பாலைவனப் புழுதிக்காற்று…


துபாய்…எத்தனையோஇளைஞர்களின் கனவு தேசம்...!, வாழ்வை வளப்படுத்த வேண்டி வறுமையில் வந்தோரை வெறுமை போக்கச்செய்த வியாபார பூமி..!

திரவத்தங்கத்தை திகட்டாது அள்ளித்தந்து சரித்திரப்புகழ் சாம்ராஜ்யங்களை சலசலக்க வைத்து, கற்காலத்தை கண நேரத்தில் பொற்காலமாய் மாற்றிய மாயாஜால பூமி…!

இங்கே வாழும் மக்களின் நிலைப்பாடு என்ன…? நாட்டு வளர்ச்சியில் மைக்ரோன் அளவில் தானும் வளர்ச்சி காணும் மூன்றாம் தர உழைப்பாளியின் உண்மை நிலை என்ன…வரும் நாட்களில் அதைப்பற்றி நிறையஎழுதப்போகிறேன்.


இந்தக்கதையும் அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் பாடு தான். ”சிறகுதொலைத்த சிட்டுக்குருவிகள்” இது ரஹீம் என்ற ஒரு தனிப்பட்ட இளைஞனின் கதை மட்டுமல்ல,கண்ணீரெல்லாம் வியர்வையாகவே இனம் காணப்படும் இத்தேசத்தில்,தன்னை எரித்து தன் பந்தம் காக்கும் பலத்தியாகச்சுடர்களின் வரலாறு இது…உணர்ச்சிகளை உள் புதைத்து தன் உறவுகளை உயரச்செய்யும் பல உன்னத மனிதர்களின் உண்மை நிலை
இது…வாசியுங்கள்...இந்தபாலைவனப்ப்ழுதிக்காற்றை நீங்களும் கொஞ்சம் சுவாசியுங்கள்…

6 comments:

ashok said...

Happy Pongal Raza...beautiful blog..keep up the good work.

வசந்தம் ரவி said...

சும்மா நச்சுன்னு இருக்கு.....பதிவும்-உங்க புது டெம்பிலேட்டும்


ஆனா கமெண்டு போட word verification வேணாமே

கீழை ராஸா said...

வருகைக்கு நன்றி! WORD VERIFICATION, இனி இல்லை...

மாப்பிள்ளை said...

கதை எப்ப வரும் ?

உமையணன் said...

நம்மூர்க்காரவுகளா நீங்க? நல்லா எழுதுங்கய்யா.

கீழை ராஸா said...

நன்றிங்கையா...அடிக்கடி வந்து போங்க..

Related Posts with Thumbnails