துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…

எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…

“அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?”

“இந்த கம்பெனி இனி தாங்காதாமே ?”

“1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”

“போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”

இப்படி வாய்க்கு வந்தபடி புரளி…

உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…?இதுவெல்லாம் பொய்யா ..?
என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை…வந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை…

சென்ற வாரம் நண்பனொருவன் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, "கவலைப்படாதீங்க, நான் , உங்களுக்காக நேந்துக்கிறேன்"… எனக்கூற இவனோ நக்கலாக, "நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு நேந்துக்கோ "என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்…

இன்று அவனுக்கு வேலை இல்லை…

இன்னொருவன் தன் மனைவி தனக்கு PASSPORT வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற "உனக்கு PASSPORT வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்" போல என்று நக்கலாக கூற, அப்புறம் ஒருவாரம் ரெண்டு பேருக்கும் இடையே “ ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை…

நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல் வேதனைப்படும் அவல நிலை.

பீதியில் துபாய்…

உணவகங்களில் கூட்டமில்லை…கடைவீதிகளும், சாப்பிங் மால் களும் சற்றே வெறிச்சோடிய நிலை…கடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து தந்த கடன் அட்டை, இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்…லோன்கள் வீடுதேடிவந்தது போக, இன்று லோ, லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலை…எதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்…இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்… தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?

பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில் உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன் சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம் கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மெழுகுதிரிகளின் நிலை என்ன?

கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை சூழ வரவேற்கப்பட்டு, அபிதாபியா,சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி விடுமோ…? வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?

சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?

மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?

வேலை யில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன் விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?

எதோ இணை பிரியாத பந்தம்… உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை…

போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்…என்று கை காட்டி விட்டு கிளம்ப முடியுமா…கார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை , இப்படி துபாயில் சேர்த்த (!!??) சொத்திற்கு வழி என்ன…? விழி பிதுங்கிய நிலையில் வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?




1950 களில் “கற்காலத்தில் இருந்த துபாய், நொடிப்பொழுதில் “ULTRA MODERN” நாகரீகத்திற்கு நிறம்மாறி

“BURJ DUBAI”(புர்ஜ் என்றால் பெருமை)…உலகின் உயர்ந்த கட்டிடம்…!
“DUBAI MALL” உலகின் மிகப்பெரிய சாப்பிங் மால்…!
“BURJ AL ARAB” உலகின் முதல் 7 நட்சத்திர விடுதி…!
“PALM ISLAND” ( பனை மர வடிவத்தீவு) எட்டாவது உலக அதிசயம்…!


என்று உலக மக்களை ஆச்சரியக்குறியில், பார்க்க செய்த துபாய் இன்று…? இங்குள்ளோரின் எதிர்காலமென்ன..?, இவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு..? என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டிருக்கிறது…

எது எப்படியோ வீட்டு வாடகை, நகைகடை கூட்டம், KFC மோகம், PIERRE CARDIN, TED LAPIDS 75% SALE, 10க்கு 10 பத்து அறையில் பன்ணிரண்டு பேர், இவை எவற்றிலும் ஒரு மாற்றமும் இல்லை…இருந்தாலும்…


எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…

நண்பன் சொன்னது போல், துபாய்க்கு நேந்துக்குங்க(வேண்டிக்குங்க) விரைவில் மாற்றம் வரலாம்.

46 comments:

seik mohamed said...

துபாய்க்கு நேந்துக்குங்க(வேண்டிக்குங்க)

shabi said...

SARIYANA NERATTHULA SARIYANA PADHIVUNGA ELLA COMPANY LAYUM COST CUTTING NU VERA SOLLI BAYAMURUTTHIKITTU IRUKKANGA

கீழை ராஸா said...

வாங்க குமாரன், வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி

கீழை ராஸா said...

நன்றி ஷபி...

இந்த பிரச்சனை இன்னும் எவ்வளவு நாள்னு பார்ப்போம். சீக்கரமே மாற பிராத்திப்போம்..

Unknown said...

துபாயை பத்தி நல்லா சொல்லிருக்கீங்க

நாமக்கல் சிபி said...

கவலை கொள்ளாதீர்கள்! நாங்களும் பிரார்த்திக்கிறோம்! விரைவில் சீராகும்!

