ன் மன்சிலரியா ...என்க பொத்திக்கினு காரை ஸ்டார்ட் செய்து கராமா நோக்கி செலுத்தினேன்.

மாநாட்டு திடல் கூட்டம் அலை மோதியது. (லீவு நாட்களில் மக்கள் பார்க்கிற்கு வருவது சகஜம் தானே)
இதில் எப்படி பதிவர்களை கண்டு பிடிப்பது...? பதிவர்களுக்கு ஒரு குடும்ப பாடல் இருந்தாலாவது "அன்பு மலர்களே" என்று குரல் கொடுக்க "நாளை நமதே" என்ற படி பதிவர் கூட்டம் ஓடிவரும்... அதுவும் மிஸ்ஸிங்...
என்ன செய்வது... நீண்ட யோசனைக்கு பின் ஒரு யோசனை தோன்ற சத்தமாக
"தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...
ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க அங்கே பார்த்தால் "பதிவர் வட்டம்" ( பின்னணியில் பலத்த சத்தத்துடன் ட்ரம்ஸ் மியூசிக்)

வட்டம் சற்று பெரிதாகத்தான் இருந்தது...அண்ணாச்சி வழக்கத்திற்கு மாறாக வெகு கேசுவல் ட்ரஸ்ஸில் அமர்ந்திருக்க சகாக்கள் அனைவரும் நிராயுத பாணியாய் (ஆயுதங்கள் தடை செய்யப்பட்டதால்)
இதை விட லேட்டாய் வேறு யாரும் வர முடியாது என்று மாநாடு குழு முடிவெடுக்க அண்ணாச்சி கண்ணசைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்..
விழா ஆரம்பித்த மறு நொடியே அண்ணாச்சி மீது அய்யனார் கொலைவெறியோடு பாயந்தார்.
மேலும் சமீப காலமாய் அண்ணாச்சி போக்கில் ஏற்பட்ட மாற்றம் பற்றி பேச அண்ணாச்சி "சக்தி" இழக்க, அவருக்கு "ஆப்பானார்" அய்யனார்.
முதலில் ஆஃப் ஆன அண்ணாச்சி சுதாரித்து கொண்டு "நான் டி.ராஜேந்தர் காலத்திலிருந்தே பதிவெழுதுபவன்...அதுக்காக இன்னும் அவரைப்போலவே இருக்க இயலாது சிம்பு ரேஞ்ஜுக்கு நான் மாறுவது தான் என் வெற்றி பயணத்திற்கு காரணம் என்ற அண்ணாச்சி, உணர்ச்சியின் உச்ச கட்டமாய் தன்னை ஒரு "மொக்கை பதிவர்" என்று ஆணித்தரமாய் கூறியும் எவரும் நம்பத் தாயாராய் இல்லை...( அது உண்மை என்று தெரிந்தும்)

அன்பர் ஆசாத் படித்ததில் பத்து சதவீதம் பதிவாகவும் 90% பின்னூட்டமாகவும் எழுதப்பட வேண்டும் என்றார்...பாதி பதிவர்கள் அந்த நேரத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார்கள்...
அய்யனார் ரொம்ப சீரியஸ்ஸாக பல கருத்துக்களை கூற குன்னக்குடியின் வயலின் இசை சோக ராகமாய் பின்ணணியில் இசைக்க அவையெங்கும் மயான அமைதி...
அதை கலைக்கும் விதமாக "நீங்க ஏண்டே ப்ளாக் ஆரம்பிச்சீங்க"என்ற பீதியை கிளப்பும் கேள்வியை ஆரம்பித்து வைக்க விழா கலைகட்டியது...
குசும்பன் வேலையில்லாததால் ப்ளாக் ஆரம்பிச்சேன் என்று பலவருசங்களா அவர் மனசுலே தேக்கி வச்சிருந்த உண்மையை போட்டு உடைக்க மீ..டூ ...என்று அதை சிலர் ஆமோதித்தனர்.
அதிமேதாவிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே நான் பதிவரானேன் என்று அண்ணாச்சி சொல்ல, புது பதிவர்கள் டரியல் ஆனார்கள்...
இப்படி செல்ல தீடீரென்று விழுந்தது ஒரு அணுகுண்டு ..."ஒரு சிறந்த பதிவு எப்படி இருக்க வேண்டும் அதன் அளவு கோல் என்ன?" என்ற கிளியனூர் இஷ்மத்தின் தடாலடி கேள்வியாய்..."தெரியலையப்பா" என்று நாயகன் கமல் ரீதியில் அண்ணாச்சி நழுவ... அய்யனார் ஆக்ரோசமாய் பதில் சொன்னார், அதற்கு இஷ்மத் "புரியலையப்பா" என்ற அதே கமல் பாணியில் கேட்ட கேள்வியை வாபஸ் பெற்று கொண்டார்.
