கலைஞரின் குறைகள்…(இது அரசியல் பதிவு அல்ல)

ஈழப்பிரச்சனை, கலைஞரின் உண்ணாவிரதம், அரசியல் அனல், போர் நிறுத்தம். இவை எவற்றிற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாளும் இதன் நாயகன் கலைஞரைப் பற்றி அவரின் எண்பத்தைந்தாம் அகவை ஒட்டி எண்பத்தைந்து கவிதை தொகுப்பை வெளியிட முயற்சித்து அதன் தொடர்பாக கவிஞரொருவர் கவிதை சேகரிக்க அமீரகம் வந்த போது என் பங்கிற்கு கலைஞரைப் பற்றி நான் எழுதி அளித்த கவிதை இது…

குறைகளெல்லாம் நிறைகளாய்….
உன் நிறைகளைப் பாட
நீண்டதொரு கூட்டமுண்டு- என்பதால்
தங்கள் குறைகள் பாட
கு(ழ)ரலெடுத்து வந்துள்ளேன்…

நீ நிறைகளால் நிறைந்தவன்
குறைகளையும் நிறையாக்கியவன்


“ அரசியல் சிகரமே ”
உன் உயரத்தில் நீ சற்றே குள்ளம்…
உன் உருவ ஆளுமைக்கு அது
சற்று குறைவானது தான் – ஆனால்
அரசியலில் உன் சாதனை உயரம் கண்டு
எவரெஸ்ட்டும் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கிறதே-அந்த
தந்திரமென்ன…?


“திருக்கு(ற)ரலாசானே”
உன் குரலின் கரகரப்பு,
உன் பரபர்ப்பு வார்த்தை வேகத்திற்கு
சிறு குறை தான் – ஆனால்
உன் கரகரப்புக் குரலில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம் கண்டு
குயில் கூட உன் குரல் மாற்றி
கூவ முயற்சிக்கும்
மந்திரமென்ன…?

“சூரியனுக்கொளியே...”
கருப்பு கண்ணாடி - உன்
விழிகளின் விலாசமென்பது
உன் பார்வைக்குறை குறைக்கத்தான் –ஆனால்
ஒட்டுமொத்த கலைச் சமுதாயமே
உன் விழிவழியே- பூலோகம்
நோக்க காத்திருக்கும்
விஞ்ஞான மர்மமென்ன..?

“சிந்தனை சிறுத்தையே…”
உன் நடையின் தளர்வு
உன் பொழுது வேகத்திற்கு
சற்றே குறை தான் –ஆனால்
உன் எண்ண வேகத்திற்கு
எந்த எழுத்தாணியும்
ஈடுகொடுக்க இயலா தவிக்கும்
மாயாஜாலமென்ன…?

“கவிபாடும் கணிப்பொறியே”
இளம் தலைமுறைக்கு – நீயொரு
செம்மொழி தந்த “தமிழ்”
அரசியல் “கணித” மேதை
எழுத்துலகின் “விஞ்ஞானம்”
வாழும் “வரலாறு”
சகலகலா திறன் கொண்ட “ பூகோளம்”

“கலைஞரே”
எண்பத்தைந்தென்பது
உமக்கு குறையா..? நிறையா..?
என நிறைய சிந்தித்தாலும்
நிறைகள் மட்டுமே நெஞ்சில்
நிறைகிறது … மற்றவை உம் முன்
மறைகிறது…

19 comments:

Anonymous said...

உலக அறிவு கம்மியா? லீ குவானுக்கு எத்தனை வயது? அந்த மனுசன் எப்படித் துள்ளீ விளையாடுது? இந்தக் கிழடுக்கு தமிழில பேச மட்டும் தான் தெரியும். வேறு ஏதாவது புதினம்? முடிந்தால் லீயின் பேச்சுக்களை கேளுங்கள். அப்புறமா கிழடு என்னத்தை வெட்டிச் சாய்ச்சுது என்று புரியும்?