இறைவன் மிகப் பெரியவன்! கருணையுள்ளவன்! கைவிடமாட்டான்!

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி...

உங்கள் பிராத்தனை பலம் பெறட்டும், அதனால் பலகுடும்பங்கள் பலன் பெறட்டும்...

Anonymous said...

SERIOUS AANA MATTER-I COMMEDY AAKKI VITTAAYE..

butterfly Surya said...

வருத்தமான தகவல்கள்தான்.

ஆனாலும் சென்ற வருடம் வரை சிலர் வாய்ப்புகள் இந்தியாவில் கிடைத்த போதும் வரமாட்டேன் என பிடிவாதத்துடன் இருப்பது மட்டும் ஏன் என புரியவில்லை. ???

பழகிபோய்விட்டதோ அந்த பாலைவன வாழ்க்கை..

ஒபாமா மாமா இப்பதான் ஆரம்பித்து இருக்கிறார். {விசா மேட்டர்} முதலே மோசமாக இருக்கு.. கவலைகள் பெருகுகிறது..

இந்தியாவிலும் பாதிப்புகள் எப்படி இருக்கும்.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நிலைமை சரியாக ஒரிரு வருடங்களாகும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

யாராவது செல்பேசியில் "வேறு என்ன விசேஷம் ?? என தினமும் கேட்டால்

நான் கூறுவது..

"வேலையில் இருப்பதுமட்டுமே இன்றுவரை விசேஷம்" !!!!


பி.கு: நானும் அமீரகத்தில் 4 ஆண்டுகள் சுற்றி திரிந்தவந்தான்.

வடுவூர் குமார் said...

நிலமை மோசம் தான்.இருக்கும் (வேலை) வரை இருப்பது இல்லை என்றவுடன் திரும்பிடவேண்டியது தான்.
இன்று ... இப்போது என்று வாழக்கற்றுக்கொள்ள வேண்டியது தான்.

malar said...

நல்லாத்தான் எழுதி இருக்கிறிகள் .மார்ச்க்கு பிறகு ஸ்கூல் லில் TC எடுத்துவிட்டு மக்கள் போகிறர்கள் .குறிப்பட்ட 1000 க்கு மேல் குடும்பம் ஊர் போகிறார் களாம்.நீங்கள் சொனமாதிரி ஒவொரு வரின் முகத்திலும் கலவரம் .இதுவும் கடந்து போகும்.

ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திரக்கும் என்று சொல்லுவார்கள்.எல்லாம் இறைவன் விட்ட வழி.

malar said...

நல்லாத்தான் எழுதி இருக்கிறிகள் .மார்ச்க்கு பிறகு ஸ்கூல் லில் TC எடுத்துவிட்டு மக்கள் போகிறர்கள் .குறிப்பட்ட 1000 க்கு மேல் குடும்பம் ஊர் போகிறார் களாம்.நீங்கள் சொனமாதிரி ஒவொரு வரின் முகத்திலும் கலவரம் .இதுவும் கடந்து போகும்.

ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திரக்கும் என்று சொல்லுவார்கள்.எல்லாம் இறைவன் விட்ட வழி.

வினோத் கெளதம் said...

//சென்ற வருடம் வரை சிலர் வாய்ப்புகள் இந்தியாவில் கிடைத்த போதும் வரமாட்டேன் என பிடிவாதத்துடன் இருப்பது மட்டும் ஏன் என புரியவில்லை. ???

பழகிபோய்விட்டதோ அந்த பாலைவன வாழ்க்கை.. //

yosika vendiya vishayam.
palarin porulathara soolnizai mempatta piragum intha palaivana valkayin meethu ulla mogam enna..

ippadiku
orey varudhathil dubai valkai veruthu pona saga nanban..

கீழை ராஸா said...

//யாராவது செல்பேசியில் "வேறு என்ன விசேஷம் ?? என தினமும் கேட்டால்

நான் கூறுவது..

"வேலையில் இருப்பதுமட்டுமே இன்றுவரை விசேஷம்" !!!!//

அருமையான வரிகள் வண்ணத்துப்பூச்சியார்...
வருகைக்கும் வரிகளுக்கும் மிக்க நன்றி

butterfly Surya said...

நன்றி ராசா.

உலக திரைப்படம் நம்ப வலைய பாருங்க..

நிச்சயமாக பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் அன்புடன் அழைக்கிறேன்.

நன்றி.

Anonymous said...

//சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?//

anna, fantastic and realistic article.

vannathu puchiyar solrathu pola tan nanum sollitu iruken...got fed up! yaruna ena vishayam keta...innum velaila iruken atan vishesham sollitu iruken :D

குசும்பன் said...

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க! இதை பற்றி நான் எழுதிய ஒரு பதிவு பாதி எழுதியபடி நிற்கிறது:(

sindhusubash said...

மிகச்சரியா சொல்லி இருக்கீங்க.

//சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?//.

இதே நிலை தான் எங்களுக்கும்.நல்ல சம்பளம் இருந்தும்,அவரை விட்டுட்டு முன்னெச்சரிக்கையா ஊருக்கு போய்டலாம்னு நினைச்சா...சொந்தங்கள் பண்ற அலம்பல்கள் தாங்க முடியலை.பொருளாதார வீழ்ச்சி ஒவ்வொரு தனி மனிதனையும் மிக மோசமா பாதிச்சிருக்கு.

கார்க்கிபவா said...

நானும் பிரார்த்திக்கிறேன் நண்பரே

கீழை ராஸா said...

வடுவூர் குமார் said...
//இன்று ... இப்போது என்று வாழக்கற்றுக்கொள்ள வேண்டியது தான்.//


இது தானே மிக்க கடினமான விசயம் குமார்...வெளிநாட்டு வருமானத்திற்கேற்ப உள்நாட்டு வாழ்க்கையை ஆடம்பரமாக வாழப்பழகியவர்களுக்கு திரும்ப பழைய நிலைக்கு மாறுவது சற்றே கடினமான காரியம் தான்..இருந்தாலும்...காலம் எல்லாவற்றிற்கும் விடை வைத்திருக்கும்...

கீழை ராஸா said...

வடுவூர் குமார், மலர்,வினோத்,விநாயகம்,குசும்பன்,
சிந்து சுபாஸ்,கார்க்கி உங்கள் அனைவர் வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க நன்றி…

கீழை ராஸா said...

வடுவூர் குமார், மலர்,வினோத்,விநாயகம்,குசும்பன்,
சிந்து சுபாஸ்,கார்க்கி உங்கள் அனைவர் வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க நன்றி…

கீழை ராஸா said...

வண்ணத்துபூச்சியார் said...
நன்றி ராசா.

உலக திரைப்படம் நம்ப வலைய பாருங்க..

நிச்சயமாக பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் அன்புடன் அழைக்கிறேன்.

நன்றி.

கண்டிப்பாக வருகிறேன்..



குசும்பன் said...

//ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க! இதை பற்றி நான் எழுதிய ஒரு பதிவு பாதி எழுதியபடி நிற்கிறது:(//

இது பற்றி உங்கள் பதிவு காண ஆவலுடன் உள்ளேன்

ராஜ நடராஜன் said...

அமெரிக்க பொருளாதாரம் நிலைப்படும்வரை அதன் பின்னலில் உள்ள அனைத்து நாடுகளுமே அடக்கி வாசிக்க வேண்டிய அவசியத்தில்.

புதிய கட்டுமானங்கள் உருவாவதில் தாமதம் தவிர கட்டமைக்கப்பட்ட நிர்வாகங்கள் செயல்படவேண்டியே தீரும்.இருப்பவைகளில் ஒட்டிக்கொண்டு ஓரிரு வருடங்கள் நகர்த்த வேண்டியதுதான்.

கீழை ராஸா said...

வருகைக்கு மிக்க நன்றி ராஜ நடராஜன்...

பாச மலர் / Paasa Malar said...

கேள்விப்பட்ட போது ரொம்பக் கஷ்டமாக இருந்தது..எதிர்பாராத இது போன்ற நிகழ்வுகள் எத்தனை பேர் வாழ்க்கையைப் புரட்டிப் போடுமோ..

கீழை ராஸா said...

sindhusubash said...
//மிகச்சரியா சொல்லி இருக்கீங்க.

இதே நிலை தான் எங்களுக்கும்.நல்ல சம்பளம் இருந்தும்,அவரை விட்டுட்டு முன்னெச்சரிக்கையா ஊருக்கு போய்டலாம்னு நினைச்சா...சொந்தங்கள் பண்ற அலம்பல்கள் தாங்க முடியலை.பொருளாதார வீழ்ச்சி ஒவ்வொரு தனி மனிதனையும் மிக மோசமா பாதிச்சிருக்கு.//

நாம ஊருக்காகவே வாழப்பழகிட்டோம், நமக்காக வாழனும்னு நினைக்கிறப்ப அது முடிவதில்லை...இந்த வாழ்க்கை முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது...

