வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?
துபாய் தமிழ்த்தேர் இதழுக்காக கொடுக்கப்பட்ட "எதைத்தேடுகிறோம்" என்ற தலைப்பிற்கு நான் எழுதிய தேடல்கள்...
- பந்தங்கள் சூழ
வழியனுப்பப்பட்டு
பறந்து வரும் முன்
சொந்தங்கள் முன்
தொலைத்த –அந்த
சந்தோஷத்தை…..
- கட்டிளம் காளையாக
பாலைபுகுந்து இன்று
கசக்கிப்பிழியப்பட்ட
அடிமாடுகளாய்
இழந்து நிற்கும்
இளமையை…
- KFC,சவர்மாவின்
ருசியில் சிக்கி
சவமாகிப்போன நாக்கில்
அன்று ருசித்த
அம்மாவின் சமையல்
ருசியை…
- வழியனுப்ப வாசல்
வந்தவளின்
விழி உகுத்த
சிறு துளியில் -மனம்
வலிக்க மறுநொடியே
மறந்து வந்த
இதயத்தை…
- விடுமுறையில்
வீடு செல்ல
வழிப்போக்கன் போல்
பார்த்த பிள்ளை
புறப்படும் முன்
புன்முறுக “அப்பா” என்க
புல்லரித்து
அள்ளி அனைத்து
கொஞ்சிய
அந்த நொடி
பிஞ்சு ஸ்பரிசத்தை….
- திருவிழாக்கள்,
பெருநாட்கள் –
உற்றார் புடைசூழக்
கொண்டாட
உளவியலாய் களையிழந்து
மனமிங்கு தனிமையில்
திண்டாட
அலை, அலையாய்
தொலைத்து நிற்கும்-அந்த
இனிய தருணங்களை….
பொருள் தேட என்றெண்ணி
புறப்பட்டு வந்தோம்-இங்கு
இருள் சூழ அருளிழந்து-மனம்
புளுகி நின்றோம்
தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
தொலைத்து வந்த
சந்தோசத்தை
விட்ட இடம் விட்டு
மற்ற இடத்தில்
தேடுகிறோம் தேடுகிறோம்…
39 comments:
\\இழந்து நிற்கும்
இளமையை…\\
இதுதான் பெரிய இழப்பு
நெஞ்சில் வலிகளுடன்
வாழ்த்துகள் நண்பா
\\தொலைத்து வந்த
சந்தோசத்தை
விட்ட இடம் விட்டு
மற்ற இடத்தில்
தேடுகிறோம் தேடுகிறோம்…\\
ஆம்!
இன்னும் இன்னும்
\\விடுமுறையில்
வீடு செல்ல
வழிப்போக்கன் போல்
பார்த்த பிள்ளை
புறப்படும் முன்
புன்முறுக “அப்பா” என்க
புல்லரித்து
அள்ளி அனைத்து
கொஞ்சிய
அந்த நொடி
பிஞ்சு ஸ்பரிசத்தை….\\
அழுதே விட்டேன் ராஸா
இப்பொழுது தான் ஊரை பிரிந்து வந்தேன்
\\மனம்
வலிக்க மறுநொடியே
மறந்து வந்த
இதயத்தை…\\
வரிகள் முழுக்க வலிகள்
எதார்த்தங்களோடு
அனுபவித்து கொண்டு இருப்பவர்களில் ஒருவனாய் ...
வாங்க ஜமால்,
ஊரிலே எல்லோரும் நலமா?
// ஆ.ஞானசேகரன் said...
நெஞ்சில் வலிகளுடன்
வாழ்த்துகள் நண்பா//
நன்றிங்க...வருகைக்கும், வாழ்த்திற்கும்..
மனது கலங்கிடுச்சு.
//பொருள் தேட என்றெண்ணி
புறப்பட்டு வந்தோம்-இங்கு
இருள் சூழ அருளிழந்து-மனம்
புளுகி நின்றோம்
தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
தொலைத்து வந்த
சந்தோசத்தை
விட்ட இடம் விட்டு
மற்ற இடத்தில்
தேடுகிறோம் தேடுகிறோம்…
//
தாய் மண்ணை விட்டு இடம் பெயந்தவரின் மனநிலையை ஆழமாக உணர்த்தும் வரிகள்.என்ன செய்வது? நம் குடும்பத்திற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று மனதை தேற்றிக்கோவதையன்றி வேறு வழியில்லை.
//வழியனுப்ப வாசல்
வந்தவளின்
விழி உகுத்த
சிறு துளியில் -மனம்
வலிக்க மறுநொடியே
மறந்து வந்த
இதயத்தை…//
கவிதை படித்து மனம் கனமானது ராஸா...
padangal arumaiyaaka ullathu
sekar
படிக்க படிக்க
பாரமாகிறது
உங்களை யாரய்யா அங்கே போகச் சொன்னது..?
அனைத்து தமிழ் நெஞ்சங்களின் குரல் உங்கள் கவிதை
அனைத்து தமிழ் நெஞ்சங்களின் குரல் உங்கள் கவிதை
repeatu
//Rajeswari said... நம் குடும்பத்திற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று மனதை தேற்றிக்கோவதையன்றி வேறு வழியில்லை.//
உண்மை ராஜேஸ்வரி...வேறு வழியில்லை...
மனதை உலுக்கும் வரிகள்.
//புதியவன் said...
கவிதை படித்து மனம் கனமானது ராஸா...//
எழுதி முடித்ததும் எனக்கும் தான்...
//padangal arumaiyaaka ullathu
sekar
//
நன்றி சேகர்
//திகழ்மிளிர் said...