Suresh said...

nalla iruku avaru raja va irnutha porkizhi ungaluku than

வால்பையன் said...

மறையும் மறையும்!

R.Gopi said...

நல்லாதானே எழுதி இருக்கீங்க..........

நான்கூட அரசியல் பதிவு இல்லையோ என்று நினைத்து கொண்டே வந்தேன்... வந்து பார்த்தால், அரசியல் கலந்த அரசியல் அல்லாத பதிவு என்று தெரிந்து கொண்டேன்.

எனக்கென்னவோ, இவர் தன் குடும்பத்தின் மேல் காட்டிய அக்கரையில் ஒரு 10% நாட்டின் மீதோ, நாட்டு மக்களின் மீதோ காட்டி இருந்தால், நம் நாடு, (தமிழ்நாடு), இன்னும் கொஞ்சம் முன்னேறி இருக்குமோ என்று நினைக்கிறேன்........

மற்றபடி, அவரின் பேச்சு, பெரும்பாலும் விரசம்....... கூட இருந்தால் ஒண்ணு பேசுவார்.... விட்டு விலகினால், மற்றொன்று பேசுவார்..... உதாரணம் --- கம்யூனிஸ்ட் மற்றும் பா.ம.க பற்றி அவரின் பேச்சுகள்.

கீழை ராஸா said...

//உலக அறிவு கம்மியா? லீ குவானுக்கு எத்தனை வயது? அந்த மனுசன் எப்படித் துள்ளீ விளையாடுது? இந்தக் கிழடுக்கு தமிழில பேச மட்டும் தான் தெரியும். வேறு ஏதாவது புதினம்? முடிந்தால் லீயின் பேச்சுக்களை கேளுங்கள். அப்புறமா கிழடு என்னத்தை வெட்டிச் சாய்ச்சுது என்று புரியும்?//

இது சாதித்த ஒரு தமிழ் தலைவனைப்பற்றிய கவிதை…என் கண் முன்னே என் சமூகத்தில் சாதித்த ஒருவரை தட்டிக்கொடுக்கக்கூட விருப்பமில்லாமல், எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒருவரை தலையில் வைத்து ஆடும் உலக அறிவு எனக்கு கொஞ்சம் கம்மி தான்…

பார்சா குமார‌ன் said...

:::))

சந்துரு said...

ஒரு இடத்தில கூட குறை காணமுடியவில்லை உங்கள் கவிதை நடையில்..... ஆனால் பல குறை உள்ளது உங்கள் நெஞ்சில் நிறைந்த இந்த தலைவரிடம்.... உங்கள் மனம் திறந்து உரையுங்கள்....

சந்துரு said...
This comment has been removed by the author.
Rajeswari said...

அரசியல் வாடை அடிக்கும் அரசியல் இல்லாத பதிவு(நம்பிட்டோம்) ..நன்றாக உள்ளது

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி சுரேஸ்...

கீழை ராஸா said...

வாங்க வால்ஸ் பாய்...

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி கோபி...

கீழை ராஸா said...

பார்சன் என்ன மௌனவிரதமா?

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி சந்துரு...

கீழை ராஸா said...

வாங்க ராஜேஸ்வரி..உங்க வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி

லவ்டேல் மேடி said...

அட.... கவிதை அருமை போங்க.......!!! வித்தியாசமான கவிதை....நல்லா இருக்கு.....!!!!

Anonymous said...

Yenna solla varada?

ashok

Anonymous said...

இது
1.சாதித்த ???
2.ஒரு தமிழ்??? 3.தலைவனை???ப்பற்றிய கவிதை

உலக அரிவு குறைவு எங்கிறீர்கள். எனக்கும் தான். மேலே உள்ள மூன்றுக்கும் என்ன பதில்.

Anonymous said...

Ka Ka Ka, Sariana Kaka

Related Posts with Thumbnails