ஒகேனக்கல் ஒருமைப்பாடு...கண்ணீர் தேசத்தின் தண்ணீர் சோகம்…

பயிர் வாழத்தான்
தண்ணீர் தர வில்லை
உயிர் வாழவுமா..?
-தமிழக முதல்வர்
இந்தியா என் தாய் நாடு
இந்தியர் அனைவரும்
நம் உடன் பிறந்தவர்கள்
-நாம்
எங்கிருக்கிறோம் நாம்..?
எங்கிருக்கிறது நம் நாடு..?
எங்கிருக்கிறது ஒருமைப்பாடு..?
உள்ளம் கொதிக்கிறது…

புகுந்த வீட்டிற்குப்
புறப்படும் பெண்ணை
பிறந்த வீட்டில்
சிறை வைக்கும் கொடுமை…
புருஷன் வீட்டில்
புகுந்த பெண்ணை
புத்தியில்லாமல்
தடுக்கும் கடுமை…
வேறெங்கு காண
இயலும் இந்த மடமை..?

வறண்டது நம் மண் மட்டுமல்ல…
அவர்கள் மனங்களும் தான்…



வலது கை கொடுத்ததை
இடது கை அறியாதது
உயர் தர்மம்…
இது தருமமல்ல…
தானாய் வருவது ( இதற்கும்)
வருவதற்கு கணக்கு
வந்ததற்கும் கணக்கு
என்றால் ஏன் வராது
மனப் பிணக்கு…?

மத்திய அரசை
மதிப்பதில்லை
சுப்ரீம் கோர்ட்டா
ச்சூ..ச்சூ…
நடுவர் மன்றம்
நடைமுறையில் இல்லை
ஒரே நாடு
அது நம்ம கூப்பாடு…

எங்கே அந்த ஒற்றுமை..?
எங்கே அந்த சகோதரத்துவம்..?
எங்கே அந்த ஒருமைப்பாடு..?
எல்லாம் பெயரளவில்…

திட்டங்கள் தீட்டிய
வண்ணமுள்ளன…
உண்ணாவிரதங்கள்
விருந்தோடு முடிந்தன…
பேச்சு வார்த்தை
மூச்சுள்ள வரை…
எஞ்சியிருப்பது..?
தாகத்தோடு பயிர்களும்…
சோகத்தோடு நம் உயிர்களும்…



தலைவர்களே..
மத்தியத் தேர்தல்..
மாநிலத்தேர்தல்
என்று மட்டும் எங்களைப்
பார்க்காதீர்கள்…
நாங்கள் மனிதர்கள்
உணர்வு உள்ள மனிதர்கள்…
வேண்டாம்…இந்த மரண விளையாட்டு
நதிகளை இணைக்கும் முன்
மனம் தனை இணைக்க வாருங்கள்..
இருக்கும் வரை
மகானாக இல்லாவிட்டாலும்
மனிதராக வாழுங்கள்....

5 comments:

கீழை ராஸா said...

Test

Anonymous said...

அருமையான வரிகள், ஆழமான கருத்துக்கள்.. ஒரு கவிதையில் அம் மாவட்ட வறட்சிக் காட்சிகள் கண் முன் விரிகின்றன...( நேரிலும் பார்த்தவன் நான்)இக் கொடுமையை அரசியல் வாதிகள் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார்கள்...?

அன்புடன்
ஜியா

Unknown said...

மகானாக இல்லாவிட்டாலும்
மனிதராக வாழுங்கள்....

மிக உண்மை...
அனைவரும் நல்ல மனிதர்களாக இருந்தாலே போதும்... இங்கு கடவுள்களும்,ஒரு சில கயவாளிகளும் தேவையே இல்லை...

கீழை ராஸா said...

நன்றி ஜியா...

கீழை ராஸா said...

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி பேரரசன்..

Related Posts with Thumbnails