நான் தாங்க மாதவன். சிறுகதை எழுத்தாளர் மாதவன்னு சொன்னா உங்க எல்லோருக்கும் தெரியும்.நூற்றுக்கும் மேலே சிறுகதைகள் எழுதி பல சிறுகதைகளுக்குப் பரிசும் பாராட்டுக்களும் பெற்றவன் என்றாலும் என் மனைவிக்கு மட்டும் என்னைத் தன் கணவனாக மட்டுமே அடையாளம் தெரியும்..சமீபத்தில் விபசாரத்தை மையமாக வைத்து நான் எழுதிய “சிகப்பு கனவுகள்” என்ற கதை ஊரெல்லாம் பாராட்டுப் பெற என் வீட்டில் எனக்குக் கிடைத்த வித்தியாசமான பாராட்டைத்தான் நீங்க இப்ப பார்க்கப் போறீங்க….
“ஏன் இப்படி அப்பிராணியா இருக்கே…எழுத்துன்றது ஒரு தனி உலகம், எந்த எழுத்தாளன், தான் எழுதப்போற கதாபாத்திரமா கூடு விட்டு கூடு பாய்ந்து எழுத முடியுதோ அவன் தான் சிறந்த எழுத்தாளன். நாளைக்கே நான் சாவைப் பற்றி ஒரு கதை எழுதுனா, செத்து அனுபவித்து தான் எழுதுவேன்னு சொல்ல முடியுமா..?
"இப்படி எதையாவது லெக்சர் பண்ணி என் வாயை அடைச்சிடுங்க…எதை எழுதுறதுன்னு வரைமுறை இல்லாமல் இப்படி கண்டவளையும் பத்தியும் எழுதுன்னா உங்க எழுத்தாளர் கூட்டம் வேணுமானா உங்களை மெச்சிக்கலாம் ஆனா உலகம் காரித் துப்பும்."
“நீ ஒரு எழுத்தாளனுக்கு மனைவியாக இருக்கத் தகுதி இல்லாதவள்” கோபத்தில் வார்த்தைகள் வெடித்தது.
“முதல்லே நீங்க ஒரு பொண்ணுக்கு நல்ல கணவனா இருங்க அப்புறமா எழுத்தாளனா இருக்கலாம்” பதிலுக்குப் பதில்
“உனக்கு நான் என்ன எழுதுனேன்னு தெரியாது உனக்கு படிக்கிற பழக்கமும் கிடையாது. பின்னே யாரு சொல்லி இப்படி பேயாடுறே…?”
“யாரும் சொல்லலை அந்த கன்றாவியை நானே படிச்சேன்”
என்னுள் ஆச்சரியம்…எத்தனையோ முறை என் எழுத்துக்களை அவளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திய போதும் இதெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்று தட்டிக்கழித்தவள் இன்று அவளாகப் படித்தாளா..?!!
எனக்கு வார்த்தைகள் வரவில்லை அவள் தொடர்ந்தாள்.
“அது என்னங்க அவ ஜாக்கெட் தைக்க எத்தனை மீட்டர் துணிவேணுங்கறதிலே இருந்து அவ பிரா எந்த ப்ராண்டுங்கற வரை ஒரு கேவலமான வர்ணனை… இதுவெல்லாம் கற்பனைன்னு சொல்லுவீங்க நான் நம்பனும்…? “லேசாக விசும்ப ஆரம்பித்தாள்…
இந்த விசும்பல் தானே பெண்களுக்கு ஆண்கள் இதயத்தை பதம் பார்க்க்கும் ஆயுதம்…இனி என்ன சொன்னாலும் இவளுக்குப் புரியாது…
சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் கண் விழித்தான்.
“ ஏம்மா அழறே..”
“எல்லாம் என் தலை விதி”
அவனுக்குப் புரியவில்லை…ஆனால் நான் சொல்ல வேண்டியதை அவள் சொல்கிறாள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது..
“இப்ப நான் என்ன பண்ணவேண்டும்…” பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகக் கேட்டேன்.
“இனி நீங்க எழுதக்கூடாது“
இவ்வளவு பெரிய தண்டனையை எதிர்பார்க்க வில்லை. எனக்கு கோபம் சுளீரென்று ஏறியது….
“கழுதை, கழுதை, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…?” என்ற படி அந்த இரவில் சடாரென்று கதவைச் சாத்தியபடி வெளியானேன்.அங்கிருந்தால் மிருகமாகி விடுவேனென்றே தோன்றியது…
“போங்க போங்க எவ கூடயாவது போயி அடுத்த கதைக்கு ரெடி பண்ணிக்கிட்டு வாங்க…”
அவள் பின்னாலிருந்து கத்துவது தெருவில் கேட்டது…தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் கலந்த வெளிச்சத்தில் சாலை…தூரத்தில் நாயின் ஊளை…எங்கே செல்கிறோம் என்று தெரியாத நடை…
வினிதா நான் காதலித்து மணந்த மனைவி…காதலிக்கும் போது அவளுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும்…எனக்குப் பிடித்ததெல்லாம் அவளுக்குப் பிடிக்கும்…காதலுக்கு கண் கிடையாது அல்லவா…?