இடையே மாநாடு சல சலக்க சுல்தான் பாயும், படகு பதிவரும் மாநாட்டில் ஐக்கியமாக மாநாடு தொடர்ந்தது...
புதிய பதிவரின் ஆதரவை குறிவைத்து, புதிய பதிவர்களையும் பேச அனுமதிக்குமாறு குசும்பன் எடுத்து வைக்க,புதியவர், பிரபலப்பதிவர் என்ற வார்த்தைகளை அண்ணாச்சி அவை குறிப்பிலிருந்து நீக்கச் சொல்ல அவை ஆமோதித்தது...
இப்படி விழா சென்று கொண்டிருக்க பட்டிமன்ற பேச்சாளர் அப்துல் வாஹித்(அனானி நம்-1) எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உங்களில் சிறந்த இரண்டு பதிவுகளை குறிப்பிட்டு பேசுங்களேன் என்க, அவையில் நீண்ட பெருமூச்சு...

லியோ அவர்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதை நிறுத்துங்கள் நான் பதிவெழுதுகிறேன் என்க...
வெகுண்டெழுந்த குசும்பன், சிங்கை பதிவர்கள் சிங்கம் போல் சாடிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....
மலாய் பதிவர்கள் மல்லுக்கட்டிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....
என்ற ரீதியில் ஆரம்பிக்க "ஆத்தாடி" என்ற படி அண்ணன் யெஸ் ஆனார்.
"எதை எதிர்பாத்து எழுதுகிறோம்"என்று சுல்தான் பாய் கேட்க...மற்றவர்கள் படிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் என்ற வாதம் முன்னிறுத்தப்பட்டது.
எல்லோரும் உலக ஒற்றுமையைப் போல வலையுலக ஒற்றுமையை பற்றி பேச இனி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை வரி தீர்மானத்துடன் விழா இனிதே நிறைவுற்றது...
-ஒளிப்பதிவாளர் பாலை ராஸாவுடன்
கீழை ராஸா...கண் நியூஸ்
50 comments:
நல்ல தீர்மானம்.திரும்ப ஒரு முறை கராமா பூங்கா பார்க்க சான்ஸ் கிடைத்ததற்கு நன்றி.
[["தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...
ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க அங்கே பார்த்தால் "பதிவர் வட்டம்" ( பின்னணியில் பலத்த சத்தத்துடன் ட்ரம்ஸ் மியூசிக்)]]
ஹா ஹா ஹா
ராஜா... தூள் கிளப்பிட்டே..
ராஜா... தூள் கிளப்பிட்டே..
அப்படி போடு அரிவாளை
//"ஒரு சிறந்த பதிவு எப்படி இருக்க வேண்டும் அதன் அளவு கோல் என்ன?" என்ற கிளியனூர் இஷ்மத்தின் தடாலடி கேள்வியாய்..."தெரியலையப்பா" என்று நாயகன் கமல் ரீதியில் அண்ணாச்சி நழுவ... அய்யனார் ஆக்ரோசமாய் பதில் சொன்னார், அதற்கு இஷ்மத் "புரியலையப்பா" என்ற அதே கமல் பாணியில் கேட்ட கேள்வியை வாபஸ் பெற்று கொண்டார்.//
கலக்கல் :))))
ஆகா கலக்கிட்டீங்க...ஆமா வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்தீங்க....வெறும் போட்டாவை போட்டிருக்கீங்க.
ராஸா தொகுத்த செய்திகள் அருமை!
நல்ல வர்ணனை.
//வடுவூர் குமார் said...
நல்ல தீர்மானம்.திரும்ப ஒரு முறை கராமா பூங்கா பார்க்க சான்ஸ் கிடைத்ததற்கு நன்றி.//
???
//நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா//
வீரப்பன் சிரிப்பா...
//நிஜமா நல்லவன் said...
:)
//
இது என்ன சிநேகா சிரிப்பா...
//இராகவன் நைஜிரியா said...
ராஜா... தூள் கிளப்பிட்டே..//
அட்ரா சக்கைன்றீங்க
//அது ஒரு கனாக் காலம் said...