கீழை ராஸா said...

பாச மலர் said...
//கேள்விப்பட்ட போது ரொம்பக் கஷ்டமாக இருந்தது..எதிர்பாராத இது போன்ற நிகழ்வுகள் எத்தனை பேர் வாழ்க்கையைப் புரட்டிப் போடுமோ..//

அதுதாங்க கவலையா இருக்கு

Anonymous said...

Naan Abu dhabi yil 13 varudam irundhaen. 2006'il thai naadu thirumbinen. Ingaeyum nilamai mosam thaan. Velai irukkiradhu, aanal sambalam varuma endra nilamai. Aanal pizhaikka vazhi irukku, andavan karunaiyil. Jagannathan. CHennai.

pudugaithendral said...

நிலைமாற வேண்டும் என்று மனம் நிறைந்த பிரார்த்தனையுடன்

புதுகைத் தென்றல்

வடுவூர் குமார் said...

திட்ட மேலாண்மையில் தாங்கள் உபயோகிக்கும் மென்பொருளைப் பற்றி எழுதுங்களேன்..முடிந்தால்.சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று தான்.

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி புதுகை தென்றல்...

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி புதுகை தென்றல்...

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி புதுகை தென்றல்...

Anonymous said...

//நிலைமாற வேண்டும் என்று மனம் நிறைந்த பிரார்த்தனையுடன்
//

repeteyyyyyyyyyy.....

manjoorraja said...

பொதுவாக எல்லா நாடுகளிலுமே இப்போதைய நிலை இப்படித்தான் இருக்கிறது.

அமீரகத்தில் கொஞ்சம் அதிகம்.

நிலமை ஓரளவுக்கு சீரடைய குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகலாம்.

M.Rishan Shareef said...

கத்தாரிலும் இதே நிலைதான் :(

ashok said...

hi raza... a timely post, written in ur very own style...as the world sinks into recession, all we can do is pray and hold on to our nerves...the situation is not very different here as well..hope things brighten up fast ...

தமிழ். சரவணன் said...

என்னவளம் இல்லை நம் திருநாட்டில்!
என்கையை ெய்நத வேண்டும் வளைகுடாநாட்டில்...

ஒழுங்காய் பாடு படு வயற்காட்டில்!
உயரும் உன்மதிப்பு அயல் நாட்டில்....


விவசாயி! விவசாயி!

நம்ப நாடு கடுந்து போயி என்ன வேல வேண்ணாலூம் பாப்போம் ஆனா நம்ப நாட்ல whitecoller job தேடுவோம்,,,

ஹேமா said...

வணக்கம் கீழை ராஸா.உங்கள் தளம் வந்தேன்.சாருகேசி...அருமையான பெயர்.வாழ்த்துக்கள்.

முன்னுக்கு இருந்த துபாய் கட்டுரை மனம் அழுத வரிகள்.உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எங்குமே - எதிலுமே.

இரு கவிதைகளும் வாசித்தேன் அருமை.இனி வருவேன்.நீங்களூம் குழந்தைநிலாப் பக்கம் வாங்க.
http://kuzhanthainila.blogspot.com/

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி,மஞ்சூர் ராசா அடிக்கடி வாங்க, முத்தமிழிலும் சந்திப்போம்...

வாங்க ரிஷ்வான் பாய்...கத்தாரைப் பற்றி பதிவு போடலாமே..?

Thanks Ashok...

தமிழ் சரவணன் ஐயா,விவசாயிகளுக்கு மட்டும் Recession கிடையாதா என்ன...?அடிக்கடி மழை பொய்த்து போக வருடவருடம் அவர்களுக்கு Recession தானே..?

கீழை ராஸா said...

நன்றி ஹேமா அவர்களே...கண்டிப்பாக வருகிறேன்..நீங்களும் அடிக்கடி வாங்க...

Unknown said...

hi

Unknown said...

ur essay is very nice

ரஷீத் said...

துபாய் நிலைமை ரொம்பத்தான் மோசமா இருக்கு போல...?

sakara said...

Everyday it's going worst. What to do!!??

Related Posts with Thumbnails