என்றாளும் என் எழுத்தில் மட்டும் அவள் ஆரம்பத்திலிருதே ஆர்வம் காட்டியதில்லை.படிப்பதென்றாலே அவளுக்கு அலர்ஜி.ஆரம்பத்தில் நானும் கண்டு கொள்ளவில்லை.அப்புறம் என் எழுத்துக்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு ஊரே பாராட்டும் போது…அவளிடம் இருந்தும் சில எதிர்பார்ப்புகள் வர ஆரம்பித்தது…மற்றபடி எல்லாவற்றிலும் எனக்கு மிகப் பொருத்தமானவள். அன்பு காட்டுவதில் அழகான ராட்சஷி.
கோபம் சற்று குறைந்திருந்தது…சே அவசரப் பட்டு விட்டோமோ…நாம் செய்தது சரியா…? கதையை மனதிற்குள் மீண்டும் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன்.’சற்று அதிகமாகத்தான் போய் விட்டோமோ…?இருந்தாலும் அந்தக்கதை விபச்சார ஒழிப்பு சம்பந்தப் பட்ட தாயிற்றே…அந்த நல்ல விசயம் ஏன் அவள் கண்ணுக்குப் படவில்லை…?’
சில நாட்களுக்கு முன் “நீயா நானா..?” நிகழ்ச்சியில் கோபினாத் சொன்னது நினைவிற்கு வந்தது. நாங்கள் சுதந்திரமாக இருக்கக் கணவர்கள் அனுமதிப்பதில்லை என்ற மனைவிமார்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர், இந்திய ஆண்கள் தன் மனைவி பற்றி சமூகம் ஏதும் தவறாகச் சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி செய்கிறார்கள்.. என்ற போது என் மனமும் ஆமோதித்தது…இப்போது அதையேத்தான் வினிதா செய்திருக்கிறாள்…தன் கணவன் பற்றி மற்றவர்கள் குறை ஏதும் கூறிவிடக்கூடாது என்பதற்காக…ஒரு குடும்பத்தலைவியாக இருந்து சிந்தித்த போது என் தவறு எனக்குப் புரிந்தது…
நாம் இறங்கிப் போகலாமா? தவறில்லை எத்தனையோ முறை அவளை காயப்படுத்திய போதும், உதாசீனப்படுத்திய போதும், சிறிதும் ஈகோ பார்க்காமல் “ உனக்கும் ரொமாண்டிக்கும் ரொம்ப தூரம் உன்னைப் போய் நான் ஏன் லவ் பண்ணினேனோ ? என்று கலாய்த்த படி என்னை சீண்டும் போது, முகத்தில் சிரிப்பை அடக்கி உம்மென்ன்று இருக்க முயற்சிக்கும் என்னை சிரிக்க வைக்கும் பல முயற்சிகளை எண்ணிப்பார்த்தேன்…அவளா?எழுத்தா? என்று வந்தால் எனக்கு அவள் தானே முக்கியம்…நீண்ட பெருமூச்சு விட்டேன்…என் கோபம் முற்றிலும் மறைந்திருந்தது…
வீடு திரும்பினேன்…அவள் முகம் திருப்பினாள்….
“நான் இனி எழுதப்போவதில்லை”
நீண்ட மௌனம் விடியும் வரை…
காலையில் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்…அதன் பின் அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ததாக அவள் காட்டிக் கொள்ளவில்லை…ஒரு வாரம் பத்திரிக்கை நண்பர்கள் என்ன எதுவும் எழுத வில்லையா? என்ற போது வேலை பளுவின் மீது பழி போட்டு தப்பித்தேன்…என் மனைவி சொன்னால் நான் எழுத வில்லை என்றா சொல்ல முடியும்…?
“எதுக்கு”
உங்களை எழுத வேண்டாமென்று சொன்னதுக்கு…”
மௌனம்
நீங்க மறுபடியும் எழுதணும்..”
“ இன்னிக்கு “கிளப்”பிளே ஒரு பொண்ணைப் பார்த்தேன்…அவங்க கணவனை விட்டுப் பிரிஞ்சி இருந்ததாகவும் உங்க கதை ஒன்றை படிச்சி அதனாலே சேர்ந்து இப்ப அவ்வளவு அன்னியோன்யமா இருப்பதாகவும் சொன்னாங்க வீட்டிலே வந்து படிச்சேன்…கணவன் மனைவி எப்படி இருக்கனும் என்பதற்கு அப்படி ஒரு உதாரணக் கதை அது…நீங்க எப்படியெல்லாம் என் கிட்டே ரொமான்டிக்கா இருக்கனும் என்று நினைக்கிறேனோ அதுக்கு ஒரு படி மேலே அந்த கதை இருந்தது… ஆனா நீங்க ஒரு முறை கூட என்கிட்டே அப்படி நடந்ததில்லை,ரொமாண்டிக் கிலோ என்ன விலை..?ன்னு கேட்கிற நீங்களா அதை எழுதினீங்கன்னு யோசித்தேன் அப்ப தான் எனக்கு புரிந்தது நீங்க எதையும் அனுபவிச்சி எழுதுறதில்லை எல்லாம் கற்பனைதான்னு…சாரி நான் தான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்…நீங்க நிறைய எழுதனும்…”
அவள் பேசிக் கொண்டே போக ஒரு எழுத்தாளனாகத் தலை நிமிர்ந்து, ஒரு கணவனாகத் தலை குனிந்தேன்.
