உன் நினைவுகள் கரையான்களாய்
மற்றவர்களுக்கு வேண்டுமானால்
குளித்து முடிந்ததும் தலை துவட்டினாய்
இருந்தாலும் முயற்சிப்பேன்
“ஏமாற்றிய இதயத்தின்
இது ஒரு சமூக அக்கறை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின் கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணெய் தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…
Posted by
கீழை ராஸா
at
16
comments
Labels: அனுபவம், கல்லூரி, கவிதை மாதிரி, காதல்
“பாட்டி நானும் பதிவராயிட்டேன்”
நான் வலைப்பூ ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தை என் எழுத்து வேகத்திற்கு எண்ணெய் ஊற்றி எனர்ஜி தந்த சீதாப்பாட்டிக்கு அமெரிக்காவிற்கு அழைத்து பகிர்ந்து கொண்ட தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன்.
அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று….
நான் எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பது என் நினைவில் இல்லை ஆனால் என் பள்ளி பருவத்தில் நான் எழுதாத எழுத்திற்கு கிடைத்த விமர்சனங்கள்…என்னுள் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகியிருக்கிறது.
Posted by
கீழை ராஸா
at
34
comments
Labels: அனுபவம், நிகழ்வுகள், பதிவர் வட்டம், மொக்கை
Posted by
கீழை ராஸா
at
44
comments
Labels: நகைச்சுவை, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், மொக்கை
என் இனிய வலைப்பூவாசிகளே…
இது தேர்தல் நேரம் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது, மூன்றாவது அணி,நாலாவது அணி என்று தொகுதிகளைவிட கூட்டணிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகிறது. எல்லாத்துறையினரும் அரசியலில் போட்டிபோட்டு அரசியலில் குதிக்கும் போது பதிவர்களாகிய நாமும் அதில் குதித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் பலன் தான் இந்த பதிவு…நம் பதிவர்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ இந்த பதிவுக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் நண்பன் கீழைராஸா….
தமிழ்மண அலுவலகம் அன்று திருவிழா போல் காணப்பட்டது… எல்லாப் பதிவர்களும் ஒன்று கூடினால் சொல்லவா வேண்டும் …அது பதிவர்கள் அரசியலில் குதிப்பதற்கான ரகசியக்கூட்டம் (!!!) என்றாலும் ரகசியமாக எல்லோரும் தன் பங்கிற்கு பதிவு போட்டு விட்டு வந்ததால் அது ஒரு பொதுக்கூட்டம் போல் காட்சியளித்தது…எல்லா நாட்டிலிருந்தும் பதிவர்கள் வந்து குழுமியதால் கட்டுப்படுத்துவது சற்று கடினமாகவே இருந்தது…கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்க அண்ணாச்சி தலைமையேற்க அவர் சகாக்கள் சீட்டை தக்க வைத்துக் கொண்டனர்.


Posted by
கீழை ராஸா
at
36
comments
Labels: அரசியல், தேர்தல், நகைச்சுவை, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், மொக்கை
இரண்டு வருடம் முன்பு வளைகுடா பொருளாரச் சலனம் வருமென்று யாராவது கூறியிருந்தால் அவரை பைத்தியக்காரனென்று எள்ளி நகையாடியிருப்பார்கள்…
சென்ற வருடம் துபாயில் ஆள்குறைப்பு நடைபெறும் என்று யாராவது ஆருடம் சொல்லியிருந்தால் அவரை கல்லால் அடித்துக் கொன்றிருப்பார்கள்.ஆனால் இன்று…

Posted by
கீழை ராஸா
at
22
comments
Labels: கட்டுரை, துபாய், பொருளாதாரம்
எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…
“அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?”
“இந்த கம்பெனி இனி தாங்காதாமே ?”
“1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”
“போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”
இப்படி வாய்க்கு வந்தபடி புரளி…
உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…?இதுவெல்லாம் பொய்யா ..?
என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை…வந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை…
சென்ற வாரம் நண்பனொருவன் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, "கவலைப்படாதீங்க, நான் , உங்களுக்காக நேந்துக்கிறேன்"… எனக்கூற இவனோ நக்கலாக, "நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு நேந்துக்கோ "என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்…
இன்று அவனுக்கு வேலை இல்லை…
இன்னொருவன் தன் மனைவி தனக்கு PASSPORT வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற "உனக்கு PASSPORT வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்" போல என்று நக்கலாக கூற, அப்புறம் ஒருவாரம் ரெண்டு பேருக்கும் இடையே “ ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை…
நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல் வேதனைப்படும் அவல நிலை.
பீதியில் துபாய்…
உணவகங்களில் கூட்டமில்லை…கடைவீதிகளும், சாப்பிங் மால் களும் சற்றே வெறிச்சோடிய நிலை…கடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து தந்த கடன் அட்டை, இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்…லோன்கள் வீடுதேடிவந்தது போக, இன்று லோ, லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலை…எதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்…இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்… தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?
பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில் உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன் சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம் கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மெழுகுதிரிகளின் நிலை என்ன?
கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை சூழ வரவேற்கப்பட்டு, அபிதாபியா,சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி விடுமோ…? வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?
சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?
மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?
வேலை யில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன் விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?
எதோ இணை பிரியாத பந்தம்… உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை…
போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்…என்று கை காட்டி விட்டு கிளம்ப முடியுமா…கார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை , இப்படி துபாயில் சேர்த்த (!!??) சொத்திற்கு வழி என்ன…? விழி பிதுங்கிய நிலையில் வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?

Posted by
கீழை ராஸா
at
46
comments
கீழக்கரை...இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க பழம்பெரும் கடற்கரை நகரம். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வாழ்ந்து மறைந்த சீர்மிகும் ஊர்...அந்த கடற்கரை நகரின் சில கவின்மிகு காட்சிகள் உங்கள் பார்வைக்கு...
Posted by
கீழை ராஸா
at
7
comments
Labels: கீழக்கரை, புகைப்படம்