கவிதை பிறந்த கதை

இது என் கதையல்ல…என் கவிதை, (உங்கள் உச்சரிப்பில் உரைப்பதானால் கவுஜை…) இது என் கல்லூரி காலத்தில் என்னை என் பேனாவிற்கே அறிமுகமில்லா வேளையில் எனக்கும் கவிதை வருமென்று என்னை உணர வைத்த கவிதை…இது என் நண்பனின் கதை மட்டுமல்ல,
காதலை உணர்ந்த பெரும்பாலோனோரின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி…

அவன் எனக்கு மிக நெருக்கமான நண்பன்…அவன் உணர்வுகளை உதிர்க்கத் தெரியாத ஊமை…காதல் யாரை விட்டது…? அவனையும் தொட்டது ! காதலை சொல்லாமலேயெ அவனுள் தாஜ்மகால் கட்டி முடித்தான் கண்ணீரில்…! அவன் வேதனையில் நான் விசும்பினேன்…என்னுள் உறங்கிய படைப்பாளி அவனால் விழித்தான், படைப்பாளிக்கே உரிய கூடு விட்டு கூடு பாயும் வித்தை உணர்ந்து அவனாய் மாறி பேனாவுடன் தவமிருந்தேன்…அந்த ஊமைக்கனவை மொழிபெயர்க்கும் விதமாக இந்த கவிதையை எழுதி முடித்தேன்…அவன் கரம் கொடுத்தேன்…வாசித்தான்…நீண்ட நேரம் ! கவிதையை முடிக்கும் வேளை அவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கவிதை வரியில் விழுந்தது… அவன் நிமிர்ந்தான்… தன் காதல் கனவுகளை தாஜ்மஹாலாய் வடித்த அந்த கட்டிடக்கலை வல்லுனரை சாஜஹான் பார்த்த அந்தப்பார்வை அவன் விழிகளில் தெரிந்தது… என் முதல் கவிதைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் அது…

அந்த நெடிய கவிதையை உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்… படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்…

2 comments:

தென்பொதிகை said...

கவுஜை எழுத ஆரம்பித்ததற்கு முன்னுரை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.
கவுஜைய சீக்கிரம் வெளி இடுங்க சாரு / புலி கேசி. உங்கள் நண்பரைப்போல நானும் கண்ணீர் விட்டு உங்கள் கவிதையை அங்கீகரிக்கிறேன்.
தென்பொதிகை.

கீழை ராஸா said...

தென் பொதிகையாரே, உங்கள் படைப்பு எப்போ வரும்..?

Related Posts with Thumbnails