படிக்க படிக்க
பாரமாகிறது//
வருகைக்கு நன்றி திகழ்மிளிர்...
//shabi said...
அனைத்து தமிழ் நெஞ்சங்களின் குரல் உங்கள் கவிதை//
நன்றிங்க ஷபி...
ஆம் நண்பரே. உற்றார் உறவை துறந்து, நல்லது கெட்டதைத் துறந்து, எந்த சந்தோஷமும் இல்லாத வாழ்க்கைத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
// கட்டிளம் காளையாக
பாலைபுகுந்து இன்று
கசக்கிப்பிழியப்பட்ட
அடிமாடுகளாய்
இழந்து நிற்கும்
இளமையை… //
ஆம் காசுக்காக இளமையை தொலைத்து விட்டு நிற்கின்றோம்.
//பார்சா குமாரன் said...
அனைத்து தமிழ் நெஞ்சங்களின் குரல் உங்கள் கவிதை
repeatu//
REPEATU...
// தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
தொலைத்து வந்த
சந்தோசத்தை
விட்ட இடம் விட்டு
மற்ற இடத்தில்
தேடுகிறோம் தேடுகிறோம்… //
நானும் தேடிக்கிட்டே இருக்கேன்
ஒன்னுமே இல்ல..
ஆனது ஆச்சு இன்னும் அஞ்சு
மாசம்..
// அலை, அலையாய்
தொலைத்து நிற்கும்-அந்த
இனிய தருணங்களை…. //
என்னமோ பண்ணுது ராஸா...
//சதங்கா (Sathanga) said...
மனதை உலுக்கும் வரிகள்.//
நல்வரவு சதங்கா...
// அழுதே விட்டேன் ராஸா
இப்பொழுது தான் ஊரை பிரிந்து வந்தேன் //
me too,..பெற்றோரைப் பிரியும் போது வராத அழுகை பிள்ளையை தேடும்போது வருகிறது,..
என்ன செய்ய home loan படுத்தும் பாடு,..
ஆனால் உங்கள் கவிதை சூப்பர். அதன் வலி நமக்கு மட்டுமே தெரியும். என்ன வளம் இல்லை நம் நாட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆனால் காலை 7மணிக்கு offceல் ஆஜர்.
//இராகவன் நைஜிரியா said...
ஆம் நண்பரே. உற்றார் உறவை துறந்து, நல்லது கெட்டதைத் துறந்து, எந்த சந்தோஷமும் இல்லாத வாழ்க்கைத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.//
உண்மை தான் நண்பரே..
முதல் வருகைக்கு நன்றி...சாரதி
jothi said...
//me too,..பெற்றோரைப் பிரியும் போது வராத அழுகை பிள்ளையை தேடும்போது வருகிறது,..//
உண்மைதான் ஜோதி..
Rasa I have tagged in my blog last post. If u have time please visit, and if u wish u can accept the tag, no compeltion.
ஒட்டுமொத்த துபாய் தமிழர்கள் சார்பில்,
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
எங்கள் மனதில் உள்ள வலி,
உங்கள் கவிதை வரிகளில்!
எப்பா சாமி அழுத்துட்டேன் யா என்னமா எழுதுறிங்க சும்மா மனசு கதறிடுச்சு..
அந்த புகைப்படமும் ஆயிரம் வார்த்தைகள் பேசுது நண்பா
//விடுமுறையில்
வீடு செல்ல
வழிப்போக்கன் போல்
பார்த்த பிள்ளை
புறப்படும் முன்
புன்முறுக “அப்பா” என்க
புல்லரித்து
அள்ளி அனைத்து
கொஞ்சிய
அந்த நொடி
பிஞ்சு ஸ்பரிசத்தை…./
முடியவில்லை .. எல்லாமே உணர்ச்சி குவியல்கள் நண்பா
//வழியனுப்ப வாசல்
வந்தவளின்
விழி உகுத்த
சிறு துளியில் -மனம்
வலிக்க மறுநொடியே
மறந்து வந்த
இதயத்தை…//
எனன்னிடம் பொற்கிழியாய் இல்லாடியும் இருப்பது நிறைய அன்பு அதை உங்களுக்கு தருகிறேன் என்னமா கவிதை மனச கல்ங்க வைக்குது
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க கீழை ராசா
//நட்புடன் ஜமால் said...
Rasa I have tagged in my blog last post. If u have time please visit, and if u wish u can accept the tag, no compeltion.//
விரைவில் எழுதுகிறேன் நண்பா..
//கலையரசன் said...
ஒட்டுமொத்த துபாய் தமிழர்கள் சார்பில்,
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
எங்கள் மனதில் உள்ள வலி,
உங்கள் கவிதை வரிகளில்!//
வருகைக்கு நன்றி கலையரசரே
நன்றி சுரேஷ்
நன்றி கிரி
Keezhai Raasaa
Ul manasin valiyai appadiye pradhipalichu irukeenga......
Naan kooda Middle East pathi ennoda www.edakumadaku.blogspot.com la ezhudhittu varen....
Time kedaikkarappo vandhu paarunga...
kidaiththathu konjam kaasu
aanaa, moththathil namma vaazhkkaiye pochu.........
உங்க கவிதை உணர்வுப் பூர்வமாக இருக்கிறது. இதே போல அயல்நாட்டு தோழிகள் கேட்டதற்காக சென்ற தீபாவளியின் போது எழுதிய கவிதை இது, பாருங்கள்: http://sumazla.blogspot.com/2009/05/blog-post_2868.html
இந்த வாரம் பகுதி புதுமையாக இருக்கிறது. இதில் எனக்கு பங்கு தந்தமைக்கு நன்றி!
Post a Comment