அப்படி போடு அரிவாளை//
பார்க்க அமைதியா இருந்தீங்க ஏன் இந்த கொலைவெறி..
//சென்ஷி said...
கலக்கல் :))))//
ஒரு "பிரபல" இந்த வார்த்தையை எதிர்பார்க்கலே...ஆஆஆஆஆ( கமல் பாணியில் ஆவை படிக்கவும்
//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
நடந்த மாநாட்டை நகைச்சுவையாக உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்..//
யோவ்...நானும் பதிவர்தான்னு உதார்விடுவது...உமக்கு உள்ளது உள்ள படியா...?
//☀நான் ஆதவன்☀ said...
ஆகா கலக்கிட்டீங்க...ஆமா வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்தீங்க....வெறும் போட்டாவை போட்டிருக்கீங்க.//
அன்பர் ஆசாத் சொன்னது போல இது வெறும் 10% தாண்ணா... மீதி 90% வந்துக்கினே இருக்கு
நகைச்சுவையான கவரேஜ். உங்களையெல்லாம் நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி
பதிவர் சந்திப்புப் படங்கள் அருமை!
நல்ல நகைச்சுவையா தொகுத்து வழங்கி இருக்கீங்க..:)
யப்பா!...உதார் உடுறதுலே...சாருகேசி புலிகேசிக்கு சளைத்தவரல்ல என்பதை நிருபிச்சுட்டார்...வாழ்க உமது கலக்கல்....மறக்காம ஒட்டுபோட்டிட்டேனில்ல
நல்ல கவரேஜ்! கீழை ராசா!
நைட் எங்ககூட கிளம்பி இத்தனை சீக்கிரமா பதிவேத்திட்டீங்க...
பட், உங்களுடைய "ஃபாஸ்ட்" எனக்கு பிடிச்சிருக்கு!!
சுத்தி சுத்தி நாலுபேரையே போட்டோ புடிச்சிருக்கீகளே?
///அன்பர் ஆசாத் சொன்னது போல இது வெறும் 10% தாண்ணா... மீதி 90% வந்துக்கினே இருக்கு///
வரட்டும் வரட்டும் அது முடிஞ்சு மிச்சத்தை நானும் எழுதுறேன்
//அண்ணாச்சி வருவாக, குசும்பன் வருவாக, சென்ஷி வருவாக// அய்யனார் கவனிச்சீங்களா? பிரபலங்கள் பட்டியலில் உங்களை காணோம் :-). நீங்க சொன்ன மொக்கை பதிவால் உருப்பெற்ற வாசகர்களில் ஒருவரா? :-)
நன்றி ராசா இந்த விலாவரியான பதிவிற்கு.
//அய்யனார் கவனிச்சீங்களா? பிரபலங்கள் பட்டியலில் உங்களை காணோம் :-). நீங்க சொன்ன மொக்கை பதிவால் உருப்பெற்ற வாசகர்களில் ஒருவரா? :-)//
நேற்றுதான் 'கோர்த்து விடும்' பதிவர்களை அடையாளம் கண்டு கொண்டு உஷாராக இருகக் வேன்டுமென்று தீர்மானமெடுத்தோம். மக்களே! அடையாளம் கண்டுகொள்ளுங்கள் :-)
ஐயா நான் சொன்னது, அப்படி போடு பதிவை ..சும்மா அழகா, படத்தோட, நகை சுவையுடன் ...கலுக்குங்க... நமக்கும் அறிவாளுக்கும் ரொம்ப தூரமுங்க ...ஹி!!! ஹி!!! ஆஹா ஆசிப் அண்ணாச்சியே வந்துட்டார் பின்னோட்டத்தில் ..வாழ்க, வளர்க அவர் தொண்டு
//ஆசிப் மீரான் said...
//அய்யனார் கவனிச்சீங்களா? பிரபலங்கள் பட்டியலில் உங்களை காணோம் :-). நீங்க சொன்ன மொக்கை பதிவால் உருப்பெற்ற வாசகர்களில் ஒருவரா? :-)//
நேற்றுதான் 'கோர்த்து விடும்' பதிவர்களை அடையாளம் கண்டு கொண்டு உஷாராக இருகக் வேன்டுமென்று தீர்மானமெடுத்தோம். மக்களே! அடையாளம் கண்டுகொள்ளுங்கள் :-)//
அண்ணாச்சி உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா...ஆளை விடுங்க சாமி...(அய்யனார் சாமி இல்ல)
ஐயா நான் சொன்னது, அப்படி போடு பதிவை ..சும்மா அழகா, படத்தோட, நகை சுவையுடன் ...கலுக்குங்க... நமக்கும் அறிவாளுக்கும் ரொம்ப தூரமுங்க ...ஹி!!! ஹி!!! ஆஹா ஆசிப் அண்ணாச்சியே வந்துட்டார் பின்னோட்டத்தில் ..வாழ்க, வளர்க அவர் தொண்டு
//"தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...
ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க அங்கே பார்த்தால் "பதிவர் வட்டம்" ( பின்னணியில் பலத்த சத்தத்துடன் ட்ரம்ஸ் மியூசிக்)//
:))
சூப்பர்!
நல்ல கவர் ஸ்டோரி!
//குசும்பன், சிங்கை பதிவர்கள் சிங்கம் போல் சாடிக்கொள்கிறார்களே//
இதை நான் எங்கள் மூத்த பதிவர்களான "கோவியார்" மற்றும் "ஜோஸப் பால்ராஜ்" அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். :))
:))))))))
//நேற்றுதான் 'கோர்த்து விடும்' பதிவர்களை அடையாளம் கண்டு கொண்டு உஷாராக இருகக் வேன்டுமென்று தீர்மானமெடுத்தோம். மக்களே! அடையாளம் கண்டுகொள்ளுங்கள் :-)//
அதுல முக்கியமான ஆள்தான் இந்த கமெண்ட்டை எழுதினதா ஊர்ல பேசிக்கிட்டாய்ங்க.. :-)
அழைப்பு இருந்தும் போக முடியாமல் ஆகிவிட்டது மீண்டும் ஒரு முறை கூட்டம் எப்போ???
அண்ணாச்சிக்கே ஆப்பா? திக் என்றுதான் இருந்தது! மனம் "சக்தி" இழந்தது போல் இருந்தது ..எதிரில் இருந்த வீனஸ் உணவகத்தில் ஒரு ரவா தோசையை பிய்த்து உள்ளே தள்ளும் வரை..
வர்ணனை கலக்கல்..
உங்கள நேரில் பார்த்தா தெரியல..ஆனா பேனா எடுத்தா(கணிணிதான், முறைக்காதீங்க..) ஏன் இந்த கொல வெறி?
வாழ்த்துக்கள்
உலகத்தில இருக்கிற குசும்பு புடிச்ச தமிழர்களை எல்லாம் ஆண்டவன் எப்படியோ துபாய்-ல ஒண்ணு கூட வைச்சிருக்கான்.
எல்லாப் பயலும் பின்ரானுங்க!
அசத்தல் வர்ணனை, அழகான படங்கள். (What a pity! all gays, sorry, guys)
//எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உங்களில் சிறந்த இரண்டு பதிவுகளை குறிப்பிட்டு பேசுங்களேன் என்க, அவையில் நீண்ட பெருமூச்சு...//
விடுங்க..இனிமே எழுதிட்டா போச்சு!!
//ச.செந்தில்வேலன் said...
ராஸா தொகுத்த செய்திகள் அருமை!
நல்ல வர்ணனை.//
வாங்க வேலன்...
//நாகா said...
நகைச்சுவையான கவரேஜ். உங்களையெல்லாம் நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி//
விழாவத்தான் சீரியஸ் ஆக்கிட்டாங்க...கவரேஜ ஆவது காமடியா இருக்கட்டுமே...
(அனானிகளுக்கு.. தம்பிகளா இதைவச்சி எதாவது...பத்த வச்சிடாதீங்கப்பா...)
//தேவன் மாயம் said...
பதிவர் சந்திப்புப் படங்கள் அருமை!//
நான் இல்லை அல்லவா நல்லாத்தான் இருக்கும்...
//வினோத்கெளதம் said...
நல்ல நகைச்சுவையா தொகுத்து வழங்கி இருக்கீங்க..:)//
ஏன் சீரியஸ் ஆகி பார்க்கனுமா...
//கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI said...
யப்பா!...உதார் உடுறதுலே...சாருகேசி புலிகேசிக்கு சளைத்தவரல்ல என்பதை நிருபிச்சுட்டார்...வாழ்க உமது கலக்கல்....மறக்காம ஒட்டுபோட்டிட்டேனில்ல//
அது...
//குசும்பன் said...
நல்ல கவரேஜ்! கீழை ராசா!//
எங்கே ஒரு அடிமை சிக்கிட்டான்னு கிளம்பி இங்கே வந்துடுவீங்களோன்னு பயந்துட்டேன்...உங்க டீசண்ட் அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு...இதையே மெய்டன் பண்னுங்க...