21 comments:
கடைசி வரி ஒன்னும் சொல்ல விடலை ராஸா
//ஒரு எழுத்தாளனாக தலை நிமிர்ந்து, ஒரு கணவனாகத் தலை குனிந்தேன்.//
உண்மையான வரிகள்.....கதை நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்.
புரிதல் இல்லன்னா இல்லறம் இல்லன்னு சொல்லவறீங்க.
அருமை.. பின்றீங்களே..... அப்ப சீக்கிரமே உங்க சிறுகதை தொகுப்பு வெளியீடு இருக்கும்.....
சில நாட்களுக்கு முன் “நீயா நானா..?” நிகழ்ச்சியில் கோபினாத் சொன்னது நினைவிற்கு வந்தது. நாங்கள் சுதந்திரமாக இருக்க கணவர்கள் அனுமதிப்பதில்லை என்ற மனைவிமார்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர், இந்திய ஆண்கள் தன் மனைவி பற்றி சமூகம் ஏதும் தவறாகச் சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி செய்கிறார்கள்.. என்ற போது என் மனமும் ஆமோதித்தது…இப்போது அதையேத்தான் வினிதா செய்திருக்கிறாள்…தன் கணவன் பற்றி மற்றவர்கள் குறை ஏதும் கூறிவிடக்கூடாது என்பதற்காக…ஒரு குடும்பத்தலைவியாக இருந்து சிந்தித்த போது என் தவறு எனக்குப் புரிந்தது…
இந்த மாதிரி எல்லாரும் புரிஞ்சிகிட்டு வாழ்ந்தால் பிரச்சனையே இருக்காது சார்.. நல்லா இருக்கு உங்க பதிப்பு..
//மையமாக வைத்து நான் எழுதிய
“சிகப்பு கனவுகள்” என்ற கதை ஊரெல்லாம் பாராட்டுப் பெற என் வீட்டில் எனக்குக் கிடைத்த வித்தியாசமான பாராட்டைத்தான் நீங்க இப்ப பார்க்கப் போறீங்க….//
அதுபோல எழுதுவதும் ஒருவித போதையா ?
அட்டகாசம் ... ( உங்கள் மந்தகாசப் புன்னகை கண் முன் தெரிகிறது.
நல்லாருக்கு எழுத்தாளரே..
//நட்புடன் ஜமால் said...
கடைசி வரி ஒன்னும் சொல்ல விடலை ராஸா//
:-(..?
கீழை ராஸாண்ணே,
நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கு... கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்.
கதை நல்லா இருக்கு.
கீழை ராஸாண்ணே,
நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கு... கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்.
கதை நல்லா இருக்கு.
//கிளியனூர் இஸ்மத் said...
//ஒரு எழுத்தாளனாக தலை நிமிர்ந்து, ஒரு கணவனாகத் தலை குனிந்தேன்.//
உண்மையான வரிகள்.....கதை நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்.//
இந்த எழுத்திற்கெல்லாம் உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் தான் காரணம் பிரியாணிக் கவிஞரே...
//ஜீவன்பென்னி said...
புரிதல் இல்லன்னா இல்லறம் இல்லன்னு சொல்லவறீங்க.//
தங்கள் புரிதலுக்கு நன்றி...
ஓட்டு போட்டாச்சு, கதை அருமை..
அப்புறமென்ன கேமராவை தூக்கவேண்டியதுதானே
உங்கள் ஊமையன்
timeachu vettaikku polam vanganna..
Ang..Ang..Ang..Ang..
நல்ல கதைக்கரு. பதிவு என்பதற்காக டக்கென்று முடித்துவிட்டீர்கள் போலும், இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.
sirugadaikkana ilakkanam yellam irukkara sariyana neelathil amainda nalla kadhai.
aduthathu enna?
வீட்டுக்கு வீடு நடக்கும் கணவன் - மனைவி புரிதலின்மையை அழகாக கதை வடிவில் எழுதி இருப்பது அருமை.கடைசி வரி கலங்கடித்து விட்டது.
Super vathi. Interesting to read. Keep going...
Kandanathan
அப்படிப் போடு அரிவாளைன்னு சொல்லணும் போலிருந்தது வினிதாவுக்கு
சூப்பர் பன்ச்ச்
miga elithaana urainadai.. vazhththugal.
Post a Comment