//கலையரசன் said...
நைட் எங்ககூட கிளம்பி இத்தனை சீக்கிரமா பதிவேத்திட்டீங்க...
பட், உங்களுடைய "ஃபாஸ்ட்" எனக்கு பிடிச்சிருக்கு!!//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கோம்லன்னு சொல்ல வாய்ப்பில்லாமே போச்சே...
//கானா பிரபா said...
சுத்தி சுத்தி நாலுபேரையே போட்டோ புடிச்சிருக்கீகளே?//
ரிப்ப்பீட்டு....
நல்ல பகிர்வு!
\\என்ற வார்த்தைகளை அண்ணாச்சி அவை குறிப்பிலிருந்து நீக்கச் சொல்ல அவை ஆமோதித்தது...
\\
அப்போ நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டிங்க ;))
கலக்கல் பதிவு தல ;)
//தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...
ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க //
ஹா ஹா ஹா சூப்பரு!
கலக்கல் ரிப்போர்ட் ;-)
//ஆசிப் மீரான் said...
///அன்பர் ஆசாத் சொன்னது போல இது வெறும் 10% தாண்ணா... மீதி 90% வந்துக்கினே இருக்கு///
வரட்டும் வரட்டும் அது முடிஞ்சு மிச்சத்தை நானும் எழுதுறேன்
//
வாசிக்க காத்திருக்கோம்...
பின்னூட்டப்படையுடன்..
//அண்ணாச்சி வருவாக, குசும்பன் வருவாக, சென்ஷி வருவாக// அய்யனார் கவனிச்சீங்களா? பிரபலங்கள் பட்டியலில் உங்களை காணோம் :-). நீங்க சொன்ன மொக்கை பதிவால் உருப்பெற்ற வாசகர்களில் ஒருவரா? :-)
நன்றி ராசா இந்த விலாவரியான பதிவிற்கு.
போகிற போக்கைப்பார்த்தால் அண்ணாச்சிக்கே கிடைக்காத மொக்கை பட்டம் எனக்கு கிடைத்து விடும் போலிருக்கிறதே...
//பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
நல்ல கவர் ஸ்டோரி!//
உங்களைப்போல் பல "பிரபலங்களின்" வருகையால் சற்று பலம் பெற்ற உணர்வு வருகிறது...
//அறிவிலி said...
//குசும்பன், சிங்கை பதிவர்கள் சிங்கம் போல் சாடிக்கொள்கிறார்களே//
இதை நான் எங்கள் மூத்த பதிவர்களான "கோவியார்" மற்றும் "ஜோஸப் பால்ராஜ்" அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். :))//
பரட்டை...பத்த வச்ச்சிட்டியே...
புதுகைத் தென்றல் said...
:))))))))
சத்தம் பலமா இருக்கு...
//அகமது சுபைர் said...
//நேற்றுதான் 'கோர்த்து விடும்' பதிவர்களை அடையாளம் கண்டு கொண்டு உஷாராக இருகக் வேன்டுமென்று தீர்மானமெடுத்தோம். மக்களே! அடையாளம் கண்டுகொள்ளுங்கள் :-)//
அதுல முக்கியமான ஆள்தான் இந்த கமெண்ட்டை எழுதினதா ஊர்ல பேசிக்கிட்டாய்ங்க.. :-)//
அவரா நீங்க...
//வீரசிங்கம் said...
அழைப்பு இருந்தும் போக முடியாமல் ஆகிவிட்டது மீண்டும் ஒரு முறை கூட்டம் எப்போ???//
இனி அடிக்கடி...
//Anonymous said...
அண்ணாச்சிக்கே ஆப்பா? திக் என்றுதான் இருந்தது! மனம் "சக்தி" இழந்தது போல் இருந்தது ..எதிரில் இருந்த வீனஸ் உணவகத்தில் ஒரு ரவா தோசையை பிய்த்து உள்ளே தள்ளும் வரை..
வர்ணனை கலக்கல்..
உங்கள நேரில் பார்த்தா தெரியல..ஆனா பேனா எடுத்தா(கணிணிதான், முறைக்காதீங்க..) ஏன் இந்த கொல வெறி?
வாழ்த்துக்கள்//
இவர் அனானி-1 ஆ...?
//உலகத்தில இருக்கிற குசும்பு புடிச்ச தமிழர்களை எல்லாம் ஆண்டவன் எப்படியோ துபாய்-ல ஒண்ணு கூட வைச்சிருக்கான்.
எல்லாப் பயலும் பின்ரானுங்க!
அசத்தல் வர்ணனை, அழகான படங்கள். (What a pity! all gays, sorry, guys)//
பாராட்டிற்கு நன்றி...
//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
யோவ்
மாநாட்டுல எதும் பேசாம அமைதியா இருந்துட்டு,இவ்ளோ பெரிய வேலை பாத்துருக்கியே நீ தான்யா உண்மையான குசும்பன்.
வாழ்த்துக்கள்//
ஆளைப்பார்த்துமே குறைச்சி எடை போட்டுடீங்களே...?ஆச்சரியம் தான்
//ரங்கன் said...
//எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உங்களில் சிறந்த இரண்டு பதிவுகளை குறிப்பிட்டு பேசுங்களேன் என்க, அவையில் நீண்ட பெருமூச்சு...//
விடுங்க..இனிமே எழுதிட்டா போச்சு!!//
எழுதுங்க எழுதுங்க
//வால்பையன் said...
நல்ல பகிர்வு!
//
நன்றி...
//கோபிநாத் said...
\\என்ற வார்த்தைகளை அண்ணாச்சி அவை குறிப்பிலிருந்து நீக்கச் சொல்ல அவை ஆமோதித்தது...
\\
அப்போ நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டிங்க ;))//
கூவல் கொஞ்சம் ஓவரா இருக்கு
//கிரி said...
//தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...
ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க //
ஹா ஹா ஹா சூப்பரு!
கலக்கல் ரிப்போர்ட் ;-)//
நன்றிங்க...
இயன்றவரை எதையும் விடாமல், நகைச்சுவையாக தொகுத்து, அருமையாக வழங்கி உள்ளீர்கள்.
//சுல்தான் said...
இயன்றவரை எதையும் விடாமல், நகைச்சுவையாக தொகுத்து, அருமையாக வழங்கி உள்ளீர்கள்.//
நன்றி சுல்தான் பாய், உங்களை நேரில் சந்தித்தது நான் சற்றும் எதிர்பாராதது...
துபாய் பதிவர்களுக்கு வேண்டுகோள்.....நம்ம தொகுதியில் நின்று அதிக ஒட்டுப் பெற்ற காலையும் மாலையும் கடினமாக உழைக்கும் நம்ம கீழை ராசாவுக்கு....பொன்னாடை போர்த்தி கவுரவிக்கலாம்...
சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்துக்கொள்ளமுடியாதது நினைத்து வருந்துகிறேன்
அருமையா விளக்கிருக்கீங்க
அண்ணா... ஏன் எங்களையெல்லாம் இந்த பதிவர் மாநாட்டுக்கு நீங்க போறப்ப கூப்பட மாட்டீங்களா... இல்ல எங்கள பதிவரா நீங்க சேத்துக்க மாட்டீங்களா.....
Interesting..
//அபுஅஃப்ஸர் said...
சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்துக்கொள்ளமுடியாதது நினைத்து வருந்துகிறேன்
அருமையா விளக்கிருக்கீங்க//
விடுங்க நண்பரே அடுத்த சந்திப்பில் பார்த்துக்கொள்ளலாம்...
உங்கள் முகவரியைத் தாருங்கள் அழைப்பு விட..
//SIMMA said...
அண்ணா... ஏன் எங்களையெல்லாம் இந்த பதிவர் மாநாட்டுக்கு நீங்க போறப்ப கூப்பட மாட்டீங்களா... இல்ல எங்கள பதிவரா நீங்க சேத்துக்க மாட்டீங்களா.....//
உங்கள் விருப்பம் இருப்பின் எப்ப வேண்டுமானாலும் வரலாம்...நாம சந்தித்தாலே மாநாடு தானே...
//srinivasan said...
Interesting..//
THANKS...
nalla solli irukkrueengal...
//Joe said...
உலகத்தில இருக்கிற குசும்பு புடிச்ச தமிழர்களை எல்லாம் ஆண்டவன் எப்படியோ துபாய்-ல ஒண்ணு கூட வைச்சிருக்கான்.
எல்லாப் பயலும் பின்ரானுங்க!
அசத்தல் வர்ணனை, அழகான படங்கள். (What a pity! all gays, sorry, guys)//
நான் ரசித்த பின்னூட்டம் இது..
இரண்டு முறை பாராட்டியதற்கு நன்றி கீழை ராஸா!
Post a Comment